செவ்வாய், அக்டோபர் 03, 2017

குறள் எண்: 0793 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0793}

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு

விழியப்பன் விளக்கம்: சிறப்பான குணம்/மனிதம் நிறைந்த குடும்பம்/குற்றமற்ற அறம்/குறையாத சுற்றம் - இந்த காரணிகளை, நன்கு ஆராய்ந்து; பின்னர் நட்பைக் கொள்ளவேண்டும்!
(அது போல்...)
இயல்பான ஒப்புரவு/பொதுமை மிகுந்த சிந்தனை/பிழையற்ற கடமை/ஊழலற்ற சொத்து - இந்த போன்ற காரணிகளை, ஆழ்ந்து ஆராய்ந்து; பின்னர் தலைமையை ஏற்கவேண்டும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக