பால்: 2 - பொருள்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு
0811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
விழியப்பன் விளக்கம்: நம்மை அன்பால் உள்வாங்குவோர் போலிருப்பினும், நட்பு எனும்
காரணி இல்லையெனில்; அவர்களின் நட்பு, வளர்வதை விட குறைவது நன்மையானது!
பெருகலிற் குன்றல் இனிது
விழியப்பன் விளக்கம்: நம்மை அன்பால் உள்வாங்குவோர் போலிருப்பினும், நட்பு எனும்
காரணி இல்லையெனில்; அவர்களின் நட்பு, வளர்வதை விட குறைவது நன்மையானது!
(அது போல்...)
நம்மை மானியத்தால் வாழவைப்போர் போலிருப்பினும், நேர்மை எனும் தலைமை
இல்லையெனில்; அவர்களின் ஆட்சி, தொடர்வதை விட உடைவது சிறப்பானது!
0812. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
விழியப்பன் விளக்கம்: பயன் இருப்பின் நட்பாடி, இல்லெனின் நட்பழிக்கும்; நட்பு எனும்
காரணி இல்லாதோரின் நட்பை, அடைந்தாலும் இழந்தாலும் என்ன வேறுபாடு?
பெறினும் இழப்பினும் என்
விழியப்பன் விளக்கம்: பயன் இருப்பின் நட்பாடி, இல்லெனின் நட்பழிக்கும்; நட்பு எனும்
காரணி இல்லாதோரின் நட்பை, அடைந்தாலும் இழந்தாலும் என்ன வேறுபாடு?
(அது போல்...)
ஓட்டு தேவையாயின் கும்பிட்டு, இல்லையாயின் சுட்டுக்கொல்லும்; மக்களாட்சி எனும்
அடிப்படை அறியாதோரின் ஆட்சி, இருந்தாலும் மாறினாலும் என்ன மாறுபாடு?
0813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
விழியப்பன் விளக்கம்: பலனை மதிப்பிட்டு நட்பாடும் நண்பர்/காமத்தை முதலீட்டிச்
சம்பாதிக்கும் விலைமகளிர்/பயத்தைத் தூண்டி அபகரிக்கும் கள்வர் - இவர்கள்
ஒருவருக்கொருவர் ஒப்பானவர்!

உரிமையை அழித்து அரசாளும் ஆட்சியர்/விவசாயத்தை அழித்து கட்டடம் கட்டுவோர்/
பொதுமை அழித்து சுயம் காப்போர் - இவர்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்!
0814. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
விழியப்பன் விளக்கம்: போர்க்களத்தில் போர்வீரரைக் கீழே தள்ளி கைவிடும், பயிற்சியற்ற
குதிரையைப் போன்றவரின் நட்பை விட; தனிமை முதன்மையானது!
தமரின் தனிமை தலை
விழியப்பன் விளக்கம்: போர்க்களத்தில் போர்வீரரைக் கீழே தள்ளி கைவிடும், பயிற்சியற்ற
குதிரையைப் போன்றவரின் நட்பை விட; தனிமை முதன்மையானது!
(அது போல்...)
விவசாயத்தில் விவசாயியை நலியச் செய்து அழிக்கும், இரசாயன உரத்தைப் போன்றோரின்
ஆட்சியை விட; அடிமைத்தனம் மேலானது!
ஆட்சியை விட; அடிமைத்தனம் மேலானது!
0815. செய்துஏமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
விழியப்பன் விளக்கம்: எதனைச் செய்தும், பாதுகாப்பாக இல்லாத முதிற்சியற்றோரின் தீய
நட்பை; அடைவதை விட, அடையாமல் இருப்பது சிறந்ததாகும்.
அனுமதிப்பதை விட, அனுமதிக்காமல் இருப்பது நன்றாகும்.
எய்தலின் எய்தாமை நன்று
விழியப்பன் விளக்கம்: எதனைச் செய்தும், பாதுகாப்பாக இல்லாத முதிற்சியற்றோரின் தீய
நட்பை; அடைவதை விட, அடையாமல் இருப்பது சிறந்ததாகும்.
(அது போல்...)
எவ்வளவு கற்பித்தும், மக்களுக்காக அமையாத சுயநலவாதிகளின் குறை ஆட்சியை; அனுமதிப்பதை விட, அனுமதிக்காமல் இருப்பது நன்றாகும்.
0816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
விழியப்பன் விளக்கம்: அறியாமை உடையோரிடம் கொண்டிருக்கும், அதீத நெருக்கமான
நட்பை விட; அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகைமைக் கூட, கோடி நன்மையைப்
பயக்கும்!
அன்புடையோரிடம் வெளிப்படுத்தும் மூர்க்கம் கூட, பன்மடங்கு நிம்மதியை அளிக்கும்!
ஏதின்மை கோடி உறும்
விழியப்பன் விளக்கம்: அறியாமை உடையோரிடம் கொண்டிருக்கும், அதீத நெருக்கமான
நட்பை விட; அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகைமைக் கூட, கோடி நன்மையைப்
பயக்கும்!
(அது போல்...)
அன்பின்மை மிகுந்தோரிடம் கொண்டிருக்கும், மிக அதிகமான பயத்தை விட; அன்புடையோரிடம் வெளிப்படுத்தும் மூர்க்கம் கூட, பன்மடங்கு நிம்மதியை அளிக்கும்!
0817. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
விழியப்பன் விளக்கம்: தவறுகளை நேரடியாகச் சுட்டாமல், புறங்கூறி நகைக்கும் நட்பை
விட; பகைவர் செய்யும் யாவும், பன்மடங்கு கோடி நன்மையையே விளைவிக்கும்.
எதிர்க்கட்சி வைக்கும் விமர்சனம், பன்மடங்கு கோடி ஆதரவையே அளிக்கும்.
பத்தடுத்த கோடி உறும்
விழியப்பன் விளக்கம்: தவறுகளை நேரடியாகச் சுட்டாமல், புறங்கூறி நகைக்கும் நட்பை
விட; பகைவர் செய்யும் யாவும், பன்மடங்கு கோடி நன்மையையே விளைவிக்கும்.
(அது போல்...)
எதிர்ப்புகளை கூட்டணியில் தெரிவிக்காமல், சூழ்ச்சியை செய்யும் கட்சியை விட; எதிர்க்கட்சி வைக்கும் விமர்சனம், பன்மடங்கு கோடி ஆதரவையே அளிக்கும்.
0818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
விழியப்பன் விளக்கம்: செய்ய முடிந்த செயல்களை, செய்ய முடியாததாய் மாற்றுவோரின்
நட்பை; அவருக்குத் தெரிவிக்காமல், தானாக அழியும் வகையில் விட்டுவிட வேண்டும்.
விமர்சனத்தை; அதற்கு பதிலளிக்காமல், தாமாக அடங்கும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.
சொல்லாடார் சோர விடல்
விழியப்பன் விளக்கம்: செய்ய முடிந்த செயல்களை, செய்ய முடியாததாய் மாற்றுவோரின்
நட்பை; அவருக்குத் தெரிவிக்காமல், தானாக அழியும் வகையில் விட்டுவிட வேண்டும்.
(அது போல்...)
ஆதரிக்க வேண்டிய நபர்களை, ஆதரிக்க வேண்டாதவராய் சித்தரிப்போரின் விமர்சனத்தை; அதற்கு பதிலளிக்காமல், தாமாக அடங்கும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.
0819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்/சொல்லும் செய்தி - இரண்டிலும் வேறுபட்டோரின்
நட்பு; நனவில் மட்டுமல்லாமல் கனவிலும், துன்பத்தை அளிக்கும்!
மட்டுமின்றி சார்ந்தோர்க்கும், தோல்வியை அளிக்கும்!
சொல்வேறு பட்டார் தொடர்பு
விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்/சொல்லும் செய்தி - இரண்டிலும் வேறுபட்டோரின்
நட்பு; நனவில் மட்டுமல்லாமல் கனவிலும், துன்பத்தை அளிக்கும்!
(அது போல்...)
கற்ற விதம்/கற்பிக்கும் விதம் - இரண்டிலும் முரண்பட்டோரின் வழிகாட்டல்; தமக்கு மட்டுமின்றி சார்ந்தோர்க்கும், தோல்வியை அளிக்கும்!
0820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
விழியப்பன் விளக்கம்: வீடு போன்ற தனியிடத்தில் நன்றாக நட்பாடிவிட்டு, தெரு போன்ற
பொதுவிடத்தில் பழிப்போரின் நட்பை; அணுவளவும் அணுக விடாமல் பாதுக்காக்க
வேண்டும்!
தாழ்வோரின் கட்சியை; எத்தொகுதியிலும் வெற்றி பெறாமல் வாக்களிக்க வேண்டும்!
மன்றில் பழிப்பார் தொடர்பு
விழியப்பன் விளக்கம்: வீடு போன்ற தனியிடத்தில் நன்றாக நட்பாடிவிட்டு, தெரு போன்ற
பொதுவிடத்தில் பழிப்போரின் நட்பை; அணுவளவும் அணுக விடாமல் பாதுக்காக்க
வேண்டும்!
(அது போல்...)
மேடை போன்ற நேர்பார்வையில் உயர்வாக பேசிவிட்டு, மக்களவை போன்ற மறைவிடத்தில் தாழ்வோரின் கட்சியை; எத்தொகுதியிலும் வெற்றி பெறாமல் வாக்களிக்க வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக