புதன், அக்டோபர் 11, 2017

குறள் எண்: 0801 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0801}

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்த்திடா நட்பு

விழியப்பன் விளக்கம்: நட்பில் பழைமையைப் போற்றுவது என்னவெனில்; பழைமையால் விளைந்த உரிமையில் செய்யும் தவறுகளை, தரக்குறைவாய் விமர்சிக்காததே ஆகும்!
(அது போல்...)
உறவில் உரிமையை நிலைநாட்டுவது யாதெனில்; உரிமையால் கிடைத்த சுதந்திரத்தில் செய்யும் அத்துமீறல்களை, பிரச்சனையாய் கருதாததே ஆகும்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக