ஞாயிறு, அக்டோபர் 08, 2017

குறள் எண்: 0798 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0798}

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

விழியப்பன் விளக்கம்: மனதை வருத்தும் விடயங்களை நினைக்காதீர்! அதுபோல், துன்பம் நேரும்போது கைவிடுவோரின் நட்பைக் கொள்ளாதீர்!
(அது போல்...)
மனிதத்தை அழிக்கும் பிரிவினைகளை உருவாக்காதீர்! அதுபோல், அதிகாரம் உள்ளபோது அத்துமீறுவோரின் தலைமையை ஏற்காதீர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக