புதன், அக்டோபர் 04, 2017

குறள் எண்: 0794 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0794}

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

விழியப்பன் விளக்கம்: மனிதம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து, தன் மேலெழும் பழிக்கு அஞ்சுவோரின் நட்பை; கிடைக்கற்கரிய எதுவொன்றைக் கொடுத்தும், கொளல் வேண்டும்!
(அது போல்...)
பொதுமை விதைத்த கட்சியை நிறுவி, தன் கட்சியினரின் ஊழலை அழிப்போரின் வெற்றியை; பிறரளிக்கும் சன்மானங்களை மறுத்தும், நிர்ணயிக்க வேண்டும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக