திங்கள், அக்டோபர் 31, 2016

குறள் எண்: 0456 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0456}

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

விழியப்பன் விளக்கம்: தூய-மனமுடையவரின் எச்சம், நல்வழியில் பயணப்படும்; தூய-இனத்தவரின் செயல்கள், நன்மையைக் கொடுக்காமல் இருப்பதில்லை.
(அது போல்...)
நற்தலைவரின் நீட்சி, நல்லாட்சியால் தொடர்ந்திடும்; நற்சிந்தனையின் செயல்வடிவம், வெற்றியில் முடியாமல் இருப்பதில்லை.

ஞாயிறு, அக்டோபர் 30, 2016

குறள் எண்: 0455 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0455}

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

விழியப்பன் விளக்கம்: சிந்தனையின் தூய்மை, செயல்பாடுகளின் தூய்மை - இவையிரண்டும்; ஒருவர் சார்ந்த, இனத்தின் தூய்மையின் தன்மையால் நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
பெற்றோரின் வாய்மை, பிள்ளைகளின் வாய்மை -  இரண்டும்; அவர்கள் முன்னோர், கடைப்பிடித்த வாய்மையின் வீரியத்தால் வகுக்கப்படும்.

சனி, அக்டோபர் 29, 2016

குறள் எண்: 0454 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0454}

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் பகுத்தறிவு, அவரின் மனதைப் பிரதிபலிப்பதாய் ஒரு மாயையை உருவாக்கி; அவரின் இனத்தைப் பிரதிபலிப்பதாய், உண்மை வடிவம் பெரும்.
(அது போல்...)
சிலரின் வசதிகள், அவரின் உழைப்பால் விளைந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்து; பிறரின் உழைப்பால் விளைந்ததை, பின்னர் கசப்பாய் உரைக்கும்.

வெள்ளி, அக்டோபர் 28, 2016

குறள் எண்: 0453 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0453}

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் உணர்ச்சி, அவரின் மனவுணர்வையொட்டி இருப்பதுபோல்; ஒருவர் இவ்வகையானவர் என்பது, அவரின் சுற்றத்தையொட்டி  வரையறுக்கப்படும்.
(அது போல்...)
பிள்ளைகளின் செயல்பாடுகள், பெற்றோர்களின் இயல்பையொட்டி அமைவதுபோல்; ஆட்சியாளர் இத்தகையானவர் என்பது, அவர்களின் தொண்டர்களால் உணரப்படும்.

வியாழன், அக்டோபர் 27, 2016

குறள் எண்: 0452 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0452}

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு

விழியப்பன் விளக்கம்: சேரும் நிலத்தின் தன்மைக்கேற்ப, நீரின் தன்மை வேறுபடும்; அதுபோல், சேரும் இனத்தின் இயல்புக்கேற்ப - மக்களின் அறிவு வேறுபடும்.
(அது போல்...)
வார்க்கப்படும் அச்சின் உருவுக்கேற்ப; உலோகக்குழம்பின் பிம்பம் உருமாறும்; அதுபோல்,  இருக்கும் சூழலின் தன்மைக்கேற்ப - ஒருவரின் குணம் மாறுபடும்.

புதன், அக்டோபர் 26, 2016

குறள் எண்: 0451 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0451}

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

விழியப்பன் விளக்கம்: பேரின்பம் கண்ட பெரியோர், சிற்றின்பம் தேடும் சிறியோர்க்கு அஞ்சுவர்; சிறியோர்களோ, அச்சிற்றின்பம் கொண்டவர்களையேச் சுற்றமாகச் சூழ்வர்.
(அது போல்...)
விவசாயத்தை உயிரெனும் விவசாயி, விளைநிலம் அழிக்கும் வியாபாரியை எதிர்ப்பர்; வியாபாரிகளோ, அந்நிலத்தை அழிப்பவர்களையேப் பங்காளியாய்ச் சேர்ப்பர்.

செவ்வாய், அக்டோபர் 25, 2016

அதிகாரம் 045: பெரியாரைத் துணைக்கோடல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 - பெரியாரைத் துணைக்கோடல்

0441.  அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
           திறனறிந்து தேர்ந்து கொளல்

           விழியப்பன் விளக்கம்: அறநெறிகளை உணர்ந்து, அனுபவ அறிவுபெற்ற மூத்தவர்கள்
           நட்பை; அதன் சிறப்பை உணர்ந்து, ஆராய்ந்து அடையவேண்டும்.
(அது போல்...)
           வாழ்வியலை வகுத்து, தலைமுறையை வளர்த்த மூதாதையர் வரலாறை; அதன் மாண்பை
           உணர்ந்து, முயன்று அறியவேண்டும்.
        
0442.  உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
           பெற்றியார்ப் பேணிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: நேர்ந்த துன்பத்தை மாற்றி, நேரவிருக்கும் துன்பத்தை முன்பே 
           தடுக்கும்; அனுபவம் உடையவரைப் பேணி, அவரின் துணையைப் பெறவேண்டும்.
(அது போல்...)
           நிகழ்ந்த அனைத்தையும் மறந்து, நிகழவிருக்கும் செயல்களில் மனதைச் செலுத்தும்; 
           வைராக்கியம் உள்ளவரைக் கண்டு, அவரைத் தொடருதல் வேண்டும்.
           
0443.  அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
           பேணித் தமராக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: அனுபவமுடையப் பெரியோரைப், பேணித் தமக்கு நெருக்கமாய்
           கொள்வது; பெறமுடிந்த அரிதானப் பேறுகள் அனைத்திலும் அரிதானதாகும்.
(அது போல்...)
           நேர்மையானத் தலைவர்களை, அறிந்து நமக்கு வழிகாட்டியாய் தொடர்வது; சாத்தியமான
           சிறந்த பிறவிப்பயன்கள் அனைத்திலும் சிறந்ததாகும்.

0444.  தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
           வன்மையுள் எல்லாந் தலை

           விழியப்பன் விளக்கம்: தம்மைவிட அறிவார்ந்தப் பெரியோரைத், தமக்கு நெருக்கமாக்கிக்
           கொள்ளுதல்; வலிமையானவை எல்லாவற்றிலும் முதன்மையாகும்.
(அது போல்...)
           நம்மைவிட வைராக்கியம் உள்ளவரை, நமக்கு குருவாய் தொடருதல்; தேடல்கள்
           அனைத்துக்கும் வழிவகுக்கும்.

0445.  சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
           சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாரைத் தன் கண்ணாகக் கொண்டு பயணிப்பதால்;
           அரசாள்பவர் -  சூழ்ந்து கொள்ளவேண்டிய, பெரியோரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும்.
(அது போல்...)
           பெற்றோரைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வளர்வதால்; பிள்ளைகள் - பேணிப்
           பாதுகாக்கவேண்டிய, பெற்றோரைப் பேணுதல் வேண்டும்.

0446.  தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
           செற்றார் செயக்கிடந்தது இல்

           விழியப்பன் விளக்கம்: தகுதியுடையப் பெரியோர்களின் வட்டத்தில், தன்னை
           இணைக்கவல்ல வல்லவர்களை; அழிப்பதற்கு, பகைவர்களுக்கு ஒன்றுமில்லை.
(அது போல்...)
           சக்திவாய்ந்த தலைவர்களின் கழகத்தில், தம்மை ஈடுபடுத்தும் இளைஞர்களை;
           தடம்புரட்ட, கேளிக்கைகளுக்கு இடமில்லை.

0447.  இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
           கெடுக்குந் தகைமை யவர்

           விழியப்பன் விளக்கம்: தவறுகளை இடித்துரைக்கும் பெரியோரின், துணையுடைய
           அரசாள்பவரை; கெடுக்கும் திறனுடையவர், எவரிருக்க முடியும்?
(அது போல்...)
           குறைகளைக் களையெடுக்கும் சிந்தனையின், வலிமையை அறிந்தவர்களை; அழிக்கும்
           சிற்றின்பம், எதுவுமிருக்க முடியுமா?

0448.  இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
           கெடுப்பா ரிலானுங் கெடும்

           விழியப்பன் விளக்கம்: குறைகளை இடித்துரைத்துக் காக்கும், பெரியோர் துணையற்ற 
           அரசாள்பவர்; கெடுப்பதற்கு எவரும் இல்லையெனினும், இயல்பாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
           அறமற்றவற்றைக் களைந்து நல்வழிப்படுத்தும், பெற்றோரைக் கொண்டிராத பிள்ளைகள்; 
           தவறானப் பழக்கங்கள் இல்லாதபோதும், வாழ்வியலில் தோற்பர்.

0449.  முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
           சார்பிலார்க் கில்லை நிலை

           விழியப்பன் விளக்கம்: முதலீடு செய்யாதவர்க்கு, நிரந்தர வருமானமில்லை; அதுபோல்,
           முட்டுத்தூண் போன்ற பெரியோரின் ஆதரவற்றோர் - நிலைத்திருப்பது சாத்தியமில்லை.
(அது போல்...)
           அடித்தளம் இல்லாத, கட்டிடம் நிலைப்பதில்லை; அதுபோல், சுமைதாங்கி போன்ற
           உறவுப்பலம் இல்லாதோர் - முதுமையில் மகிழ்ந்திருப்பதில்லை.

0450.  பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 
           நல்லார் தொடர்கை விடல்

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் போதிக்கும், பெரியவர் ஒருவரின் உறவைக் கைவிடுதல்; 
           பலரின் பகையைக் கொள்வதை விட, பன்மடங்கு அதீத தீமையை விளைவிக்கும்.
(அது போல்...)
           நல்லாட்சி அளிக்கும், தலைவர் ஒருவரை ஆதரிக்க மறுத்தல்; பல்வகை ஊழல்கள் 
           நிகழ்வதை விட, பன்மடங்கு அதிக ஒழுங்கீனத்தைக் கொடுக்கும்.

குறள் எண்: 0450 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0450}

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

விழியப்பன் விளக்கம்: நல்லறம் போதிக்கும், பெரியவர் ஒருவரின் உறவைக் கைவிடுதல்; பலரின் பகையைக் கொள்வதை விட, பன்மடங்கு அதீத தீமையை விளைவிக்கும்.
(அது போல்...)
நல்லாட்சி அளிக்கும், தலைவர் ஒருவரை ஆதரிக்க மறுத்தல்; பல்வகை ஊழல்கள் நிகழ்வதை விட, பன்மடங்கு அதிக ஒழுங்கீனத்தைக் கொடுக்கும்.

திங்கள், அக்டோபர் 24, 2016

குறள் எண்: 0449 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0449}

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

விழியப்பன் விளக்கம்: முதலீடு செய்யாதவர்க்கு, நிரந்தர வருமானமில்லை; அதுபோல், முட்டுத்தூண் போன்ற பெரியோரின் ஆதரவற்றோர் - நிலைத்திருப்பது சாத்தியமில்லை.
(அது போல்...)
அடித்தளம் இல்லாத, கட்டிடம் நிலைப்பதில்லை; அதுபோல், சுமைதாங்கி போன்ற உறவுப்பலம் இல்லாதோர் - முதுமையில் மகிழ்ந்திருப்பதில்லை.

ஞாயிறு, அக்டோபர் 23, 2016

குறள் எண்: 0448 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0448}

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்

விழியப்பன் விளக்கம்: குறைகளை இடித்துரைத்துக் காக்கும், பெரியோர் துணையற்ற அரசாள்பவர்; கெடுப்பதற்கு எவரும் இல்லையெனினும், இயல்பாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
அறமற்றவற்றைக் களைந்து நல்வழிப்படுத்தும், பெற்றோரைக் கொண்டிராத பிள்ளைகள்; தவறானப் பழக்கங்கள் இல்லாதபோதும், வாழ்வியலில் தோற்பர்.

சனி, அக்டோபர் 22, 2016

குறள் எண்: 0447 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0447}

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

விழியப்பன் விளக்கம்: தவறுகளை இடித்துரைக்கும் பெரியோரின், துணையுடைய அரசாள்பவரை; கெடுக்கும் திறனுடையவர், எவரிருக்க முடியும்?
(அது போல்...)
குறைகளைக் களையெடுக்கும் சிந்தனையின், வலிமையை அறிந்தவர்களை; அழிக்கும் சிற்றின்பம், எதுவுமிருக்க முடியுமா?

வெள்ளி, அக்டோபர் 21, 2016

குறள் எண்: 0446 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0446}

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
செற்றார் செயக்கிடந்தது இல்

விழியப்பன் விளக்கம்: தகுதியுடையப் பெரியோர்களின் வட்டத்தில், தன்னை இணைக்கவல்ல வல்லவர்களை; அழிப்பதற்கு, பகைவர்களுக்கு ஒன்றுமில்லை.
(அது போல்...)
சக்திவாய்ந்த தலைவர்களின் கழகத்தில், தம்மை ஈடுபடுத்தும் இளைஞர்களை; தடம்புரட்ட, கேளிக்கைகளுக்கு இடமில்லை.

வியாழன், அக்டோபர் 20, 2016

குறள் எண்: 0445 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0445}

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாரைத் தன் கண்ணாகக் கொண்டு பயணிப்பதால்; அரசாள்பவர் -  சூழ்ந்து கொள்ளவேண்டிய, பெரியோரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும்.
(அது போல்...)
பெற்றோரைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வளர்வதால்; பிள்ளைகள் - பேணிப் பாதுகாக்கவேண்டிய, பெற்றோரைப் பேணுதல் வேண்டும்.

புதன், அக்டோபர் 19, 2016

குறள் எண்: 0444 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0444}

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை

விழியப்பன் விளக்கம்: தம்மைவிட அறிவார்ந்தப் பெரியோரைத், தமக்கு நெருக்கமாக்கிக் கொள்ளுதல்; வலிமையானவை எல்லாவற்றிலும் முதன்மையாகும்.
(அது போல்...)
நம்மைவிட வைராக்கியம் உள்ளவரை, நமக்கு குருவாய் தொடருதல்; தேடல்கள் அனைத்துக்கும் வழிவகுக்கும்.

செவ்வாய், அக்டோபர் 18, 2016

குறள் எண்: 0443 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0443}

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

விழியப்பன் விளக்கம்: அனுபவமுடையப் பெரியோரைப், பேணித் தமக்கு நெருக்கமாய் கொள்வது; பெறமுடிந்த அரிதானப் பேறுகள் அனைத்திலும் அரிதானதாகும்.
(அது போல்...)
நேர்மையானத் தலைவர்களை, அறிந்து நமக்கு வழிகாட்டியாய் தொடர்வது; சாத்தியமான சிறந்த பிறவிப்பயன்கள் அனைத்திலும் சிறந்ததாகும்.

திங்கள், அக்டோபர் 17, 2016

குறள் எண்: 0442 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0442}

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: நேர்ந்த துன்பத்தை மாற்றி, நேரவிருக்கும் துன்பத்தை முன்பே தடுக்கும்; அனுபவம் உடையவரைப் பேணி, அவரின் துணையைப் பெறவேண்டும்.
(அது போல்...)
நிகழ்ந்த அனைத்தையும் மறந்து, நிகழவிருக்கும் செயல்களில் மனதைச் செலுத்தும்; வைராக்கியம் உள்ளவரைக் கண்டு, அவரைத் தொடருதல் வேண்டும்.

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

குறள் எண்: 0441 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0441}

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்

விழியப்பன் விளக்கம்: அறநெறிகளை உணர்ந்து, அனுபவ அறிவுபெற்ற மூத்தவர்கள் நட்பை; அதன் சிறப்பை உணர்ந்து, ஆராய்ந்து அடையவேண்டும்.
(அது போல்...)
வாழ்வியலை வகுத்து, தலைமுறையை வளர்த்த மூதாதையர் வரலாறை; அதன் மாண்பை உணர்ந்து, முயன்று அறியவேண்டும்.

சனி, அக்டோபர் 15, 2016

அதிகாரம் 044: குற்றங்கடிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 - குற்றங்கடிதல்

0431.  செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் 
           பெருக்கம் பெருமித நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: குற்றச்செயல்களை விதைக்கும் - ஆணவம்/சினம்/சிறுமைத்தனம் - 
           இவற்றை நீக்கியோரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு உரியதாகும்.
(அது போல்...)
           சிற்றின்பங்களைப் பெருக்கும் - மது/மாது/சூது - இவற்றைத் தவிர்த்தோரின் படைப்புகள்; 
           உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
        
0432.  இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா 
           உவகையும் ஏதம் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: கொடையளிக்காத இழிகுணம்/மாட்சிமையற்ற சுயம்/நியாயமற்ற 
           மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
           திருப்தியளிக்காத உபசரிப்பு/உண்மையற்ற நம்பிக்கை/தேவையற்ற துரோகம் - 
           இவையாவும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.
           
0433.  தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் 
           கொள்வர் பழிநாணு வார்

           விழியப்பன் விளக்கம்: குற்றப்பழிக்கு அஞ்சுபவர், தினையளவு குற்றம் விளைவிக்கும்
           செயலெனினும்; அதைப் பனையளவாய் எண்ணி, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
           மனசாட்சிக்கு அஞ்சுவோர், துளியளவு நஞ்சைக் கலக்கும் மனச்சிதைவையும்; அதைக்
           கடலளவாய் எண்ணி, ஆசைகளைத் தவிர்ப்பர்.

0434.  குற்றமே காக்க பொருளாகக் குற்றமே 
           அற்றந் தரூஉம் பகை

           விழியப்பன் விளக்கம்: குற்றமே, அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் 
           இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
           சிற்றின்பமே, பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து 
           விலகி இருப்பதை, வைராக்கியமாய் பழக்கவேண்டும்.

0435.  வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
           வைத்தூறு போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: குற்றம் நிகழும் முன்பே; அதைப் பகுத்தறிவால் சிந்தித்துத், 
           தடுக்காதோரின் வாழ்க்கை - பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் 
           போல் அழியும்.
(அது போல்...)
           உறவைப் பிரியும் முன்பே; அதன் விளைவுகளை உணர்ந்துத், தவிர்க்காதோரின் 
           நிலைமை - சூறாவளிக்கு சிக்கிய, பொருட்கள் போல் தடம்புரளும்.

0436.  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
           என்குற்ற மாகும் இறைக்கு

           விழியப்பன் விளக்கம்: வரும்முன்னரே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் குற்றத்தையும்     
           களையும், வல்லமையான தலைவனுக்கு - எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
           சிந்தனை-சிதையாமல், தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் 
           தவிர்க்கும், முனைப்பான நட்புக்கு - எந்த சிற்றின்பம் இன்பமளிக்கும்?

0437.  செயற்பால செய்யாது இவறியான் செல்வம் 
           உயற்பாலது இன்றிக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச் 
           சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
           சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம், 
           பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.

0438.  பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 
           எண்ணப் படுவதொன் றன்று

           விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை; 
           இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
           அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில், 
           ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.

0439.  வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
           நன்றி பயவா வினை

           விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது;
           அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
           எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல்,
           நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.

0440.  காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் 
           ஏதில ஏதிலார் நூல்

           விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல்
           செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
           எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தை
           முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது. 

குறள் எண்: 0440 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0440}

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் 
ஏதில ஏதிலார் நூல்

விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த செயல்களை, ஆசை வெளியே தெரியாமல் செய்பவரை; பகையுணர்வு கொண்ட, பகைவர்களின் எண்ணம் சிதைக்காது.
(அது போல்...)
எதிர்க்க வேண்டிய விடயங்களில், எதிர்ப்பை மையப்படுத்தாமல் கருத்தை முன்வைப்பவரை; விமர்சிக்கும் எண்ணமுள்ள, எவரின் விமர்சனமும் பாதிக்காது.

வெள்ளி, அக்டோபர் 14, 2016

குறள் எண்: 0439 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0439}

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

விழியப்பன் விளக்கம்: எந்த நிலையிலும், தன்னை உயர்வாய் எண்ணி வியக்கக்கூடாது; அதுபோல், நல்வினை அளிக்காத செயல்களை விரும்பக்கூடாது.
(அது போல்...)
எந்த நோக்கத்திலும், நம்மைப் பொய்யாய் சித்தரித்துச் சொல்லக்கூடாது; அதுபோல், நமக்குத் தகுதியற்ற ஒன்றை வாங்கக்கூடாது.

வியாழன், அக்டோபர் 13, 2016

குறள் எண்: 0438 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0438}

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

விழியப்பன் விளக்கம்: பேராசையால், செலவிட வேண்டியதற்கு செலவிடாத தன்மை; இருக்கும் குற்றங்களில், ஒன்றாக கணக்கிட முடியாத தனிக்குற்றமாகும்.
(அது போல்...)
அகந்தையால், நியாயமான உரிமையை மறுக்கும் குரூரம்; இருக்கும் தீவிரவாதங்களில், ஒன்றென பட்டியலிட முடியாத தனித்தீவிரமாகும்.

புதன், அக்டோபர் 12, 2016

சேவாக்கின் தனித்தன்மை...

குறள் எண்: 0437 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0437}

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் 
உயற்பாலது இன்றிக் கெடும்

விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய செலவுகளைச் செய்யாமல்; சொத்துகளைச் சேர்ப்போரின் செல்வம், இருக்கக்கூடிய தன்மையில்லாமல் அழியும்.
(அது போல்...)
சிந்திக்கவேண்டிய விடயங்களைச் சிந்திக்காமல்; இலக்கின்றி வாழ்வோரின் நேரம், பயனளிக்கும் திறனின்றி விரயமாகும்.

செவ்வாய், அக்டோபர் 11, 2016

குறள் எண்: 0436 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0436}

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு

விழியப்பன் விளக்கம்: வரும்முன்னரே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் குற்றத்தையும்  களையும், வல்லமையான தலைவனுக்கு - எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
சிந்தனை-சிதையாமல், தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் தவிர்க்கும், முனைப்பான நட்புக்கு - எந்த சிற்றின்பம் இன்பமளிக்கும்?

மனவேதனையும் காலுறை-கிழிசலும்...

திங்கள், அக்டோபர் 10, 2016

குறள் எண்: 0435 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0435}

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

விழியப்பன் விளக்கம்: குற்றம் நிகழும் முன்பே; அதைப் பகுத்தறிவால் சிந்தித்துத், தடுக்காதோரின் வாழ்க்கை - பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல் அழியும்.
(அது போல்...)
உறவைப் பிரியும் முன்பே; அதன் விளைவுகளை உணர்ந்துத், தவிர்க்காதோரின் நிலைமை - சூறாவளிக்கு சிக்கிய, பொருட்கள் போல் தடம்புரளும்.

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

குறள் எண்: 0434 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0434}

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே 
அற்றந் தரூஉம் பகை

விழியப்பன் விளக்கம்: குற்றமே, அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
சிற்றின்பமே, பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி இருப்பதை, வைராக்கியமாய் பழக்கவேண்டும்.

சனி, அக்டோபர் 08, 2016

குடும்ப வாழ்வின் புகழ்...

குறள் எண்: 0433 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0433}

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் 
கொள்வர் பழிநாணு வார்

விழியப்பன் விளக்கம்: குற்றப்பழிக்கு அஞ்சுபவர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலெனினும்; அதைப் பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
மனசாட்சிக்கு அஞ்சுவோர், துளியளவு நஞ்சைக் கலக்கும் மனச்சிதைவையும்; அதைக் கடலளவாய் எண்ணி, ஆசைகளைத் தவிர்ப்பர்.

வெள்ளி, அக்டோபர் 07, 2016

குறள் எண்: 0432 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0432}

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

விழியப்பன் விளக்கம்: கொடையளிக்காத இழிகுணம்/மாட்சிமையற்ற சுயம்/நியாயமற்ற மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
திருப்தியளிக்காத உபசரிப்பு/உண்மையற்ற நம்பிக்கை/தேவையற்ற துரோகம் - இவையாவும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.

அளவுக்கு அதிமான சுதந்திரத்தின் விளைவு...வியாழன், அக்டோபர் 06, 2016

குறள் எண்: 0431 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0431}

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் 
பெருக்கம் பெருமித நீர்த்து

விழியப்பன் விளக்கம்: குற்றச்செயல்களை விதைக்கும் - ஆணவம்/சினம்/சிறுமைத்தனம் - இவற்றை நீக்கியோரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு உரியதாகும்.
(அது போல்...)
சிற்றின்பங்களைப் பெருக்கும் - மது/மாது/சூது - இவற்றைத் தவிர்த்தோரின் படைப்புகள்; உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

புதன், அக்டோபர் 05, 2016

அதிகாரம் 043: அறிவுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை

0421.  அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
           உள்ளழிக்க லாகா அரண்

           விழியப்பன் விளக்கம்: அறிவு - ஒருவரைக் குற்றமறக் காக்கும் கருவியாகவும்; 

           பகைவர்களாலும் அழிக்கமுடியாத, பாதுகாக்கும் உள்-அரணாகவும் அமையும்.
(அது போல்...)
           பயம் - ஒருவரை அறம்தவறாது காக்கும் திசைக்காட்டியாயும்; சிற்றின்பங்களும் 
           சலனப்படுத்தாத, நிலைப்படுத்தும் நங்கூரமாகவும் இருக்கும்.
        
0422.  சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
           நன்றின்பால் உய்ப்ப தறிவு

           விழியப்பன் விளக்கம்: விரும்பும் எல்லாவற்றிலும் மனதைச் செலுத்தாமல், தீயவற்றை 

           அழித்து; நல்லறப் பாதையில், மனதைச் செலுத்துவதே - அறிவாகும்.
(அது போல்...)
           மயக்கும் விடயங்களில் நேரத்தைச் செலவிடாமல், சிற்றின்பம் குறைத்து; பேரின்பம் 
           பெருக்கும், சிந்தனையை வளர்ப்பதே - பிறவியாகும்.
           
0423.  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
           மெய்ப்பொருள் காண்ப தறிவு

           விழியப்பன் விளக்கம்: எந்த விளக்கத்தையும், எவர் எப்படி விவரித்தாலும்; 

           அவ்விளக்கத்தின், உண்மையான விளக்கத்தை உணர்வதே - பகுத்தறிவாகும்.
(அது போல்...)
           எந்த மோகத்தையும், எவர் எப்படி வற்புறுத்தினாலும்; அம்மோகத்தின், ஆழமான
           விளைவை ஆராய்வதே - சுயமாகும்.

0424.  எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
           நுண்பொருள் காண்ப தறிவு

           விழியப்பன் விளக்கம்: நாம் அறிந்தவற்றைப், பிறருக்கு எளிதாய் விளக்குவதும்; பிறர் 

           சொல்வதை,  ஆழமாய் விளங்கிக் கொள்வதுவமே - பகுத்தறிவாகும்.
(அது போல்...)
           நாம் பெற்றதைத், தேவையானோர்க்கு மனமுவந்துப் பகிர்வதும்; பிறர் கொடுப்பதில், 
           தேவையானதை மட்டும் ஏற்பதுமே - மனிதமாகும்.

0425.  உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
           கூம்பலும் இல்ல தறிவு

           விழியப்பன் விளக்கம்: உலக உயிர்களை, அரவணைத்து செல்வதே சிறந்த அறிவாகும்;

           ஆர்ப்பரித்து விரிந்து, பின்னர் சுருங்கும் இயல்பற்றதே - அறிவாகும்.
(அது போல்...)
           சக ஊழியர்களை, தகுதியறிந்து உயர்த்துவதே தேர்ந்த நேர்மையாகும்; நம்பிக்கை
           அளித்து, பின் வஞ்சிக்கும் குணமற்றதே - நேர்மையாகும்.

0426.  எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
           அவ்வது உறைவ தறிவு
         
           விழியப்பன் விளக்கம்: உலகில், வாழ்வியல் எவ்வாறு நிகழ்கிறதோ; அவ்வகையில்,
           உலகுடன் ஒன்றி வாழ்வியலை நிகழ்த்துவதே - அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
           சமூகத்தில், மக்களின் தேவை எதுவோ; அதையொத்து, அத்தேவையை உணர்ந்துத்
           திட்டங்களை வகுப்பதே - மக்களாட்சி ஆகும்.

0427.  அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
           அஃதறி கல்லா தவர்

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், பின்விளைவுகளை முன்பே அறிவர்; 

           பகுத்தறிய இயலாதோர், பின்விளைவுகளை அறியமுடியாதவர் ஆவர்.
(அது போல்...)
           உணர்வுப்புரிதல் இருப்போர், புரளியின்-விளைவை ஆழமாய் ஆராய்வர்; உணர்வுப்புரிதல் 
           இல்லாதோர், புரளியின்-விளைவை ஆராயமுடியாதோர் ஆவர்.

0428.  அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
           அஞ்சல் அறிவார் தொழில்

           விழியப்பன் விளக்கம்: அறம்சார்ந்த பயத்திற்கு, அஞ்சாதது அறியாமையாகும்; 

           அறம்சார்ந்த பயத்திற்கு அஞ்சுவதே, பகுத்தறிவின் இயல்பாகும்.
(அது போல்...)
           மனதறிந்த துரோகத்திற்கு, இனங்குவது தீவினையாகும்; மனதறிந்த துரோகத்திற்கு 
           இனங்காததே, நல்வினையின் தன்மையாகும்.

0429.  எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
           அதிர வருவதோர் நோய்

           விழியப்பன் விளக்கம்: எதிர்காலத் தேவையுணர்ந்து, திட்டங்களை வகுக்கும் 

           அறிவுடையவர்க்கு; அவரை நிலைகுலையைச் செய்யும், இன்னல் நேர்வதில்லை.
(அது போல்...)
           தலைவர்களின் தகுதியுணர்ந்து, தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு; அவர்களைச் 
           சோதனைக்கு உள்ளாக்கும், ஆட்சி அமைவதில்லை.

0430.  அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
           என்னுடைய ரேனும் இலர்

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், வாழ்வியலுக்குரிய எல்லாமும் 

           உடையவராவார்; அவ்வறிவு இல்லாதோர், எதைக் கொண்டிருப்பினும் - இல்லாதவரே 
           ஆவர்.
(அது போல்...)
           உறவைப்பேணும் அன்புடையோர், புகழுக்குரிய உறவுகளெல்லாம் கொண்டிருப்பர்; 
           அப்படிப் பேணாதோர், எல்லா உறவுகளிருந்தும் - ஆதரவற்றவரே ஆவர். 

குறள் எண்: 0430 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0430}

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், வாழ்வியலுக்குரிய எல்லாமும் உடையவராவார்; அவ்வறிவு இல்லாதோர், எதைக் கொண்டிருப்பினும் - இல்லாதவரே ஆவர்.
(அது போல்...)
உறவைப்பேணும் அன்புடையோர், புகழுக்குரிய உறவுகளெல்லாம் கொண்டிருப்பர்; அப்படிப் பேணாதோர், எல்லா உறவுகளிருந்தும் - ஆதரவற்றவரே ஆவர்.

செவ்வாய், அக்டோபர் 04, 2016

குறள் எண்: 0429 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0429}

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

விழியப்பன் விளக்கம்: எதிர்காலத் தேவையுணர்ந்து, திட்டங்களை வகுக்கும் அறிவுடையவர்க்கு; அவரை நிலைகுலையைச் செய்யும், இன்னல் நேர்வதில்லை.
(அது போல்...)
தலைவர்களின் தகுதியுணர்ந்து, தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு; அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்கும், ஆட்சி அமைவதில்லை.

திங்கள், அக்டோபர் 03, 2016

குறள் எண்: 0428 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0428}

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

விழியப்பன் விளக்கம்: அறம்சார்ந்த பயத்திற்கு, அஞ்சாதது அறியாமையாகும்; அறம்சார்ந்த பயத்திற்கு அஞ்சுவதே, பகுத்தறிவின் இயல்பாகும்.
(அது போல்...)
மனதறிந்த துரோகத்திற்கு, இனங்குவது தீவினையாகும்; மனதறிந்த துரோகத்திற்கு இனங்காததே, நல்வினையின் தன்மையாகும்.

ஞாயிறு, அக்டோபர் 02, 2016

"புறங்கூறாமை"யும் சமூக-வலைதளங்களும்...


         தலைப்பைப் பார்த்தவுடன், இத்தலையங்கம் எதைச் சார்ந்தது என்பதை யூகிக்க முடியும். ஆம், தமிழக முதல்வரைப் பற்றி புரளிப் பேசுவோர் பற்றிய ஆதங்கமே - இந்த தலையங்கத்தின் மையக்கரு. நடிகர்கள் துவங்கிப் பிரபலங்கள் பலரைப் பற்றியும் இப்படியான புரளிகள், சமூக-வலைதளங்களில் உலாவருவது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், ஒரு மாநில முதல்வரைப் பற்றிய இத்தகைய புரளிகள்; பொதுமக்களுக்கு எத்தகைய சிரமங்களை விளைவிக்கும் என்ற சமூக-அக்கறை இல்லாத அலட்சியம் மிகவும் கவலைக்குரியது. ஒரு தொலைகாட்சி விவாதம் நடத்தும் அளவிற்கு, இந்த புரளிகள் அரங்கேறி உள்ளன. என்ன விதமான மனிதர்கள் இவர்கள்? அப்படியென்ன, புரளிப் பேசுவதில் நாட்டம்? அதிலும், நம் பிரதிநிதியாய் இருக்கும் மாநில முதல்வரைப் பற்றி? நம் குடும்பங்களில்; எவ்வளவு பகை இருப்பினும் - ஒருவர் உடல்நிலை சரியில்லை எனில், எல்லாவற்றையும் மறந்து அவர் நலமடையவேண்டும்...

        என்று வாழ்த்துவதை எளிதாய் பார்க்கலாம்; அதுதான், மனித இயல்பு. அப்படி இருக்கையில்; எப்படி இவ்வகையான புரளிகள் அதீத அளவில் பேசப்படுகின்றன? சமுதாய அக்கறையுடன், தனிமனித ஒழுக்கத்துடன்; முதல்வரின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்வதில் - இருக்கும் வேட்கையை எந்த விதத்திலும் மறுக்கவில்லை! அந்த எதிர்பார்ப்பும்/அக்கறையும்; வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியதே. ஆனால், அதை இப்படி தரமற்ற வகையில்; புரளியாய் பேசுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல! தற்போதிருக்கும் நிலைமை/எதிர்பார்ப்பு என்ன? தமிழக முதல்வரின் உடல்நிலை சரியில்லை; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரின் உடல்நிலையைப் பற்றி - அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும். அருமை! நல்லதொரு சமூக அக்கறை - பாராட்டுகள். கட்சிக்காரர்கள் தினமும் நிறைய சொல்லியும்; இல்லையில்லை! அரசு சார்பில் எவரேனும் அதிகாரப்பூர்வமாய்...

      சொன்னால் தான் நம்புவோம் என்கிற பிடிவாதம் இருக்கிறது. சரி, அதைக்கூட ஒரு அதீத அன்பின் விளைவாய் எடுத்துக்கொள்வோம். அதிலும், ஒரு வரைமுறை வேண்டுமல்லவா? அவரின் உடல்நிலையைப் பற்றி "அவதூறாய்/தவறாய்" புரளிப் பேசும் ஒழுக்கமின்மை எப்படி சரியாகும்? நம் பிரதிநிதியாய் இருப்பினும்; முதல்வரும் ஒரு சராசரியான தனிமனிதர். மேலும், அவர் ஒரு பெண். அதையெல்லாம் மறந்துவிட்டு "காட்சியாக/புகைப்படமாக வெளியிட்டால் தான் ஏற்போம். இல்லையேல், அவரைப் பற்றி அவதூறாய் பேசுவோம்" என்ற மனநிலை சரியானதா? ஏன், அவர்களுக்கு இந்த புரிதல் இல்லை? (அரசியல் தர்மமற்றது எனினும்) எதிர்க்கட்சியினரின் கோரிக்கையில் இருக்கும், அரசியல் ஆதாயம் சார்ந்த அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.  ஆனால், ஒரு தனிமனிதனுக்கு அற்ப சந்தோசத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?! இது, முதல் நிகழ்வு அல்ல; நிச்சயம், இது இறுதியான நிகழ்வும் இல்லை!

     முகநூல் போன்ற சமூக-வலைதளத்தில், இப்படி புரளி பேசுவதற்கென்றே சில சிறார்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் புரளிப் பேசுவதே, அவர்களின் வாடிக்கை! தொடர்ந்து "அரசியல் நையாண்டி" என்ற பெயரில்; சமூக அக்கறையின்றி பதிவிடுவோரை நான் முடக்கி விடுவேன். அவர்கள், சமூக(வலைத்தள)த்தின் "மிக அபாயமான நோய்க்கிருமிகள்!". இவர்களுக்கு எதைப் பற்றிய அக்கறையுமில்லை; அற்ப சந்தோசமே, அவர்களின் குறிக்கோள். அப்பதிவுகளை "எந்த உணர்வோ/மறுபரிசீலனையோ" இன்றி - பகிர்வோர்; பதிவர்களை விட ஆபத்தானவர்கள் என்றே நான் பார்க்கிறேன். ஏனெனில், அந்தப் பகிர்வுகள் தான் - புரளிப் பேசுவோரை; மேலும் புரளிப் பேசத் தூண்டுகிறது. அதனால் தான் "விவேகமுள்ள ஒருவரின் காதை எட்டும்போது, புரளி அழியும் (Gossip dies when it hits a wise person's ear)" என்றோர் சொற்றொடர் வழக்கில் இருக்கிறது. இதுபோன்ற, ஆங்கில சொற்றொடர்களைக் கூட; நாம் எளிதில் ஒதுக்கிவிடக்கூடும்.

     நம் பெருந்தகை "திருக்குறள்" எனும் உலகப் பொதுமறையில் "புறங்கூறாமை" என்றோர் அதிகாரத்தையே வகுத்து இருக்கிறார். அதிலும், முதல் குறளையே "அறங்கூறான் அல்ல செயினும்" என்று துவக்கி இருக்கிறார். என் திருக்குறள் விளக்கவுரையிலும், அந்த அதிகாரத்தை அதீத தாக்கம் கொடுக்கும் வண்ணம் எழுதி இருக்கிறேன். விளக்கவுரை எழுதும் முன்பே, "புரளி பேசுதல்" எனும் தலையங்கத்திலும், புரளிப் பற்றியப் பார்வையைப் பகிர்ந்திருக்கிறேன். இப்படிப் புரளி பேசுதலின் விளைவைக் கொஞ்சம் கூட உணராமல்; நம் முதல்வரைப் பற்றி இப்படி முறையற்று பேசுதல் சரியா? அதிகாரப்பூர்வ செய்தியை எதிர்பார்த்தார்கள்; மருத்துவமனை தரப்பில் இருந்து "எழுத்து மூலம்" விளக்கம் கொடுக்கப்பட்டது. அதையும் நம்பாத எதிர்க்கட்சியினர், ஆளுநர் சென்று பார்த்துவிட்டு சொல்லவேண்டும் என்றனர். மேற்குறிப்பிட்ட தொலைகாட்சி விவாதத்தில்,  ஆளுநரின் செய்தியையும் - முறையற்று விமர்சிக்கிறார்கள். ஒரு சிறிய காணொளியை...

    வெளியிட முடியாதா? என்று ஒருவர் கேட்கிறார். அதிலும் "மூத்த வழக்கறிஞர்" என்ற அடைமொழியுடன் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் - "நான் விசாரித்தேன், முதல்வர் சிரித்துக் கொண்டே நலமுடன் இருக்கிறேன் என்று சொல்லி இருந்தால், நம்பலாம்!" - என்று, ஆளுநரின் உரையரை இப்படி இருந்திருக்கலாம் என்று பரிந்துரை செய்கிறார். இவர்களைப் போன்றோரை எல்லாம், முன்பே தீர்க்கமாய் உணர்ந்துதான் - "மானிடர்களே! இல்லற வாழ்வில் கூட , புறங்கூறாமை இருக்கக்கூடாது!" - என்று குரல் உயர்த்தி சொல்லத்தான்; அந்த 10 குறள்களை "இல்லறவியல்" எனும் இயலில் வகுத்தாரோ? என்ன செய்ய? - "வள்ளுவரையும்/குறளையும்" கூட - தமிழ் "இரண்டாயிரம் வருடப் பழமையானது!" என்று பீற்றிக்கொள்ளும் போது மட்டும்தானே நினைவு கொள்கிறோம்? சமூக வலைத்தளங்களில் அறநெறிப் பற்றி விரிவாய் பேசுவோர் சிலர் கூட, புரளிப் பேசுவதைப் பார்க்கும்போது; மனது மிகவு கணக்கச் செயகிறது.

அரசியல்வாதியாய்(மட்டும்) பார்க்காமல்; நம்மில் ஒருவராய்(ஆவது) நினைத்து...
நம் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டுவோம்! 
அதுவரை, நம் பொறுமைக் காப்போம்!!

குறள் எண்: 0427 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0427}

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், பின்விளைவுகளை முன்பே அறிவர்; பகுத்தறிய இயலாதோர், பின்விளைவுகளை அறியமுடியாதவர் ஆவர்.
(அது போல்...)
உணர்வுப்புரிதல் இருப்போர், புரளியின்-விளைவை ஆழமாய் ஆராய்வர்; உணர்வுப்புரிதல் இல்லாதோர், புரளியின்-விளைவை ஆராயமுடியாதோர் ஆவர்.

சனி, அக்டோபர் 01, 2016

ஆண்/பெண் உறவு - ஓர் அலசல்! (பாகம் 2)


        முதல் பாகத்தில் சொல்லியிருந்தது போல், பெரும்பான்மை ஆண்கள் காதலை முறையாய் வெளிப்படுத்தாததற்கு - உறவை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்ல வாழ்க்கையோடு போராடி, ஓய்வின்றி ஓடிக்கொண்டிருப்பதே - காரணம். அப்பதிவில் குறிப்பிட்ட காதல்/கள்ளத்தொடர்பு சார்ந்த - இரண்டு உறவுகளும்; அங்கீகாரம் இல்லாதது (அல்லது) முழுமை அடையும் உறுதி இல்லாதது - என்பதால், இந்த அசலில் இருந்து விளக்கிவிடலாம். எனவே, குடும்ப அமைப்பில் இணைந்திருக்கும் உறவு சார்ந்த ஆண்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒரு பெண்ணுக்கு எவ்வொரு சிக்கல் நேர்ந்தாலும் - அவள் சார்ந்திருக்கும் ஆண் உறவுகளையே (தந்தை/சகோதரன்/தமையன்) இந்த சமூகம் கேள்விக்கு உட்படுத்தும். எனவே, ஆண்கள் இந்த சமூகத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சரி, குடும்ப வளர்ச்சி சார்ந்த உழைப்பு அதிகமாய் தேவைப்படாத ஆண்கள் "காதலை வெளிப்படுத்துவார்களா?!" என்றால்...

       நான் பார்த்த வகையில்; அவர்களால், குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடிந்த ஆண்களால், வெகு நிச்சயமாய் - இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற முடியும். வீட்டின் சூழல், அவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும். எல்லாப் பெண்களின் மனதிலும் - அடுத்த கட்டம் பற்றிய சிந்தனை இருப்பது போல்; அதுபோல், எல்லா ஆண்களின் மனதிலும் - காதல் சார்ந்த சிந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன! "சரி, அதை எப்போது தான் வெளிப்படுத்துவர்?" என்றால்; முதலில், பெண்கள் - ஆண்களைப் பெரிதும் சார்ந்திருப்பதில் இருந்து வெளிவரவேண்டும். அதற்கு தகுந்த சூழலை உருவாக்குவதில், சமூகத்திற்கு பெரிய பங்குண்டு. சமீபத்திய "இரயில்நிலையக் கொலை..." பற்றி நினைத்தால்; அந்த சூழல் விரைவில் வருவதற்கு சாத்தியமேயில்லை. அடுத்து, ஆண்களின் பொறுப்புகள் குறைக்கப்பட வேண்டும். இதற்கு, சில நாடுகளில் இருப்பது போல்...

        பெற்றோரின் சொத்துகளைப் பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாது! என்று சட்டம் வரலாம்; தவறில்லை. தன் பிள்ளைகளுக்கு "என்ன தேவை? எவ்வளவு தேவை?" என்பதைக் கூட நிர்ணயிக்க முடியாமல்; இந்த சமூகம் ஒரு ஆணைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஆண்களும், தம் இலக்கு எதுவென்று உணரக்கூட நேரமின்றி ஓடுகிறான். மேலை நாட்டு ஆண்களுக்கு, இம்மாதிரி இலக்கின்றி ஓடும் நிலையில்லை. அதனால் தான், அங்கிருக்கும் ஆண்களால் - காதல் உணர்வை - எளிதில் செயல்வடிவில் வெளிப்படுத்த முடிகிறது. நம்முடைய சூழலில், பிள்ளைகளை வளர்த்து, அவர்கள் மூலம் - பெயரன்/பெயர்த்தியைப் பார்த்து மகிழ்ந்த பின்னர் தான் - ஒரு ஆணுக்கு, வாழ்க்கையின் முழுமையை உணரும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தான், அவனால் இயல்பான விடயங்களில்/நிகழ்வுகளில் கவனம் செலுத்தமுடியவில்லை. ஆனால், திருமணமாகிக் குழந்தைப் பிறந்தவுடனேயே; ஒரு பெண்ணால் வாழ்கை முழுமையடைந்ததாய் உணரமுடிகிறது.

       எனவே, குடும்பத் தேவைகள் பூர்த்தியான பின், வயதான காலத்தில் தான் - ஆண்களுக்கு, அடிமனதில் ஆழ்ந்து புதைந்திருந்த காதல் சார்ந்த உணர்வுகள் மேலெழ ஆரம்பித்து, ஒரு ஆணால் காதலை மையப்படுத்திப் பார்க்க முடிகிறது! அதை எதிர்பார்த்து/எதிர்பார்த்து மனதால் சோர்ந்துபோன பெண்ணால், அவனின் உணர்வை ஏற்கும் சூழலில், அப்போது இருக்க முடிவதில்லை. எனவேதான், வயதான ஆண்கள் பலரும் பின்வரும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்கள்: "1. கிழத்துக்கு, இப்பத்தான் பாசம் பொங்குதாக்கும்?; 2. இத்தனை வருசத்துல, ஒருதடவையாவது இவ்வளவு அன்பா இருந்திருக்கியா யா?; 3. மீசை நரைத்தாலும், கிழத்துக்கு ஆசை மறையவில்லை; 4. வேலைவெட்டி இல்லாம, வீட்டிலேயே இருந்தால்; இப்படியெல்லாம் தான் சிந்தனை வரும்!". இதில் மிக-முக்கியமானது, 4-ஆவது தான்; அதில் மறைந்திருக்கும் உண்மை - "வேலைப்பளு அதிகம்" இருந்ததால் தான் - இளமைக்கு காலத்தில், ஆண்களால்...

    காதல் உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை என்பதே! அதை ஒரு பெண் இரண்டு காலக்கட்டத்திலும் புரிந்து கொள்ளாதாது தான், ஒரு ஆணின் உச்சபட்ச துரதிஷ்ட்டம். போதாக்குறைக்கு, பிள்ளைகளும் வயதான  ஆணை உதாசீனப் படுத்துவதும் நிகழும். பிள்ளைகள் விரட்ட/விரட்ட, மனைவியிடம் ஓடுவான்; "முன் செய்ததன் வினைபோல்" மனைவியும் உதாசீனப்படுத்த - என்ன செய்வது? என்று குழம்பும்போது - "நீ ஆம்பளைடா!" - என்று உள்ளும்/புறமும்(சமூகம்) - குரல் ஒலிக்கும்! அந்த "வறட்டு"கெளவரம்" கடந்து, காதல் உணர்வு மீண்டு(ம்) வரும்; மீண்டும், மனைவியைத் தேடும் - மீண்டும் "ஆம்பளைடா!" குரல். இப்படியே - ஒரு பந்து போல் தான் - பல ஆண்களின் வாழ்க்கை அமைகிறது! அவனின் சூழலும்/உணர்வும் புரியாமல்; அது "ஆண் திமிர்" என்றே வெளியுலகத்தால் பார்க்கப்படுகிறது. தன் இயலாமை மற்றும் ஆற்றாமை காரணமாய; ஆணும், "ஆண் திமிர் தான் டா!" எனும் மாயப் போர்வையில் ஒளிந்துகொள்கிறான்.

இந்த அலசல் இன்னும் முழுமை அடைந்தாய் தோன்றவில்லை! எனவே...

தொடரும்!!!

குறள் எண்: 0426 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0426}

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவ தறிவு

விழியப்பன் விளக்கம்: உலகில், வாழ்வியல் எவ்வாறு நிகழ்கிறதோ; அவ்வகையில், உலகுடன் ஒன்றி வாழ்வியலை நிகழ்த்துவதே - அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
சமூகத்தில், மக்களின் தேவை எதுவோ; அதையொத்து, அத்தேவையை உணர்ந்துத் திட்டங்களை வகுப்பதே - மக்களாட்சி ஆகும்.