சனி, டிசம்பர் 31, 2016

குறள் எண்: 0517 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0517}

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

விழியப்பன் விளக்கம்: குறிப்பிட்ட வினையை, குறிப்பிட்ட இயல்பால் - குறிப்பிட்ட நபர், செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து; அந்த வினையை, அவர்வசம் ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
தகுதியான உறவை, தகுதியான திறனால் - தகுதியான சுற்றத்தார், வழிநடத்திச் செல்வர் என்பதை உணர்ந்து; அந்த உறவை, அவர்களுடன் இணைத்தல் வேண்டும்.

வெள்ளி, டிசம்பர் 30, 2016

குறள் எண்: 0516 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0516}

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

விழியப்பன் விளக்கம்: வினையின் தன்மையோடு, அதைச் செய்வோரின் திறமையையும் ஆராய்ந்து; அவ்வினைக்கு சாதகமான காலத்தையும், உணர்ந்து செயல்படவேண்டும்.
(அது போல்...)
உறவின் இயல்போடு, உறவில் இணைவோரின் இயல்பையும் உணர்ந்து, அவ்வுறவு பலப்படும் காரணிகளையும், ஆராய்ந்து அணுகவேண்டும்.

வியாழன், டிசம்பர் 29, 2016

குறள் எண்: 0515 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0515}

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து, நிறைவேற்றும் திறனுடையோரைத் தவிர்த்து; சார்ந்திருக்கும் ஒருவரைச் சிறந்தவரென, வினைகளைச் செய்ய நியமித்தல் முறையன்று.
(அது போல்...)
தவறுகளை நடுநிலையோடு, தண்டிக்கும் இயல்புடையோரை விடுத்து; வேண்டியவர் ஒருவரை நியாயவாதியென, நீதியை வழங்க பதவியளித்தல் சரியல்ல.

புதன், டிசம்பர் 28, 2016

குறள் எண்: 0514 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0514}

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

விழியப்பன் விளக்கம்: அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, தெளிவடைந்தவர் ஆயினும்; வினைகளைச் செய்து முடிக்கும் திறனால், வலுவிழக்கும் மக்கள் பலருண்டு.
(அது போல்...)
அனைத்து நூல்களையும் கற்றறிந்து, உரையெழுதியவர் எனினும்; பாடங்களை ஆழ்ந்து கற்பிக்கும் வகையால், தோல்வியுறும் குருக்கள் பலருண்டு.

செவ்வாய், டிசம்பர் 27, 2016

குறள் எண்: 0513 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0513}

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

விழியப்பன் விளக்கம்: அன்பு/அறிவு/தெரிந்து தெளியும் திறன்/பேராசை இல்லாமை - இந்நான்கு நற்குணங்களையும் உடையவரைக் கண்டறிந்து, வினைகளை ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
உண்மை/ஒழுக்கம்/உறவை மதிக்கும் குணம்/காழ்ப்புணர்ச்சி இல்லாமை - இந்நான்கு நற்பண்புகளை இருப்போரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைப் பேணுதல் வேண்டும்.

திங்கள், டிசம்பர் 26, 2016

குறள் எண்: 0512 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0512}

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

விழியப்பன் விளக்கம்: இடையூறுகளை ஆராய்ந்து தகர்த்து, வருவாயைப் பெருக்கி; வளத்தை மேம்படுத்தும் திறனுடையவரிடம், வினைகளை ஒப்படைத்தல் வேண்டும்.
(அது போல்...)
விளைவுகளை அறிந்து முற்காத்து, சிந்தனையை தெளிவாக்கி; கற்பித்தலை மேற்கொள்ளும் குருவிடம், நம்மை சேர்ப்பிக்க வேண்டும்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2016

குறள் எண்: 0511 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0511}

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

விழியப்பன் விளக்கம்: வினையின், நன்மை/தீமை இரண்டையும் ஆராய்ந்து; நன்மையை மட்டுமே செய்யும் இயல்பினரிடம், ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
தொழிலின், நியாயம்/அநியாயம் இரண்டையும் உணர்ந்து; நியாயமாய் மட்டுமே வியாபாரம் செய்பவரிடம், பொருட்களை வாங்க வேண்டும்.

சனி, டிசம்பர் 24, 2016

அதிகாரம் 051: தெரிந்து தெளிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்

0501.  அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
           திறந்தெரிந்து தேறப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் - அறவினை/உடைமை/இன்பம்/உயிர்பயம் - இவை
           நான்கின் தரத்தையும் ஆய்ந்தறிந்து, அவரை மதிப்பிடுதல் வேண்டும்.
(அது போல்...)
           ஓருறவின் - அடிப்படை/சாத்தியக்கூறு/தேவை/நிலையாமை - இவை நான்கு
           காரணிகளையும் உணர்ந்தறிந்து, அவ்வுறவில் இணைதல் வேண்டும்.
        
0502.  குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
           நாணுடையான் சுட்டே தெளிவு

           விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த குடும்பத்தில் பிறந்து, குற்றங்களைக் களைந்து;
           பழியளிக்கும் செயல்களுக்கு அஞ்சுவோரைத், தெரிந்து தெளிய வேண்டும்.
(அது போல்...)
           சமமுணர்ந்த கொள்கையில் இணைந்து, ஊழலை எதிர்த்து; அறமழிக்கும் கூட்டணியைத்
           தவிர்ப்போரை, அறிந்து போற்ற வேண்டும்.
           
0503.  அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
           இன்மை அரிதே வெளிறு

           விழியப்பன் விளக்கம்: அரிதான விடயங்களையும் கற்று, குற்றங்களைக் களைந்த
           சான்றோரிடமும்; அவர்களைத் தெரிந்து தெளிந்தால், அறியாமை இல்லாமல் இருத்தல்
           சாத்தியமல்ல.
(அது போல்...)
           நிறைவான பழக்கங்களைப் பழகி, தீயவற்றை ஒதுக்கிய உயர்ந்தோரிடமும்; அவர்களை
           நெருங்கிப் பழகினால், சிற்றின்பம் இல்லாமல் இருத்தல் அரிது.

0504.  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
           மிகைநாடி மிக்க கொளல்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் நற்குணங்களையும், குற்றச்செயல்களையும் ஆழ்ந்து 
           ஆராய்ந்து; அவற்றுள் மிகையானது எதுவென்பதை, தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
           ஓராட்சியின் பொதுநலத்தையும், சுயநலத்தையும் நடுநிலையோடு அலசி; அவற்றுள் 
           அதீதமானது எதுவென்பதை, பகுத்து அறிதல் வேண்டும்.

0505.  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
           கருமமே கட்டளைக் கல்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் மேன்மை குணத்திற்கும், சிறுமை குணத்திற்கும்;
           அவர்களின் செயல்களே அடிப்படை என்பதைத், தெரிந்து தெளிவடைதல் வேண்டும்.
(அது போல்...)
           சமுதாயத்தின் உயர்ந்த ஒழுக்கத்திற்கும், தாழ்ந்த ஒழுக்கத்திற்கும்; தனி-நபரின்
           ஒழுக்கமே காரணி என்பதை, உணர்ந்து விமர்சித்தல் வேண்டும்.

0506.  அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
           பற்றிலர் நாணார் பழி

           விழியப்பன் விளக்கம்: அறத்தின் மேல் பயமில்லாதோர் - எவ்வித பற்றும் இல்லாமல்,
           எப்பழிக்கும் அஞ்சமாட்டர் என்பதால்; அவர்களை நம்பித் தெளிதல் கூடாது.
(அது போல்...)
           வாய்மையின் வலிமையை உணராதோர் - எவ்வித பயமும் இல்லாமல், எப்பகைக்கும்
           பின்வாங்கார் என்பதால்; அவர்களை நம்பி எவரையும் பகைத்தலாகாது.

0507.  காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
           பேதைமை எல்லாந் தரும்

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் சிறப்பை அறியாதவர்களை, அவர்கள் மேலிருக்கும்
           அன்பால்; ஆராயாமல் நம்பித் தெளிதல், எல்லாவகை அறியாமையையும் அளிக்கும்.
(அது போல்...)
           மனிதத்தின் அடிப்படை உணராதோரை, அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பால்; புரியாமல்
           தொடர்ந்து செல்லுதல், அனைத்து தீமைகளையும் விளைவிக்கும்.

0508.  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
           தீரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் - பிறர் சொல்வதை நம்பி, ஒருவரைத் தெளிந்தால்;
           அவருக்கும், அவரைத் தொடர்வோர்க்கும் - தீர்க்க முடியாத துன்பங்களை விளைவிக்கும்.
(அது போல்...)
           சிந்திக்காமல் - புறக் காரணிகளை நம்பி, ஓருறவில் இணைந்தால்; அவருக்கும், அவரின்
           சந்ததிக்கும் - அழிக்க முடியாத ஒழுக்கமின்மைகளை விளைவிக்கும்.

0509.  தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
           தேறுக தேறும் பொருள்

           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், எவரையும் தேர்வு செய்யக்கூடாது; அப்படித் தேர்வு
           செய்தபின், அவரைப் பற்றித் தெரியவேண்டிய விடயங்களைத், தெரிந்து தெளிதல்
           வேண்டும்.
(அது போல்...)
           சிந்திக்காமல், முறையற்ற உறவில் இணையக்கூடாது; அப்படி இணைய நேர்ந்தபின்,
           அவ்வுறவைப் பற்றி அலசவேண்டிய விடயங்களை, அலசி முடிவெடுத்தல் வேண்டும்.

0510.  தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
           தீரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் ஒருவரை நம்புவதும்/நம்பியவர் மேல் சந்தேகம் 
           கொள்வதும் - என்றுமழியாத துன்பத்தை விளைவிக்கும்.
(அது போல்...)
           சிந்திக்காமல் தவறான உறவில் இணைவதும்/இணைந்தபின் உறவை அலசி ஆராய்வதும் 
           - தீர்வற்ற சிக்கலை உருவாக்கும்.

குறள் எண்: 0510 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0510}

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் ஒருவரை நம்புவதும்/நம்பியவர் மேல் சந்தேகம் கொள்வதும் - என்றுமழியாத துன்பத்தை விளைவிக்கும்.
(அது போல்...)
சிந்திக்காமல் தவறான உறவில் இணைவதும்/இணைந்தபின் உறவை அலசி ஆராய்வதும் - தீர்வற்ற சிக்கலை உருவாக்கும்.

வெள்ளி, டிசம்பர் 23, 2016

குறள் எண்: 0509 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0509}

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், எவரையும் தேர்வு செய்யக்கூடாது; அப்படித் தேர்வு செய்தபின், அவரைப் பற்றித் தெரியவேண்டிய விடயங்களைத், தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
சிந்திக்காமல், முறையற்ற உறவில் இணையக்கூடாது; அப்படி இணைய நேர்ந்தபின், அவ்வுறவைப் பற்றி அலசவேண்டிய விடயங்களை, அலசி முடிவெடுத்தல் வேண்டும்.

வியாழன், டிசம்பர் 22, 2016

குறள் எண்: 0508 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0508}

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் - பிறர் சொல்வதை நம்பி, ஒருவரைத் தெளிந்தால்; அவருக்கும், அவரைத் தொடர்வோர்க்கும் - தீர்க்க முடியாத துன்பங்களை விளைவிக்கும்.
(அது போல்...)
சிந்திக்காமல் - புறக் காரணிகளை நம்பி, ஓருறவில் இணைந்தால்; அவருக்கும், அவரின் சந்ததிக்கும் - அழிக்க முடியாத ஒழுக்கமின்மைகளை விளைவிக்கும்.

புதன், டிசம்பர் 21, 2016

குறள் எண்: 0507 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0507}

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் சிறப்பை அறியாதவர்களை, அவர்கள் மேலிருக்கும் அன்பால்; ஆராயாமல் நம்பித் தெளிதல், எல்லாவகை அறியாமையையும் அளிக்கும்.
(அது போல்...)
மனிதத்தின் அடிப்படை உணராதோரை, அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பால்; புரியாமல் தொடர்ந்து செல்லுதல், அனைத்து தீமைகளையும் விளைவிக்கும்.

செவ்வாய், டிசம்பர் 20, 2016

குறள் எண்: 0506 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0506}

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

விழியப்பன் விளக்கம்: அறத்தின் மேல் பயமில்லாதோர் - எவ்வித பற்றும் இல்லாமல், எப்பழிக்கும் அஞ்சமாட்டர் என்பதால்; அவர்களை நம்பித் தெளிதல் கூடாது.
(அது போல்...)
வாய்மையின் வலிமையை உணராதோர் - எவ்வித பயமும் இல்லாமல், எப்பகைக்கும் பின்வாங்கார் என்பதால்; அவர்களை நம்பி எவரையும் பகைத்தலாகாது.

திங்கள், டிசம்பர் 19, 2016

குறள் எண்: 0505 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0505}

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் மேன்மை குணத்திற்கும், சிறுமை குணத்திற்கும்; அவர்களின் செயல்களே அடிப்படை என்பதைத், தெரிந்து தெளிவடைதல் வேண்டும்.
(அது போல்...)
சமுதாயத்தின் உயர்ந்த ஒழுக்கத்திற்கும், தாழ்ந்த ஒழுக்கத்திற்கும்; தனி-நபரின் ஒழுக்கமே காரணி என்பதை, உணர்ந்து விமர்சித்தல் வேண்டும்.

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

குறள் எண்: 0504 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0504}

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் நற்குணங்களையும், குற்றச்செயல்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து; அவற்றுள் மிகையானது எதுவென்பதை, தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
ஓராட்சியின் பொதுநலத்தையும், சுயநலத்தையும் நடுநிலையோடு அலசி; அவற்றுள் அதீதமானது எதுவென்பதை, பகுத்து அறிதல் வேண்டும்.

சனி, டிசம்பர் 17, 2016

குறள் எண்: 0503 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0503}

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு

விழியப்பன் விளக்கம்: அரிதான விடயங்களையும் கற்று, குற்றங்களைக் களைந்த சான்றோரிடமும்; அவர்களைத் தெரிந்து தெளிந்தால், அறியாமை இல்லாமல் இருத்தல் சாத்தியமல்ல.
(அது போல்...)
நிறைவான பழக்கங்களைப் பழகி, தீயவற்றை ஒதுக்கிய உயர்ந்தோரிடமும்; அவர்களை நெருங்கிப் பழகினால், சிற்றின்பம் இல்லாமல் இருத்தல் அரிது.

வெள்ளி, டிசம்பர் 16, 2016

நம்மைப் பெற்றவளும்; நம்-பிள்ளைகளைப் பெற்றவளும்...


என்னைப் பெற்றவளும்
என்மகளைப் பெற்றவளும்
வெவ்வேறென முடியுமோ?
அவ்வாதம் முறையோ?

என்னுயிரும் என்மகளின்
இன்னுயிரும் ஒன்றெனில்;
என்னையும் அவளையும்
ஈன்றோரும் ஒன்றன்றோ?

உயிராலும் உடலாலும்
உறவாலும் பிரிந்திடினும்
உணர்வாலும் உரிமையாலும்
இணையானோர் இருவருமே!

நம்மைப் பெற்றவளோ
நம்-பிள்ளைகளைப் பெற்றவளோ
அம்மாவெனில் அம்மாவே
எம்மாதாவும் நம்மாதாவே!

பெற்றவள் இருபாலரும்
ஒற்றவள் என்றென்போம்!
இருவரையும் எந்நாளும்
கருத்துடனே காத்திடுவோம்!

குறள் எண்: 0502 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0502}

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் சுட்டே தெளிவு

விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த குடும்பத்தில் பிறந்து, குற்றங்களைக் களைந்து; பழியளிக்கும் செயல்களுக்கு அஞ்சுவோரைத், தெரிந்து தெளிய வேண்டும்.
(அது போல்...)
சமமுணர்ந்த கொள்கையில் இணைந்து, ஊழலை எதிர்த்து; அறமழிக்கும் கூட்டணியைத் தவிர்ப்போரை, அறிந்து போற்ற வேண்டும்.

வியாழன், டிசம்பர் 15, 2016

குறள் எண்: 0501 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்; குறள் எண்: 0501}

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் - அறவினை/உடைமை/இன்பம்/உயிர்பயம் - இவை நான்கின் தரத்தையும் ஆய்ந்தறிந்து, அவரை மதிப்பிடுதல் வேண்டும்.
(அது போல்...)
ஓருறவின் - அடிப்படை/சாத்தியக்கூறு/தேவை/நிலையாமை - இவை நான்கு காரணிகளையும் உணர்ந்தறிந்து, அவ்வுறவில் இணைதல் வேண்டும்.

புதன், டிசம்பர் 14, 2016

அதிகாரம் 050: இடனறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்

0491.  தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
           இடங்கண்ட பின்அல் லது

           விழியப்பன் விளக்கம்: முழுமையடைய சாதகமாமான இடத்தை ஆய்ந்தறியாமல், 
           எச்செயலையும் துவங்கக்கூடாது! அச்செயலை எளிதென, இகழ்ச்சியாகவும் 
           எண்ணக்கூடாது.
(அது போல்...)
           ஒழுக்கத்தைப் பாதிக்கும் விடயத்தை ஆராயாமல், எவ்வுறவிலும் இணையக்கூடாது! 
           அவ்வுறவை இன்பமென, முக்கியமானதாகவும் கருதக்கூடாது.
        
0492.  முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் 
           ஆக்கம் பலவுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: பகையுணர்வை வளர்த்த, வலிமையான மாவீரர்களுக்கும்;
           பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் திறன், பல்வகைப் பலன்களைப் பெருக்கும்.
(அது போல்...)
           ஏமாற்றத்தைச் சந்தித்த, சக்திவாய்ந்த வாக்காளர்களுக்கும்; முறையான நேரத்தில்
           எதிர்த்திடும் யுக்தி, பல்வகை மாற்றங்களை உருவாக்கும்.
           
0493.  ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
           போற்றார்கண் போற்றிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, தக்க பாதுகாப்புடன்
           பகைவர்களை எதிர்கொண்டால்; வலிமையற்றோரும், வலிமை கொண்டு வெல்லமுடியும்.
(அது போல்...)
           முறையான யுக்தியைக் கையாண்டு, தக்க நேர்மையுடன் தீமைகளை எதிர்த்தால்;
           அதிகாரமற்றோரும், அதிகாரம் கொண்டு சாதிக்கமுடியும்.

0494.  எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
           துன்னியார் துன்னிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: சாதகமான இடத்தை அறிந்த தகுதியுடையோர், தகுதியான
           செயல்களைச் செய்தால்; அவரை அழிக்க எண்ணியோர், தம் எண்ணத்தை
           மாற்றிக்கொள்வர்.
(அது போல்...)
           ஆரோக்கியத்தின் பலனை உணர்ந்த நல்லோர், நன்மையான பழக்கங்களை
           மேற்கொண்டால்; அவருள் குடிகொண்டிருந்த கிருமிகள், தம் செயல்திறனை இழக்கும்.

0495.  நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
           நீங்கின் அதனைப் பிற

           விழியப்பன் விளக்கம்: ஆழமான நீரில் இருப்பின் - முதலை, எல்லா உயிர்களையும்
           வெல்லும்; நீரிலிருந்து வெளியே வந்தால் - பிற உயிர்கள், முதலையை வெல்லும்.
(அது போல்...)
           அதீதமான வசதியோடு இருப்பின் - அவர்கள், மற்றெல்லா உறவுகளையும் எள்ளுவர்;
           வசதியில் குறைபாடு ஏற்பட்டால் - மற்ற உறவுகள், அவர்களை எள்ளும்.

0496.  கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
           நாவாயும் ஓடா நிலத்து

           விழியப்பன் விளக்கம்: உறுதியான சக்கரங்களைக் கொண்ட, நீளமான தேரால் - கடலில்
           பாய்ந்து செல்லமுடியாது; கடலில் பாய்ந்து செல்லும் கப்பலால், நிலத்தில் உருளமுடியாது.
(அது போல்...)
           திடமான உடலைக் கொண்ட, மல்யுத்த வீரரால் - வளைந்து யோகா செய்யமுடியாது;
           வளைந்து யோகா செய்வோரால், மல்யுத்தம் செய்யமுடியாது.

0497.  அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
           எண்ணி இடத்தால் செயின்

           விழியப்பன் விளக்கம்: எச்சம் வைக்காத உறுதியுடன், இடத்தைக் கணித்து - செயல்களைச்
           செய்தால்; அஞ்சாமை எனும் உறுதியன்றி, வேறு துணையேதும் வேண்டாம்.
(அது போல்...)
           பிரிந்து செல்லாத திடத்துடன், உரிமைகளைப் பகிர்ந்து - உறவுகளைப் பேணினால்;
           பாசம் எனும் பிணைப்பின்றி, வேறு காரணமேதும் வேண்டாம்.

0498.  சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
           ஊக்கம் அழிந்து விடும்

           விழியப்பன் விளக்கம்: சிறிய படையைக் கொண்டோர், திறமையனைத்தும் வெளிப்படும்
           இடத்தில் இருந்திடின்; பெரிய படையை உடையவரின், மனத்திடம் சிதைந்து விடும்.
(அது போல்...)
           வறுமையான நிலையில் இருப்போர், அறமனைத்தையும் கடைப்பிடிக்கும் உறுதியைக்
           கண்டால்; அதீத பணபலம் கொண்டோரின், பொருள்பலம் மதிப்பற்று போகும்.

0499.  சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 
           உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

           விழியப்பன் விளக்கம்: நன்மையீனும் அரணும், சிறப்பீனும் படைபலனும் இல்லையெனினும்;
           சொந்த நிலத்தில், மக்களோடு இணைந்திருப்போரைத் - தாக்குதல் எளிதல்ல.
(அது போல்...)
           பரிசளிக்கும் வசதியும், பலமளிக்கும் வரலாறும் இல்லையெனினும்; பொது நலத்தில்,
           உண்மையோடு பயணிப்போரை - தடுத்தல் எளிதல்ல.

0500.  காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா 
           வேலாள் முகத்த களிறு

           விழியப்பன் விளக்கம்: வேலேந்திய வீரர்களையும் - கண்களில் அச்சமின்றி, தந்தத்தால்
           தாக்கவல்ல ஆண் யானையை; சேற்றில் கால் புதையுண்டு இருக்கும்போது, நரி கூட  
           கொன்றுவிடும்.
(அது போல்...)
           பகைகொண்ட உறவுகளையும் - உணர்வுகளில் பேதமின்றி, அன்பால் அணைக்கும்
           திட உள்ளத்தை; சூழலின் பிடியில் சிக்கி இருக்கும்போது, பொய் கூட சிதைத்துவிடும்.

குறள் எண்: 0500 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0500}

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா 
வேலாள் முகத்த களிறு

விழியப்பன் விளக்கம்: வேலேந்திய வீரர்களையும் - கண்களில் அச்சமின்றி, தந்தத்தால் தாக்கவல்ல ஆண் யானையை; சேற்றில் கால் புதையுண்டு இருக்கும்போது, நரி கூட கொன்றுவிடும்.
(அது போல்...)
பகைகொண்ட உறவுகளையும் - உணர்வுகளில் பேதமின்றி, அன்பால் அணைக்கும் திட உள்ளத்தை; சூழலின் பிடியில் சிக்கி இருக்கும்போது, பொய் கூட சிதைத்துவிடும்.

செவ்வாய், டிசம்பர் 13, 2016

குறள் எண்: 0499 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0499}

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

விழியப்பன் விளக்கம்: நன்மையீனும் அரணும், சிறப்பீனும் படைபலனும் இல்லையெனினும்; சொந்த நிலத்தில், மக்களோடு இணைந்திருப்போரைத் - தாக்குதல் எளிதல்ல.
(அது போல்...)
பரிசளிக்கும் வசதியும், பலமளிக்கும் வரலாறும் இல்லையெனினும்; பொது நலத்தில், உண்மையோடு பயணிப்போரை - தடுத்தல் எளிதல்ல.

திங்கள், டிசம்பர் 12, 2016

குறள் எண்: 0498 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0498}

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

விழியப்பன் விளக்கம்: சிறிய படையைக் கொண்டோர், திறமையனைத்தும் வெளிப்படும் இடத்தில் இருந்திடின்; பெரிய படையை உடையவரின், மனத்திடம் சிதைந்து விடும்.
(அது போல்...)
வறுமையான நிலையில் இருப்போர், அறமனைத்தையும் கடைப்பிடிக்கும் உறுதியைக் கண்டால்; அதீத பணபலம் கொண்டோரின், பொருள்பலம் மதிப்பற்று போகும்.

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

குறள் எண்: 0497 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0497}

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

விழியப்பன் விளக்கம்: எச்சம் வைக்காத உறுதியுடன், இடத்தைக் கணித்து - செயல்களைச் செய்தால்; அஞ்சாமை எனும் உறுதியன்றி, வேறு துணையேதும் வேண்டாம்.
(அது போல்...)
பிரிந்து செல்லாத திடத்துடன், உரிமைகளைப் பகிர்ந்து - உறவுகளைப் பேணினால்; பாசம் எனும் பிணைப்பின்றி, வேறு காரணமேதும் வேண்டாம்.

சனி, டிசம்பர் 10, 2016

குறள் எண்: 0496 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0496}

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

விழியப்பன் விளக்கம்: உறுதியான சக்கரங்களைக் கொண்ட, நீளமான தேரால் - கடலில் பாய்ந்து செல்லமுடியாது; கடலில் பாய்ந்து செல்லும் கப்பலால், நிலத்தில் உருளமுடியாது.
(அது போல்...)
திடமான உடலைக் கொண்ட, மல்யுத்த வீரரால் - வளைந்து யோகா செய்யமுடியாது; வளைந்து யோகா செய்வோரால், மல்யுத்தம் செய்யமுடியாது.

வெள்ளி, டிசம்பர் 09, 2016

குறள் எண்: 0495 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0495}

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

விழியப்பன் விளக்கம்: ஆழமான நீரில் இருப்பின் - முதலை, எல்லா உயிர்களையும் வெல்லும்; நீரிலிருந்து வெளியே வந்தால் - பிற உயிர்கள், முதலையை வெல்லும்.
(அது போல்...)
அதீதமான வசதியோடு இருப்பின் - அவர்கள், மற்றெல்லா உறவுகளையும் எள்ளுவர்; வசதியில் குறைபாடு ஏற்பட்டால் - மற்ற உறவுகள், அவர்களை எள்ளும்.

வியாழன், டிசம்பர் 08, 2016

குறள் எண்: 0494 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0494}

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
துன்னியார் துன்னிச் செயின்

விழியப்பன் விளக்கம்: சாதகமான இடத்தை அறிந்த தகுதியுடையோர், தகுதியான செயல்களைச் செய்தால்; அவரை அழிக்க எண்ணியோர், தம் எண்ணத்தை மாற்றிக்கொள்வர்.
(அது போல்...)
ஆரோக்கியத்தின் பலனை உணர்ந்த நல்லோர், நன்மையான பழக்கங்களை மேற்கொண்டால்; அவருள் குடிகொண்டிருந்த கிருமிகள், தம் செயல்திறனை இழக்கும்.

புதன், டிசம்பர் 07, 2016

குறள் எண்: 0493 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0493}

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

விழியப்பன் விளக்கம்: தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, தக்க பாதுகாப்புடன் பகைவர்களை எதிர்கொண்டால்; வலிமையற்றோரும், வலிமை கொண்டு வெல்லமுடியும்.
(அது போல்...)
முறையான யுக்தியைக் கையாண்டு, தக்க நேர்மையுடன் தீமைகளை எதிர்த்தால்; அதிகாரமற்றோரும், அதிகாரம் கொண்டு சாதிக்கமுடியும்.

செவ்வாய், டிசம்பர் 06, 2016

குறள் எண்: 0492 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0492}

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் 
ஆக்கம் பலவுந் தரும்

விழியப்பன் விளக்கம்: பகையுணர்வை வளர்த்த, வலிமையான மாவீரர்களுக்கும்; பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் திறன், பல்வகைப் பலன்களைப் பெருக்கும்.
(அது போல்...)
ஏமாற்றத்தைச் சந்தித்த, சக்திவாய்ந்த வாக்காளர்களுக்கும்; முறையான நேரத்தில் எதிர்த்திடும் யுக்தி, பல்வகை மாற்றங்களை உருவாக்கும்.

திங்கள், டிசம்பர் 05, 2016

குறள் எண்: 0491 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0491}

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

விழியப்பன் விளக்கம்: முழுமையடைய சாதகமாமான இடத்தை ஆய்ந்தறியாமல், எச்செயலையும் துவங்கக்கூடாது! அச்செயலை எளிதென, இகழ்ச்சியாகவும் எண்ணக்கூடாது.
(அது போல்...)
ஒழுக்கத்தைப் பாதிக்கும் விடயத்தை ஆராயாமல், எவ்வுறவிலும் இணையக்கூடாது! அவ்வுறவை இன்பமென, முக்கியமானதாகவும் கருதக்கூடாது.

ஞாயிறு, டிசம்பர் 04, 2016

அதிகாரம் 049: காலமறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்

0481.  பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
           வேந்தர்க்கு வேண்டும் பொழுது

           விழியப்பன் விளக்கம்: வலிமையானக் கோட்டானைக், காகம் பகலில் வெல்வது
           போல்; எதிரியை வெல்லச், சரியான காலத்தை அரசர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(அது போல்...)
           கடுமையான மழைக்காலத்தை, சேமிப்பால் சமாளிக்கும் எறும்பைப் போல்; முதுமையை
           வெல்ல, முறையான திட்டத்தை நாம் வகுக்க வேண்டும்.
        
0482.  பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
           தீராமை ஆர்க்குங் கயிறு

           விழியப்பன் விளக்கம்: காலத்தை உணர்ந்து, அதனோடு இணைந்து செயல்படுதல்;
           அச்செயலால் கிடைக்கும் பயனை, இழக்காமல் கட்டிக்காக்கும் கயிறு ஆகும்.
(அது போல்...)
           உறவைப் புரிந்து, உறவோடுப் பிணைந்து பயணப்படுதல்; அவ்வுறவால் தொடரும்
           சந்ததியை, துண்டிக்காமல் இட்டுச்செல்லும் சங்கிலி ஆகும். 
           
0483.  அருவினை யென்ப உளவோ கருவியான் 
           காலம் அறிந்து செயின்

           விழியப்பன் விளக்கம்: செய்யும் செயலை, தேவையான ஏற்பாடுகளுடன் - காலமறிந்து 
           செய்யும் திறனுடையோர்க்கு; செயற்கரிய செயலென்று, ஏதும் இருக்கின்றதோ?
(அது போல்...)
           ஈட்டும் பொருளை, எதிர்காலத் திட்டங்களுடன் - பலனறிந்து முதலிடும் 
           வல்லவர்களுக்கு; சமாளிக்க முடியாத, சூழலேதும் வந்திடுமோ?

0484.  ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
           கருதி இடத்தாற் செயின்

           விழியப்பன் விளக்கம்: காலத்தை அறிந்து, தக்க சூழலில் - செயலை மேற்கொண்டால்;
           உலகையே அடைந்திட நினைத்தாலும், எளிதில் நிறைவேறும்.
(அது போல்...)
           தேவையை அறிந்து, முறையான வழியில் - முயற்சி செய்தால்; விண்ணை எட்டிட
           எண்ணினாலும், எளிதில் அடையலாம்.

0485.  காலம் கருதி இருப்பர் கலங்காது
           ஞாலம் கருது பவர்

           விழியப்பன் விளக்கம்: உலகை ஆட்கொள்ள விரும்புவோர், அதுபற்றிய கவலை
           ஏதுமின்றி; உரிய காலத்தை எதிர்நோக்கி, உறுதியுடன் காத்திருப்பர்.
(அது போல்...)
           உணர்வை அடக்கியாள எண்ணுவோர், அதுபற்றி பயம் இல்லாமல்; தக்க முயற்சியைப்
           பயின்று, வைராக்கியமுடன் செயல்படுவர்.

0486.  ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
           தாக்கற்குப் பேருந் தகைத்து

           விழியப்பன் விளக்கம்: மனவுறுதி கொண்டோரின் அமைதி - சண்டைக்குத் தயாராகும்
           ஆட்டுக்கடா, பலமாய் தாக்குவதற்காக; பின்னோக்கிச் செல்வது போன்றதாகும்.
(அது போல்...)
           அஹிம்சைப் பழகுவோரின் பொறுமை - வேட்டைக்குத் தயாராகும் புலி, சரியாய்
           பாய்வதற்காக; புதர்க்குள் மறைவது போன்றதாகும்.

0487.  பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து 
           உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

           விழியப்பன் விளக்கம்: அறிவுடையோர், தம்முடைய சினத்தை அவசரப்பட்டு 
           வெளிப்படுத்தாமல்; காலம் கைகூடும் வரை, அகத்துள்ளே சினத்தைக் கொண்டிருப்பர்.
(அது போல்...)
           அன்புடையோர், தம்முடைய எதிர்ப்பை உடனடியாய் தெரிவிக்காமல்; சூழ்நிலை
           சரியாகும் வரை, சிந்தனையில் எதிர்ப்பை அலசுவர்.

0488.  செறுநரைக் காணின் சுமக்க இறுவரை 
           காணின் கிழக்காம் தலை

           விழியப்பன் விளக்கம்: பகைவரைக் காணும்போது, பகையுணர்வை வெளிப்படுத்தாமல்
           பொறுத்தால்; அவர்களின் அழிவுக்காலம் நெருங்கும்போது, நிலைமை நேர்-எதிராகும்.
(அது போல்...)
           அநீதியைச் சந்தித்தாலும், அநீதியைச் செய்யாமல் இருந்தால்; அநீதியின் முடிவுக்காலம்
           வரும்போது, நீதியின் தலை-நிமிர்ந்திடும்.

0489.  எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே 
           செய்தற் கரிய செயல்

           விழியப்பன் விளக்கம்: அடைவதற்கு அரிதான காலம் வாய்ப்பின், அக்கணமே; செய்வதற்கு
           அரிதான செயல்களைச், செய்திடல் வேண்டும்.
(அது போல்...)
           கிடைப்பதற்கு அரிய குரு கிடைத்தால், தாமதமின்றி; வாழ்வுக்குத் தேவையான
           அடிப்படையைக், கற்றிடல் வேண்டும்.

0490.  கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
           குத்தொக்க சீர்த்த இடத்து

           விழியப்பன் விளக்கம்: கொக்குக்கு இணையாக, சாதகமான காலத்தை எதிர்நோக்கி;
           உரிய நேரத்தில், இறையைக் கொத்தும் திறனைப்போல் - செயல்களை முடிக்கவேண்டும்.
(அது போல்...)
           கோழிக்கு இணையாக, ஆபத்தான நேரத்தைக் கணித்து; சரியான நேரத்தில்,
           குஞ்சுகளை அரவணைக்கும் இயல்பைப்போல் - உணர்ச்சியை அடக்கவேண்டும்.

குறள் எண்: 0490 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0490}

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

விழியப்பன் விளக்கம்: கொக்குக்கு இணையாக, சாதகமான காலத்தை எதிர்நோக்கி; உரிய நேரத்தில், இறையைக் கொத்தும் திறனைப்போல் - செயல்களை முடிக்கவேண்டும்.
(அது போல்...)
கோழிக்கு இணையாக, ஆபத்தான நேரத்தைக் கணித்து; சரியான நேரத்தில், குஞ்சுகளை அரவணைக்கும் இயல்பைப்போல் - உணர்ச்சியை அடக்கவேண்டும்.

சனி, டிசம்பர் 03, 2016

குறள் எண்: 0489 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0489}

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

விழியப்பன் விளக்கம்: அடைவதற்கு அரிதான காலம் வாய்ப்பின், அக்கணமே; செய்வதற்கு அரிதான செயல்களைச், செய்திடல் வேண்டும்.
(அது போல்...)
கிடைப்பதற்கு அரிய குரு கிடைத்தால், தாமதமின்றி; வாழ்வுக்குத் தேவையான அடிப்படையைக், கற்றிடல் வேண்டும்.

வெள்ளி, டிசம்பர் 02, 2016

குறள் எண்: 0488 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0488}

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை 
காணின் கிழக்காம் தலை

விழியப்பன் விளக்கம்: பகைவரைக் காணும்போது, பகையுணர்வை வெளிப்படுத்தாமல் பொறுத்தால்; அவர்களின் அழிவுக்காலம் நெருங்கும்போது, நிலைமை நேர்-எதிராகும்.
(அது போல்...)
அநீதியைச் சந்தித்தாலும், அநீதியைச் செய்யாமல் இருந்தால்; அநீதியின் முடிவுக்காலம் வரும்போது, நீதியின் தலை-நிமிர்ந்திடும்.

வியாழன், டிசம்பர் 01, 2016

குறள் எண்: 0487 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0487}

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

விழியப்பன் விளக்கம்: அறிவுடையோர், தம்முடைய சினத்தை அவசரப்பட்டு வெளிப்படுத்தாமல்; காலம் கைகூடும் வரை, அகத்துள்ளே சினத்தைக் கொண்டிருப்பர்.
(அது போல்...)
அன்புடையோர், தம்முடைய எதிர்ப்பை உடனடியாய் தெரிவிக்காமல்; சூழ்நிலை சரியாகும் வரை, சிந்தனையில் எதிர்ப்பை அலசுவர்.

புதன், நவம்பர் 30, 2016

குறள் எண்: 0486 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0486}

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேருந் தகைத்து

விழியப்பன் விளக்கம்: மனவுறுதி கொண்டோரின் அமைதி - சண்டைக்குத் தயாராகும் ஆட்டுக்கடா, பலமாய் தாக்குவதற்காக; பின்னோக்கிச் செல்வது போன்றதாகும்.
(அது போல்...)
அஹிம்சைப் பழகுவோரின் பொறுமை - வேட்டைக்குத் தயாராகும் புலி, சரியாய் பாய்வதற்காக; புதர்க்குள் மறைவது போன்றதாகும்.

செவ்வாய், நவம்பர் 29, 2016

குறள் எண்: 0485 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0485}

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

விழியப்பன் விளக்கம்: உலகை ஆட்கொள்ள விரும்புவோர், அதுபற்றிய கவலை ஏதுமின்றி; உரிய காலத்தை எதிர்நோக்கி, உறுதியுடன் காத்திருப்பர்.
(அது போல்...)
உணர்வை அடக்கியாள எண்ணுவோர், அதுபற்றி பயம் இல்லாமல்; தக்க முயற்சியைப் பயின்று, வைராக்கியமுடன் செயல்படுவர்.

திங்கள், நவம்பர் 28, 2016

குறள் எண்: 0484 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0484}

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாற் செயின்

விழியப்பன் விளக்கம்: காலத்தை அறிந்து, தக்க சூழலில் - செயலை மேற்கொண்டால்; உலகையே அடைந்திட நினைத்தாலும், எளிதில் நிறைவேறும்.
(அது போல்...)
தேவையை அறிந்து, முறையான வழியில் - முயற்சி செய்தால்; விண்ணை எட்டிட எண்ணினாலும், எளிதில் அடையலாம்.

ஞாயிறு, நவம்பர் 27, 2016

குறள் எண்: 0483 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0483}

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

விழியப்பன் விளக்கம்: செய்யும் செயலை, தேவையான ஏற்பாடுகளுடன் - காலமறிந்து செய்யும் திறனுடையோர்க்கு; செயற்கரிய செயலென்று, ஏதும் இருக்கின்றதோ?
(அது போல்...)
ஈட்டும் பொருளை, எதிர்காலத் திட்டங்களுடன் - பலனறிந்து முதலிடும் வல்லவர்களுக்கு; சமாளிக்க முடியாத, சூழலேதும் வந்திடுமோ?

சனி, நவம்பர் 26, 2016

குறள் எண்: 0482 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0482}

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு

விழியப்பன் விளக்கம்: காலத்தை உணர்ந்து, அதனோடு இணைந்து செயல்படுதல்; அச்செயலால் கிடைக்கும் பயனை, இழக்காமல் கட்டிக்காக்கும் கயிறு ஆகும்.
(அது போல்...)
உறவைப் புரிந்து, உறவோடுப் பிணைந்து பயணப்படுதல்; அவ்வுறவால் தொடரும் சந்ததியை, துண்டிக்காமல் இட்டுச்செல்லும் சங்கிலி ஆகும்.

வெள்ளி, நவம்பர் 25, 2016

குறள் எண்: 0481 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0481}

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

விழியப்பன் விளக்கம்: வலிமையானக் கோட்டானைக், காகம் பகலில் வெல்வது போல்; எதிரியை வெல்லச், சரியான காலத்தை அரசர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(அது போல்...)
கடுமையான மழைக்காலத்தை, சேமிப்பால் சமாளிக்கும் எறும்பைப் போல்; முதுமையை வெல்ல, முறையான திட்டத்தை நாம் வகுக்க வேண்டும்.

வியாழன், நவம்பர் 24, 2016

அதிகாரம் 048: வலியறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்

0471.  வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
           துணைவலியும் தூக்கிச் செயல்

           விழியப்பன் விளக்கம்: 
விழியப்பன் விளக்கம்: செயல்களின் வலிமை/தன் வலிமை/எதிரியின் 
           வலிமை/துணையானோரின் வலிமை - இந்நான்கு காரணிகளையும் அளவிட்டு, 
           செயல்களைச் செய்யவேண்டும்!
(அது போல்...)
           சிந்தனையின் பலம்/மனதின் பலம்/நம்பிக்கையின் பலம்/உறவிலுள்ளோரின் பலம் - 
           இந்நான்கு காரணிகளையும் உணர்ந்து, உறவுகளை நிர்ணயிக்கவேண்டும்!
        
0472.  ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
           செல்வார்க்குச் செல்லாதது இல்

           விழியப்பன் விளக்கம்: 
தம் வலிமையின் இயல்பை அறிந்து, அறிந்த வண்ணம் 
           வைராக்கியமுடன் நிலைத்து செயல்படுவோர்க்கு; இயலாதது என்று எதுவுமில்லை.
(அது போல்...)
           சுய ஒழுக்கத்தின் மாண்பை உணர்ந்து, உணர்ந்த வண்ணம் உண்மையுடன் தொடர்ந்து 
           வாழ்வோர்க்கு; வேதனை என்று ஏதுமில்லை.
           
0473.  உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
           இடைக்கண் முரிந்தார் பலர்

           விழியப்பன் விளக்கம்: 
தம் வலிமையை உணராமல், உணர்ச்சி உந்துதலில் செயல்களைத் 
           துவங்கி;  இடையில் விட்டொழிந்தோர் பலருண்டு.
(அது போல்...)
           தம் வருமானத்தைத் திட்டமிடாமல், அவசியச் சூழலில் கடன்களைப் பெற்று; இளமையில் 
           வாழ்விழந்தோர் பலருண்டு.

0474.  அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
           வியந்தான் விரைந்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: 
பிறருடன் இணக்கமாய் உறவாடாமல், தன் வலிமையின் அளவை 
           அறியாமல்; தன்னைத் தானே வியந்து பேசுவோர், வேகமாய் அழிவர்.
(அது போல்...)
           அணியினரிடம் முழுமையாய் விவாதிக்காமல், தன் தலைமையின் தரத்தை உணராமல்; 
           தானெனும் கர்வமுடன் செயல்படும் அணித்தலைவர்கள், விரைவில் கெடுவர்.

0475.  பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
           சால மிகுத்துப் பெயின்

           விழியப்பன் விளக்கம்: 
இலகுவான மயிலிறகே ஆயினும், வண்டியின் அச்சாணியின் 
           வலிமையை அறியாமல்; அளவுக்கதிகமாக ஏற்றினால், அச்சு முறிந்துவிடும்.
(அது போல்...)
           விலைகுறைந்த பொருட்களே ஆயினும், கையிலிருக்கும் இருப்பின் அளவை உணராமல்; 
           தொடர்ந்து செலவிட்டால், வறுமை ஆட்கொள்ளும்.

0476.  நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
           உயிர்க்கிறுதி யாகி விடும்

           விழியப்பன் விளக்கம்: 
மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், மனித வலிமையின் 
           வரையறையை உணராமல்; மேலும் ஏறிட முயன்றால், உயிரை மாய்ப்பதற்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
           மக்களின் உரிமைகளைத் தகர்ப்போர், உரிமை மீறலின் விளைவை அறியாமல்; மென்மேலும் 
           தகர்க்க முனைந்தால், சமுதாயப் புரட்சிக்கு வித்திடும்.

0477.  ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
           போற்றி வழங்கு நெறி

           விழியப்பன் விளக்கம்: 
நம் பொருளீட்டும் திறத்தை உணர்ந்து, பிறர்க்குக் கொடுத்தல் 
           வேண்டும்; அதுவே பொருளைப் பாதுகாத்து, கொடையளிக்கும் நெறியாகும்.
(அது போல்...)
           நம் புரிதலின் ஆழத்தை ஆராய்ந்து, பிறர்க்குக் கற்பித்தல் வேண்டும்; அதுவே புரிதலை 
           விரிவாக்கி, கற்பிக்கும் வழியாகும்.

0478.  ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
           போகாறு அகலாக் கடை

           விழியப்பன் விளக்கம்: 
வருமானத்தின் அளவு குறைந்தாலும்; செலவினங்கள் எல்லையைக் 
           கடந்து போகாத வரையில், பெரிய தீமையேதும் நேர்வதில்லை!
(அது போல்...)
           நற்சிந்தனையின் வீரியம் சிதைந்தாலும்; தீவினைகள் மனதை ஆக்கிரமித்து பரவாத 
           வரையில், அதீத அழிவேதும் நிகழ்வதில்லை!


0479.  அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
           இல்லாகித் தோன்றாக் கெடும்


           விழியப்பன் விளக்கம்: வருமானத்தைக் கணக்கிட்டு, வாழாதவரின் வாழ்க்கை; வளமாய்
           இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, பின்னர் வலிமையின்றி கெட்டழியும்.
(அது போல்...)
           உறவுகளை மதித்து, பழகாதவரின் வாழ்க்கை; அதிகாரமாய் இருப்பது போன்ற
           நம்பிக்கையைக் கொடுத்து, பின்னர் அடிமைபோல் முடிவடையும்.

0480.  உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
           வளவரை வல்லைக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: தன்னிடம் இருப்பதைக் கணக்கிடாமல், பிறர்க்கு உதவிக்

           கொண்டே இருந்தால்; ஒருவரின் செல்வத்தின் அளவு, விரைவில் அழியும்.
(அது போல்...)
           தன்னுடைய குறையைக் களையாமல், பிறரை விமர்சித்துக் கொண்டே இருந்தால்;
           ஒருவரின் சுயத்தின் தரம், வேகமாய் குறையும்.