{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0808}
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
நாளிழுக்கம் நட்டார் செயின்
விழியப்பன் விளக்கம்: நண்பர்களின் குறைகளைப் பிறர் சுட்டுவதைப் பொருட்படுத்தாத, பழைமை உணர்ந்த வல்லவர்க்கு; நண்பர்கள் தவறு செய்யும் நாளும், பயனுள்ள நாளே!
(அது போல்...)
பிள்ளைகளின் பிழைகளைப் பிறர் விமர்சிப்பதை மிகைப்படுத்தாத, வாழ்வு அறிந்த பெற்றோர்க்கு; பிள்ளைகள் பிழை செய்யும் நாளும், நிறைவுள்ள நாளே!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக