புதன், நவம்பர் 30, 2016

குறள் எண்: 0486 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0486}

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து

விழியப்பன் விளக்கம்: மனவுறுதி கொண்டோரின் காத்திருப்பு, சண்டைக்குத் தயாராகும் ஆட்டுக்கடா; பலமாய் தாக்குவதற்காக, பின்னோக்கிச் செல்வது போன்றதாகும்.
(அது போல்...)
அரசியல் பழகுவோரின் பொறுமை, வேட்டைக்குத் தயாராகும் புலி; துல்லியமாய் பாய்வதற்காக, புதர்க்குள் மறைவது போன்றதாகும்.
*****

செவ்வாய், நவம்பர் 29, 2016

குறள் எண்: 0485 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0485}

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

விழியப்பன் விளக்கம்: உலகை ஆட்கொள்ள விரும்புவோர், அதுபற்றிய கவலை ஏதுமின்றி; உரிய காலத்தை எதிர்நோக்கி, பொறுமையுடன் காத்திருப்பர்.
(அது போல்...)
உணர்வை அடக்கியாள எண்ணுவோர், அதுகுறித்த பயம் இன்றி; தக்க பயிற்சியை மேற்கொண்டு, வைராக்கியமுடன் செயல்படுவர்.
*****

திங்கள், நவம்பர் 28, 2016

குறள் எண்: 0484 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0484}

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்

விழியப்பன் விளக்கம்: காலத்தை அறிந்து, தக்க சூழலில் செயலை மேற்கொண்டால்; உலகையே வெல்ல நினைத்தாலும், எளிதில் நிறைவேறும்.
(அது போல்...)
சேமிப்பை உணர்ந்து, பாதுகாப்பான வழியில் முதலீடு செய்தால்; கிரகத்தையே வாங்கிட எண்ணினாலும், எளிதில் அடையலாம்.
*****

ஞாயிறு, நவம்பர் 27, 2016

குறள் எண்: 0483 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0483}

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

விழியப்பன் விளக்கம்: செய்யும் செயலை, தேவையான ஏற்பாடுகளுடன் காலமறிந்து செய்யும் திறனுடையோர்க்கு; செயற்கரிய செயலென்று, ஏதும் இருக்கின்றதோ?
(அது போல்...)
ஈட்டும் பொருளை, நிலையான திட்டங்களுடன் அளவறிந்து சேமிக்கும் வல்லவர்களுக்கு; சமாளிக்க முடியாத, சூழலேதும் வந்திடுமோ?
*****

சனி, நவம்பர் 26, 2016

குறள் எண்: 0482 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0482}

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு

விழியப்பன் விளக்கம்: காலத்தை உணர்ந்து, காலத்தோடு இணைந்து செயல்படுவதே; செயலால் கிடைக்கும் செல்வத்தை, இழக்காமல் கட்டிக்காக்கும் கயிறு ஆகும்.
(அது போல்...)
உறவைப் புரிந்து, உறவோடுப் பிணைந்து பயணப்படுவதே; உறவால் தொடரும் சந்ததியை, துண்டிக்காமல் இட்டுச்செல்லும் சங்கிலி ஆகும்.
*****

வெள்ளி, நவம்பர் 25, 2016

குறள் எண்: 0481 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0481}

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

விழியப்பன் விளக்கம்: வலிமையானக் கோட்டானைக், காகம் பகலில் வெல்வது போல்; எதிரியை வெல்ல, அரசரும் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(அது போல்...)
கடுமையான மழைக்காலத்திற்கு, முன்பே திட்டமிடும் எறும்பைப் போல்; முதுமையை வெல்ல, நாமும் முறையான திட்டத்தை வகுக்க வேண்டும்.
*****

வியாழன், நவம்பர் 24, 2016

அதிகாரம் 048: வலியறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்

0471.  வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
           துணைவலியும் தூக்கிச் செயல்

           விழியப்பன் விளக்கம்: 
விழியப்பன் விளக்கம்: செயல்களின் வலிமை/தன் வலிமை/எதிரியின் 
           வலிமை/துணையானோரின் வலிமை - இந்நான்கு காரணிகளையும் அளவிட்டு, 
           செயல்களைச் செய்யவேண்டும்!
(அது போல்...)
           சிந்தனையின் பலம்/மனதின் பலம்/நம்பிக்கையின் பலம்/உறவிலுள்ளோரின் பலம் - 
           இந்நான்கு காரணிகளையும் உணர்ந்து, உறவுகளை நிர்ணயிக்கவேண்டும்!
        
0472.  ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
           செல்வார்க்குச் செல்லாதது இல்

           விழியப்பன் விளக்கம்: 
தம் வலிமையின் இயல்பை அறிந்து, அறிந்த வண்ணம் 
           வைராக்கியமுடன் நிலைத்து செயல்படுவோர்க்கு; இயலாதது என்று எதுவுமில்லை.
(அது போல்...)
           சுய ஒழுக்கத்தின் மாண்பை உணர்ந்து, உணர்ந்த வண்ணம் உண்மையுடன் தொடர்ந்து 
           வாழ்வோர்க்கு; வேதனை என்று ஏதுமில்லை.
           
0473.  உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
           இடைக்கண் முரிந்தார் பலர்

           விழியப்பன் விளக்கம்: 
தம் வலிமையை உணராமல், உணர்ச்சி உந்துதலில் செயல்களைத் 
           துவங்கி;  இடையில் விட்டொழிந்தோர் பலருண்டு.
(அது போல்...)
           தம் வருமானத்தைத் திட்டமிடாமல், அவசியச் சூழலில் கடன்களைப் பெற்று; இளமையில் 
           வாழ்விழந்தோர் பலருண்டு.

0474.  அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
           வியந்தான் விரைந்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
பிறருடன் இணக்கமாய் உறவாடாமல், தன் வலிமையின் அளவை 
           அறியாமல்; தன்னைத் தானே வியந்து பேசுவோர், வேகமாய் அழிவர்.
(அது போல்...)
           அணியினரிடம் முழுமையாய் விவாதிக்காமல், தன் தலைமையின் தரத்தை உணராமல்; 
           தானெனும் கர்வமுடன் செயல்படும் அணித்தலைவர்கள், விரைவில் கெடுவர்.

0475.  பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
           சால மிகுத்துப் பெயின்

           விழியப்பன் விளக்கம்: 
இலகுவான மயிலிறகே ஆயினும், வண்டியின் அச்சாணியின் 
           வலிமையை அறியாமல்; அளவுக்கதிகமாக ஏற்றினால், அச்சு முறிந்துவிடும்.
(அது போல்...)
           விலைகுறைந்த பொருட்களே ஆயினும், கையிலிருக்கும் இருப்பின் அளவை உணராமல்; 
           தொடர்ந்து செலவிட்டால், வறுமை ஆட்கொள்ளும்.

0476.  நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
           உயிர்க்கிறுதி யாகி விடும்

           விழியப்பன் விளக்கம்: 
மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், மனித வலிமையின் 
           வரையறையை உணராமல்; மேலும் ஏறிட முயன்றால், உயிரை மாய்ப்பதற்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
           மக்களின் உரிமைகளைத் தகர்ப்போர், உரிமை மீறலின் விளைவை அறியாமல்; 
           மென்மேலும் தகர்க்க முனைந்தால், சமுதாயப் புரட்சிக்கு வித்திடும்.

0477.  ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
           போற்றி வழங்கு நெறி

           விழியப்பன் விளக்கம்: 
நம் பொருளீட்டும் திறத்தை உணர்ந்து, பிறர்க்குக் கொடுத்தல் 
           வேண்டும்; அதுவே பொருளைப் பாதுகாத்து, கொடையளிக்கும் நெறியாகும்.
(அது போல்...)
           நம் புரிதலின் ஆழத்தை ஆராய்ந்து, பிறர்க்குக் கற்பித்தல் வேண்டும்; அதுவே புரிதலை 
           விரிவாக்கி, கற்பிக்கும் வழியாகும்.

0478.  ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
           போகாறு அகலாக் கடை

           விழியப்பன் விளக்கம்: 
வருமானத்தின் அளவு குறைந்தாலும்; செலவினங்கள் எல்லையைக் 
           கடந்து போகாத வரையில், பெரிய தீமையேதும் நேர்வதில்லை!
(அது போல்...)
           நற்சிந்தனையின் வீரியம் சிதைந்தாலும்; தீவினைகள் மனதை ஆக்கிரமித்து பரவாத 
           வரையில், அதீத அழிவேதும் நிகழ்வதில்லை!

0479.  அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
           இல்லாகித் தோன்றாக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: வருமானத்தின் அளவை உணர்ந்து, வாழாதவரின் வாழ்க்கை; 
           வளமாய் இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, பின்னர் உருவழிந்து கெட்டழியும்.
(அது போல்...)
           உறவுகளின் உன்னதத்தை மதித்து, பழகாதவரின் நிலைமை; அதிகாரமாய் இருப்பது 
           போன்ற நம்பிக்கையைக் கொடுத்து, பின்னர் சுயமிழந்து முடிவடையும்.

0480.  உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
           வளவரை வல்லைக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
தன்னுடையக் கையிருப்பைக் கணக்கிடாமல், பிறர்க்கு உதவிக் 
           கொண்டே இருந்தால்; ஒருவரின் செல்வத்தின் அளவு, விரைவில் அழியும்.
(அது போல்...)
           தன்னுடைய குறையைக் களையாமல், பிறரை விமர்சித்துக் கொண்டே இருந்தால்; 
           ஒருவரின் சுயத்தின் தரம், வேகமாய் குறையும்.
*****

குறள் எண்: 0480 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0480}

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

விழியப்பன் விளக்கம்: தன்னுடையக் கையிருப்பைக் கணக்கிடாமல், பிறர்க்கு உதவிக் கொண்டே இருந்தால்; ஒருவரின் செல்வத்தின் அளவு, விரைவில் அழியும்.
(அது போல்...)
தன்னுடைய குறையைக் களையாமல், பிறரை விமர்சித்துக் கொண்டே இருந்தால்; ஒருவரின் சுயத்தின் தரம், வேகமாய் குறையும்.
*****

புதன், நவம்பர் 23, 2016

குறள் எண்: 0479 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0479}

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

விழியப்பன் விளக்கம்: வருமானத்தின் அளவை உணர்ந்து, வாழாதவரின் வாழ்க்கை; வளமாய் இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, பின்னர் உருவழிந்து கெட்டழியும்.
(அது போல்...)
உறவுகளின் உன்னதத்தை மதித்து, பழகாதவரின் நிலைமை; அதிகாரமாய் இருப்பது போன்ற நம்பிக்கையைக் கொடுத்து, பின்னர் சுயமிழந்து முடிவடையும்.
*****

செவ்வாய், நவம்பர் 22, 2016

குறள் எண்: 0478 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0478}

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

விழியப்பன் விளக்கம்: வருமானத்தின் அளவு குறைந்தாலும்; செலவினங்கள் எல்லையைக் கடந்து போகாத வரையில், பெரிய தீமையேதும் நேர்வதில்லை!
(அது போல்...)
நற்சிந்தனையின் வீரியம் சிதைந்தாலும்; தீவினைகள் மனதை ஆக்கிரமித்து பரவாத வரையில், அதீத அழிவேதும் நிகழ்வதில்லை!
*****

திங்கள், நவம்பர் 21, 2016

குறள் எண்: 0477 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0477}

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

விழியப்பன் விளக்கம்: நம் பொருளீட்டும் திறத்தை உணர்ந்து, பிறர்க்குக் கொடுத்தல் வேண்டும்; அதுவே பொருளைப் பாதுகாத்து, கொடையளிக்கும் நெறியாகும்.
(அது போல்...)
நம் புரிதலின் ஆழத்தை ஆராய்ந்து, பிறர்க்குக் கற்பித்தல் வேண்டும்; அதுவே புரிதலை விரிவாக்கி, கற்பிக்கும் வழியாகும்.
*****

ஞாயிறு, நவம்பர் 20, 2016

குறள் எண்: 0476 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0476}

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்

விழியப்பன் விளக்கம்: மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், மனித வலிமையின் வரையறையை உணராமல்; மேலும் ஏறிட முயன்றால், உயிரை மாய்ப்பதற்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
மக்களின் உரிமைகளைத் தகர்ப்போர், உரிமை மீறலின் விளைவை அறியாமல்; மென்மேலும் தகர்க்க முனைந்தால், சமுதாயப் புரட்சிக்கு வித்திடும்.
*****

சனி, நவம்பர் 19, 2016

குறள் எண்: 0475 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0475}

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

விழியப்பன் விளக்கம்: இலகுவான மயிலிறகே ஆயினும், வண்டியின் அச்சாணியின் வலிமையை அறியாமல்; அளவுக்கதிகமாக ஏற்றினால், அச்சு முறிந்துவிடும்.
(அது போல்...)
விலைகுறைந்த பொருட்களே ஆயினும், கையிலிருக்கும் இருப்பின் அளவை உணராமல்; தொடர்ந்து செலவிட்டால், வறுமை ஆட்கொள்ளும்.
*****

வெள்ளி, நவம்பர் 18, 2016

குறள் எண்: 0474 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0474}

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

விழியப்பன் விளக்கம்: பிறருடன் இணக்கமாய் உறவாடாமல், தன் வலிமையின் அளவை அறியாமல்; தன்னைத் தானே வியந்து பேசுவோர், வேகமாய் அழிவர்.
(அது போல்...)
அணியினரிடம் முழுமையாய் விவாதிக்காமல், தன் தலைமையின் தரத்தை உணராமல்; தானெனும் கர்வமுடன் செயல்படும் அணித்தலைவர்கள், விரைவில் கெடுவர்.
*****

வியாழன், நவம்பர் 17, 2016

குறள் எண்: 0473 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0473}

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

விழியப்பன் விளக்கம்: தம் வலிமையை உணராமல், உணர்ச்சி உந்துதலில் செயல்களைத் துவங்கி;  இடையில் விட்டொழிந்தோர் பலருண்டு.
(அது போல்...)
தம் வருமானத்தைத் திட்டமிடாமல், அவசியச் சூழலில் கடன்களைப் பெற்று; இளமையில் வாழ்விழந்தோர் பலருண்டு.
*****

புதன், நவம்பர் 16, 2016

குறள் எண்: 0472 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0472}

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

விழியப்பன் விளக்கம்: தம் வலிமையின் இயல்பை அறிந்து, அறிந்த வண்ணம் வைராக்கியமுடன் நிலைத்து செயல்படுவோர்க்கு; இயலாதது என்று எதுவுமில்லை.
(அது போல்...)
சுய ஒழுக்கத்தின் மாண்பை உணர்ந்து, உணர்ந்த வண்ணம் உண்மையுடன் தொடர்ந்து வாழ்வோர்க்கு; வேதனை என்று ஏதுமில்லை.
*****

செவ்வாய், நவம்பர் 15, 2016

குறள் எண்: 0471 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0471}

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

விழியப்பன் விளக்கம்: செயல்களின் வலிமை/தன் வலிமை/எதிரியின் வலிமை/துணையானோரின் வலிமை - இந்நான்கு காரணிகளையும் அளவிட்டு, செயல்களைச் செய்யவேண்டும்!
(அது போல்...)
சிந்தனையின் பலம்/மனதின் பலம்/நம்பிக்கையின் பலம்/உறவிலுள்ளோரின் பலம் - இந்நான்கு காரணிகளையும் உணர்ந்து, உறவுகளை நிர்ணயிக்கவேண்டும்!
*****

திங்கள், நவம்பர் 14, 2016

அதிகாரம் 047: தெரிந்து செயல்வகை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை

0461.  அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
           ஊதியமும் சூழ்ந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: ஓர் செயலால் விளையும் நன்மையை, அச்செயலின் அழிவு மற்றும் 

           ஆக்கம் இரண்டின் அடிப்படையிலும் கணக்கிட்டு; அதன் பின் செயல்களை 
           வகுக்கவேண்டும்.
(அது போல்...)
           ஓர் சிந்தனையால் உருப்பெறும் படைப்பை, அச்சிந்தனையின் குறை மற்றும் நிறை 
           இரண்டின் அடிப்படையிலும் மதிப்பிட்டு; அதன் பின் சிந்தனைகளை வலுப்படுத்தவேண்டும்.
        
0462.  தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
           அரும்பொருள் யாதொன்றும் இல்

           விழியப்பன் விளக்கம்: அனுபவம் வாய்ந்த குழுவுடன் இணைந்து; ஆராய்ந்தறிந்து 

           செயல்களைச் செய்வோர்க்கு, செயற்கரிய செயலென்று எதுவுமில்லை!
(அது போல்...)
           நேர்மை மிகுந்த தலைவருடன் கைகோர்த்து; தேவையறிந்து அரசியல் கற்போரால், 
           ஒழிக்கமுடியா ஊழலென்று ஏதுமில்லை!
           
0463.  ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
           ஊக்கார் அறிவுடை யார்

           விழியப்பன் விளக்கம்: 
பகுத்தறியும் திறமுடையோர், வருங்கால வரவை கணக்கிட்டு; 
           நிகழ்காலக் கையிருப்பை இழக்கவைக்கும், செயல்களைச் செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
           மரணத்தை உணர்ந்தோர், பிற்கால வாழ்வை நினைத்து; தற்கால அனுபவத்தை இழக்கும், 
           வாழ்வை வாழமாட்டார்கள்.

0464.  தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
           ஏதப்பாடு அஞ்சு பவர்

           விழியப்பன் விளக்கம்: 
இகழ்ச்சியெனும் குற்றவுணர்விற்கு அஞ்சுவோர்; விளைவைப் 
           பற்றியத் தெளிவில்லாத, செயல்களைத் துவங்க மாட்டார்கள்.
(அது போல்...)
           தானெனும் கர்வத்தை வெறுப்போர்; விமர்சிப்போரின் நோக்கத்தை அறியாமல், 
           விமர்சனங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்.

0465.  வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
           பாத்திப் படுப்பதோ ராறு

           விழியப்பன் விளக்கம்: 
முறையானத் திட்டங்களை வகுக்காமல், போரை எதிர்கொள்ளுதல்; 
           பாத்தியில் விதையை விதைப்பது போல், பகைவரை வலிமைப்படுத்தும் வழியாகும்.
(அது போல்...)
           நிலையான வருமானத்தை வரையறுக்காமல், கடனை வாங்குதல்; நெருப்பில் நெய்யை 
           வார்ப்பது போல், துன்பத்தைப் பெருக்கும் செயலாகும்.

0466.  செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
           செய்யாமை யானுங் கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
செய்யக் கூடாதவற்றைச் செய்வது, கெடுதலை உருவாக்கும்! செய்ய 
           வேண்டியவற்றைச் செய்யாததும், கெடுதலை உருவாக்கும்!
(அது போல்...)
           முறையற்ற உறவில் இணைவது, இல்லறத்தைச் சிதைக்கும்! முறையான உறவில் 
           இணையாததும், இல்லறத்தைச் சிதைக்கும்!

0467.  எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
           எண்ணுவம் என்பது இழுக்கு

           விழியப்பன் விளக்கம்: 
எவ்வொரு செயலாயினும், முற்றிலும் ஆராய்ந்த பின்னர் 
           துவங்கவேண்டும்; துவங்கியபின் ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றமாகும்!
(அது போல்...)
           எந்தவொரு உறவாயினும், பரஸ்பரம் அன்பைப் பரிமாறியபின் இணையவேண்டும்; 
           இணைந்தபின் பரிமாறிக் கொள்ளலாம் என்பது தவறாகும்!

0468.  ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
           போற்றினும் பொத்துப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
பலரின் துணையோடு செய்திடினும்; விளைவை அறிந்து முறையான 
           திட்டத்துடன் துவங்காத செயல், முழுமடையாமல் போகும்!
(அது போல்...)
           பல்வேறு பட்டங்களைப் பெற்றிருப்பினும்; நோக்கத்தை உணர்ந்து சரியான பயிற்சியுடன் 
           கற்காத கல்வி, பயனில்லாமல் போகும்!

0469.  நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
           பண்பறிந் தாற்றாக் கடை

           விழியப்பன் விளக்கம்: 
அவரவரின் இயல்பானப் பண்பை உணர்ந்து, செயல்களைச் செய்யத் 
           தவறுவது; நன்மைப் பயக்கும் செயல்களிலும், தவறை இழைக்கும்.
(அது போல்...)
           பிறரின் சுயமான உரிமையை அறிந்து, உறவுகளை வழிநடத்தத் தவறுவது; பெரியோர் 
           நிர்ணயிக்கும் உறவுகளிலும், விரிசலை உருவாக்கும்.

0470.  எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
           கொள்ளாத கொள்ளாது உலகு

           விழியப்பன் விளக்கம்: 
தம் இயல்பு அல்லாதவற்றை, மக்கள் ஏற்கமாட்டர்கள் என்பதால்; 
           பிறர் இகழாத வகையில், நம் செயல்களை உணர்ந்து வகுக்கவேண்டும்.
(அது போல்...)
           தமக்கு ஈடுபாடு இல்லாதவற்றை, மாணவர்கள் கற்கமாட்டார்கள் என்பதால்; அவர்கள் 
           இன்னலடையாத முறையில், கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.
*****

குறள் எண்: 0470 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0470}

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு

விழியப்பன் விளக்கம்: தம் இயல்பு அல்லாதவற்றை, மக்கள் ஏற்கமாட்டர்கள் என்பதால்; பிறர் இகழாத வகையில், நம் செயல்களை உணர்ந்து வகுக்கவேண்டும்.
(அது போல்...)
தமக்கு ஈடுபாடு இல்லாதவற்றை, மாணவர்கள் கற்கமாட்டார்கள் என்பதால்; அவர்கள் இன்னலடையாத முறையில், கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.
*****

ஞாயிறு, நவம்பர் 13, 2016

குறள் எண்: 0469 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0469}

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

விழியப்பன் விளக்கம்: அவரவரின் இயல்பானப் பண்பை உணர்ந்து, செயல்களைச் செய்யத் தவறுவது; நன்மைப் பயக்கும் செயல்களிலும், தவறை இழைக்கும்.
(அது போல்...)
பிறரின் சுயமான உரிமையை அறிந்து, உறவுகளை வழிநடத்தத் தவறுவது; பெரியோர் நிர்ணயிக்கும் உறவுகளிலும், விரிசலை உருவாக்கும்.
*****

சனி, நவம்பர் 12, 2016

குறள் எண்: 0468 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0468}

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

விழியப்பன் விளக்கம்: பலரின் துணையோடு செய்திடினும்; விளைவை அறிந்து முறையான திட்டத்துடன் துவங்காத செயல், முழுமடையாமல் போகும்!
(அது போல்...)
பல்வேறு பட்டங்களைப் பெற்றிருப்பினும்; நோக்கத்தை உணர்ந்து சரியான பயிற்சியுடன் கற்காத கல்வி, பயனில்லாமல் போகும்!
*****

வெள்ளி, நவம்பர் 11, 2016

குறள் எண்: 0467 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0467}

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

விழியப்பன் விளக்கம்: எவ்வொரு செயலாயினும், முற்றிலும் ஆராய்ந்த பின்னர் துவங்கவேண்டும்; துவங்கியபின் ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றமாகும்!
(அது போல்...)
எந்தவொரு உறவாயினும், பரஸ்பரம் அன்பைப் பரிமாறியபின் இணையவேண்டும்; இணைந்தபின் பரிமாறிக் கொள்ளலாம் என்பது தவறாகும்!
*****

வியாழன், நவம்பர் 10, 2016

குறள் எண்: 0466 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0466}

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

விழியப்பன் விளக்கம்: செய்யக் கூடாதவற்றைச் செய்வது, கெடுதலை உருவாக்கும்! செய்ய வேண்டியவற்றைச் செய்யாததும், கெடுதலை உருவாக்கும்!
(அது போல்...)
முறையற்ற உறவில் இணைவது, இல்லறத்தைச் சிதைக்கும்! முறையான உறவில் இணையாததும், இல்லறத்தைச் சிதைக்கும்!
*****

புதன், நவம்பர் 09, 2016

குறள் எண்: 0465 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0465}

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

விழியப்பன் விளக்கம்: முறையானத் திட்டங்களை வகுக்காமல், போரை எதிர்கொள்ளுதல்; பாத்தியில் விதையை விதைப்பது போல், பகைவரை வலிமைப்படுத்தும் வழியாகும்.
(அது போல்...)
நிலையான வருமானத்தை வரையறுக்காமல், கடனை வாங்குதல்; நெருப்பில் நெய்யை வார்ப்பது போல், துன்பத்தைப் பெருக்கும் செயலாகும்.
*****

செவ்வாய், நவம்பர் 08, 2016

குறள் எண்: 0464 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0464}

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்

விழியப்பன் விளக்கம்: இகழ்ச்சியெனும் குற்றவுணர்விற்கு அஞ்சுவோர்; விளைவைப் பற்றியத் தெளிவில்லாத, செயல்களைத் துவங்க மாட்டார்கள்.
(அது போல்...)
தானெனும் கர்வத்தை வெறுப்போர்; விமர்சிப்போரின் நோக்கத்தை அறியாமல், விமர்சனங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்.
*****