திங்கள், டிசம்பர் 03, 2012

விவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன???    இரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள "விவாகரத்து வழக்குகள்" குறித்தது. அதில், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகள் நிலுவையில்(மட்டும்); உள்ளன என்றும், பெரும்பாலும் "பெண்கள் தான் அதிகம்" விவகாரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தியை படித்தவுடன், பல நாட்கள் என்னுள் உரையாடிக்கொண்டிருக்கும் விசயங்களில் ஒன்றான இந்த விவாகரத்து விசயமாய் ஓர் தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. கணவன், மனைவி இருபாலரும் தான் விவகாரத்து வழக்குகளுக்கு காரணம் எனினும் - பெண்கள் தான் அதிகம் விவாகரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை ஆழ ஊடுருவ வேண்டும் என்று தோன்றியது. பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்/ கொடுமைக்கு ஆட்படுகின்றனர் என்று எண்ண தோன்றினாலும், உண்மை-நிலை அதுவல்ல. வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் தம்பதையர்களுள் வேண்டுமானால் - அதிகமான பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த தம்பதியர்க்குள் இந்த உண்மை முற்றிலும் மாறுபடுகிறது. மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோரில் மிகக் குறைந்தோரே - விவகாரத்து வரை செல்கின்றனர் என்பதே பேருண்மை; அவர்கள், சமுதாயம், நியாயம்/தர்மம் இவற்றை "இன்னமும்" நம்பிக்கொண்டிருப்பதால் வாழ்க்கையை சகித்து வாழ்கின்றனர்; அவர்களுக்கு விவாகரத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லை.

         ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு மக்களிடையே இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதில்லை; அவர்கள் வசதிகள் படைத்தோர் மட்டுமல்ல - பெரும்பான்மையான பெண்கள் "நல்ல" வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். "பாரதி" போன்றோர் (கணவாய்)வேண்டிட்ட பெண்-விடுதலை "நாட்டின்-சுதந்திரம்" போன்றே சரியாய் புரிந்து கொள்ளாது போனது "துரதிஷ்டமானது". சம்பாதிப்பதும், திருமணமான பின்னும் தந்தை வீட்டில் இருப்பதும்-தான் வாழ்க்கை என்று தவறுதலாய் புரிந்துகொண்டுள்ளனரோ என்ற பயம் வருகிறது. அதனால் தான், எதற்கெடுத்தாலும் "விவாகரத்து" என்கின்றனர்; ஆரம்பத்தில், கணவனை பயமுறுத்த/தன்வழிக்கு-கொண்டுவர "என்று" துவங்கினாலும் - பின் மனதளவில் பெரிய-ஆயுதம் போல் "மாயையாகி" நீதிமன்றம் வரை செல்வதை தான் மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரம் உணர்த்துகிறது. இந்த பெண்கள் அடிப்படையான ஒன்றை மறந்து விடுகின்றனர்; திருமணத்திற்கு (அல்லது பெரும்பாலும் வேலைக்கு செல்லும்) முன்னர் அவர்கள் "தந்தை" எனும் ஆணை சார்ந்திருந்ததை உணருவதே இல்லை. ஆனால், திருமணமான உடனேயே கணவன் தன்னை ஆட்படுத்த முயல்கிறான் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதன் பின், எந்த பிரச்சனை ஆனாலும் - பெற்றோர் வீடு சேர்ந்து மீண்டும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்க சித்தமாகின்றனர். அவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பாகவும், சந்தோசமாகவும் இருப்பர்; ஆனால், கணவனை விடுத்து அனுபவிக்கும் அந்த வாழ்க்கை எத்தனை நாட்கள் நீடிக்க முடியும்? அல்லது நீடிக்கவேண்டும்??

     ஒருவேளை, தன் தந்தையிடம் கிடைக்காத சுதந்திர-உணர்வை "கணவனிடம்" வெளிக்காட்ட நினைக்கின்றனரோ? சிறு விசயத்திற்கு கூட விட்டுக்கொடுக்காது; ஏன், தந்தையின் இல்லம் செல்லவேண்டும்?? நன்றாய் நினைவில் கொள்ளுங்கள்; கணவனை உதறிவிட்டு - தன்னிடம் மீண்டும் வரும் ஓர் பெண்ணின் தந்தையின் பொறுப்பு; பல மடங்குகள் அதிகமாகிறது (அந்த பெண்ணின் தாய்க்கும்; அவளின் மறு-தாய்க்கும் இடையேயும் இதுபோன்ற ஒப்பிடுதல் வேண்டும்!!!). தன் உயிர் என்பதால் "அந்த தந்தை" காண்பிக்காது மறைக்க எண்ணினாலும்; அவர்களின் கவலை "கட்டுப்பாடுகளாய்"தான் வெளிப்படும்! அதையும் அந்த பெண்கள் ஏற்கிறார்கள்! அதில், மிகக்குறைந்த விழுக்காட்டை தன் கணவனிடம் காட்டலாமே? இந்த மாதிரி ஓர் சூழ்நிலையை "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் ஓர் அற்புதமான தந்தை அருமையாய் சமாளிப்பார். அந்த மாதிரி தான் "தந்தை" என்பவர் செயல்படவேண்டும்; அது பல விவாகரத்து வழக்குகளை அடியோடு அழித்துவிடும். திருமணமான பின், என் தமக்கை எப்போது வீட்டிற்கு வரினும் - எனக்கு அது பேரானந்தம்; எப்படியாயினும் விடுப்பில் வீடு சென்றுவிடுவேன். ஆனால், என் மறு-தமையன் கூறிய நேரத்திற்கு ஓர்-நாழிகை அதிகமாயினும் "எப்போது கிளம்புகிறாய்" என்று நான் கேட்கத்தவறியதே இல்லை! என் தமக்கையின் குடும்பம் தான் என் நினைவுக்கு வரும். ஆனால், இன்று வரை - எங்கள் உறவில் சிறு கீறல் கூட விழுந்ததில்லை. என் "மகளிடமும்" கண்டிப்பாய் அதுபோன்றே இருப்பேன்!!! 

        இப்போது பல மனைவிகள் - திருமணமான உடனே கணவன் என்பவன் தன் சொந்தம்; தன்னை தவிர அவன் குடும்ப உறுப்பினர்கள் எவரிடமும் உறவு கொள்ளக்கூடாது; அவர்களுக்கு பொருளுதவி ஏதும் செய்யக்கூடாது என்று விரும்புகின்றனர். "இது மாதிரி நினைக்கும் ஆண்களும் உண்டெனினும்", கண்டிப்பாய் அந்த மாதிரி நினைக்கும் பெண்கள் தான் அதிகம். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனினும், பெரும்பான்மையான ஆண்கள் அதை செய்ய முயல்கின்றனர்; ஆனால், உடனடியாகவோ அல்லது முழுமையாகவோ செய்தல் எல்லோராலும் இயலாது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கிடையில், எதற்கெடுத்தாலும் - பெண்கள் மட்டும் அவர்களின் "தாய்-தந்தை" வீட்டிற்கு செல்வது எந்த விதத்தில் நியாயம்? அவர்களும் - "தான்-தன்" கணவனுக்கு மட்டும் தான்; என்று தானே இருக்கவேண்டும்?? பின் ஏன் புகுந்த வீடு செல்கின்றனர்? மாறாய், ஏதேனும் ஓர் விடுதியை சென்று சேரலாமே! ஆக, பெண்களுக்கு அவர்களின் பெற்றோரிடம் எப்போதும் நல்ல உறவு வேண்டும்; அவர்கள் எப்போது நினைத்தாலும் அவர்களிடம் தஞ்சம் புகலாம்; அவர்களின் பெற்றோரும் அவர்களை நல்வழிப்படுத்தி திருப்பி அனுப்புவதில்லை! அந்த கணவனின் நிலையை உணர்வோரும் எவருமில்லை! இங்கு ஏனோ எனக்கு, ஆண் தான் "மிகுந்த பொறுமைசாலி" மற்றும் "துரதிஷ்டவாதி" என்று பறைசாற்றிட தோன்றுகிறது; அவன் பெற்றோரிடமும் செல்வதில்லை; மனைவியும் உடனில்லை; அவனைப் பற்றி வருத்தப்பட அவனுடைய பெற்றோர் தவிர யாரும் இருப்பதில்லை.

          இப்படி பிரிந்து செல்லும் மனைவிக்கு ஓர் குழந்தை மட்டும் இருந்துவிட்டால், அந்த கணவனுக்கு வாழ்க்கை என்பது வெகுநிச்சயமாய் "நரகம்" - இறக்காமலே நரகத்தை காண்போர் அவர்! அந்த மனைவியும், பெற்றோர் வழிகாட்டுதல் இல்லாது தவறுமேல் தவறு செய்து கொண்டே செல்வாள். மிகச்சமீபத்தில் என் நண்பனின் வாழ்வில் நிகழ்ந்தது, கீழ்வருவது: அவனின் மகள் - ஓர் அற்புதம்! அவளை நான் கடைசியாய் சந்தித்தபோது அவளுக்கு 4 வயதிருந்திருக்கும்; அப்படி ஓர் அருமையான, மரியதையான பேச்சு; நடத்தை! உண்மையில், என் மகளை விட அந்தப்பெண்ணை உயர்த்தி சொல்ல நான் (எப்போதும்)தயங்கமாட்டேன்; அப்படி ஓர் அருமையான பெண்குழந்தை அவள். என்னுடைய, இன்னுமொரு நண்பன் ஓர்-நாள் அந்த குழந்தையை விட்டுவிட்டு அவனால் எப்படி விவாகரத்து செய்ய முடிந்தது? என்று வாதிட்டான்; அவனைப்போல் பல நண்பர்களும் வாதிட்டிருக்கக்கூடும். ஆனால், நான் நினைத்தது வேறு! என் மகளை விட, நானே அந்தக்குழந்தையை உயர்த்தி நினைக்கும்போது; அவளின் தந்தையாகிய என் நண்பன் எப்படியெல்லாம் எண்ணி இருப்பான்! அப்படிப்பட்டவனை - தன் தாயுடன் சேர்ந்துகொண்டு "விவாகரத்து" செய்யும் அளவுக்கும் ஓர் மனைவி செய்திருக்கிறாளே!! என்று தான் விக்கித்த்து போனேன்; 5 ஆண்டுகள் தன் மகளைப் பிரிந்து எத்தனை "வலிகளை" அவன் அனுபவித்து இருப்பான்? அதையெல்லாம் கடந்து - அவன் விவாகரத்து செய்திட "ஓர்முறை இறந்து - இன்னுமொரு முறை அவன் பிறந்து வந்திருப்பான்" என்று நான் உறுதியாய் நம்புகிறேன். 

      மனைவியர்களே! உங்கள் தந்தையிடம் காட்டும் அந்த உறவில் ஓர் பகுதியை உங்களின் கணவனிடம் காட்டுங்கள். இதை விளக்கிடுதல் கடினமாயினும், என்னால் இயன்ற வரை விளக்கி உள்ளேன்; இதை ஏற்றுக்கொள்ளுதல் மேலும் கடினம் எனினும் - கண்டிப்பாய் இது, "இயலாததல்ல"! முயற்சி செய்யுங்கள்; கண்டிப்பாய் "பிரசவ வேதனையை" விட கணவனின் எந்த செயலும் கொடிதாய் இருக்கமுடியாது; இது உங்கள் இருவர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல - உங்களின் "உயிரான மகள் மற்றும் மகன்" சம்பத்தப்பட்ட விசயம் மற்றும் வாழ்க்கை. 
     கனவன்களே! உங்களின் மனைவியின் எந்த செய்கையையும் மன்னிக்க தயாராகுங்கள்!! உங்கள் மகளிடம் காட்டும் உறவின் வலிமையில் ஓர் பகுதியை உங்கள் மனைவியிடன் காட்டுங்கள். இந்த பிரச்சனை காரணமாய் நீங்கள் உங்கள் மகள் (அல்லது மகனை) பிரிந்து அனுபவிக்கும் சங்கடங்கள் "பிரசவ வேதனைக்கு" சற்றும் குறைவில்லாதது என்பது புரிகிறது! ஒன்று "உடல்" சம்பந்தப்பட்டது; இன்னொன்று "மனம்"     சம்பந்தப்பட்டது - வித்தியாசம் அவ்வளவே!! வேதனை ஒன்றிற்கொன்று சற்றும் குறைந்தது அல்ல; எனினும் வாழ்க்கை தான் முக்கியம்!!! எனவே... 

உறவை நமக்குள்ளும் பகிர்ந்து, விவாகரத்துகளை குறைப்போம்!!!         

32 கருத்துகள்:

 1. அய்யா,
  தங்களின் தலையங்கம் அருமை. உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் எல்லா மருமகன்களுக்கும் வேண்டும். ஆனால் எனக்கு மிக மோசமான மாமனார், மாமியார் உள்ளனர். பெண்ணை கட்டிக்கொடுத்து விட்டு, வாழ விடாமல் மருமகனை துன்ப படுத்துவதை விட, படித்து விட்டு, வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்து, கணவனை விவாகரத்து செய்வது சிறந்தது.என் 8 வருட திருமண வாழ்கையில் 4 வருடங்கள் கூட சேர்ந்து வாழ வில்லை. என்னை பல விதங்களில் குறை கூறி என் பெற்றோரிடம் இருந்து பணம் பறித்தல்.வசிய மருந்து வைத்தல்.வசிய மருந்து பாதிப்பில் மனைவி வேண்டும் என்று பித்து பிடித்து மனைவியை தேடி சென்றால் தம்பியை வைத்து அடித்து ஆபரேஷன் செய்ய 45,000 செலவு வைத்தல், வருடகணக்கில் பிரிந்து இருந்து விட்டு விவாகரத்து கேட்டாலும்,தர மறுத்து பத்து லட்சம் கொடு,சொத்த கொடு என்று கேட்பது. இது மிக கொடுமை. என் மனைவி போன்ற பெண்களை ஒப்பிடும் போது கை நிறைய சம்பாதித்து, பிரச்னை வந்தால் கணவனை விவாகரத்து பண்ணுவது சிறந்தது.கணவனுக்கு அவமானமாக இருக்கும். ஆனால் என் போன்றவர்களின் நிலைமையை பார்க்கும் போது அந்த கணவன் நிலை எவ்வளவோ மேல்.
  நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 2. அய்யா இளங்கோவன் இளமுருகு அவர்களே ,
  சத்தியமாக சொல்கிறேன், உங்கள் கட்டுரை படித்துவிட்டு கணினி திரையை கை எடுத்து கும்பிட்டேன். உங்கள் வார்த்தைகளை திரையில் தொட்டு கும்பிட்டு,கும்பிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன். மிக அருமை,மிக அருமை. உங்களின் பாதங்களை நான் நன்றியால் கழுவுகின்றேன்.உண்மையில் உங்களை வணங்கவேண்டும் போல் உள்ளது.நன்றி அய்யா உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு.

  பதிலளிநீக்கு
 3. கனவன்களே! உங்களின் மனைவியின் எந்த செய்கையையும் மன்னிக்க தயாராகுங்கள்!! உங்கள் மகளிடம் காட்டும் உறவின் வலிமையில் ஓர் பகுதியை உங்கள் மனைவியிடன் காட்டுங்கள். இந்த பிரச்சனை காரணமாய் நீங்கள் உங்கள் மகள் (அல்லது மகனை) பிரிந்து அனுபவிக்கும் சங்கடங்கள் "பிரசவ வேதனைக்கு" சற்றும் குறைவில்லாதது என்பது புரிகிறது! ஒன்று "உடல்" சம்பந்தப்பட்டது; இன்னொன்று "மனம்" சம்பந்தப்பட்டது - வித்தியாசம் அவ்வளவே!! வேதனை ஒன்றிற்கொன்று சற்றும் குறைந்தது அல்ல; எனினும் வாழ்க்கை தான் முக்கியம்!!! எனவே...

  உறவை நமக்குள்ளும் பகிர்ந்து, விவாகரத்துகளை குறைப்போம்!!! உங்களின் கருத்து ஏற்று கொள்ள கூடியது.ஆனால்
  ஒரு கணவனாய் மனைவி எனக்கு தெரியாமல் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துகொண்டால் ஏன் எடுத்தாய், அந்த பணத்தை என்ன செய்தாய் என்று கேட்பதற்கு கணவனுக்கு உரிமை இல்லை.கேட்டால் கொடுமை செய்கிறான் என்று கூறுவது.
  பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் மருமகனை அவமானபடுத்துவது, மருமகனின் நண்பர்கள் மனைவியை பிரிந்து உன் கணவர் ஒழுங்காக சாபிடுவது இல்லை.ஆள் ரொம்ப கவலையில் செத்து போய்டுவான், வந்து வாழ் என்ரால் நீங்கள் யார், அவனுக்கு நண்பர் என்று யாருமே இருக்க முடியாது,ஒங்களுக்கு என்ன தெரியும், அடிக்கிறான்,பணம் கொடுப்பது இல்லை, நான் மாதம் ரூபாய் 2500 குடும்பம் நடத்த தருகிறேன், எதற்கு என் பெண் அங்கே இருக்க வேண்டும். அவனை ஒழுங்கா நடந்து கொள்ள சொல்லுங்கள் என்று பொய் கூறுவது. உண்மையில் கடந்த 8 வருடங்களில் ஒருமுறை 1000 அவர் பெண்ணிடம் தந்தார்.இப்படி கூறுபவரிகளிடம் எந்த முறையில் உறவை வளர்ப்பது. எனக்கு சிகரெட்,தண்ணி பழக்கம் இல்லை. அந்த பழக்கம் உள்ள அவர்கள் என்னை பையித்தியம் என்று கூறி என் பெற்றோர்களை அவனுக்கு சிகிட்சை கொடுங்கள் என்று சொல்லி மன நல மையம் சென்று கவுன்செல்லிங் கொடுத்து சேர்ந்து வாழவேண்டும் என்று என் மனைவிக்கும்,அவளது தந்தைக்கும் அறிவுரை கூறிய பின்னும் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று வாழ மறுபவர்களிடையே எப்படி உறவை ஏற்படுத்துவது. எனக்கு பெண்டாட்டி,பிள்ளைகள் இல்லாமல் இருக்க முடியாது நீ என்னை விட்டு போக கூடாது,மீறி போனால் விவாகரத்து செய்து விட்டு சென்று விடு என்று கேட்டேன்.சரி ஏற்பாடு செய் என்று சொல்லி ஒரு பேப்பரில் மணமுறிவு ஒப்பந்தம் எழுதி கையெழுத்து,ரேகை வைத்து விட்டு சென்று விட்டாள். போய் அழைத்தாலும் நான் தான் எழுதிகொடுதுவிட்டேன் வரமுடியாது என்று சொல்லுதல்.வசிய மருந்து வைத்து புருசனை இம்சை செய்தல்.சொல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ளுதல், வாழ அழைத்தாலும் வர மறுத்து பொய் பேசுதல், சட்டப்படி சேர்ந்து வாழும் உரிமைப்படி சேர்ந்து வாழ இலவச சட்ட உதவி மையத்தில் அழைத்தாள் என் மனைவி வராமல் மாமனார் வந்து இவன் பைத்தியம்,கொடுமை படுத்துவான்,அடிப்பான்,எவ்வாறு என் பெண் வாழும் என்று என்னை உண்மைக்கு மாறாக திட்டுவது, தனி குடித்தனம் செல்ல வற்புறுத்துவது, தனி குடித்தனம் இருந்தால் அப்பா வீட்டிலேயே இருந்து கொண்டு என்னை தனியாக சமைத்து சாப்பிட விடுதல்,கூப்பிட்டால் அதிகாரம் செய்கிறான் என்று குறை கூறுவது, அக்கா புருஷன் வீட்டில் இருந்து கொண்டு என்னை அவமானபடுத்துவது என்று இருபவர்களிடம் எவ்வாறு உறவை மேம்படுத்துவது.

  பதிலளிநீக்கு
 4. ஆனந்த்!

  முதலில் என்னுடைய நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்! வலைப்பதிவை நீங்கள் ஆழ்ந்து படித்திருப்பது (தொடர்ந்து படித்து வருவது) புரிகிறது; குறிப்பாய் இந்த தலையங்கம் உங்களை கவர்ந்திருப்பதை அறிந்தேன். உங்களின் வேதனை தெரிந்தது; உங்களின் மனச்சுமை குறைந்து, மனமகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்.

  உறவை மேம்படுத்த வேண்டும், உறவு வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாயிருப்பின் - எல்லா நிகழ்வுகளையும் கடந்து வரலாம் என்பது என் நம்பிக்கை; இது கண்டிப்பாய் கடினமானது எண்பது எனக்கு தெரியும்; ஆயினும், இது சாத்தியமே! வாய்ப்பும், விருப்பும் இருப்பின் "மரணத்திற்கு பிறகு என்ன?" என்ற என்னுடைய தலையங்கத்தை படித்து பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 5. இளங்கோவன் இளமுருகு அவர்களே,
  நீங்கள் அறிந்து கொண்டது சரியே.எனக்கு தற்போது இந்த தலையங்கம் ஆழ்ந்த புரிதலை,அமைதியை தந்தது.ஒவ்வொருவரும் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப படிப்பதும், படம் பார்ப்பதும் பிடிக்கும். சமீபத்தில்என் நண்பன் ஸ்டாலினிடம் இருந்து dvd வாங்கி வத்திக்குச்சி திரைப்படம் பார்த்தேன்.பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னேன்.நன்றாக இருக்கிறதா? சரியான அறுவை என்று சொன்னார்கள் என்று சொன்னான்.அப்படி அல்ல ஒரு சாதாரண சமத்துவ புறத்தில் வாழும் ஒருவன் அநீதியை எதிர்த்து ஜெயிப்பது எனக்கு தற்போதைய சூழலில் மிக நன்றாக இருந்தது என்று சொன்னேன்.அதுவரை அந்த படத்தை பார்க்காமல் இருந்தவன் உடன் பார்க்க ஆரம்பித்து விட்டான்.இந்த நண்பன் தான் TET EXAM எழுத என் மனைவியின் ஊருக்கு சென்று இருந்த பொழுது என் மனைவியிடமும், மச்சினனிடமும்,மனையிவின் பெரியப்பா பையன் வேலுமணி,என் மாமியார்,மாமனாரிடமும் நான் மனைவியை பிரிந்து மிகவும் துயரமாக இருபதாகவும் அதனால் ஒழுங்காக சாப்பிடுவது இல்லை.இப்படியே இருந்தால் செத்து விடுவான்.மிக துன்ப படுகிறான்.ஆகையால் அவனுடன் சேர்ந்து வாழ்க்கையை நன்றாக ஆக்கு என்றும். நான் அவனிடம் உன் மாமனார்,மாமியார் காலில் விழுந்து உன் மனைவியை அனுப்பும் படி கேட்டு கண்டிப்பாக அழைத்து வருவேன் என்று உறுதி கூறியுள்ளேன் என்று கூறி அழைத்த போது தான் நான் மன நிலை சரி இல்லாதவன்,அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பு இல்லை.நீங்கள் என்ன உண்மையான நண்பரா என்றும், என் மனைவி என்னுடன் வாழ்வதற்க்கு என் மாமனார் மாதா மாதம் ரூ.2500 தருவதாகவும். ஆனால் நான் என் மனைவியை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி வாசலில் வைத்தே பேசி குடிக்க தண்ணி கூட கொடுக்காமல் அனுப்பி விட்டதாக கூறினான்.நான் என் மனைவியிடம் ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டேன். எதற்காக அந்த ஆளை அனுப்பி வைத்தாய். என்றாள்.நான் வற்புறுத்த வில்லை.அவன் தான் இப்படி ஏங்குவதை விட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மனைவியை அழைத்து வா என்று சொன்னான்.நான் பல முறை என் மனைவியை அழைத்து விட்டேன் வரவில்லை என்று சொன்னேன்.அவன் என்னை குறைவாக மதிப்பிட்டு அவன் எப்படியும் அழைத்து வந்து விடுவதாக கூறி வந்துள்ளான் என்று கூறினேன்.யார் வந்து அழைத்தாலும் வர மாட்டேன் என்று சொன்னாள்.உன் அப்பா பொய் சொல்லி உள்ளாரே என்றேன்.அப்படி தான் பேசுவோம் என்று சொன்னாள்.
  உறவை மேம்படுத்துவது என்பது இருவரிடமும் உள்ளது.உறவு வேண்டும் என்பதும் இருவரிடமும் உள்ளது.கணவன் மட்டும் உறவு வேண்டும்,உறவை மேம்படுத்த வேண்டும் என்று பல முறை முயற்சி செய்து மீண்டும் தோல்வி அடைவது என்பது மிக கடினமானது. உறவு வேண்டாம் என்று பிரிந்து,பிரித்து வைக்க பட்டுள்ள மனைவியை என் நண்பன்,என் பெற்றோர்,என் சகோதரன்,சகோதரனின் மனைவி,என் மனைவியின் உறவினர்கள்,என் தாய் மாமா மற்றும் பலர் கடந்த 8 வருடங்களில் பல முறை வற்புறுத்தி சேர்த்து வைத்து உள்ளனர்.

  பதிலளிநீக்கு
 6. (தொடர்சி...) என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று நான் என் பெற்றோரை மிகவும் வற்புறுத்துவேன்.நான் நேரில் சென்று அழைத்தும் வர மறுக்கிறாள்.அவளின் பெற்றோர் அனுப்ப மறுகின்றனர்.ஆகையால் சேர்த்து வையுங்கள் என்று பல முறை சண்டை இட்டுள்ளேன்.எனக்கு வசிய மருந்து வைத்து விட்டு என்னிடம் எதாவது குறை சொல்லி விட்டு என் மனைவி சென்று விடுவாள். மற்றொரு உறவுக்கார நண்பர் தொட்டியம் சென்று என் மனைவியை உன் கணவன் என்னிடம் வம்புக்கு வருகிறான்.எப்படி எனக்கு தெரியாமல் என் மனைவியை எல்லா சாமான்களையும் எடுத்துகொண்டு அனுப்பி விட்டாய் என்று.ஆகையால் தயவு செய்து வந்து வாழவும் என்று கேட்டதற்கு சொத்தை பிரித்துக்கொண்டு தனியே வர சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறியுள்ளாள். அவரும் என் அம்மாவிடம் சொத்தை பிரித்து கொடுத்து விட வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.என் அப்பாவோ எதற்கு சொத்தை பிரிக்க சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார். நானும் அது அவசியம் சேர்ந்து வாழ தேவை அற்றது.வேண்டுமானால் என் மனைவி அவள் சொத்தை பிரித்து எடுத்துக்கொண்டு வந்து விட்டு பின் என்னை பிரிக்க சொல்லவும் என்று சொல்லிவிட்டேன்.
  முதல் முறை வசிய மருந்து வைத்து என்னை பித்து பிடிக்க வைத்த போது யாரிடம் சென்று வாங்கி வந்தாள் என்பது தெரியாது. ஆனால் தற்போது எங்களுக்கு தெரிந்தவர்கள்(கல்யாணி,அவர் பையன் சதீஷ்) என் மனைவியை வசிய மருந்து செய்பவன் வீட்டில் கொண்டு விட்டு இருக்கிறார்கள். வசிய மருந்து செய்பவர் ஜோதிட நிலையம் என்று பெயர் பலகை வைத்துள்ளார்.என் மனைவியை அவர்கள் அந்த ஊரில் உள்ள குல தெய்வத்திற்கு விளக்கு ஏற்ற சென்று விட்டு திரும்பும் பொழுது பார்க்கவும் எங்கே இங்கே வந்தாய் என்று கேட்டுள்ளனர்.எங்களுக்கு தெரியாமல் என் அம்மாவிடம் திருச்சிக்கு அழகு நிலையத்திற்கு தேவையான பொருள் வாங்கி வருகிறேன் என்று சொல்லி இங்கு ஜோதிடம் பார்க்க வந்ததாக என் மனைவி சொல்லவும் அங்கு பைக்கில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.தற்போது நான் என் பெற்றோருடன் சண்டை இட்டு கொண்டுள்ளதை அறிந்து அவர்கள் என் அப்பாவை அந்த ஜோதிடரிடம் அழைத்து சென்று வசிய மருந்து பற்றி பொதுவாக கேட்டு விட்டு,நாங்கள் அழைத்து வந்த பெண்(ரேணுகா) பற்றி கேட்டுள்ளனர்.அந்த ஜோதிடரும் வந்துள்ளவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்றும்,என் அப்பா அதில் ஒருவர் என்றும் அறியாமல் ஆமாம் நீங்கள் அழைத்து வந்த ரேணுகா ஆனந்த் வந்தார்கள்.ஆனந்த் மனைவியிடம் பாசமாக இருப்பதற்கு வசிய மருந்து செய்து கொடுத்து அவர்கள் தற்போது நன்றாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.என் அப்பா வாயை வைத்துகொண்டு சும்மா இல்லாமல் நான் தான் ஆனந்தின் அப்பா என்று சொல்லியுள்ளார்.உடன் அந்த ஜோதிடர் அழைத்துக்கொண்டு சென்றவர்களை ஏன் இவரை இங்கு அழைத்து கொண்டு வந்தாய் என்று கேட்டு அனுப்பிவிட்டார்.நல்லதுக்கு தான் வசிய மருந்து செய்து கொடுத்ததாக கூறியுள்ளார்.ஆனால் நான் அதனால் பல தொல்லைகளுக்கு உள்ளானேன்.இதனால் நான் இறந்து இருந்தால் உறவு மேம்பட்டு இருக்கும்.
  உறவை இப்படி மேம்படுத்த முடியுமா?

  பதிலளிநீக்கு
 7. ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல், மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை. அப்படி வெளியில் சொல்லும் ஆண்களை சில பெண்கள் பொட்டை தனமா நடந்துக்கிறான் என்று அவமான படுத்துவதால் சரியான சூழல் அமைவது இல்லை.

  பதிலளிநீக்கு
 8. எனது கருத்துரையை வாசிக்கும் நண்பர்களுக்கு,
  மிக அதிக மன அழுத்தம் காரணமாக தெளிவான உரைநடையில் என்னால் எழுத முடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். வார்த்தைகளுக்கு இடையில் கமா(,)வைக்காமல்,வாக்கியங்களை பிரித்து தெளிவாக எழுதாமல்,எனது உணர்வுகளை எழுதியுள்ளேன்.படிக்க மிக சிரமமாக இருக்கும்.பொருத்துக்கொண்டு மன்னித்தருளுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. என் தாயும் சிறந்த ஆசிரியை(ஒய்வு).என் தாயின் தயவால் தான் உங்களின் இந்த தலையங்கத்தை வாசிக்கும் கருணையை இறைவன் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறான் என்றே நினைக்கிறேன்.நன்றி இளமுருகு அவர்களே. உங்கள் தந்தை உங்களுக்கு அருமையாக தமிழ் எழுத,உணர்வுகளை உணர்ந்து எழுத ஆசிர்வதித்து உள்ளார்.உங்கள் தந்தைக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
 10. குடும்ப வன்முறைச் சட்டத்தினால், 2003 முதல் 2006 வரை ஒன்றரை லட்சம் ஆண்கள், நாடு முழுவதும் தற்கொலை செய்துள்ளனர்.
  ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சென்னையில் உள்ள, “ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின்’ மாநிலத் தலைவர் அருள் துமிலன் கூறியதாவது: பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சமூக பாதுகாப்பிற்காக, இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் அடிமைத்தனம், பெண்களின் முன்னேற்றம் என்று, பெண்களுக்கே சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; ஆண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றனர். சமூகத்தில் ஆண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை அவர்கள் வெளிப்படையாக சொல்வது கிடையாது. சில ஆண்கள் முன்வந்து கூறினாலும், அவர்களுக்கு உரிய நிவாரணம், சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு என்று எதுவும் கிடைப்பது இல்லை. எனவே, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு, இச்சங்கத்தின் மூலம், பாதுகாப்பும், சட்ட உதவியும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.தற்போது குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை, பெண்கள், ஆண்களைத் தாக்கும் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இதனால், பராம்பரியமான குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு அருள் துமிலன் கூறினார்.

  பதிலளிநீக்கு
 11. சந்திரா (டெல்லி ஹவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியை) : “ மனித இனங்கள் முன்பு வாழ்ந்த காலத்திலிருந்து இன்றைய காலக்கட்டம் வரை சூழ்நிலைகள் எப்படி மாறி வருகிறது என பார்த்தீர்களா? பெண்களுக்கு சுதந்திரம், பெண்களுக்கு உரிமை என்று ஒலித்த குரல்கள் அடங்கி, ஆண்களுக்கு உரிமை, பாதுகாப்பு என்று கேட்;கின்ற சூழ்நிலை இன்று உருவாகி விட்டது. ஆண்களின் அதிகாரம் நிறைந்த இன்றைய அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழையும் பொழுது ஆண்களுக்கு பயம் வருகிறது. இப்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விடுதலை என்ற கோ~ம் மறைந்து, ஆண்களுக்கு விடுதலை வேண்டும் என்று போராட வேண்டிய நிலை வந்து விடுமோ என்ற பயத்தின் வெளிப்பாடாக இந்த ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தை சொல்லலாம். ஆண்களுக்கு ஒரு சங்கம் என்ற வகையில் இந்த சங்கம் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பது எனது அடிப்படை கருத்து. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சமூக அமைப்பை வழி நடத்த ஆரம்பித்தால் அதில் வெற்றி அடைவர். இது ஆண்களுக்கு பொருந்தாது. அவர்கள் ஒரு சுயநலவாதிகள். சுய வாழ்வுக்கு, சுகத்திற்கு எது தேவையோ அதில் மட்டுமே திறமையாக பணிபுரியக் கூடியவர்கள். விதி விலக்காக சிலர் இருக்கலாம். ஒரு தீ பொறி போல் ஆரம்பித்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இன்று மிகப் பெரிய அளவிலான நெட்வொர்க்காக, ஓட்டு வங்கியாக மாறி இருக்கிறது. இதனை ஏன் ஆண்கள் செய்யவில்லை. எத்தனை ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் இன்று இந்தியாவில் இருக்கிறது? ஆண், பெண் இருவாரில் யார் சிறந்தவர்கள்? கண்டிப்பாக பெண்கள் தான். எந்தப் பெண்களும் புகை பிடித்து விட்டோ, பீர் அருந்தி விட்டோ அல்லது மது அருந்தி விட்டோ கல்லூரிக்குள் வருவதில்லை. கேளிக்கைகள், ஆடம்பரங்கள் ஆண், பெண்ணிடம் இருந்தாலும் அடிப்படைக் கொள்கையில் அதாவது வாழ்வியல் ஆதாரத்தை உறுதியாக நிலைநிறுத்துவதில் பெண்கள் தான் சிறந்தவர்கள். ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய "வால்கா முதல் கங்கை வரை" என்ற வரலாற்று நூலை படித்தால் ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்படி, எதனால், ஏன் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், ஆதிக்க உணர்வுகள் வந்தது, வருகிறது என்பதை நாம் தீர்மானிக்கலாம். பெண் கொலை செய்கிறாள், கொள்ளை அடிக்கிறாள். ஆட்சியையே பிடிக்கிறாள் என்றால் அது என்ன புதிதாக நடைபெறுகிற அதிசய சம்பவங்களா? அது ஆண்கள் காட்டிய வழி. அதனை சில பெண்கள் கடைபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு தான், அது எப்படி பெண்களுக்கான வழிகாட்டியாக மாற முடியும்? ஒரு பெண், காவல் நிலையத்தில் கணவனுக்கு எதிராக புகார் செய்யும் பொழுது அங்கு அவளுக்கு முழுமையான நியாயம் கிடைத்து விட வாய்ப்பு கிடையாது. புகார் கொடுக்கச் செல்லும் பெண்ணை காவல் துறையினர் பார்க்கின்ற பார்வை அவ்வளவு அருவருப்பானவை. காவல் துறை ஆண்களின் அதிகாரம் நிறைந்த ஒரு கோட்டை. அந்தக் கோட்டைக்குள் பெண்கள் நுழைந்த உடன் தான் பெண்களுக்கு நேர்மையான நீதிகள் கிடைக்கிறது. மகளிர் காவல் நிலையங்கள் இன்று இல்லாமல் இருந்திருந்தால் ஆண்களின் கோட்டையால் பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். “
  இளங்கோவன் இளமுருகு அவர்களே,
  "ஆண்களுக்கு ஒரு சங்கம் என்ற வகையில் இந்த சங்கம் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பது எனது அடிப்படை கருத்து. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சமூக அமைப்பை வழி நடத்த ஆரம்பித்தால் அதில் வெற்றி அடைவர். இது ஆண்களுக்கு பொருந்தாது. அவர்கள் ஒரு சுயநலவாதிகள். சுய வாழ்வுக்கு, சுகத்திற்கு எது தேவையோ அதில் மட்டுமே திறமையாக பணிபுரியக் கூடியவர்கள். விதி விலக்காக சிலர் இருக்கலாம்."

  இது பற்றி நீங்கள் விரிவாக உங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 12. அப்பா புறகணிக்கப்பட்டு உள்ள வீடுகளில் குழந்தைகள் நிலை என்ன?
  தந்தை புறக்கணிக்கப்பட்ட வீடுகளில் வளரும் குழந்தைகள்:

  தற்கொலைக்கு 5 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

  தாயை விட்டு ஓட 32 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

  நடத்தை கோளாறுகள் ஏற்பட 20 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

  கற்பழிப்பு செய்ய, செய்யப்பட 14 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

  உயர்நிலை பள்ளி கைவிட 9 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

  இரசாயன பொருட்கள் துஷ்பிரயோகம் 10 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

  ஒரு அரசு சார்ந்த சிறார் சிறை கல்வியில் முடிவடையும் வாய்ப்பு 9 மடங்கு அதிகமாக உள்ளது.

  சிறையில் முடிவடையும் வாய்ப்பு 20 மடங்கு அதிகமாக உள்ளது.


  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. ஆண்கள் செய்யும் மிக பெரிய தவறு ஒன்று அவர்களது வழக்கறிஞர் நிகழ்வுகளை நடத்த அனுமதிப்பது.. வழக்கறிஞர்கள் பணம் ஈட்ட வணிகத்தில் உள்ளனர் , நீங்கள் ஒரு நியாயமான தீர்வை அடைய அல்லது உங்கள் குழந்தைகள் உங்கள் காவலில் இருக்க உதவ முடியாது.
  குடும்ப நல, விவாகரத்து வழக்கறிஞர்கள் ஆண்டு ஒன்றுக்கு 100 வழக்குகள் கையாளுகின்றனர் . அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்களை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு நீங்கள் வெற்றி அல்லது தோல்வி பெறுவது பற்றி கவலையில்லை ஏனென்றால் அவர்கள் பணம் பெற காரணமாக உங்கள் வழக்கு உள்ளது..
  பில்லியன் டாலர் விவாகரத்து துறையில், நீங்கள் அவர்களின் போக்கர் மேஜையில் உள்ள இன்னொரு clueless rookie ... நாம் அனைவரும் அறிவோம் clueless rookies என்ன நடக்கும் என்று.
  பல வழக்கறிஞர்கள் கூடி கலந்து பேசுவது, நீதிமன்ற தீர்வு ஆகியவற்றை புறக்கணிக்க விரும்புகின்றனர். காரணம் . பிரச்சனையை அவர்கள் நிரந்தரமாக இழுக்க விரும்புகின்றார்.
  குடும்ப நல,விவாகரத்து வக்கீல்கள் உங்கள் பணத்தை உங்களிடம் இருந்து பிரிப்பதில் நிபுணர்கள்.
  நினைவில் இருக்கட்டும்: அனைத்து வழக்கறிஞர் நகைச்சுவைகளிலும் நல்ல உண்மை காரணம் உள்ளன.

  பதிலளிநீக்கு
 15. தற்போது குழந்தைகளை கணவனின் சம்மதம் இல்லாமல், அவனுக்கு தெரியாமல் தூக்கி கொண்டு யாருடனாவது ஓடி விட்டு, பின்னர் கணவன் கொடுமை படுத்தி, அடித்து விரட்டி விட்டான் , நானும், என் குழந்தைகளும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இன்றி தவிக்கிறோம் எங்களுக்கு ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலம் கருதி ரூபாய் 10,00,00(குறைந்த பட்சம்) வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்து கணவனின் வீட்டில் பணம் பெற்று வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சுகமாக பெண்கள் வாழ்கின்றனர். கட்டிய கணவன் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். இது வருடம் தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
  குழந்தை சட்டப்படி, இயற்கைப்படி ஆணுக்கு தான் சொந்தம். அவனுடைய குழந்தையை திருடி எடுத்து சென்று விட்டு வழக்கிட்டு பணம் பெறுவது இயற்கையை அழிக்கும் செயல் ஆகும்.

  குழந்தை யாருக்கு சொந்தம்... இது பற்றி யோக குரு சுவாமி சிவானந்த பரமஹம்ஷர் கூறியுள்ள கருத்து.
  (குரு சிஷ்யன் உரையாடல்:)
  சி: உலகத்தில் பெண்களுக்கு கர்ப்பம் உண்டாகவும் அவர்கள் பிரசவிக்கவும் செய்கிறார்கள்.அவர்களை நாம் தாய் என்று சொல்லுகிறோம்.
  கு: யார் பிரசவிக்கிறார்கள்?
  சி: பெண்கள்.
  கு: பெண்கள் பிரசவிப்பதன் காரணம் என்ன:?
  சி:கர்ப்பம் உண்டாயிருந்ததால்.
  கு: கர்ப்பம் எப்படி உண்டாகின்றது?
  சி: சம்யோகத்தினால்.
  கு: சம்யோகம் இல்லையென்றால் கர்ப்பம் உண்டாகுமோ?
  சி:உண்டாகாது.
  கு: சம்யோகம் செய்தால் கர்ப்பம் உண்டாக காரணம் என்ன?
  சி: சுக்கிலம் அதாவது விந்து சென்று விழுவதனால் ஆகும்.
  கு; சுக்கிலம் இல்லை என்றால் கர்ப்பம் உண்டாகுமோ?
  சி: உண்டாகாது.
  கு:அப்பொழுது கர்ப்பம் உண்டாவதற்கு சுக்கிலம் என்னவாகிறது?
  சி: வித்து அதாவது விதை.
  கு: உங்கள் கைவசம் கொஞ்சம் நெல் விதை இருக்கின்றதாக வைத்துக்கொள்வோம்.அதை எவ்விதம் பயிர் செய்வது?
  சி: வயலின் ஒரு பாகத்தை உழுது சேறாக்கி சமப்படுத்தி அதில் விதைக்கிறோம்.
  கு: அந்த விதையை விதைக்கவேண்டிய இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் விதைத்தால் அது முளைக்குமா?
  சி: முளைக்கும்.
  கு: ஒருக்காலமும் முளைக்காது.விதைக்க வேண்டிய இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் விதைத்தால் முளைப்பதில்லை.நீங்கள் அவ்விதையை பத்திரப்படுத்தியிருந்த களஞ்சியதிளிருந்தோ, அறையில் இருந்தோ முளைக்குமா?
  சி:முளைக்காது.
  கு:காரணமென்ன?
  சி:வித்து விதைப்பதர்காகத் தயார் செய்த இடத்தில் அல்லாததால்.
  கு: அப்பொழுது வித்து விதைக்க ஏற்படுத்திய இடத்தில் அல்லாமல் விதைத்தால் முளைபதில்லை.அந்த வித்து விதைப்பதற்காக தயார் செய்த இடத்தில் விதைத்தால், அது முளைத்து வளர்ந்து,முதிர்ந்து,கதிர் உண்டாகிறது. எனில் அந்த கதிரை நீர் நெற் கதிரேன்றோ, வயலின் கதிரேன்றோ சொல்லுவீர்?
  சி: நெற்கதிர் என்றே சொல்லுவேன்.
  கு: அந்த கதிர் வயலில் அல்லவா உண்டாயிற்று? எதைக்கொண்டாகும் நெற்கதிர் என்று சொல்லுவது?
  சி:அந்த வயலில் நெல்விதையை விதைக்கவில்லை என்றால் அந்த நெற்கதிர் உண்டாவதில்லை.அப்பொழுது அந்த நெல் விதையில் இருந்து தான் அந்தக் கதிர் உண்டாயிற்று. அதனால் தான் நெற்கதிர் என்று சொல்லக்காரணம்.
  கு: அந்த வயலைக்கொண்டுள்ள தேவை என்னவாயிருந்தது?
  சி: விதை விதைத்து பயிர் செய்ய வேண்டிய தேவைக்காகும்.
  கு: அந்த விதையை வயலில் பயிர் செய்து கதிர் உண்டானபோது வயலில் இருந்து உண்டானது என்று சொல்லக்கூடுமோ?
  சி: கூடாது.
  கு: அப்படியானால் அந்த நெற்கதிர் எதிலிருந்து உண்டானது என்று சொல்லவேண்டும்.
  சி:விதையிலிருந்து.
  கு: அப்பொழுது அந்தக் கதிரைப் பிரசவித்தது யாராகும்? வயலோ? வித்தோ?
  சி: வித்தாகும் பிரசவித்தது.
  (தொடரும்...)

  பதிலளிநீக்கு
 16. (தொடர்ச்சி...)
  கு: சுக்கிலமாகிய விதையைப் போட வேண்டிய இடமாகிய வயலைத் தளர்த்தி செய்கின்றதுதான் புணர்ச்சி. அந்த சம்யோகம் அதாவது புணர்ச்சியினால் அந்த இடம் தளர்சியாகிறது.அப்பொழுது முட்டை வடிவாகி சுக்கிலம் சென்று விழுகிறதும் அந்தத் தளற்சியாயிருக்கின்ற இடம் அதற்க்கு சேர்க்கையா நின்று முட்டை வடிவாகிய வித்து முளைத்து வருவதற்காக தளர்சியாவதும் அது பருத்து மூப்படைந்தபோது, உடைந்து வெளியில் வருவதுமாகும்.அதுவாகும் குழைந்தை. அப்பொழுது அந்த பெண் பிரசவித்தால் என்று சொல்லுவதர்க்கிடமுண்டோ:/
  சி: இல்லை.
  கு: என்ன காரணம்.
  சி: அது சுக்கிலத்தில் இருந்து உண்டானது. சுக்கிலம் இல்லை என்றால் பிரசவிப்பது இல்லை.
  கு: அப்படி என்றால் புருஷன் சுக்கிலத்தை தரிகின்றது அதாவது நிலை நிறுத்துவது தான் கர்ப்பம். அதெப்படிஎன்றால் ஜடமாகிய புரத்தில் சுக்கிலத்தை கர்பிக்கிறது. அதாவது வெளியில் விடாமல் பத்திரம் செய்து விருதியாக்குகின்றது. அப்போழுதாகும் கர்ப்பம் தரித்தது. அப்படி செய்யாவிட்டால் சுக்கிலமுண்டாகி சந்தானமுண்டாவதற்கு முடியுமா?
  சி: முடியாது.
  கு: அப்பொழுது யாராகும் கர்ப்பம் தரித்திருந்தது?
  சி: புருஷன்.
  கு: அப்படியானால் பிரசவிக்கின்றது யார்?
  சி: புருஷன்.
  கு: இவ்விதம் சொல்லப்படும் புருஷன் தரிக்கின்ற கர்ப்பத்தை ஸ்திரீகள் என்று சொல்லப்பட்டவர்களுடைய புணர்சியிடமாகிய, வித்தை விதைக்க வேண்டிய இடத்தில் புணர்ச்சி செய்து, தளர்ச்சியாக்கி, அந்த தளர்ச்சியில் வித்தாகின்ற சுக்கிலத்தை புருஷன் பிரசவிக்கின்றான்

  பதிலளிநீக்கு
 17. என்னை போன்று பாதிப்பு அடைந்தவர்களுக்கு,
  வணக்கம். வசிய மருந்தினால் பாதிக்க பட்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் கிட்னி பாதிப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் பத்து, பனிரெண்டு வருடங்களில் ஏற்படும். ஒரு வருடத்திலேயே உடல் நிலை சரியில்லாமல் போயி பல நாள் சிகிச்சை எடுக்க வேண்டி வரலாம். இதற்கு ஆதாரம் நானும், Dr.G. முகுந்தன்.BMHS.DYNT, கோவை அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை, மற்றும் அவரிடம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விவரம் ஆகியவை ஆகும். நான் சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் வசிய மருந்து என்பது உண்மை என்பது குறித்தும், அதை எடுத்து குண படுதுபவர்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன என்பதும், முழுமையான சிகிச்சை என்பது சுமார் 2000 to 11,000 செலவு செய்ய வேண்டும் என்பதும் தெரிந்து கொண்டேன். மருந்து ஏடுபவர்கள்(தொட்டிய நாயக்கர்கள்) தரும் மாற்று மருந்து முழு பலன் அளிக்காது. அது ஓரளவு குணபடுத்தும். மிக மோசமான நிலையில் இருந்து நம்மை காப்பாற்றும்,அது முழுமையான சிகிச்சை அல்ல.
  நல்ல தகுதி உள்ள ஆயுர்வேத மருத்துவரை சந்தித்து முழுமையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். நான் இதுவரை 2,000 சிகிச்சைக்காக செலவு செய்துள்ளேன். அப்பாவி புருசர்களாக இருந்து அவமான படும் என்னை போன்றவர்களுக்கு இந்த சமுதாயத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை. மரியாதையும் இல்லை.
  என்னிடம் அரசு மாவட்ட மன நல மருத்துவர், ஒரு பள்ளியின் தாளாளர், மச்சமுனி blogspot படித்து கருத்து எழுதுபவர்கள் அறிவுரை கூறினர், அது என்ன செய்வினை,வசியம் என்று கூறுகிறீர்கள், அவர்கள் உங்களுக்கு வைத்தால் ஏன் நீங்கள் அவங்களுக்கு வைத்து குடும்பத்தை சேர்த்து நன்றாக வாழலாமே என்று அறிவுரை கூறுகின்றனர்.
  ஆனால் நான் அடிபடையில் எனக்கோ, என் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ சளி,காய்ச்சல் போன்றவற்றிற்கு மருத்துவம் பார்க்கும் போது கூட பக்க விளைவுகள் அற்ற மிக நல்ல மருந்து தேவை என்பதில் மிக அதிக கவனம் செலுத்துவேன், அதற்காக பல ஆராய்ச்சி செய்து பல மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்தை தேர்வு செய்வேன். கொசு தொல்லைக்கு கூட tortoise, all out, good night போன்றவை பாதிப்பு ஏற்படுத்தும் என்று கோவையில் இருந்து 560 ரூபாய்க்கு ஒரு கருவியும், ayurvetha odomos cream, வசம்பு, ஆரஞ்சு பல தோல் பவுடர் என்று பல முறைகளிலும், இயற்கை வழி கொசு விரட்டிகளும்,just spray musquito repellent(made from plant extract) போன்ற பல வழிகளை கொசு விரட்ட கையாளுவேன். ஆனால் என் மனைவி இதில் துளி கூட அக்கறை இல்லாதவள். ஆதலால் யாருக்கும் வசிய மருந்து வைத்து கெடுதல் செய்ய என்னால் முடியாது. அது தவறு என்று சொல்லிவிடுவேன்.
  ஔவை சொன்ன அரியது கேட்கின் வரிவடிவேலோய்
  அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
  கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
  கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
  ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
  ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
  தானமும் தவமும் தான் செய்தலரிது
  தானமும் தவமும் தான் செய்ததாயின்
  வானவர் நாடு வழி திறந்திடுமே
  ஔவை சொன்ன நல்ல மனிதனாய் பிறந்து,கல்வி கற்று, தானம் தந்து, தவம் பயின்று வாழ்ந்தேன் கல்யாணத்திற்கு முன். அது ஒரு பொற்காலம்.
  ஆனால் கொடிது என்னை சூழ்ந்தது எதனாலோ?

  கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
  கொடிது கொடிது வறுமை கொடிது
  அதனினும் கொடிது இளமையில் வறுமை
  அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
  அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
  அதனினும் கொடிது அவர் கையால்
  இன்புற உண்பது தானே

  இறைவன் எனக்கு வறுமை என்ற கொடுமையை தரவில்லை. இளமையில் வறுமை தரவில்லை. கொடு நோயை தரவில்லை, ஆனால் அன்பில்லா மனைவியை கொடுத்து கொடுமையிலே மிக அதிக கொடுமையை எனக்கு ஏன் தந்தானோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் எனக்கு வறுமை என்ற கொடுமையை தரவில்லை. இளமையில் வறுமை தரவில்லை. கொடு நோயை தரவில்லை, ஆனால் அன்பில்லா மனைவியை கொடுத்து கொடுமையிலே மிக அதிக கொடுமையை எனக்கு ஏன் தந்தானோ? இதன் மூலம் படிப்படியாக திருப்பி கொடு நோய்,வறுமை என்று முடிப்பான் என்று கருத சில உண்மை கதைகள் படித்து அறிந்துகொள்ள முடிகிறது.கடவுளே என்னை காப்பாற்று.என்னை reverse ல் தண்டிக்காதே.

   நீக்கு
 18. வசியத்தால் ஏற்படும் பாதிப்புகளை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று மன பாதிப்புகள் மற்றது உடல் பாதிப்புகள்.
  விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளால் மிக கடுமையான மன பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

  வெறித்தனமாக செயல்படும் பேய் பிடித்து விட்டது எனப்படும் பைபோலர் மேனியா. எப்போதும் மூட் அவுட்டாக இருக்கும் முனி அடித்துவிட்டது அல்லது காத்து பிடித்துவிட்டது எனப்படும் யுனிபோலர் மேனியா, மனதுக்குள் அமானுஷ்ய குரல்கள் கேட்பது மற்றும் உருவங்கள் தெரிவது போன்ற ஹலுஸினேஷன் பாதிப்புகளுடைய ஏவல் எனப்படும் ஷிட்ஸோபிரினியா, அதீத உணர்ச்சி வசப்படும் ஹிஸ்டீரியா, ஒரு குறிப்பிட்ட நபர் தன்னை விரும்புவதாக தீவிரமாக நம்பும் கிலாரம்பட் சின்ட்ரோம், குறிப்பிட்ட நபர் மீது மிக தீவிரமான காதல் ஈடுபாடு கொண்ட ஈரொடோமேனியா, திடீர் திடீரென்று உணர்ச்சி வசப்படும் ஹைப்பர் சென்ஸிடிவிடி, எதிர்பாராமல் நினைவு பிசகி ஸ்தம்பித்து நிற்கும் டெம்போரல் லோப் எபிலப்ஸி, சாமி வந்துவிட்டது அல்லது அருள் வந்துவிட்டது எனப்படும் கண்டிஷனல் ரிஃப்ளக்ஸ், தன்னுள் சாமி இருக்கிறது அல்லது தெய்வம் இருக்கிறது எனப்படும் மல்டிபிள் பர்ஸனாலிடி, தேவையில்லாத கற்பனை பயங்களை தரும் ஹைபோகன்ட்ரியாஆகிய மன பாதிப்புகளை மருந்துக்களால் ஏற்படுத்த முடியும் காரணம் இவை அனைத்துமே ஹார்மோன்கள் எனப்படும் உடல் திரவங்களின் சமசீரின்மையால் ஏற்படுகின்றன.
  இயற்கை தாவரங்களில் விஷதன்மை கொண்ட தாவரங்களை(வசிய மருந்தில் உள்ளவை) உட்கொள்ளும் போது அதனால் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. ரத்தத்தில் நச்சுதன்மை ஏற்படும் போது அதனால் நரம்புமண்டலம், ஜீரணமண்டலம், கல்லீரல், குடல், சிறுநீரகங்கள் போன்றவை அதிகமாக பாதிக்கப்படுகின்றன.


  பொதுவாக செய்வினை, வசியமருந்து எனப்படும் விஷ போஜனத்தின் மூலம் மிக கெடுமையான உடல் மற்றும் மன பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். அதிலும் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத, வழக்கமான ரசாயன மருத்துவமுறைகளால் தீர்க்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. உங்களின் நிலை, தெளிவாய் புரிகிறது ஆனந்த்! ஆனால், உன்களுக்காய் இறைவனிடம் பிரார்த்தித்து - நீங்கள் இந்த மனவலியிலிருந்து ஏதாவது ஒர் வகையில் மீளவேண்டும் என்று வாழ்த்துவதை விட வேறென்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை!!

  நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் வெகு நிச்சயமாய் இம்மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த உதவியாயும், ஆறுதலாயும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை. உண்மையில், இம்மாதிரி ஒர் வாசகருக்காய் தான் நான் இது நாள் வரை ஏங்கினேன் எனினும், ஏனோ உங்களின் நிலைமை என்னை நிலைகுலையச் செய்கிறது.

  மீண்டும் ஓர் முறை உங்களுக்காய் இறைவனிடம் வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 22. என் குழந்தையின் ஏக்கத்தை போக்க முடிவு செய்து 24/04/2013 புதன் அன்று car எடுத்து கொண்டு என் அப்பா, மணி மாறன், என் குழந்தைகளை கண்டிப்பாக என்னுடன் சேர்ப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த முருகையன் உடன் சென்றேன்.வீட்டிற்கு சென்றபோது முன் அறையில் குடித்துவிட்டு சட்டை போடாமல் படுத்து இருந்த பல ஆண் நபர்களை கண்டேன். யாரெண்ரூ தெரியவில்லை. நல்ல போதையில் என் மனைவியின் தம்பி எங்களுடன் வந்தவர்களை அவமான படுத்தும் விதமாக பேசி, என்னையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி எதிர்பாராத நேரத்தில் என் குழந்தை என் மடியில் இருந்த பொழுது என்னை தாக்கி,என் சட்டையை பிடித்து இழுத்து 3.2 பவுன் தங்க செயினை களவாடி விட்டான். (துபாயில் இருந்து எனக்காக என் சகோதரி வாங்கி வந்தது) பலமாக முகத்தில்,தலையில்,உடம்பில்,கை,கால்களில் அடித்ததால் நான் நிலை குலைந்து விழுந்தேன். அங்கெ இருந்த என் மாமனார்,மாமியார்,மனைவி, மச்சினனின் மனைவி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். என் அப்பா அவனை பிடித்து இழுத்து என் உயிரை காப்பாற்றினார்.ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டதற்கு என்னை கொள்ளாமல் விட மாட்டேன் என்று கூறினான். அங்கு நியாயம் இல்லை என்பதால் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தெரிவித்து,மருத்துவமனியில் சிகிச்சை பெற்றேன்.பல ஊசிகள் IV ஆகவும், IM ஆகவும் போட்டும் இன்னும் மூக்கிலும்,வாயிலும் ரத்தம் வருகிறது. போலீஸ் நடவடிக்கை இன்னும் எடுக்காமல் நான் சிகிச்சை பெற்று திரும்பி வர காத்து இருகின்றனர். என் மனைவியின் குடும்பத்தாரின் இது போன்ற தாக்குதலினால் மேலும் கணவன்,மனைவி உறவு சீர்குலைந்துள்ளது. உறவுகளை என்னால் மேம்படுத்த முடியும் என்று செய்யும் முயற்சிகள் இது போன்ற மோசமான உயிருக்கு ஆபத்தான நிலைமையை உண்டாக்கி விட்டது. வயதான இதய,சர்க்கரை நோயாளியான என் தந்தை என்னுடன் மருத்துவ மனையில் தங்கி என்னை பராமரித்து வருகிறார்.

  பதிலளிநீக்கு
 23. இப்போது பல மனைவிகள் - திருமணமான உடனே கணவன் என்பவன் தன் சொந்தம்; தன்னை தவிர அவன் குடும்ப உறுப்பினர்கள் எவரிடமும் உறவு கொள்ளக்கூடாது; அவர்களுக்கு பொருளுதவி ஏதும் செய்யக்கூடாது என்று விரும்புகின்றனர்.இதற்காக என் மனைவியை போன்று அவர்கள் பில்லி, சூன்யம், செய்வினை, வசிய மருந்து என்று வேலைக்கு சென்றுவிட்ட கணவனுக்கு தெரியாமல் தீய நட்பை பெற்று வசிய மருந்து செய்பவர்களிடம் பொய் கூறி மருந்தை பெற்று உணவில் கலந்து கொடுக்கின்றனர். "இது மாதிரி நினைக்கும் ஆண்களும் உண்டெனினும்", கண்டிப்பாய் அந்த மாதிரி நினைக்கும் பெண்கள் தான் அதிகம். எங்கள் குடும்பத்தில் என் அக்கா இது போன்ற பாதிப்புக்கு கணவனின் சகோதரியின் சதி செயலால் ஆட்பட்டார்.அடுத்து நான் வசியமருந்தின் சித்ரவதைக்கு உள்ளானேன். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனினும், பெரும்பான்மையான ஆண்கள் அதை செய்ய முயல்கின்றனர்... அவர்களும் - "தான்-தன்" கணவனுக்கு மட்டும் தான்; என்று தானே இருக்கவேண்டும்?? பின் ஏன் பிறந்த வீடு செல்கின்றனர்? மாறாய், ஏதேனும் ஓர் விடுதியை சென்று சேரலாமே!

  இப்படி பிரிந்து செல்லும் மனைவிக்கு ஓர் குழந்தை மட்டும் இருந்துவிட்டால், அந்த கணவனுக்கு வாழ்க்கை என்பது வெகுநிச்சயமாய் "நரகம்" - இறக்காமலே நரகத்தை காண்போர் அவர்! அந்த மனைவியும்,கணவனின் வழிகாட்டுதல் இல்லாது கணவனின் சொத்தை திருடி அனுபவிக்கும் பெற்றோரின் வழி காட்டுதலால் தவறுமேல் தவறு செய்து கொண்டே செல்வாள். மிகச்சமீபத்தில் என் நண்பனின் வாழ்வில் நிகழ்ந்தது...

  பதிலளிநீக்கு
 24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 25. 2013 3:59:00 AM GMT+01:00
  என் குழந்தைகளையும், மனைவியையும் அழைத்து வர என் தாயும், கல்யாணி என்பவரும் என் மாமனார் வீடு சென்று அழைத்துள்ளனர், நான் வந்தால் உங்கள் மகன் அடிப்பான் வர முடியாது என்று மறுத்துவிட்டால் என் மனைவி. வந்தவுடன் என்னுடன் பாசமாக இருந்து, உங்களை பிரிந்து சென்றது தவறு என்று பேசி உறவை வளர்க்க நினைத்தால் நானும் தற்போதைய 14 மாத பிரிவு துயரத்தையும், கடந்த 8 வருடங்களில் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல்கள்,பிரிவையும் மறந்து அன்பை பொழியலாம். ஆனால் வந்த உடன் என்னை கோபம் செய்ய கூடிய செயல்களை செய்வாள். .
  பிள்ளைகளை அழைத்து செல்கிறேன் என்று கேட்டுள்ளனர், உங்களால் வைத்து பராமரிக்க முடியாது எதற்கு குழந்தையை கேட்கிறீர்கள், அழைத்து சென்றால் பின்னாடியே நான் வந்து விடுவேன் என்று நினைத்தீர்களா என்று என் மனைவி கேட்டு என் தாயை நோக செய்துள்ளால், பிள்ளைகளை,மனைவியை பிரிந்து நான் மிக துயரப்படுவதையும், உடல் மெலிந்து, கருத்து இல்லாமல், பிடிப்பு இல்லாமல் இருப்பதையும், என் உடல் நிலை சரியில்லாத தகப்பனும் வேதனை அடைந்து உள்ளார் என்பதையும், .பேத்தியை பார்க்க என் அப்பா பேராவல் கொண்டுள்ளார் என்பதையும்,, நான் மிகுந்த மன உளைச்சலால் இரும்பு கம்பியால் கழுத்தை நெரித்து சாக சென்றதையும் எடுத்து கூறி அழைத்து உள்ளனர். வேண்டுமானால் இங்கு வந்து பார்த்து செல்லட்டும் என்றும், என் நகையை என் தகப்பன் வீட்டில் வைத்து இருப்பேன். எத்தனை பவுன் பெண்டாட்டிக்குன்னு செய்து போட்டுள்ளார், என்ன சொத்து பெண்டாட்டி பெயரில் சேர்த்துள்ளார், திறமையான ஆண்பிள்ளையாக இருக்கட்டும், என் அப்பா எனக்கு போட்ட நகையை பற்றி பேச அவருக்கு என்ன உரிமை, அருகதை இருக்கிறது. திறமையா சம்பாதித்து, தனி வீடு எடுத்து பெண்டாட்டி வேண்டும் என்று கேட்கட்டும், அனுப்பி வைக்கிறோம் என்று கூறிவிட்டனர்.எங்கள் வீடு 3 பெட்ரூம் உள்ள வசதியான வீடு, school ஆசிரியர் வேளையில் மாதம் 11,000 வருகிறது, தற்போது அவன் வேலைக்கு செல்லாவிட்டாலும் நீ வந்தால் மீண்டும் வேலைக்கு செல்வான் என்று என் தாய் பேசியுள்ளார்.
  .

  பதிலளிநீக்கு
 26. cont... என் தாயை பார்த்ததும் என் சின்ன மகள் பாசத்தால் என் தாயுக்கு தலை வாரி, பவுடர் பூசி, bag எடுத்துக்கொண்டு அப்பத்தாவுடன் என்னை பார்க்க கிளம்பியுள்ளது. இதை பார்த்து என் தாய் மிகவும் சந்தோசம் அடைந்து, என் பெரிய மகளை அழைத்துள்ளார், சின்னவன் வந்தாள் நானும் வருகிறேன் என்று தெரிவித்துவிட்டால். 2.7 வயது பால் குடிக்கும் குழந்தையை தர முடியாது என்று மனைவி மறுத்து விட்டதால் வேறு வழி இல்லாததால் என் குழந்தைக்கு தெரியாமல் அங்கிருந்து வயதான என் தாய் திரும்பி வந்து என் மகளின் பாசத்தை சிலரிடம் கூறியதை கேட்டு என் இதயம் வெடித்தது. உடன் சென்று அழைத்து வர வேண்டும் என்று என் மனம் துடித்தது.
  வேண்டுமானால் இங்கு வரட்டும், வந்து அழைத்து செல்லட்டும் என்று அவர்கள் கூறி இருந்ததால் கடந்த புதன் கிழமை 24/04/13 omni van எடுத்துக்கொண்டு என் அப்பா,நான், எங்களால் பல பயன் அடைந்துள்ள பணம் கடன் பெற்று, என்னையும் என் மனைவியையும் மணிமாறன் சேர்த்து வைக்க பல முறை என் மனைவியின் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார்.,என் குழந்தைகளை என்னிடம் சேர்ப்பேன் என்று எனக்கு நம்பிக்கை தந்த எங்கள் வயலை குத்தகை பார்க்கும் முருகையா ( இவரும் எங்களுக்கு பணம் தர வேண்டியுள்ளது) அவர்களும் தொட்டியம் மாமனார் வீடு சென்ற போது முன் அறையில் தெரியாத 3,4 நபர்கள் மது போதையில் சட்டை,பனியன் இன்றி படுத்து இருந்தனர். எங்களை பார்த்த என் மனைவியின் தம்பி மது போதையில் தகறாரு செய்தான்.என் பிள்ளைகள் சிறியவள் என் மடியிலும், பெரியவள் என் அப்பாவின் மடியிலும் அமர்ந்தன. நானும்,என் அப்பாவும் அவனை தலையிட வேண்டாம் என்று கூறிய போது, chair ல் என் சிறிய மகளை மடியில் வைத்து அமர்ந்து இருந்த போது,ஆவேசமாக என் மாமனார் அவனை ஏன் போக சொல்கிறாய் என்று என்னை திட்டிய வுடன் எதிர்பாராத தருணத்தில் ஏன்டா தேவடியா பயலே என்று கூறி என்னை தாக்கி, என் சட்டையை பிடித்து இழுத்து என் 3.2 பவுன் (துபாயில் என் சகோதரி வாங்கியது) தங்க செயினை திருடி,என்னை கீழே தள்ளி பல முறை அடித்து வாயிலும், மூக்கிலும் ரத்தம் ஊற்றியபோது என் மாமனார், மாமியார்,மனைவி,என்னை அடித்தவனின் மனைவி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். என் அப்பா தலையிட்டு அவனை பிடித்து இழுத்து என்னை காப்பற்றினார்.ஏன் அடிக்கிறான் என்று கேட்டபோது அவன் கொலை செய்வேன்,கத்தியால் குத்துவேன், கொடுவளால் வெட்டுவேன் என்று மிரட்டினான். மிகுந்த ரத்த இழப்பால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் செய்து விட்டு GH ல் admit ஆகி 5 ஊசி என் இடுப்பில் போட்டும் ரத்தம் வருவது நிற்காததால் திருச்சி GH ல் 4 நாட்கள் சிகிச்சை பெற்று போலீஸ் தடவடிக்கை எடுக்காத காரணத்தால் தொடர் சிகிச்சையை ஊரில் செய்து கொள்ளலாம் என்று discharge ஆகி வந்து விட்டோம். 5 நாட்களும் என் அப்பா உடன் இருந்து என்னை கவனித்து கொண்டார். அந்த ஆஸ்பத்திரியில் நான் ஒருவன் தான் மனைவியின் குடும்பத்தாரால் தாக்க பட்டு சிகிச்சை பெற்றவன்.

  பதிலளிநீக்கு
 27. cont... சுமார் 200 பேர் இருந்த MS1,MS2.3,4,5 வார்டில் நான் அறிந்த வரையில் என்னை போன்ற பாதிக்கப்பட்ட நபரை பார்க்க முடியவில்லை. குடித்து விட்டு வண்டி ஓட்டி கீழே விழுந்து என்னை விட மோசமாக காயம்பட்டு இருந்தவர்களை அவருடைய மனைவி மிக்க அன்புடன் மாத கணக்கில் பராமரித்து வந்ததை 2 வது முறையாக கண்டேன். முதல் முறை 2009 ஆடி 18க்கு என் மனைவியையும், குழந்தையையும் அழைத்தபோது என் மூக்கை உடைத்து 4 மாதங்களுக்கு மேல் சிகிச்சை செய்து ரூ.5௦,௦௦௦ என் அப்பா செலவு செய்து என்னை காப்பாற்றினார். என் நிலைமையை நினைத்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களிடம் பேசிய போது குடித்து விட்டு பல முறை மனைவி அடிபட்டதை தெரிவித்தனர். என் மனைவியின் வயதை ஒத்த ,அதை விட சிறிய வயதான,பெரிய வயதான பல பெண்கள் அங்கெ குழந்தையுடன் தங்கி தரையில் படுத்து கொண்டு கணவனை கவனித்து வந்தனர். என் அப்பாவிற்கு வலது மூட்டில் ஆபரேஷன் செய்துள்ளதாலும், இதய,சர்க்கரை வயதான நோயாளி என்பதாலும் western toilet தான் உபயோகிப்பார். இந்திய toilet ல் உட்கார்ந்தால் எழுந்துருக்க முடியாமல் அசுத்தமான toilet ல் விழுந்து விடுவோம் என்று பயந்து 3 நாட்கள் மலம் கழிக்காமல் என்னுடன் இருந்த போது என் மனது மிக துன்புற்றது. வீட்டிற்கு வந்த பின் மலம் கழித்தார்.
  பல இன்னல்களால் பாதிக்கப்பட்டு பரிதவித்து கொண்டுள்ளேன். என்னால் உறுவுகளை மேம்படுத்த முடியவில்லை. மேம்படுத்த சென்றால் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. காவல் துறையிலும் சிலர் சரி இல்லாததால் என் நிலைமை சரியாக இல்லை. 75,000 மதிப்புள்ள தங்க செயின், உடல் பாதிப்பு, தொடர் மருத்துவ சிகிச்சைக்கு செலவு, மருத்துவமனைக்கு செல்ல அலைச்சல் என்று உள்ளது என் நிலை.நான் 3 முறை omni யிலும்,பஸ் ல் ஒருமுறையும் 50+50 km சென்று அலைந்தேன். காவல் நிலையத்தில் 2/5/13 அன்று விசாரித்த போது என் மனைவி எனக்கு எதிராக பொய் சாட்சி கூறினாள். நான் தான் கெட்ட வார்த்தை சொல்லி குழந்தையை வைத்துக்கொண்டு அவள் தம்பியை அடிக்க எழுந்ததாகவும், மிக நல்ல குடும்பமான என் மனைவியின் தம்பி கெட்ட வார்த்தை கேட்க பிடிக்காமல் என்னை அடித்ததாகவும், நகை எங்கேயோ காணாமல் போட்டுவிட்டு வீண் பலி சுமத்துவதாகவும் விசாரணையில் தெரிவித்தாள். எனக்கு என் பிள்ளைகள் முக்கியம் என்பதால் பிள்ளைகளை என்னிடம் அனுப்பி வைத்துவிட்டு ( நகை காணாமல் போனது கம்ப்ளைன்ட்ல் சேர்க்க மாட்டேன் என்று SI முத்துகுமாரசாமி பிடிவாதமாக மறுத்துவிட்டார்)., அடித்தது ஆகியவற்றுக்கு பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் ஆகும்படி SI முத்து குமாரசாமி கூறினார். என்னை பலவிதமாக மனது நோகும் படி பைத்தியம், கேடி, கிரிமினல் என்று விசாரணையின் போது திட்டினார். பொய் case போட்டு என்னையும் arrest செய்து உள்ளே வைப்பேன் என்று மிரட்டியதால் உடன் SP க்கு phone செய்து கைதில் இருந்து தப்பினேன். போலிசாரின் அராஜக நடவடிக்கையை பார்த்து .என் தாய் மயக்கம் போட்டு விழுந்தார்கள்,

  பதிலளிநீக்கு
 28. சூழ்ச்சி, வசிய மருந்து வைத்தல், பொய் பேசுதல், பணத்தை சொல்லாமல் எடுத்து என்ன செய்தால் என்பது தெரியாமல் நம்மை குழப்பம் அடைய வைத்தல், குழம்பியுள்ள நிலையில் நம்மை மேலும் பல சிக்கல்களில் மாட்டிவைத்தல்,அப்பாவி கணவனாக இருத்தல் இது போன்று இருக்கும் கணவன்மார்களே இந்த சமுதாயம் நம்மை வாழ விடாது. மனைவிக்கு கேடு செய்தல், குடித்தல், பிற பெண்களுடன் தொடர்பு என்று இருக்கும் ஆண்களுக்கு சில போலீஸ் பாதுகாப்பு கொடுகிறது.என் னை மேலும்,மேலும் நோக அடித்து சாக அடிக்கிறது.

  பதிலளிநீக்கு
 29. GH ல் admit ஆகி AR copy போலீஸ் இடம் கொடுக்க ரூ.100,போலீஸ் நடவடிக்கை எடுக்க 1000 மற்ற செலவுகள் 100 என செலவு ஆனது. போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் 700 ரூபாயை மணிமாறன் திருப்பி வாங்கி விட்டார். omni செலவு,பஸ் செலவு, மருத்துவமனை செலவு, தொடர் சிகிச்சை செலவு,சாப்பாட்டு செலவு என்று செலவு ஆகி கையில் இருந்த பணம் விரயம் ஆகி வேலை முடியாமல் உள்ளது.

  பதிலளிநீக்கு
 30. நான் அடிபட்ட அவமானம் தாளாமல் வயதான என் தந்தை மனஉளைச்சலில் காய்ச்சல் வந்து உடல் நலம்சரி பண்ண மருத்துவமனை கொண்டு சென்று தவறான சிகிச்சையினால் பல லட்சம் செலவு செய்தும் எங்களுக்கு வலுவான நல்ல துணையாக இருந்த எங்கள் தந்தையை இழந்து வருந்தி வாழ்கிறேன்.என் தந்தை எனக்கு இருக்கும் ஒரு கோடி சொத்துடன் பலகோடிகள் பணம் தர முனைந்தார்.நான் அவரை காக்காமல் கொன்றுவிட்டு பரிதவித்துகொண்டு மன உளைச்சலில் உள்ளேன்.பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கு ஏற்ப எனக்கு நடந்துள்ளது.ஆகையால் எதையும் வெளிபடையாக எழுத பயந்து இந்த வலைபூ பக்கமே வராமல் இருந்தேன். என்ன தைரியம்,எப்படி வந்தது என்று சொல்ல தெரியவில்லை.facebookல் ஒரு காதலன் மனைவியிடம் சேர்த்து வைக்க சொல்லி புகைப்படத்துடன் எழுதி போன் no.கொடுத்து இருந்ததை படித்த பின் அல்லது என்ன என்று தெரியவில்லை.மீண்டும் இங்கு எழுதுகிறேன்.சிறிது பயம் இருக்கவே செய்கிறது.நல்லது நடக்காவிட்டாலும் கெட்டது எதுவும் நடக்காமல் இருந்தால் நல்லது.பேப்பர் செய்தி படித்து தலை அங்கம் எழுத ஊக்கம் பெரும் இளமுருகு அவர்களுக்கு என் போன்று பதிக்கப்பட்ட நபரின் நேர் அனுபவம் இன்னும் ஊக்கம் தரும் என்பதால் இங்கு வருகிறேன்.இங்கு படிக்க வரும் நபர்கள் பெரும்பாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நபர்களே அதிகம்.இவர்கள் எனக்கு உதவி செய்ய முடியாது.நான் தான் போராடி வழக்காடி வெற்றிபெறவேண்டும். ஆனால் பெண்ணுக்கு சாதகமான சட்டத்தை வைத்து இருக்கும் வழக்காடு மன்றத்தில் குடும்பத்தலைவன் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும்,restitution of conjugal rights போட்டு சேர்த்து வையுங்கள் என்று கேட்கவும் பிடிக்காமல் உள்ளேன்.பல வருடம் சென்றுவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனந்த்!

   உண்மைதான். இங்கே, பல உண்மைகளையும்; உங்கள் மனச்சுமையால் சொல்லி இருக்கிறீர்கள். அவ்வளவு அதிகமான தகவல்கள் இங்கே தேவையில்லை. நானே, இதை எப்படி உங்களிடம் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

   இம்மாதிரியான வழக்குகள் நீதிமன்றங்களுக்கே புதுமை என்பதால்; நீதித்துறை வழக்கத்திற்கும் மாறாய் தான் காலம் எடுத்துக்கொள்ளும். வேறு வழியில்லை! இது காலச்சுழற்சி; பெண்களுக்கான இந்த சட்டங்கள் எல்லாம் "கொடுமையான ஆணாதிக்கத்தையும்" தாண்டி நடந்த போராட்டங்களால் தான் கிடைத்தன. இப்போது, ஆண்கள் அவர்களின் சூழலில்! எனவே, நாம் பொறுமை காப்பது தவிர வேறு வழியில்லை.

   ஆனால், இம்மாதிரியான நிகழ்வுகள் சமுதாயத்தில் பெருகி வருவதைப் பார்க்கும்போது; அந்த புரிதலை, உண்மையை உணர்ந்து கொள்ள வெகு காலம் ஆகாது என்றே தோன்றுகிறது. ஆனால், நாம் அனைவரும் இதை ஒற்றுமையாய்/ஒன்றுகூடி பொறுமையாய் போராடுதல் அவசியம். அதைத்தான் என்னுடைய எழுத்துகள் மூலமாய் செய்து கொண்டிருக்கிறேன்.

   எல்லாமும் கடந்து செல்லும். பொறுமையாய், உங்கள் பணியில் கவனம் செலுத்தி மனதிடம் கொள்ளுங்கள்.

   நீக்கு