வியாழன், அக்டோபர் 01, 2015

குறள் எண்: 0060 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்குறள் எண்: 0060}

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் 
நன்கலம் நன்மக்கட் பேறு

விழியப்பன் விளக்கம்: இல்லத்தரசியின் நற்பண்பே இல்லறத்தின் அழகாகும்! அவள் பெற்றெடுக்கும் நற்பிள்ளைகள்; அவ்வழகை மெருகூட்டும், நல்ல அணிகலன்கள் ஆவர்.
(அது போல்...)
தனிமனித ஒழுக்கமே சமுதாயத்தின் ஆன்மாவாகும்! அவ்வொழுக்கம் விதைக்கும் அறநெறிகள்; அவ்வான்மாவை உயிர்ப்பிக்கும், உடல் உடலுறுப்புகள் ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக