வியாழன், அக்டோபர் 12, 2017

குறள் எண்: 0802 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0802}

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்

விழியப்பன் விளக்கம்: பழமையான நட்பின் இயல்பென்பது, உரிமையைப் பகிர்வதாகும்! மற்றும் அதற்கு துணையாய் இருப்பது, பழைமையை உணர்ந்த சான்றோரின் கடமையாகும்!
(அது போல்...)
நேர்மையான ஆட்சியின் சிறப்பென்பது, மனிதத்தை வளர்ப்பதாகும்! மற்றும் அதற்கு விதையாய் இருப்பது, நேர்மையை உணர்ந்த வாக்காளர்களின் பணியாகும்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக