{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0811}
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
பெருகலிற் குன்றல் இனிது
விழியப்பன் விளக்கம்: நம்மை அன்பால் உள்வாங்குவோர் போலிருப்பினும், நட்பு எனும் காரணி இல்லையெனில்; அவர்களின் நட்பு, வளர்வதை விட குறைவது நன்மையானது!
(அது போல்...)
நம்மை மானியத்தால் வாழவைப்போர் போலிருப்பினும், நேர்மை எனும் தலைமை இல்லையெனில்; அவர்களின் ஆட்சி, தொடர்வதை விட உடைவது சிறப்பானது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக