செவ்வாய், மே 31, 2016

குறள் எண்: 0303 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0303}

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

விழியப்பன் விளக்கம்: சினம் கொள்வதால், தீய பின்விளைவுகள் விளையும் என்பதால்; எவரிடத்திலும் சினம் கொள்ளாமல், மறப்பது சிறந்ததாகும்.
(அது போல்...)
கடன் பெறுவதால், அதீத மனவழுத்தம் உருவாகும் என்பதால்; எதற்காகவும் கடன் பெறாமல், வாழ்வது உயர்ந்ததாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், மே 30, 2016

குறள் எண்: 0302 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0302}

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற

விழியப்பன் விளக்கம்: அதிகாரமற்ற இடத்தில் வெளிப்படும் சினம், தீமையானது; அதிகாரமுள்ள இடத்தில் வெளிப்பட்டாலும், சினத்தை விட தீயது வேறேதுமில்லை.
(அது போல்...)
நியாயமற்ற விதத்தில் நடக்கும் அடக்குமுறை, அழிவானது; நியாயமான விதத்தில் நடந்தாலும்,  அடக்குமுறையை விட அழிவானது வேறில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, மே 29, 2016

குறள் எண்: 0301 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0301}

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்

விழியப்பன் விளக்கம்: அதிகாரம் உள்ள இடத்தில் சினத்தைக் காப்போரே, சினங்காப்பவர் ஆவர்;  அதிகாரம் இல்லாத இடத்தில், சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன??
(அது போல்...)
பசியால் துடிக்கும் உயிர்கட்கு உணவை அளிப்பதே, அன்னதானம் ஆகும்; பசி இல்லாத உயிர்கட்கு, உணவை அளித்தால் என்ன? அளிக்காவிட்டால் என்ன??
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, மே 28, 2016

அதிகாரம் 030: வாய்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 030 - வாய்மை

0291.  வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
           தீமை இலாத சொலல்

           விழியப்பன் விளக்கம்: வாய்மை என்பது என்னவென்றால்; எந்த ஒரு சொல்லும், தீமைப் 
           பயக்காத வகையில் பேசுவதேயாகும்.
(அது போல்...)
           மனிதம் என்பது எதுவெனில்; எந்த ஒரு எண்ணமும், துரோகத்தை விதைக்காத வழியில்
           சிந்திப்பதேயாகும்.

0292.  பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
           நன்மை பயக்கும் எனின்

           விழியப்பன் விளக்கம்: எந்த குற்றமும் இல்லாத, நன்மையை விளைவிக்கும் எனில்; பொய் 
           கூட, வாய்மையின் தன்மையுடையதே ஆகும்.
(அது போல்...)
           எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவை வலுப்படுத்தும் எனில்; ஆற்றாமை கூட,
           அன்பின் வடிவமே ஆகும்.
           
0293.  தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
           தன்நெஞ்சே தன்னைச் சுடும்

           விழியப்பன் விளக்கம்: நம் மனதுக்கு பொய்யென தெரிந்தும், பொய்யைச் சொல்லக் 
           கூடாது; அப்படி பொய் சொன்னபின், நம்மனமே நம்மை துன்புறுத்தும்.
(அது போல்...)
           நம் உணர்வுக்கு துரோகமென தெரிந்தும், துரோகத்தைச் செய்யக்கூடாது; அப்படி
           துரோகம் செய்தபின், நம்சுயமே நம்மை காயப்படுத்தும்.

0294.  உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
           உள்ளத்து ளெல்லாம் உளன்

           விழியப்பன் விளக்கம்: மனதில் கூட பொய்யின்றி, ஒழுக்கமுடன் வாழ்வோர்; 
           உலகிலுள்ளோர் அனைவரின் மனதிலும், நீங்காமல் நிறைந்திருப்பர்.
(அது போல்...)
           பிரச்சாரத்தில் கூட மிகையின்றி, இயல்புடன் பேசுவோர்; குடிமக்கள் அனைவரின் 
           நம்பிக்கையிலும், நீக்கமற கலந்திருப்பர்.

0295.  மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
           தானஞ்செய் வாரின் தலை

           விழியப்பன் விளக்கம்: மனசாட்சியோடு உடன்பட்டு, உண்மை பேசுவோர்; தவத்துடன், 
           தானமும் பழகுவோரை விட உயர்ந்தவராவர்.
(அது போல்...)
           கொள்கையுடன் ஒன்றுபட்டு, அரசியல் செய்வோர்; அதிகாரத்துடன், படையும் 
           கொண்டோரை விட வல்லவர்களாவர்.

0296.  பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை 
           எல்லா அறமுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: பொய் சொல்லாததற்கு இணையான புகழேதும் இல்லை; அது 
           பெருமுயற்சி இல்லாமலேயே, அனைத்து அறங்களையும் விதைக்கும்.
(அது போல்...)
           சுயத்தை இழக்காததற்கு நிகரான ஆத்மதிருப்தி ஏதுமில்லை; அது முயற்சியேதும் 
           இன்றியே, எல்லா நற்பண்புகளையும் கற்பிக்கும்.

0297.  பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
           செய்யாமை செய்யாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: பொய் சொல்லாத நிலைப்பாட்டைப், பொய்க்காமல் செய்தால்; 
           அறம் தவிர்த்த செய்யக்கூடாதவற்றை, செய்யாதிருக்கத் தவறினாலும்  நன்மையே.
(அது போல்...)
           மனிதம் மறக்காத அடிப்படையை, அழியாமல் பாதுகாத்தால்; தேவை இல்லாத 
           இனவாதங்களை, செய்யாதிருக்க மறந்தாலும் சிறந்ததே.

0298.  புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
           வாய்மையால் காணப் படும்

           விழியப்பன் விளக்கம்: உடலை சுத்தமாய் வைப்பது, நீரால் சாத்தியமாவது போல்; 
           உள்ளத்தைச் சுத்தமாய் வைப்பது, வாய்மையால் சாத்தியமாகும்.
(அது போல்...)
           செயலை சரியாய் நிர்ணயிப்பது, சிந்தனையால் வலுவடைவது போல்;  சுயத்தைச் சரியாய் 
           நிர்ணயிப்பது, சுய-ஆய்வால் வலுவடையும்.

0299.  எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
           பொய்யா விளக்கே விளக்கு

           விழியப்பன் விளக்கம்: வெளிப்புற இருளை நீக்கும் விளக்குகள், சான்றோர்க்கு 
           விளக்காகாது! அகத்தின் இருளை நீக்கும் பொய்யாமையே, அவர்களுக்கு விளக்காகும்.
(அது போல்...)
           நட்பின் துயரத்தைத் துடைக்கும் நற்பணிகள், அடியார்க்கு மனிதமாகாது! எதிரியின் 
           துயரத்தைத் துடைக்கும் நற்பணிகளே, அவர்களுக்கு மனிதமாகும்.

0300.  யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 
           வாய்மையின் நல்ல பிற

           விழியப்பன் விளக்கம்: உண்மையை ஆராய்ந்து, நாம் கண்டறிந்த எல்லாவற்றிலும்; 
           வாய்மையை விட நன்மையான வேறெதுவொன்றும், இருப்பதற்கு சாத்தியமில்லை.
(அது போல்...)
           ஆனந்தத்தை உணர்ந்து, நாம் செய்திட்ட அனைத்திலும்; பகிர்வதை விட உயர்வானது 
           வேறெதுவும், இருந்திட வாய்ப்பில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0300 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0300}

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற

விழியப்பன் விளக்கம்: உண்மையை ஆராய்ந்து, நாம் கண்டறிந்த எல்லாவற்றிலும்; வாய்மையை விட நன்மையான வேறெதுவொன்றும், இருப்பதற்கு சாத்தியமில்லை.
(அது போல்...)
ஆனந்தத்தை உணர்ந்து, நாம் செய்திட்ட அனைத்திலும்; பகிர்வதை விட உயர்வானது வேறெதுவும், இருந்திட வாய்ப்பில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, மே 27, 2016

மன்னித்தருளவும் (குறள் எண் 0111 முதல் குறள் எண் 0297 வரை)



       நம் பெருந்தகையின் பொதுமறைக்கு விளக்கவுரை எழுதும்போது - "(அதுபோல்...)" என்று சொல்லி ஓர் நிகர் விளக்கத்தையும் எழுதுவது வழக்கம். அது, என்னப்பனால் எனக்கு பரிமாறப்பட்ட ஒன்று என்பதை இப்பிரிவின் முன்னுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே, ஒவ்வொரு குறளுக்கும் விளக்கவுரை எழுதிவிட்டு "(அதுபோல்...)" என்று சொல்லி ஓர் நிகர்விளக்கத்தையும் எழுதி வருகிறேன். என் விளக்கவுரைப் படிக்கும் உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். ஆனால்...
  • திடீரென்று நேற்றைய குறளுக்கு விளக்கவுரையைப் பதியும் முன்னர் ""(அதுபோல்...)" என்பது - என்னையும் அறியாமல் "(அல்லது)" என்று மாறி இருந்ததை அறிந்தேன். எனக்கு பெருத்த ஆச்சர்யம்! மிகுந்த மனவேதனையும்!! பெருந்தகையின் குறளின் பொருளுக்கு "நிகராய் ஓர் விளக்கம்" கொடுப்பது கூட "ஓரளவில் ஏற்புடையதே"! ஆனால், அவர் சொன்ன பொருளுக்கு "(அல்லது)" என்று கூறி வேறொன்றை சொல்ல எனக்கென தகுதி இருக்கிறது?
  • உடனே, இந்த தவறு எப்போது நேர்ந்தது என்று ஒவ்வொன்றாய் பின்னோக்கி சென்று தேட ஆரம்பித்தேன். அப்போது, குறள் எண் 0111-இல் அது "(அதுபோல்)" என்று மாறி இருந்ததைக் கண்டேன். மூன்று புள்ளிகள் (...) விடுபட்டதைக் கூட என்னால் பொறுக்க முடியவில்லை. பின்னர் "(அல்லது)" என்ற அந்த பெருந்தவறு குறள் எண் 0135 - இல் நேர்ந்ததைக் கண்டறிந்தேன்.
  • உடனடியாய், அந்த தவறை எல்லாப் பதிவுகளிலும் திருத்திய பின்னரே - நேற்றைய குறளின் விளக்கவுரையைப் பதிந்தேன். இன்று, இப்படி ஓர் பதிவாய் எழுதி - உங்கள் அனைவரிடமும்...
மனப்பூர்வமாய் மன்னிப்பு கோருகிறேன்! என்னை மன்னித்தருள்வீர்!!


குறிப்பு: இந்தப் பிரிவின் முன்னுரையில் சொன்னது போல், உங்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியம். இம்மாதிரியான தவறுகளை நீங்கள் நிச்சயம் சுட்டிக்காட்ட வேண்டும் - அது உங்களின் கடமையும் கூட. வழக்கமாய், இம்மாதிரியான தவறுகளை உடனே "தவறாமல் கண்டறிந்து" குறிப்பிடும் என் நட்புகள் - கதிர்வேல்/ பாரத்/ ஜனார்தனன் - கூட இதைக் கவனிக்கத் தவறியது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.

குறள் எண்: 0299 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0299}

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

விழியப்பன் விளக்கம்: வெளிப்புற இருளை நீக்கும் விளக்குகள், சான்றோர்க்கு விளக்காகாது! அகத்தின் இருளை நீக்கும் பொய்யாமையே, அவர்களுக்கு விளக்காகும்.
(அது போல்...)
நட்பின் துயரத்தைத் துடைக்கும் நற்பணிகள், அடியார்க்கு மனிதமாகாது! எதிரியின் துயரத்தைத் துடைக்கும் நற்பணிகளே, அவர்களுக்கு மனிதமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், மே 26, 2016

குறள் எண்: 0298 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0298}

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

விழியப்பன் விளக்கம்: உடலை சுத்தமாய் வைப்பது, நீரால் சாத்தியமாவது போல்; உள்ளத்தைச் சுத்தமாய் வைப்பது, வாய்மையால் சாத்தியமாகும்.
(அது போல்...)
செயலை சரியாய் நிர்ணயிப்பது, சிந்தனையால் வலுவடைவது போல்;  சுயத்தைச் சரியாய் நிர்ணயிப்பது, சுய-ஆய்வால் வலுவடையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், மே 25, 2016

குறள் எண்: 0297 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0297}

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

விழியப்பன் விளக்கம்: பொய் சொல்லாத நிலைப்பாட்டைப், பொய்க்காமல் செய்தால்; அறம் தவிர்த்த செய்யக்கூடாதவற்றை, செய்யாதிருக்கத் தவறினாலும்  நன்மையே.
(அது போல்...)
மனிதம் மறக்காத அடிப்படையை, அழியாமல் பாதுகாத்தால்; தேவை இல்லாத இனவாதங்களை, செய்யாதிருக்க மறந்தாலும் சிறந்ததே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், மே 24, 2016

குறள் எண்: 0296 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0296}

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்

விழியப்பன் விளக்கம்: பொய் சொல்லாததற்கு இணையான புகழேதும் இல்லை; அது பெருமுயற்சி இல்லாமலேயே, அனைத்து அறங்களையும் விதைக்கும்.
(அது போல்...)
சுயத்தை இழக்காததற்கு நிகரான ஆத்மதிருப்தி ஏதுமில்லை; அது முயற்சியேதும் இன்றியே, எல்லா நற்பண்புகளையும் கற்பிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், மே 23, 2016

குறள் எண்: 0295 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0295}

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

விழியப்பன் விளக்கம்: மனசாட்சியோடு உடன்பட்டு, உண்மை பேசுவோர்; தவத்துடன், தானமும் பழகுவோரை விட உயர்ந்தவராவர்.
(அது போல்...)
கொள்கையுடன் ஒன்றுபட்டு, அரசியல் செய்வோர்; அதிகாரத்துடன், படையும் கொண்டோரை விட வல்லவர்களாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, மே 22, 2016

குறள் எண்: 0294 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0294}

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

விழியப்பன் விளக்கம்: மனதில் கூட பொய்யின்றி, ஒழுக்கமுடன் வாழ்வோர்; உலகிலுள்ளோர் அனைவரின் மனதிலும், நீங்காமல் நிறைந்திருப்பர்.
(அது போல்...)
பிரச்சாரத்தில் கூட மிகையின்றி, இயல்புடன் பேசுவோர்; குடிமக்கள் அனைவரின் நம்பிக்கையிலும், நீக்கமற கலந்திருப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, மே 21, 2016

குறள் எண்: 0293 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0293}

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

விழியப்பன் விளக்கம்: நம் மனதுக்கு பொய்யென தெரிந்தும், பொய்யைச் சொல்லக்கூடாது; அப்படி பொய் சொன்னபின், நம்மனமே நம்மை துன்புறுத்தும்.
(அது போல்...)
நம் உணர்வுக்கு துரோகமென தெரிந்தும், துரோகத்தைச் செய்யக்கூடாது; அப்படி துரோகம் செய்தபின், நம்சுயமே நம்மை காயப்படுத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, மே 20, 2016

குறள் எண்: 0292 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0292}

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

விழியப்பன் விளக்கம்: எந்த குற்றமும் இல்லாத, நன்மையை விளைவிக்கும் எனில்; பொய் கூட, வாய்மையின் தன்மையுடையதே ஆகும்.
(அது போல்...)
எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவை வலுப்படுத்தும் எனில்; ஆற்றாமை கூட, அன்பின் வடிவமே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், மே 19, 2016

குறள் எண்: 0291 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0291}

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

விழியப்பன் விளக்கம்: வாய்மை என்பது என்னவென்றால்; எந்த ஒரு சொல்லும், தீமைப் பயக்காத வகையில் பேசுவதேயாகும்.
(அது போல்...)
மனிதம் என்பது எதுவெனில்; எந்த ஒரு எண்ணமும், துரோகத்தை விதைக்காத வழியில் சிந்திப்பதேயாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், மே 18, 2016

அதிகாரம் 029: கள்ளாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 029 - கள்ளாமை

0281.  எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
           கள்ளாமை காக்கதன் நெஞ்சு

           விழியப்பன் விளக்கம்: பிறரால் இகழப்படாத நிலையில் வாழ்ந்திட நினைப்போர்; எந்த 
           பொருளையும், களவாட எண்ணாத நிலையில் தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
(அது போல்...)
           பிறரால் வெல்லமுடியாத நிலையில் இருக்கும் விருப்பமுடையோர்; எவர் ஒருவரையும், 
           வஞ்சிக்க முயலாத வகையில் தன் செயலை நிர்ணயிக்க வேண்டும்.

0282.  உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் 
           கள்ளத்தால் கள்வேம் எனல்

           விழியப்பன் விளக்கம்: களவு எண்ணத்துடன், பிறர் பொருளை அபகரிக்கலாம் என 
           மனதால் 
           நினைப்பதும்; தீயொழுக்கமே ஆகும்.
(அது போல்...)
           பகை உணர்வுடன், பிறர் அந்தரங்கத்தை புறங்கூறலாம் என வாய்மொழியால்
           திட்டமிடுவதும்; அறமற்றதே ஆகும்.
           
0283.  களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
           ஆவது போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: திருட்டினால் விளையும் செல்வம்; அளவுக்கதிகமாய் பெருகுவது 
           போலத் தோன்றி, இறுதியில் மொத்தமாய் அழியும்.
(அது போல்...)
           போதை-வஸ்துகளால் கிடைக்கும் இன்பம்; மென்மேலும் அதிகமாவது போலத் தோன்றி, 
           பின்னர் துன்பமாய் முடியும்.

0284.  களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் 
           வீயா விழுமம் தரும்

           விழியப்பன் விளக்கம்: திருட்டின் மீது அதிகரிக்கும் ஆசையானது; அதன் விளைவாக, 
           என்றும் அழியாத துன்பத்தைக் கொடுக்கும்.
(அது போல்...)
           கள்ளக்காதல் மேல் அதிகரிக்கும் மோகமானது; அதன் விளைவாய், சரிசெய்ய முடியாத 
           சுய-அழிவை அளிக்கும்.

0285.  அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் 
           பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

           விழியப்பன் விளக்கம்: பிறரின் பொருளைத் திருட, அவர்களின் இயலாமைக்காக 
           காத்திருப்போர்;  அருளை உணர்ந்து, அன்புடையவராய் மாறுதல் சாத்தியமில்லை.
(அது போல்...)
           பிறரின் திறமையை விமர்சிக்க, அவர்களின் தவறுக்காக எதிர்பார்ப்போர்; அறத்தை 
           உணர்ந்து, அவர்களின் படைப்புகளைப் பாராட்டமாட்டார்கள்.

0286.  அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் 
           கன்றிய காத லவர்

           விழியப்பன் விளக்கம்: திருட்டின் மேல், மிகுந்த ஆசையைக் கொண்டிருபோர்; 
           தேவையான அளவுடன் வாழும் நெறியைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
(அது போல்...)
           காழ்ப்புணர்வின் மேல், அதீத நாட்டத்தைக் கொண்டிருப்போர்; உண்மையான 
           மனிதத்துடன் நேசிக்கும் உணர்வைக் கொண்டிருக்க மாட்டார்கள்.

0287.  களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் 
           ஆற்றல் புரிந்தார்கண்ட இல்

           விழியப்பன் விளக்கம்: தம் தேவையை உணர்ந்து வாழும் ஆற்றல் கொண்டவரிடம்; களவு 
           எனும் இருண்ட அறிவின் ஆளுமை இருப்பதில்லை.
(அது போல்...)
           தம் கடமையைப் புரிந்து செயல்படும் திறன் உள்ளவரிடம்; விதிமீறல் எனும் தீய 
           எண்ணத்தின் ஆதிக்க இருக்காது.

0288.  அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
           களவறிந்தார் நெஞ்சில் கரவு

           விழியப்பன் விளக்கம்: தேவையை அறிந்தவர் நெஞ்சில், அறம் நிலைத்திருப்பது போல்;
           களவை அறிந்தவர் நெஞ்சில், வஞ்சனை நிலைத்திருக்கும்.
(அது போல்...)
           தேடலைத் தொடர்வோர் மனதில், புரிதல் வலுவடைவது போல்; ஊழலைத் தொடர்வோர்
           மனதில், பேராசை வலுவடையும்.

0289.  அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 
           மற்றைய தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: களவு தவிர மற்றவற்றை அறியாதோர்; அதையும் வரைமுறை 
           இல்லாமல் செய்து, உடனடியாய் அழிவர்.
(அது போல்...)
           புறங்கூறுதல் தவிர பிறசெயல்களைச் செய்யாதோர்; அதையும் குற்றவுணர்வே இல்லாமல் 
           செய்து, உடனே கெட்டழிவர்.

0290.  கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் 
           தள்ளாது புத்தே ளுளகு

           விழியப்பன் விளக்கம்: திருடுவோர்க்கு, வாழ்வியல் கிடைக்காமல் போகும்; 
           திருடாதோர்க்கு, தேவர்வாழ் உலகம் கூட கிடைக்காமல் போகாது.
(அது போல்...)
           விதிமீறுவோர்க்கு, வெகுமதி கிடைக்காமல் போகும்; விதிமீராதோர்க்கு, என்றுமழியா புகழ் 
           கூட கிடைக்காமல் போகாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0290 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0290}

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு

விழியப்பன் விளக்கம்: திருடுவோர்க்கு, வாழ்வியல் கிடைக்காமல் போகும்; திருடாதோர்க்கு, தேவர்வாழ் உலகம் கூட கிடைக்காமல் போகாது.
(அது போல்...)
விதிமீறுவோர்க்கு, வெகுமதி கிடைக்காமல் போகும்; விதிமீராதோர்க்கு, என்றுமழியா புகழ் கூட கிடைக்காமல் போகாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், மே 17, 2016

குறள் எண்: 0289 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0289}

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

விழியப்பன் விளக்கம்: களவு தவிர மற்றவற்றை அறியாதோர்; அதையும் வரைமுறை இல்லாமல் செய்து, உடனடியாய் அழிவர்.
(அது போல்...)
புறங்கூறுதல் தவிர பிறசெயல்களைச் செய்யாதோர்; அதையும் குற்றவுணர்வே இல்லாமல் செய்து, உடனே கெட்டழிவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், மே 16, 2016

குறள் எண்: 0288 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0288}

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
களவறிந்தார் நெஞ்சில் கரவு

விழியப்பன் விளக்கம்: தேவையை அறிந்தவர் நெஞ்சில், அறம் நிலைத்திருப்பது போல்; களவை அறிந்தவர் நெஞ்சில், வஞ்சனை நிலைத்திருக்கும்.
(அது போல்...)
தேடலைத் தொடர்வோர் மனதில், புரிதல் வலுவடைவது போல்; ஊழலைத் தொடர்வோர் மனதில், பேராசை வலுவடையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, மே 15, 2016

குறள் எண்: 0287 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0287}

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்

விழியப்பன் விளக்கம்: தம் தேவையை உணர்ந்து வாழும் ஆற்றல் கொண்டவரிடம்; களவு எனும் இருண்ட அறிவின் ஆளுமை இருப்பதில்லை.
(அது போல்...)
தம் கடமையைப் புரிந்து செயல்படும் திறன் உள்ளவரிடம்; விதிமீறல் எனும் தீய எண்ணத்தின் ஆதிக்கம் இருக்காது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, மே 14, 2016

குறள் எண்: 0286 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0286}

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

விழியப்பன் விளக்கம்: திருட்டின் மேல், மிகுந்த ஆசையைக் கொண்டிருபோர்; தேவையான அளவுடன் வாழும் நெறியைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
(அது போல்...)
காழ்ப்புணர்வின் மேல், அதீத நாட்டத்தைக் கொண்டிருப்போர்; உண்மையான மனிதத்துடன் நேசிக்கும் உணர்வைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, மே 13, 2016

குறள் எண்: 0285 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0285}

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

விழியப்பன் விளக்கம்: பிறரின் பொருளைத் திருட, அவர்களின் இயலாமைக்காக காத்திருப்போர்;  அருளை உணர்ந்து, அன்புடையவராய் மாறுதல் சாத்தியமில்லை.
(அது போல்...)
பிறரின் திறமையை விமர்சிக்க, அவர்களின் தவறுக்காக எதிர்பார்ப்போர்; அறத்தை உணர்ந்து, அவர்களின் படைப்புகளைப் பாராட்டமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், மே 12, 2016

குறள் எண்: 0284 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0284}

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

விழியப்பன் விளக்கம்: திருட்டின் மீது அதிகரிக்கும் ஆசையானது; அதன் விளைவாக, என்றும் அழியாத துன்பத்தைக் கொடுக்கும்.
(அது போல்...)
கள்ளக்காதல் மேல் அதிகரிக்கும் மோகமானது; அதன் விளைவாய், சரிசெய்ய முடியாத சுய-அழிவை அளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், மே 11, 2016

குறள் எண்: 0283 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0283}

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

விழியப்பன் விளக்கம்: திருட்டினால் விளையும் செல்வம்; அளவுக்கதிகமாய் பெருகுவது போலத் தோன்றி, இறுதியில் மொத்தமாய் அழியும்.
(அது போல்...)
போதை-வஸ்துகளால் கிடைக்கும் இன்பம்; மென்மேலும் அதிகமாவது போலத் தோன்றி, பின்னர் துன்பமாய் முடியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், மே 10, 2016

குறள் எண்: 0282 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0282}

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

விழியப்பன் விளக்கம்: களவு எண்ணத்துடன், பிறர் பொருளை அபகரிக்கலாம் என மனதால் நினைப்பதும்; தீயொழுக்கமே ஆகும்.
(அது போல்...)
பகை உணர்வுடன், பிறர் அந்தரங்கத்தை புறங்கூறலாம் என வாய்மொழியால் திட்டமிடுவதும்; அறமற்றதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், மே 09, 2016

குறள் எண்: 0281 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0281}

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

விழியப்பன் விளக்கம்: பிறரால் இகழப்படாத நிலையில் வாழ்ந்திட நினைப்போர்; எந்த பொருளையும், களவாட எண்ணாத நிலையில் தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
(அது போல்...)
பிறரால் வெல்லமுடியாத நிலையில் இருக்கும் விருப்பமுடையோர்; எவர் ஒருவரையும், வஞ்சிக்க முயலாத வகையில் தன் செயலை நிர்ணயிக்க வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, மே 08, 2016

அதிகாரம் 028: கூடாவொழுக்கம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 028 - கூடாவொழுக்கம்

0271.  வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
           ஐந்தும் அகத்தே நகும்

           விழியப்பன் விளக்கம்: வஞ்சக மனதுடையோரின், பொய்யான ஒழுக்கத்தைக் கண்டு; 
           அவரின் உடம்பிலுள்ள ஐவகை பூதங்களும், தம்முள்ளே சிரிக்கும்.
(அது போல்...)
           காழ்ப்புணர்வு உடையோரின், போலியான உறவைக் கண்டு; அவரின் பிணைப்பிலுள்ள 
           ஐவகை உறவுகளும், மனதுள்ளே இகழும்.

0272.  வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
           தான்அறி குற்றப் படின்

           விழியப்பன் விளக்கம்: மனசாட்சிக்குத் தெரிந்தே, குற்றச்செயல்களைச் செய்வாராயின்; 
           ஒருவரின்  விண்ணளவு தவத்தால் என்ன பயன்?
(அது போல்...)
           குடிமக்களுக்குத் தெரிந்தே, ஊழல்களைச் செய்கிறதெனின்; ஓர்கட்சியின் கண்டமளவு 
           ஆதரவாளர்களால் என்ன நன்மை?
           
0273.  வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
           புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

           விழியப்பன் விளக்கம்: மனதை ஒருமுகப்படுத்தும் வலிமையற்றோரின், வலிய தவக்கோலம்; 
           வலுவற்ற பசு, வலிமையான புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு மேய்வது போன்றதாகும்.
(அது போல்...)
           ஊழலைக் களையெடுக்கும் திராணியற்றோரின், புரட்சிப் பிரச்சாரம்; இளம் குழந்தை, 
           முதிய வயதினரின் வேடத்தை அணிந்துகொண்டு மிரட்டுவது போன்றதாகும்.

0274.  தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
           வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

           விழியப்பன் விளக்கம்: தவக்கோலம் கொண்டும், தீவினைகளைச் செய்வது; வேடர்கள் புதரில்
           மறைந்து, பறவைகளைக் கண்ணிவைத்து பிடிப்பது போன்றதாகும்.
(அது போல்...)
           எல்லா-வளமும் இருந்தும், பிறர்பொருளை அபகரிப்பது; கோழைகள் பிறரின் ஆதரவுடன்,
           எதிரிகளை மறைந்திருந்து தாக்குவது போன்றதாகும்.

0275.  பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
           ஏதம் பலவுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: "ஆசைகளைத் துறந்துவிட்டோம்!" என்போரின் பொய்யொழுக்கம்; 
           "என்ன செய்தோம்? என்ன செய்தோம்?" என வருந்தும் பல துன்பங்களைக் கொடுக்கும்.
(அது போல்...)
           "ஊழல்களை ஒழித்துவிட்டோம்!" என்போரின் பொய்ப்பிரச்சாரம்; "ஏன் தோற்றோம்? ஏன்
           தோற்றோம்?" என வருந்தும் பல நிகழ்வுகளை உருவாக்கும்.

0276.  நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
           வாழ்வாரின் வன்கணார் இல்

           விழியப்பன் விளக்கம்: மனதளவில் ஆசைகளைத் துறவாமல், வெளியில் துறந்தவர் போல்; 
           ஏமாற்றி வாழ்வோரை விட, இரக்கமற்றோர் வேறெவருமில்லை.
(அது போல்...)
           நடைமுறையில் ஊழல்களை ஒழிக்காமல், மேடையில் ஒழித்தது போல்; ஏமாற்றி
           ஓட்டுகேட்போரை விட, இழிவானோர் வேறெவருமில்லை.

0277.  புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி 
           மூக்கிற் கரியார் உடைத்து

           விழியப்பன் விளக்கம்: புறத்தில் - குன்றிமணியின் அகன்ற செம்மையாய் தோன்றிடினும்; 
           அகத்தில் - குன்றிமணியின் குறுகிய கருமையைக் கொண்டவரை உடையது இவ்வுலகம்.
(அது போல்...)
           பேச்சில் - இயற்கையின் பரந்த கருணையாய் பொழிவதும்; செயலில் - இயற்கைசீற்றத்தின்
           கொடிய சீரழிவுமான இரட்டையரைக் கொண்டது சமூகம்.

0278.  மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
           மறைந்தொழுகு மாந்தர் பலர்

           விழியப்பன் விளக்கம்: மனதில் தீய-எண்ணங்கள் நிறைந்திருக்க, தவமிருப்போர் இயல்புடன்;
           புனிதநீரில் குளித்து, பொய்யான ஒழுக்கத்துடன் வாழ்வோர் பலருண்டு.
(அது போல்...)
           செயலில் ஒழுங்கீனங்கள் பலவிருக்க, மாமனிதர் இயல்புடன்; மேடைப்பேச்சில் கவர்ந்து,
           போலியான தோற்றத்துடன் வலம்வருவோர் பலருண்டு.

0279.  கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
           வினைபடு பாலால் கொளல்

           விழியப்பன் விளக்கம்: நேரான அம்பு கொடியது செய்யும்! வளைவான யாழ், இனிமையான 
           இசைதரும்! அதுபோல், ஒருவரை - பேச்சால் அல்லாது செயலால் வரையறுத்தல் வேண்டும்.
(அது போல்...)
           முரடான பலாப்பழம் அமிழ்தாய் இனிக்கும்! வழவழப்பான எட்டிப்பழம் உயிரை அழிக்கும்! 
           அதுபோல், ஓர்-உறவை - அழகால் அல்லாது அன்பால் நிர்ணயிக்க வேண்டும்.

0280.  மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
           பழித்தது ஒழித்து விடின்

           விழியப்பன் விளக்கம்: உலகத்தார் விமர்சிக்கும் கூடாவொழுக்கத்தை ஒழித்துவிட்டால்; 
           முடியை மழிப்பதோ அல்லது நீளமாய் வளர்ப்பதோ தேவையில்லை.

(அது போல்...)
           பொதுமக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அளித்துவிட்டால்; சூறாவளிப் பிரச்சாரமோ 
           அல்லது மிகையான வாக்குறுதியோ தேவையில்லை.

குறள் எண்: 0280 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0280}

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

விழியப்பன் விளக்கம்: உலகத்தார் விமர்சிக்கும் கூடாவொழுக்கத்தை ஒழித்துவிட்டால்; முடியை மழிப்பதோ அல்லது நீளமாய் வளர்ப்பதோ தேவையில்லை.
(அது போல்...)
பொதுமக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அளித்துவிட்டால்; சூறாவளிப் பிரச்சாரமோ அல்லது மிகையான வாக்குறுதியோ தேவையில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, மே 07, 2016

குறள் எண்: 0279 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0279}

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்

விழியப்பன் விளக்கம்: நேரான அம்பு கொடியது செய்யும்! வளைவான யாழ், இனிமையான இசைதரும்! அதுபோல், ஒருவரை - பேச்சால் அல்லாது செயலால் வரையறுத்தல் வேண்டும்.
(அது போல்...)
முரடான பலாப்பழம் அமிழ்தாய் இனிக்கும்! வழவழப்பான எட்டிப்பழம் உயிரை அழிக்கும்! அதுபோல், ஓர்-உறவை - அழகால் அல்லாது அன்பால் நிர்ணயிக்க வேண்டும்.

வெள்ளி, மே 06, 2016

குறள் எண்: 0278 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0278}

மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்

விழியப்பன் விளக்கம்: மனதில் தீய-எண்ணங்கள் நிறைந்திருக்க, தவமிருப்போர் இயல்புடன்; புனிதநீரில் குளித்து, பொய்யான ஒழுக்கத்துடன் வாழ்வோர் பலருண்டு.
(அது போல்...)
செயலில் ஒழுங்கீனங்கள் பலவிருக்க, மாமனிதர் இயல்புடன்; சொற்பொழிவில் கவர்ந்து, போலியான தோற்றத்துடன் வலம்வருவோர் பலருண்டு.

வியாழன், மே 05, 2016

குறள் எண்: 0277 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0277}

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து

விழியப்பன் விளக்கம்: புறத்தில் - குன்றிமணியின் அகன்ற செம்மையாய் தோன்றிடினும்; அகத்தில் - குன்றிமணியின் குறுகிய கருமையைக் கொண்டவரை உடையது இவ்வுலகம்.
(அது போல்...)
பேச்சில் - இயற்கையின் பரந்த கருணையாய் பொழிவதும்; செயலில் - இயற்கைசீற்றத்தின் கொடிய சீரழிவுமான இரட்டையரைக் கொண்டது சமூகம்.

புதன், மே 04, 2016

குறள் எண்: 0276 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0276}

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல்

விழியப்பன் விளக்கம்: மனதளவில் ஆசைகளைத் துறவாமல், வெளியில் துறந்தவர் போல்; ஏமாற்றி வாழ்வோரை விட, இரக்கமற்றோர் வேறெவருமில்லை.
(அது போல்...)
நடைமுறையில் ஊழல்களை ஒழிக்காமல், மேடையில் ஒழித்தது போல்; ஏமாற்றி ஓட்டுகேட்போரை விட, இழிவானோர் வேறெவருமில்லை.

செவ்வாய், மே 03, 2016

குறள் எண்: 0275 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0275}

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவுந் தரும்

விழியப்பன் விளக்கம்: "ஆசைகளைத் துறந்துவிட்டோம்!" என்போரின் பொய்யொழுக்கம்; "என்ன செய்தோம்? என்ன செய்தோம்?" என வருந்தும் பல துன்பங்களைக் கொடுக்கும்.
(அது போல்...)
"ஊழல்களை ஒழித்துவிட்டோம்!" என்போரின் பொய்ப்பிரச்சாரம்; "ஏன் தோற்றோம்? ஏன் தோற்றோம்?" என வருந்தும் பல நிகழ்வுகளை உருவாக்கும்.