திங்கள், அக்டோபர் 09, 2017

குறள் எண்: 0799 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0799}

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்

விழியப்பன் விளக்கம்: கெடுதல் நிகழும் போது கைவிடுவோரின் நட்பை; மரணிக்கும் போது நினைத்தாலும், உள்ளத்தை வருத்தும்!
(அது போல்...)
இயற்கையை அழிக்கும் போது தடுக்காதவரின் ஆட்சியை; ஆட்சிக்காலம் முடியும் நிலையிலும், ஆற்றாமை தரும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக