ஞாயிறு, ஜனவரி 31, 2016

குறள் எண்: 0182 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0182}

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை

விழியப்பன் விளக்கம்: ஒருவரைப் பழித்து புறம் பேசிவிட்டு, நேரில் பொய்யாக நகைத்துப் பேசுவது; அறநெறிகளை அழித்து, பாவச்செயல்களை செய்தலை விட தீமையானது.
(அது போல்...)
மக்களைப் பற்றிய அக்கறையை விலக்கிவிட்டு, பிரச்சாரத்தில் பொய்யாக வாக்குறுதி கொடுப்பது; உயிர்களைக் கொன்று, பாவங்களைச் சேர்ப்பதை விட ஆபத்தானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஜனவரி 30, 2016

குறள் எண்: 0181 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0181}

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

விழியப்பன் விளக்கம்: அறத்தை எடுத்துரைக்காமல், அறமல்லவற்றை செய்பவரே ஆயினும்; மற்றவரைப் புறம் பேசமாட்டார் எனும் நேர்மை, அவருக்கு நன்மையளிக்கும்.
(அது போல்...)
உறவுகளை மதிக்காமல், சரியில்லாதவற்றை செய்பவரே ஆயினும்; பெற்றோரை கைவிட மாட்டார் எனும் சிறப்பு, அவரை உயர்ந்தவராக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஜனவரி 29, 2016

அதிகாரம் 018: வெஃகாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 018 - வெஃகாமை

0171.  நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
           குற்றமும் ஆங்கே தரும்

           விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையின்றி, பிறர் அறவழியில் சேர்த்ததை அபகரித்தால்; நம் 
           குடும்பம் அழிவதோடு, குடும்பத்தில் குற்றச்செயல்களையும் விளைவிக்கும்.
(அது போல்...)
           அரசியல்-நெறியின்றி, மக்களின் கலாச்சாரத்தில் கலந்ததை சீர்குலைத்தால்; அக்கட்சி
           அழிவதோடு, அக்கட்சியில் தீவினைகளையும் அதிகரிக்கும்.

0172.  படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
           நடுவன்மை நாணு பவர்
  
           விழியப்பன் விளக்கம்: நடுநிலையற்ற செயல்களை, அவமானமாய் கருதுபவர்; பயன் 
           தருவதே ஆயினும், மற்றவர் பொருளை அபகரிக்கும் பாவச்செயல்களைச் செய்யார்.
(அது போல்...)
           மனிதமற்ற மனிதர்களை, தீமையாய் எண்ணுவோர்; உயர்பதவி அளிப்பதே ஆயினும், 
           சாமானியர்களின் வாழ்வியலைக் கெடுக்கும் தீவிரவாதங்களைத் தவிர்ப்பர்.

0173.  சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
           மற்றின்பம் வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: பேரின்பத்தின் மகிமையை உணர்ந்து, அதனை வேண்டுவோர்; 
           சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாதவற்றை செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
           விவசாயத்தின் மதிப்பை அறிந்து, அதனை நேசிப்போர்; பணத்தை விரும்பி, விவசாய 
           நிலங்களை விற்கமாட்டார்கள்.

0174.  இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 
           புன்மையில் காட்சி யவர்

           விழியப்பன் விளக்கம்: புலன்களை வென்று, குற்றங்களைக் களைந்த தேடலுடையவர்; 
           தன்னிடம் இல்லையென்று, மற்றவரின் பொருள்மேல் மோகம் கொள்ளமாட்டார்.
(அது போல்...)
           ஆசைகளை அடக்கி, ஊழல்களை ஒழித்த கடமையவர்; தன்னுரிமை உயர்ந்ததென்று, 
           மற்றவரின் உரிமைமேல் ஆதிக்கம் செலுத்தமாட்டார்.
          
0175.  அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
           வெஃகி வெறிய செயின்

           விழியப்பன் விளக்கம்: நன்கு தெளிந்த, விரிந்த பகுத்தறிவு இருந்தும்; ஒருவர் அறிவற்ற 
           வகையில் நடந்து, மற்றவரின் பொருளை அபகரிப்பாராயின்  - அதனால்  என்ன பயன்?
(அது போல்...)
           உலகமே அங்கீகரித்த, சிறந்த திறமை இருப்பினும்; ஒருவர் மனிதமற்ற வகையில் பேசி, 
           பிறரின் சுயத்தை சிதைப்பாராயின் - அதனால்  என்ன தனித்துவம்?

0176.  அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
           பொல்லாத சூழக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: அருளை விரும்பி, அறநெறியில் பயணிப்பவரே ஆயினும்; பிறரின் 
           உடைமைகளை அபகரிக்க எண்ணினால், கெட்டழிவர்.
(அது போல்...)
           மேன்மையை அடைய, வாய்மையைக் கடைபிடிப்பவரே ஆயினும்; பிறரின் பொய்களை 
           ஆதரிக்க முனைந்தால், தடம்புரள்வர்.

0177.  வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
           மாண்டற் கரிதாம் பயன்

           விழியப்பன் விளக்கம்: பிறர்க்குரிய செல்வத்தை அபகரிப்பதால், விளையும் வினைப்பயன்; 
           நன்மையானதாய்  இருப்பது அரிது என்பதால், அதை மறுத்திடவேண்டும்.
(அது போல்...)
           விலங்குகளுக்குரிய காட்டை அழிப்பதால், உருவாகும் எதிர்விளைவு; பாதுகாப்பானதாய் 
           இருப்பது கடினம் என்பதால், அதை கைவிடவேண்டும்.

0178.  அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
           வேண்டும் பிறன்கைப் பொருள்

           விழியப்பன் விளக்கம்:  பிறருடைய செல்வத்தை, அபகரிக்க முயலாத நல்லெண்ணமே; 
           நம்முடைய செல்வம், குறையாமல் இருப்பதற்கான காரணி ஆகும்.
(அது போல்...)
           பிறரின் தேடலை, வணிகமாக்க எண்ணாத நல்லொழுக்கமே; நம்முடைய தேடல், 
           தடம்புரளாமல் பயணிப்பதற்கு தேவையானது ஆகும்.

0179.  அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
           திறன்அறிந் தாங்கே திரு

           விழியப்பன் விளக்கம்: அறத்தை உணர்ந்து, பிறர் பொருளை அபகரிக்காத 
           பகுத்தறிந்தவரிடம்;  அவரின் தகுதியை கண்டறிந்து, திருமகள் எனும் செல்வம் சேரும்.
(அது போல்...)
           வாழ்வியலைப் புரிந்து, பிறரின் மதத்தை அவமதிக்காத  சான்றோரிடம்; அவரின் 
           நற்குணத்தை பாராட்டி, மனிதம் எனும் மேன்மை சேரும்.

0180.  இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
           வேண்டாமை என்னுஞ் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: விளைவுகளை எண்ணாமல், பிறர் பொருளை அபகரிக்க நினைப்பது 
           அழிவைத் தரும்; அதை வேண்டாத திண்ணமான எண்ணம், வெற்றியைத் தரும்.
(அது போல்...)
           விளைவுகளை உணராமல், விவசாய நிலங்களை அழிக்க முனைவது பஞ்சத்தை 
           உருவாக்கும்; அதை தடுக்கும் உறுதியான செயல், வாழ்வியலை உயர்த்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0180 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0180}

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
வேண்டாமை என்னுஞ் செருக்கு

விழியப்பன் விளக்கம்: விளைவுகளை எண்ணாமல், பிறர் பொருளை அபகரிக்க நினைப்பது அழிவைத் தரும்; அதை வேண்டாத திண்ணமான எண்ணம், வெற்றியைத் தரும்.
(அது போல்...)
விளைவுகளை உணராமல், விவசாய நிலங்களை அழிக்க முனைவது பஞ்சத்தை உருவாக்கும்; அதை தடுக்கும் உறுதியான செயல், வாழ்வியலை உயர்த்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஜனவரி 28, 2016

குறள் எண்: 0179 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0179}

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
திறன்அறிந் தாங்கே திரு

விழியப்பன் விளக்கம்: அறத்தை உணர்ந்து, பிறர் பொருளை அபகரிக்காத பகுத்தறிந்தவரிடம்;  அவரின் தகுதியை கண்டறிந்து, திருமகள் எனும் செல்வம் சேரும்.
(அது போல்...)
வாழ்வியலைப் புரிந்து, பிறரின் மதத்தை அவமதிக்காத  சான்றோரிடம்; அவரின் நற்குணத்தை பாராட்டி, மனிதம் எனும் மேன்மை சேரும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஜனவரி 27, 2016

குறள் எண்: 0178 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0178}

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்

விழியப்பன் விளக்கம்: பிறருடைய செல்வத்தை, அபகரிக்க முயலாத நல்லெண்ணமே; நம்முடைய செல்வம், குறையாமல் இருப்பதற்கான காரணி ஆகும்.
(அது போல்...)
பிறரின் தேடலை, வணிகமாக்க எண்ணாத நல்லொழுக்கமே; நம்முடைய தேடல், தடம்புரளாமல் பயணிப்பதற்கு தேவையானது ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஜனவரி 26, 2016

குறள் எண்: 0177 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0177}

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன்

விழியப்பன் விளக்கம்: பிறர்க்குரிய செல்வத்தை அபகரிப்பதால், விளையும் வினைப்பயன்; நன்மையானதாய்  இருப்பது அரிது என்பதால், அதை மறுத்திடவேண்டும்.
(அது போல்...)
விலங்குகளுக்குரிய காட்டை அழிப்பதால், உருவாகும் எதிர்விளைவு; பாதுகாப்பானதாய் இருப்பது கடினம் என்பதால், அதை கைவிடவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஜனவரி 25, 2016

குறள் எண்: 0176 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0176}

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
பொல்லாத சூழக் கெடும்

விழியப்பன் விளக்கம்: அருளை விரும்பி, அறநெறியில் பயணிப்பவரே ஆயினும்; பிறரின் உடைமைகளை அபகரிக்க எண்ணினால், கெட்டழிவர்.
(அது போல்...)
மேன்மையை அடைய, வாய்மையைக் கடைபிடிப்பவரே ஆயினும்; பிறரின் பொய்களை ஆதரிக்க முனைந்தால், தடம்புரள்வர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஜனவரி 24, 2016

குறள் எண்: 0175 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0175}

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின்

விழியப்பன் விளக்கம்: நன்கு தெளிந்த, விரிந்த பகுத்தறிவு இருந்தும்; ஒருவர் அறிவற்ற வகையில் நடந்து, மற்றவரின் பொருளை அபகரிப்பாராயின்  - அதனால்  என்ன பயன்?
(அது போல்...)
உலகமே அங்கீகரித்த, சிறந்த திறமை இருப்பினும்; ஒருவர் மனிதமற்ற வகையில் பேசி, பிறரின் சுயத்தை சிதைப்பாராயின் - அதனால்  என்ன தனித்துவம்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஜனவரி 23, 2016

குறள் எண்: 0174 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0174}

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 
புன்மையில் காட்சி யவர்

விழியப்பன் விளக்கம்: புலன்களை வென்று, குற்றங்களைக் களைந்த தேடலுடையவர்; தன்னிடம் இல்லையென்று, மற்றவரின் பொருள்மேல் மோகம் கொள்ளமாட்டார்.
(அது போல்...)
ஆசைகளை அடக்கி, ஊழல்களை ஒழித்த கடமையவர்; தன்னுரிமை உயர்ந்ததென்று, மற்றவரின் உரிமைமேல் ஆதிக்கம் செலுத்தமாட்டார்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஜனவரி 22, 2016

குறள் எண்: 0173 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0173}

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: பேரின்பத்தின் மகிமையை உணர்ந்து, அதனை வேண்டுவோர்; சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாதவற்றை செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
விவசாயத்தின் மதிப்பை அறிந்து, அதனை நேசிப்போர்; பணத்தை விரும்பி, விவசாய நிலங்களை விற்கமாட்டார்கள்.

வியாழன், ஜனவரி 21, 2016

குறள் எண்: 0172 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0172}

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர்

விழியப்பன் விளக்கம்: நடுநிலையற்ற செயல்களை, அவமானமாய் கருதுபவர்; பயன் தருவதே ஆயினும், மற்றவர் பொருளை அபகரிக்கும் பாவச்செயல்களைச் செய்யார்.
(அது போல்...)
மனிதமற்ற மனிதர்களை, தீமையாய் எண்ணுவோர்; உயர்பதவி அளிப்பதே ஆயினும், சாமானியர்களின் வாழ்வியலைக் கெடுக்கும் தீவிரவாதங்களைத் தவிர்ப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஜனவரி 20, 2016

குறள் எண்: 0171 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0171}

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும்

விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையின்றி, பிறர் அறவழியில் சேர்த்ததை அபகரித்தால்; நம் குடும்பம் அழிவதோடு, குடும்பத்தில் குற்றச்செயல்களையும் விளைவிக்கும்.
(அது போல்...)
அரசியல்-நெறியின்றி, மக்களின் கலாச்சாரத்தில் கலந்ததை சீர்குலைத்தால்; அக்கட்சி  அழிவதோடு, அக்கட்சியில் தீவினைகளையும் அதிகரிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஜனவரி 19, 2016

அதிகாரம் 017: அழுக்காறாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 017 - அழுக்காறாமை

0161.  ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
           அழுக்காறு இலாத இயல்பு

           விழியப்பன் விளக்கம்: தன் நெஞ்சத்தில் வஞ்சம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாத 
           தன்மையையே; ஒருவர் ஒழுக்கத்தின் நெறியாக உணரவேண்டும்.
(அது போல்...)
           தன் செயல்களில் ஊழல் போன்ற அறமற்ற காரணிகள் இல்லாத சுயத்தையே; ஒருவர் 
           தலைமையின் முதன்மையாய் பழகவேண்டும்.

0162.  விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
           அழுக்காற்றின் அன்மை பெறின்

           விழியப்பன் விளக்கம்: பிறர் உடைமைகளில் பொறாமைப்படும், தீய எண்ணத்திலிருந்து 
           விலகியிருக்கும் தன்மையிருப்பின்; அதற்கிணையான பேறு ஏமில்லை.
(அது போல்...)
           பிறர் நம்பிக்கையை அவமதிக்கும், நெறியற்ற செயலிலிருந்து விடுபடும் முனைப்பிருப்பின்; 
           அதையொத்த ம(னி/த)ம் ஏதுமில்லை.

0163.  அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
           பேணாது அழுக்கறுப் பான்

           விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையால் விளையும் பேறுகளை வேண்டாமென்பவர்; 
           பிறரின் பேறுகளைக் கண்டு மகிழாது, பொறாமை கொள்வர்.
(அது போல்...)
           மனிதத்தால் உருவாகும் நன்மைகளை உணராதவர்; பிறரின் நன்மைகளை வியந்து 
           பாராட்டாமல், புரளி பேசுவர்.

0164.  அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
           ஏதம் படுபாக்கு அறிந்து

           விழியப்பன் விளக்கம்: தீய-எண்ணங்கள் விளைவிக்கும், துன்பங்களை நன்குணர்ந்தோர்;  
           பொறாமையின் வெளிப்பாடாய், அறமற்ற செயல்களை செய்யாமாட்டார்கள்.
(அது போல்...)
           தியானம் உயிர்ப்பிக்கும், அமைதியை ஆழ-அனுபவித்தோர்; உணர்ச்சி மிகுதியால், 
           தரம்குறைந்த வார்த்தைகளை பேசமாட்டார்கள்.
          
0165.  அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
           வழுக்காயும் கேடீன் பது

           விழியப்பன் விளக்கம்: பொறாமை உடையோர்க்கு, அதுவொன்றே போதுமானது; பகைவர் 
           செய்யத் தவறிய தீமையையும், அப்பொறாமையே செய்துவிடும்.
(அது போல்...)
           புரளி பேசுவோர்க்கு, அதுவொன்றே போதுமானது; மற்றவர் சிதைக்க மறந்த 
           அமைதியையும், அப்புரளியே குலைத்துவிடும்.

0166.  கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
           உண்பதூஉம் இன்றிக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்து, பொறாமைப்படுபவர்
           மட்டுமல்ல; அவரைச் சார்ந்தோரும், உடையும்/உணவும் இன்றி தவிப்பர்.
(அது போல்...)
           பிறரின் நிறையைப் புரளியாய், விமர்சிப்பவர் மட்டுமல்ல; அப்புரளியில் பங்கேற்போரும்,
           நித்திரையும்/நிம்மதியும் இன்றி உழல்வர்.

0167.  அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
           தவ்வையைக் காட்டி விடும்

           விழியப்பன் விளக்கம்: பிறர்மேல் பொறாமை கொள்வோரை வெறுத்து; தன் தமக்கை 
           மூதேவியை சேர்த்துவிட்டு, திருமகள் விலகிவிடுவாள்.
(அது போல்...)
           பிறர் நம்பிக்கையை விமர்சிப்போரை புறக்கணித்து; மனிதகுலத்தின் ஆதியான மிருக-
           தன்மையை விட்டுவிட்டு, மனிதம் விலகிவிடும்.

0168.  அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
           தீயுழி உய்த்து விடும்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை எனப்படும் இணையற்ற தீயொழுக்கம்; எல்லாச் 
           செல்வங்களையும் அழித்து, ஒருவரை நரகத்தில் சேர்க்கும்.
(அது போல்...)
           நேர-விரயம் எனப்படும் முறையற்ற தீப்பழக்கம்; எல்லாத் திறமைகளையும் மறைத்து, 
           ஒருவரை வாழ்வியலில் தாழ்த்தும்.

0169.  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
           கேடும் நினைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை குணம் கொண்டோரின் உயர்வு மற்றும் 
           பொறாமையின்றி உண்மையாய் இருப்போரின் தாழ்வு - இரண்டும் ஆய்வுக்கு உட்படும்.
(அது போல்...)
           ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் வெற்றி மற்றும் ஊழலற்ற நேர்மையான 
           அரசியல்வாதிகளின் தோல்வி - இரண்டும் பரிசீலனைக்கு உள்ளாகும்.

0170.  அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
           பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை கொண்டோர், வளம் பெருகி உயர்ந்ததும் இல்லை; 
           பொறாமை இல்லாதோர், வளம் குன்றி தாழ்ந்ததும் இல்லை.
(அது போல்...)
           சோம்பல் இருப்போர், வலிமை மிகுந்து சாதித்ததும் இல்லை; சோம்பல் இல்லாதோர், 
           வலிமை இழந்து தோற்றதும் இல்லை.

குறள் எண்: 0170 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0170}

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

விழியப்பன் விளக்கம்: பொறாமை கொண்டோர், வளம் பெருகி உயர்ந்ததும் இல்லை; பொறாமை இல்லாதோர், வளம் குன்றி தாழ்ந்ததும் இல்லை.
(அது போல்...)
சோம்பல் இருப்போர், வலிமை மிகுந்து சாதித்ததும் இல்லை; சோம்பல் இல்லாதோர், வலிமை இழந்து தோற்றதும் இல்லை.

திங்கள், ஜனவரி 18, 2016

குறள் எண்: 0169 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0169}

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும்

விழியப்பன் விளக்கம்: பொறாமை குணம் கொண்டோரின் உயர்வு மற்றும் பொறாமையின்றி உண்மையாய் இருப்போரின் தாழ்வு - இரண்டும் ஆய்வுக்கு உட்படும்.
(அது போல்...)
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் வெற்றி மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசியல்வாதிகளின் தோல்வி - இரண்டும் நீதிக்கு உள்ளாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

தேடலும் புரிதலும்...


ஆன்மாவும் மின்சாரமும்...

  
{என் மனதில் ஆழ்ந்திருந்த விசயங்களைத் தூண்டிய
என் நண்பன் பாரத்துக்கு சமர்ப்பணம்}

          நேற்றிரவு வாட்ஸ்-ஆப் குழுவொன்றில் பாரத் என்ற நண்பன் ஒரு கேள்வியை கேட்டிருந்தான். "எழுத்திச்சித்தர்" பாலகுமாரனின் படைப்பான "கங்கை கொண்ட சோழபுரம்" சார்ந்த இராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்கு கதையாய் சொல்லும் மகத்தான பணியை, சிறப்பாய் செய்துகொண்டிருக்கிறான். இடையிடையே, எங்கள் சிந்தனையை தூண்டும் வண்ணம் சில கேள்விகளைக் கேட்பான்; நாங்களும் அதை விவாதிப்போம். அதுபோன்றே, நேற்றும் பாலகுமாரனின் படைப்பிலிருந்து சில வரிகளை நகலாய் அனுப்பி, அது சார்ந்த புரிதலைப் பகிருமாறு சொன்னான். அதில் "மனம் வேறு; உயிர் வேறா?" என்ற ஓர் கேள்வி இருந்தது. நான் - மனமும், "உயிர் என்கிற ஆன்மாவும்" வெவ்வேறானவை - என்று சொல்லி இருந்தேன். உயிரும், ஆன்மாவும் வேறு வேறென்கிற குழப்பமும் இங்குண்டு என்பதால் தான் "உயிர் என்கிற ஆன்மா" என்றேன். ஒரு சில குழுவினர் "மாயை" வார்த்தைகளால் நம்மைக் கட்டுப்படுத்த... 

      "ஆன்மா! ஆன்மா" என்று உரக்கப் பேசி; அதையும் புரியாமல் பேசி நம்மை குழப்பி விடுவர். அதனால் தான், இப்படி சொல்கிறேன். பின்வரும் பகுதிகளில், இவையிரண்டும் ஒன்றே என்ற பொருளில் "ஆன்மா" என்றே குறிப்பிட விழைகிறேன். என்னைப் போன்ற சாதாரணனும் ஆன்மா என்று சொல்ல பழகவேண்டும் என்பதால்தான் இம்முடிவு. தொடர்ந்த விவாதததின் போது...
 • ஆன்மா/உயிர் = மின்சாரம் (Electricity)
 • உடல் = வீடு/அறை (House/Room)
 • நரம்புகள் = மின்கடத்தும் கம்பிகள் (Conducting cables)
 • உயிரணுக்கள் = மின்னணுக்கள் (Electrons)
 • மனம் = மின்சாரத்தின் "மாற்றப்பட்ட சக்தியின்" விளைவு (Effect of the converted electrical energy - மின்விளக்கின் வெளிச்சம்/மின்விசிறியின் காற்றின் வேகம்/மின்னியந்திரத்தின் இயக்கு-வேகம் போன்று!)
என்று வரையறுத்து...
 1. திடீரென்று மின்சாரமே இல்லையென்றானால், மின்சாரம் சார்ந்த மற்ற பொருட்கள் பொருளற்று போகுமல்லவா? அதுபோலவே, ஆன்மாவற்ற உடலும்; உடல் சார்ந்த மற்றவைகளும் கூட பொருளற்று போகும்!
 2. மின்சாரம் இருந்தும் கூட, பல்வேறு காரணங்களுக்காய், மின்சாரம் சார்ந்த மற்ற பொருட்கள் பொருளற்று போகக்கூடும். அதுபோலவே, ஆன்மா இருந்தும், உடலின் மற்ற உடல் சார்ந்த காரணிகள் பொருளற்றுப் போகக்கூடும் {உதாரனங்கள்: "நினைவிழத்தல் (coma) போன்ற நோய்கள் மற்றும் உடல் சார்ந்த குறைபாடுகள்}.
 3. மின்சாரத்தால் விளையும் - மின்விளக்கின்-வெளிச்சம்/மின்விசிறியின்-காற்றின் வேகம்/இயந்திரத்தின்-இயக்குவேகம் - இவையாவும் ஒவ்வொரு தனிப்பொருளின் திறனைப் பொறுத்தது. அதுபோல், மனதால்(சிந்தனையால்) விளையும் புரிதல்கள்/தேடல்கள்/உணர்வுகள் போன்றவையும் ஒவ்வொரு தனி-ஆன்மாவின் (தனிமனிதனை) புரிதலைப் பொறுத்தது. 
    எனவே, ஒவ்வொருவரின் புரிதலும் ஒவ்வொருவரின் சிந்தனையைப் பொறுத்தது என்றேன். எப்போதும் போல், பாரத் அதை வெகுவாய் பாராட்டினான். அவன் பேசிய விதம் அவனுக்குப் பல புரிதல்களை உணர்த்தியதை உறுதி செய்தது. அதை மேலும் தெளிவாய்/விரிவாய் இப்பதிவின் மூலம், இங்கே, என் வலைப்பதிவில் சொல்லவேண்டும் என்று தோன்றியது. இங்கே ஒரு வீடு/அறை என்பதை மனித உடல் என்றும்; மின்சாரம் என்பதை  ஆன்மாவாகவும்(உயிராகவும்); மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளை, நரம்புகள் மற்றும் உடலுறுப்புகள் (இரத்த குழாய்கள்) எனவும்; மின்கடத்தியில் உள்ள மின்னணுக்களை, நரம்பில்/உடலுறுப்பில் உள்ள உயிரணுக்கள் என்றும் கொள்வோம். இறுதியாய், மின்சாரத்தால் விளையும் மின்விளக்கு-வெளிச்சம்/மின்விசிறியின்-காற்று/மின்னியந்திரந்தின்-இயங்குதிறன் போன்றவை - சிந்தனை(யி/யா)ல் (மனதில்) விளையும் புரிதல்கள்/தேடல்கள்/உணர்வுகள் என்று கொள்வோம்.

    மேற்கூறிய வண்ணம் யோசித்தால் - மனம் என்பதும், ஆன்மா என்பதும் என்னவென்று திண்ணமாய் புரியும். இரண்டும் வெவ்வேறு என்பது மட்டுமல்ல; மற்ற பல விசயங்களும் புரியும். இருப்பினும், ஒரு விசயத்தை விவரித்து சொல்ல விரும்புகிறேன். மூளைச்சாவு பற்றி நமக்கு தெரியும். அது என்ன மூளை மட்டும் சாவது? இது "மெயின் ஃபியூஸ்" பழுதாவது போல!; ஒரு வாகனத்தின் "இயந்திரம்(எஞ்சின்) பழுதாவது போல! மெயின் பியூஸ்/இயந்திரம் பழுதானால்; வேறு ஃபியூஸ்/எந்திரம் வேண்டும். வேறு மாற்றே இல்லையெனில், இருக்கும் மற்ற பொருட்களை வேறு உபயோகததிற்கு தான் பயன்படுத்தவேண்டும். அதுபோலத்தான், மூளைச்சாவு அடைந்தவரின் உடல்-உறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகமாகிறது. விளக்கே எரியாத ஒரு வீடு இருண்ட-வீடாகி பின் பாழடைந்த வீடாகிறது - உயிரற்ற உடல் அழுகுவது போல். அதுபோலவே, இயந்திரமே இல்லாத ஒரு வாகனத்தின் நிலையும். தொடர்ந்த விவாதத்தின் போது...

          இறுதிக்கேள்வியாய்  "கருவுற்ற போது சதைப்பிண்டமாய் இருந்த நமக்கு; உயிரை-ஊட்டுவது இயற்கையா? அல்லது அறிவியலா?" என்றோர் அற்புதமான கேள்வியைக் கேட்டான், பாரத். இந்த "இயற்கையா(இறைவனா)? அறிவியலா??" என்ற கேள்வி ஒரு பேரரசியல்! இது அரசியல் என்பது கூட புரியாத அளவில் இந்த கேள்வி நம்முள் ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான்,  பெரும்பான்மையில்... ஆன்மீகம் பற்றி பேசும்போது, அறிவியலை "விலக்கி வைக்க" சொல்லப்படுகிறது. இயற்கை (அல்லது) இறைவன் என்கிற மெய்ஞானமாகட்டும்; அறிவியல் எனும் விஞ்ஞானமாகட்டும் - இரண்டுக்கும் ஓர் அடிப்படை தான் - காரணம் தேடுவது. புரியாத மொழியில் (அல்லது) வார்த்தைகளில்/நமக்கு புரியவே கூடாது எனும் அடிப்படையில் - ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு "இதுதான் காரணம்! இதை நம்பவேண்டும்!" என்று கண்டிப்புடன் சொல்வது மெய்ஞானம். இங்கே காரணம் "வெறுமனே" கற்பிக்கப்படும்; ஆனால் காரணம்...

   ஆதாரத்துடன் விளக்கப்படாது. இந்த காரணம்-கற்பித்தலைத் தாண்டி உண்மையை ஆதாரத்துடன் அறிய முற்படுவது (அறிவு-இயல்) தான் விஞ்ஞானம். மெய்ஞானத்தில் இருக்கும் உண்மைகளை ஏற்க, எந்த விஞ்ஞானமும் என்றுமே தயங்குவதில்லை. ஆனால், விஞ்ஞானத்தால் மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கூட; எல்லா மெய்ஞானமும் ஏற்பதில்லை. இதைப் புரிந்துகொண்டால், அந்த இறுதிக் கேள்விக்கான விடையை சரியாய் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் தான் இந்த முன்விளக்கத்தைக் கொடுக்கிறேன். ஆன்மா எனும் உயிர் எப்படி பிரிகிறது? என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆன்மாவை உயிர்பித்திருக்க வைக்க தேவைப்படுவது "ஆக்சிஜன்" என்பதும் நமக்கு தெரியும். "சையனைடு" எனும் கொடிய நச்சை உண்டவுடன் அது முதலில் "ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும்" உயிரணுக்களைக் கொன்றுவிடுவதாக அறிவியல் சொல்கிறது. இது வெகுவிரைவில் நடைபெறுவதால் ஆக்சிஜன் எடுத்து செல்லும்... 

         தொடர்செயல் உடனடியாய் நிற்கிறது; அதாவது, "ஸ்விட்சை" நிறுத்தியதும்  மின்சாரத்தால் இயக்கப்படுபவை உடனடியாய் நிற்பது போல். எனவே, ஆன்மாவும் உடனடியாய் உடலை விட்டு பிரிகிறது. கருவில் சதைப்பிண்டமாய் இருக்கும் ஒன்றை உயிர்ப்பிப்பதற்கும் இந்த "ஆக்ஸிஜனே" அடிப்படை! அதாவது, ஆக்சிஜன் எடுத்து செல்வது துவக்கி வைக்கப்படும்போது, ஆன்மா உயிர்ப்பிக்கப் படுகிறது. அதாவது "ஸ்விட்சை" தட்டியதும் மின்சாரத்தால் இயக்கப்படுபவை செயல்படுவது போல்! இந்த ஆன்மாவை உயிர்ப்பித்தல் "தொப்பூழ் கொடி"யால் நடக்கிறது என்பதை அறிவியலும் சொல்கிறது; நாமும், சர்வ சாதாரணமாய் தாயைப் பற்றி பேசும்போது சொல்கிறோம். ஆன்மாவுக்கு ஆக்சிஜன் அடிப்படை என்பதை "சிவாஜி திரைப்படத்தில்" வரும் ஒரு காட்சியில், இறந்த சில நிமிடங்களான ஒருவரை உயிர்ப்பிக்கும் காட்சியில் அருமையாய் விளக்கி இருப்பர். அதுபோன்றவற்றின் அடிப்படையில் யோசித்தால், இதைப் புரிந்துகொள்வது...

          அத்தனை கடினமாய் இருக்காது! இப்போது, எல்லோருக்கும் "அப்படியானால், இறந்தவரை உயிர்ப்பிப்பது ஏன் சாத்தியமாவில்லை? அல்லது நாமே ஏன் ஒரு உயிரை ஏன் உருவாக்க முடியவில்லை?!" என்ற கேள்வி எழும்; எனக்குள்ளும் எழுகிறது. இங்கே தான் "இயற்கை (அல்லது) இறைவன்" என்பது, மிகப்பெரிய உயர்-சக்தியாய் பார்க்கப்படுகிறது. இந்த உயர்சக்தியின் மேல், அறிவியல் கற்பிக்கும் விஞ்ஞானத்துக்கும் எந்த சந்தேகமும் இல்லை! இதை அறிவியலால் வெல்ல முடியுமா?! - என்றால்; எனக்கு நிச்சயமாய் தெரியவில்லை! ஆனால், அப்படி ஒன்று நிகழக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படியே, எவரேனும் ஒரு விஞ்ஞானி இதை நிகழ்த்தினாலும், அவர் அதை வெளியுலகுக்கு சொல்லக்கூடாது என்பது என் பார்வை. தொழில்-நுட்பங்களாலும், மனிதனுக்கு இருக்கும் 6-ஆவது அறிவாலும் - ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநியாயங்களே ஏராளம்! நாமே ஒரு ஆன்மாவை உயிர்பிக்கும் சக்தி கிடைத்தால்...

        நிச்சயம் இவ்வுலகை அழிக்கும் வரை - மனித இனம் ஓயாது! அதற்காகவாவது "இயற்கை அல்லது இறைவன்" எனும் உயர்சக்தி; எந்த காலத்துக்கும் இதை மனிதன் புரிந்துகொள்வதை அனுமதிக்காது என்றே தோன்றுகிறது; அல்லது அப்படி அனுமதிக்கப்படக்கூடாது என்று நான் விரும்புகிறேன். மனிதன் "அறிவியல் எனும் விஞ்ஞானத்தால்" இதுவரை நிரூபித்தவைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முயன்றாலே போதும்; வாழ்வியல் மிகச் சிறப்பாய் அமையும். எனவே "உயிர் எப்படி உருவாகிறது (அல்லது) இறந்தவரை எப்படி உயிர்ப்பிப்பது?" போன்றவற்றை "விஞ்ஞானம் மட்டுமல்ல! மெய்ஞானம் கூட" புரிந்து கொள்ளாமல் இருப்பதே மனித குலத்திற்கு உன்னதமானதாய் நான் பார்க்கிறேன். இது மட்டும் புரிந்துவிட்டால், மனிதன் "இயற்கை அல்லது இறைவன்" என்று உயர்சக்தியை முழுவதுமாய் வென்றுவிடவே முயல்வான். அதனால், எவருக்கும் எந்த பயனும் இல்லாமல் - எல்லோரின் அழிவிற்கே அது உபயோகமாகும். எனவே... 

ஆன்மாவை - உருவாக்கவும்/உயிர்ப்பிக்கவும் - மனிதனுக்கு தெரியாமலேயே இருக்கட்டும்!!! 

ஞாயிறு, ஜனவரி 17, 2016

குறள் எண்: 0168 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0168}

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும்

விழியப்பன் விளக்கம்: பொறாமை எனப்படும் இணையற்ற தீயொழுக்கம்; எல்லாச் செல்வங்களையும் அழித்து, ஒருவரை நரகத்தில் சேர்க்கும்.
(அது போல்...)
நேர-விரயம் எனப்படும் முறையற்ற தீப்பழக்கம்; எல்லாத் திறமைகளையும் மறைத்து, ஒருவரை வாழ்வியலில் தாழ்த்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

தொழிற்பண்பட்டவர் போன்ற நட்பு...


சனி, ஜனவரி 16, 2016

காமம் என்பது...


குறள் எண்: 0167 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0167}

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்

விழியப்பன் விளக்கம்: பிறர்மேல் பொறாமை கொள்வோரை வெறுத்து; தன் தமக்கை மூதேவியை சேர்த்துவிட்டு, திருமகள் விலகிவிடுவாள்.
(அது போல்...)
பிறர் நம்பிக்கையை விமர்சிப்போரை புறக்கணித்து; மனிதகுலத்தின் ஆதியான மிருக-தன்மையை விட்டுவிட்டு, மனிதம் விலகிவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

தாரை தப்பட்டை (2016)       முதன்முதலில் "பாலா"வின் திரைப்படத்திற்கு என் பார்வையைப் பதியும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. "பரதேசி" வெளியான நேரத்தில் திரைப்படங்களைப் பற்றி என் வலைப்பதிவில் எந்த பதிவும் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததால் - எழுதமுடியவில்லை. பின்னர் தான், திரைப்படத்தைப் பற்றியும் என் தேடலின் அடிப்படையாகக் கொண்டு என் பார்வையைப் பதியமுடியும் என்ற நம்பிக்கை எழுந்தது. "தாரை தப்பட்டையை" பற்றிய என் பார்வை கீழே:


பாலாவின் பாத்திரப் படைப்பு:
 • முதலில் "சூறாவளி" என்ற பெண்ணின் பாத்திரப் படைப்பு (வரலட்சுமி சரத்குமார்). தமிழ் திரையுலக வரலாற்றில்; இம்மாதிரியான, ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைப் பார்ப்பது "மிக மிக" அபூர்வம். (எனக்கு தெரிந்த அளவில்) பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், பார்த்திபன் போன்ற இயக்குனர் வரிசையில் தொடர்ந்து ஒரு பெண்ணின் (கதையின் நாயகி) பாத்திரப் படைப்பை "மரியாதைக்குரியதாய்" படைப்பதில் பாலாவும் ஒருவர். அதிலும், இப்போதைய காலகட்டத்தில் பெண்ணை (கதையின் நாயகி) "சதைப்பிண்டமாய்" மட்டுமே காட்டும்/உபயோகிக்கும் திரைப்படங்களே - பெரும்பான்மையில்! இம்மாதிரியான பாத்திரப் படைப்புகளைக் காண்பது மிக அபூர்வம். இடையிடையே "ராஜா ராணி (2013)" போன்ற அபூர்வங்களும் (என் பார்வையைப் பதிந்த முதல் திரைப்படம்) நிகழ்வதுண்டு. 
 • கரகாட்டக்காரி என்ற கதாபாத்திரத்தை "ஆபாசமாய்" காட்டுவதையே பலரும் செய்திருப்பர். நிஜ-வாழ்க்கையில் கரகாட்டம் என்ற "போர்வையில்" ஆபாசங்கள் நடைபெறுவதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் "ஆடை குறைந்தே" இருப்பினும், பாலா, அதில் ஆபாசத்தை திணிக்கவில்லை. பாலாவிற்கு தன் கதையின் மேல் மிகுந்த நம்பிக்கை இருப்பது - காட்சி அமைப்பில் தெரிகிறது. அதே நேரம் "இரட்டை வர்த்த" வசனங்கள் கொண்ட நிஜத்தில் நடைபெறும் கரகாட்டத்தையும் "தோல் உரித்து" காட்ட தயங்கவோ/மறுக்கவோ இல்லை பாலா. ஆனால், அதையும் தனக்கே உரித்தான பாணியில் "சுருங்க சொல்லி - ஆனால் பசுமரத்தாணியாய்" பதிந்திருக்கிறார்.
 • சூறாவளி: பெயருக்கு ஏற்ற கதாப்பாத்திரம். ஆடுபவளின் ஆடையை உரித்து பார்க்க விரும்பும் ஒரு கயவனைக் கண்டு உண்மையில் "சூறாவளி"யாய் மாறியிருக்கிறார். அதேசமயம், ஒரு பெண்ணிற்கே உரித்தான இயல்புடன் "மாமா! மாமா!" என்ற அன்பு-மொழியோடு "இயல்பான காதலை" வெளிப்படுத்தவும் தவறவில்லை. "தேவ--ளா" சாகறத விட, இது எவ்வளவோ தேவலாம்! என்று சொல்லும் வரை - சூறாவளி - பல வேகத்தில் சுழன்று இருக்கிறாள்.
 • மாமா: பல ஆண்களும் தம்-இணை, தன்னை அழைக்க விரும்பிடும் மந்திரச்சொல்! நவீனம் என்ற மாயையில் - நாம் இழந்த "இயல்பான வாழ்வியலில்" இந்த மந்திரச் சொல்லும் ஒன்று. ஆம் "மாமா" என்பது பட்டிக்காடு என்பதாகி விட்டது; ஏன், பட்டிக்காட்டிலும், இப்போது கேட்பது அபூர்வமாய் தான் இருக்கிறது. அதேபோல், பல பெண்கள் அப்படி அழைக்க நினைத்தாலும் - அதை மறுக்கும் ஆண்கள் மறுபக்கம். மொத்தத்தில், இந்த மந்திரச்சொல் - அபூர்வமாகி விட்டது. "மாமா" என்றழைக்கும் போது  "சூறாவளி - இனிய தென்றல் ஆகிறாள்". 
 • என் மாமாவுக்கு பசிக்குதுன்னா - நான் நிர்வாணமா கூட ஆடுவேன்! முதல்ல என் மாமாவுக்கு சாப்பாடு வாங்கி கொடு - இது வெறும் வசனம் அல்ல! ஒரு இயல்பான/உயிர்ப்பான காதலின் "உன்னத வெளிப்பாடு".
 • நல்ல நண்பன் என்ற சொல்லுக்கும்/பாத்திரத்துக்கும் நான் ஒருவன் தான் "காப்பி ரைட்" என்பதாய் பல படங்களில் (போராளி தவிர) "நண்பனாய்" நம்மை கொன்ற சசிக்கு - வெகுநிச்சயமாய் "சந்நியாசி" அருமையான பாத்திரம். உடலையும் குறித்திருப்பதாய் தோன்றுகிறது; சசியின் திறமையை நிச்சயம் பல படிகள் உயர்த்தி காட்டி இருக்கிறார், பாலா. யோவ் சசி! அந்த "நண்பனை" விட்டு வெளியில வாய்யா! வந்து, திரைக்கு வெளியே எங்களுக்கு நண்பனாய் இரு; திரையில் உன் திறமைக்கேற்ற நடிகனாய் மட்டும் இருய்யா!
 • "சாமிபுலவன்" என்ற கதாபாத்திரத்தில் G.M. குமார் வாழ்ந்திருக்கிறார். அருமையான பாத்திரப் படைப்பு; ஆனால் "நான் பெத்த மகனே! நான் ஜெயிச்சுட்டண்டா!" என்ற வசனத்தை அவர் பேசும் வரை அவரின் பாத்திரப்படைப்பின் அபாரத்தை ஓர் அங்கவஸ்த்திரம் போல், மறைத்து வைத்திருக்கிறார் பாலா! என்றே சொல்லவேண்டும். அவரின் பாத்திரப் படைப்பு ஒரு கலையின் மகத்துவத்தை உணர்த்துவது - என்பதை அந்த பாத்திரத்தை உற்று கவனித்து படத்துடன் பயணித்தால் ஒழிய புரிவது சிரமம்.
 • "அமுதவாணன்" எனும் கலைஞன்... என்ற பதிவில், முன்பே "சிரிச்ச போச்சு"புகழ் அமுதவானனைப் பற்றி எழுதி இருக்கிறேன். அமுதவானனுக்கு இப்படியோர் வாய்ப்பு - அதுவும், பாலாவின் படத்தில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. அமுதவானனின் நடிப்புத்திறன் ழுமையாய் உபயோகப்படுத்தப்படவில்லை எனினும் - கிடைத்த வாய்ப்பில் அருமையாய் செய்திருக்கிறார். இருந்தும், அவரின் திறமையை உணர்ந்து, பாலா அவரை நன்கு பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
 • பாலாவின் எல்லாப் படங்களிலும் வருவது போல், இதிலும் - நகைச்சுவை, அருமையான விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. அழுத்தமான கதையை எடுக்கும் அதே அளவு சமமான அளவில் நகைச்சுவையையும் எடுக்க முடியும் என்பதை "லொடுக்கு பாண்டி" முதல் பல கதாபாத்திரங்களில் காட்டி இருக்கிறார், பாலா. 2-பீஸ் உடையில் இருக்கும் துணிக்கடை பொம்மையுடன் "செல்ஃபி" எடுக்கும் காட்சி ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.


பாலா இன்னமும் இம்மாதிரியான கதைகளைத்தான் எடுக்கவேண்டுமா?
 • படம் பார்த்துவிட்டு, என் நண்பருடன் அவர் வீட்டு வாசலில் இருந்த என் மகிழ்வுந்தை எடுத்துக்கொண்டு என்வீடு வரும் வரை கிடைத்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான இடைவெளியில் பலரும் கேட்பது போல் "பாலா இன்னமும் இதே மாதிரி இருண்ட கதைகளைத் தான் படமாக்கவேண்டுமா?!" என்றோர் கேள்வி.
 • முதலில், வேண்டாம்! என்று பலரையும் போல் என்னுள் ஒரு பதில் வந்தது. வீடு வந்து இத்திரைப்படத்தின் மீதான என் பார்வையை முதல்-வரைவு செய்யும் வரை என்னுள் தொடர்ந்த யோசனைகள். இறுதியாய், என்னுள் எழுந்த கேள்வி "ஏன், எடுத்தால் என்ன?" என்பதே; சரி, ஏன் எடுக்கவேண்டும்? - நானே (எதிர்/துணை)கேள்வி கேட்டேன். மேலும், இரண்டு மணி நேரத்தில் எழுதியதை சரிபார்த்துவிட்டு - இதோ பதிந்துமிருக்கிறேன்.
 • "அரசியல் என்பது சாக்கடை" என்பது போல், எல்லோரும் "ஆனந்தம்" ஒன்றே குறிக்கோள்! என்பதாய் - ஆனந்தம் என்ற ஒன்றை நோக்கியே பயணப்பட்டால் - இம்மாதிரியான உணர்வுகளை; இந்த சமூக-அவலங்களை எவர் அனுபவிப்பது? அதை எவர் (தட்டி கேட்காவிடாலும்)சுட்டியாவது காண்பிப்பது? என்ற எண்ணம் வந்தது. ஆம், எல்லோருமே ஒரேயொரு உணர்வை நோக்கி பயணப்பட்டால் - மற்ற உணர்வுகளை எவர் அனுபவிப்பது? எல்லா உணர்வுகளையும்/எல்லா சமூக அவலங்களையும் அனுபவிப்பது ஒவ்வொரு "தனி மனிதனின்" கடமையல்லவா? அரசியலை ஒதுக்கி வைப்பது போல்; ஆனந்தம் தவிர எல்லா உணர்வுகளையும் ஒதுக்கி வைப்பது முறையா? என்ற கேள்வி வந்தது.
 • அப்போது தான்... இல்லை! ஆனந்தமான/நகைச்சுவையான "மசாலாப் படங்கள்" ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டே இருக்கட்டும். மற்றொரு புறம் "சிறிய அளவிலாவது" இம்மாதிரியான படங்கள் வெளியாகவேண்டும் என்று தோன்றியது. இம்மாதிரியான சமூகத்தின் அவலங்களைப் பார்ப்பதும்/உணர்வதும் நம் ஒவ்வொருவரின் உரிமையும் கூட - நாமும் சேர்ந்தது தானே சமூகம்?
 • சரி... பாலாவின் படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாய் தோன்றவில்லையா?... இல்லை! நிச்சயமாக இல்லை. அப்படிப்பட்ட அழுத்தமான காட்சிகளை அமைப்பது பாலாவின் தனிச்சிறப்பு. பல சாதாரண படங்களைப் போல் "வன்முறையை - வன்முறைக் காட்சிகளால்" காண்பித்து நம்மை அருவருப்புக்கு உள்ளாக்குவதில்லை பாலா! வன்முறை நடந்ததை சாதாரண காட்சியால் காண்பித்து; அதற்கு முன்பே நடந்த வன்முறையை "கூரிய வசனங்கள் மூலம்" நம்மை கற்பனை செய்ய வைப்பது பாலாவின் சிறப்பு. ஆனால், அந்த கற்பனையில், நடந்த வன்முறையை நம்மை உணரவைப்பதில் தான் பாலாவின் உண்மையான வெற்றி இருக்கிறது. எனவே, ஒரு சாதாரண இரசிகன் அதை வன்முறையாய் உணரக்கூடும். ஆனால், ஒரு தேர்ந்த இரசிகனுக்கு அந்த அது கற்பனைத்திறனால் விளைவது என்பது பறியும்; அந்த கற்பனைத்திறனை மேலும் ஊக்குவிப்பதில் பாலாவும் ஒருவர் - என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது.


பாலா இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வது சரியா?
 • ஒரு படத்தை எடுக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளவேண்டுமா? என்ற கேள்வியும் பலரையும் போல் என்னுள்ளும் எழுந்தது. இந்த கேள்வியில் நியாயம் இருப்பதாய் தான் எனக்கும் தோன்றியது. பாலாவின் நேர்த்தியும்/நிறைவும் எல்லோருக்கும் தெரிந்ததே! ஆனால், இத்தனைப் படங்களைக் கொடுத்த பின்னரும் - சரியான திட்டமிடுதல் மூலம் பாலா குறுகிய காலத்தில் அதே தரத்துடன் படத்தைக் கொடுக்க முடியும் என்றே தோன்றுகிறது. இதற்கு பாலா செவி சாய்ப்பாரா?
 • மேலோட்டமாய் பார்த்தால் - அதிக செலவு செய்து, பாலா படம் எடுப்பதில்லை என்பதாய் தோன்றும். மறுக்கவில்லை! ஆனால், இந்த அதிக காலம் எடுத்துக் கொள்வதால் - மற்ற நடிகர்களின் பட-எண்ணிக்கை குறைகிறது; அதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பாலாவின் படத்தில் செய்யப்படும் முதலீடும் முடங்கி கிடக்கிறது - அதனாலும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த இழப்பை - பாலா தன் படத்திற்கு செய்யும் செலவாய்தான் நான் பார்க்கிறேன். இந்த அடிப்படையிலும், பாலா குறைந்த கால அவகாசத்தில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

படத்தில் நான் பார்க்கும் ஒரேயொரு குறை:
 • பாலாவின் எல்லா படங்களும் சமூக அவலங்களை; அந்த இருண்ட பக்கங்களை தோலுரிக்க ம(று/ற)ப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். "அவன் இவன்" என்ற கமர்ஷியல் படத்தில் கூட அது தவறவில்லை. ஆனால், இந்த படத்தில் - மற்ற படங்களில் இருப்பது போல், முக்கிய கதையுடன் "மிக நேரடியான" தொடர்பு இல்லாமல் சமூக-அவலம் காட்சியாக்கப்பட்டு இருக்கிறது என்பது என் பார்வை. "தொடர்பு இருக்கின்றது" என்பதை மறுக்கவில்லை. ஆனால் "மிக நேரடியான" தொடர்பு இல்லை; அதனால், வழக்கமாய் பாலாவின் படத்தில் இருக்கும் அந்த "உணர்வு-பரிமாற்றம்" கொஞ்சம் நீர்த்து போயிருப்பதாய் எனக்கு தோன்றுகிறது.
 • நான் கடவுள்/பரதேசி/பிதாமகன் - போன்ற படங்களில் இருப்பது போன்ற அந்த "மிக நேரடியான பிணைப்பு" இப்படத்தில் இல்லை என்பதையே இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். "அவன் இவன்" படத்தில் கூட - இதே குறை இருந்தது. ஆனால், அந்த படத்தின் முக்கிய நோக்கமும்; கதையின் கருவும் - கமர்ஷியல் சார்ந்தது என்பதால், அது அப்பட்டமாய் தெரியவில்லை. ஆனால், இந்தப் படத்தில் - அதை உணரமுடிந்தது. ஆனால், இதுவும் "பாலாவின் தரத்துடன்" ஒப்பிடுவதால் தெரியும் குறையே; அதிலும், ஒரு சிறிய குறையே!

இளையராஜா - 1000:
 • இளையராஜாவின் இசையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? இல்லை... நான் தான் அவரை விமர்சித்து விடமுடியுமா? 1000 என்பது ஓர் எண்ணிக்கை அவ்வளவே. ஆனால், படத்திற்கு மிகப்பெரிய பலம் இசை என்பதை மறுப்பதற்கு - ஏதுமில்லை! எவருமில்லை! திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் - அந்த மக்களை நாம் நேரடியாய் ஏதோவொரு கிராமத்தில் பார்ப்பதாய் ஒரு உணர்வு. திரைப்படம் என்ற உணர்வு ஒரு காட்சியில் கூட இருந்ததாய், நான் உணரவில்லை. இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தின் மந்திரம் இதற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் நீதி என்ன?:
 • தமிழரின் ஒரு பாரம்பரிய கலையை சிறப்பிப்பதும்; அந்த கலையின் மகத்துவத்தையும்; அந்த கலையை செய்திடும் கலைஞர்களின் உண்மையான மன-நிலையும்/அவர்களின் உண்மையான கலாச்சாரமும் இருக்கட்டும். இவையாவும், கதை சொல்லும் நீதி எனபதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
 • அந்த இறுதிக் காட்சியில் சந்நியாசி, தன் கையில் ஓர் உயிருடன் நடந்து போகும்போது "a film by baala" என்ற செய்தியோடு காட்சி நிலைத்து நிற்கும். அந்த காட்சி என்னுள் பல எண்ணங்களை/புரிதல்களை - படம் சொல்லும் "நீதி"யாய் உணர்த்தியது. நீங்களும், அப்படி ஏதேனும் உணர்கிறீர்கள?! என்பதை சொல்லுங்கள்.

{ ஒரு முறையாவது - இப்படத்தை திரையரங்கில் பார்க்க முயலுங்கள்! இல்லையேல்... 
"நேரில் பார்ப்பது போன்று" நான் உணர்ந்ததை, நீங்கள் உணர்தல் சாத்தியமில்லை! }


வெள்ளி, ஜனவரி 15, 2016

நிறைவான ஆன்மா...


குறள் எண்: 0166 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0166}

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்

விழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்து, பொறாமைப்படுபவர் மட்டுமல்ல; அவரைச் சார்ந்தோரும், உடையும்/உணவும் இன்றி தவிப்பர்.
(அது போல்...)
பிறரின் நிறையைப் புரளியாய், விமர்சிப்பவர் மட்டுமல்ல; அப்புரளியில் பங்கேற்போரும், நித்திரையும்/நிம்மதியும் இன்றி உழல்வர்.

வியாழன், ஜனவரி 14, 2016

குறள் எண்: 0165 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0165}

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் 
வழுக்காயும் கேடீன் பது

விழியப்பன் விளக்கம்: பொறாமை உடையோர்க்கு, அதுவொன்றே போதுமானது; பகைவர் செய்யத் தவறிய தீமையையும், அப்பொறாமையே செய்துவிடும்.
(அது போல்...)
புரளி பேசுவோர்க்கு, அதுவொன்றே போதுமானது; மற்றவர் சிதைக்க மறந்த அமைதியையும், அப்புரளியே குலைத்துவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஜனவரி 13, 2016

குறள் எண்: 0164 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0164}

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் 
ஏதம் படுபாக்கு அறிந்து

விழியப்பன் விளக்கம்: தீய-எண்ணங்கள் விளைவிக்கும், துன்பங்களை நன்குணர்ந்தோர்;  பொறாமையின் வெளிப்பாடாய், அறமற்ற செயல்களை செய்யாமாட்டார்கள்.
(அது போல்...)
தியானம் உயிர்ப்பிக்கும், அமைதியை ஆழ-அனுபவித்தோர்; உணர்ச்சி மிகுதியால், தரம்குறைந்த வார்த்தைகளை பேசமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஜனவரி 12, 2016

குறள் எண்: 0163 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0163}

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் 
பேணாது அழுக்கறுப் பான்

விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையால் விளையும் பேறுகளை வேண்டாமென்பவர்; பிறரின் பேறுகளைக் கண்டு மகிழாது, பொறாமை கொள்வர்.
(அது போல்...)
மனிதத்தால் உருவாகும் நன்மைகளை உணராதவர்; பிறரின் நன்மைகளை வியந்து பாராட்டாமல், புரளி பேசுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஜனவரி 11, 2016

குறள் எண்: 0162 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0162}

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

விழியப்பன் விளக்கம்: பிறர் உடைமைகளில் பொறாமைப்படும், தீய எண்ணத்திலிருந்து விலகியிருக்கும் தன்மையிருப்பின்; அதற்கிணையான பேறு ஏமில்லை.
(அது போல்...)
பிறர் நம்பிக்கையை அவமதிக்கும், நெறியற்ற செயலிலிருந்து விடுபடும் முனைப்பிருப்பின்; அதையொத்த ம(னி/த)ம் ஏதுமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஜனவரி 10, 2016

குறள் எண்: 0161 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0161}

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

விழியப்பன் விளக்கம்: தன் நெஞ்சத்தில் வஞ்சம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாத தன்மையையே; ஒருவர் ஒழுக்கத்தின் நெறியாக உணரவேண்டும்.
(அது போல்...)
தன் செயல்களில் ஊழல் போன்ற அறமற்ற காரணிகள் இல்லாத சுயத்தையே; ஒருவர் தலைமையின் முதன்மையாய் பழகவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஜனவரி 09, 2016

அதிகாரம் 016: பொறையுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 016 - பொறையுடைமை

0151.  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
           இகழ்வார்ப் பொறுத்தல் தலை

           விழியப்பன் விளக்கம்: தன்னைத் தோண்டும் மக்களை, சுமக்கும் நிலத்திற்கு ஒப்ப;  
           தீயசொற்களால் நம் மனதைக் காயப்படுத்துவோரை, பொறுத்தருளுதல் தனிச்சிறப்பாகும்.
(அது போல்...)
           தம்மைக் கைவிட்ட பிள்ளைகளை, ஆசிர்வதிக்கும் பெற்றோர் போல்; புரளியால் நம் 
           மதிப்பை சிதைப்போரை, அரவணைத்தல் தனித்துவமாகும்.

0152.  பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
           மறத்தல் அதனினும் நன்று

           விழியப்பன் விளக்கம்: மிகையான தீங்கைப் பொறுத்தருளுதல் என்றும் நன்றே; அந்தத்
           தீங்கையே மறந்துவிடுதல், அதைக்காட்டிலும் நன்றாகும்.
(அது போல்...)
           அதீதமான கோபத்தை அடக்குதல் எப்போதும் சிறந்ததே; அக்கோபத்திற்கான
           நிகழ்வையே மறப்பது, அதனினும் சிறந்ததாகும்.

0153.  இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 
           வன்மை மடவார்ப் பொறை

           விழியப்பன் விளக்கம்: விருந்தினரை உபசரிக்கமுடியாதது, வறுமையில் வறுமையாம்; 
           அதுபோல், அறிவிலிகளைப் பொறுத்தருள்வது - வலிமையில் வலிமையாம்.
(அது போல்...)
           மனிதத்தைப் பின்பற்றாதோர், விலங்குகளில் கொடுவிலங்காம்; அதுபோல், 
           மனிதமற்றவரையும் நேசிப்போர் - மனிதரில் மாமனிதராம்.

0154.  நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
           போற்றி யொழுகப் படும்

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும், நீங்காத நிறைவைக் கொண்டிருக்க விரும்பினால்; 
           பொறுத்தருள்வதை, உயர்வாய் பேணி ஒழுகவேண்டும்.
(அது போல்...)
           எக்காலமும், இறவாதப் பிறப்பை அடைந்திட விரும்பினால்; மனிதத்தை, சுவாசமாகப் 
           பழகி வாழவேண்டும்.
          
0155.  ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் 
           பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

           விழியப்பன் விளக்கம்: மற்றவர்களைப் பொறுமையின்றி தண்டிப்போரை; சான்றோர், 
           பொருட்படுத்த மாட்டார்கள்! அங்ஙனம் பொறுத்தருளும் இயல்பினரைப், பொன்போன்று 
           பாதுகாப்பர்.
(அது போல்...)
           பிறரை மனிதமில்லாமல் அனுகியவரை; உயர்ந்தோர், அவமதிக்க மாட்டார்கள்! ஆங்கே 
           மனிதத்தோடு அணுகுவோரை, உயர்-சக்தியாய் போற்றுவர்.

0156.  ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் 
           பொன்றுந் துணையும் புகழ்

           விழியப்பன் விளக்கம்: பிறர் தவறைத் தண்டிப்பார்க்கு, ஒருநாளே மகிழ்ச்சி; அத்தவறைப் 
           பொறுத்தருள்வோர்க்கு, உலகம் அழியும் வரை சிறப்பிருக்கும்.
(அது போல்...)
           பிறர் அறியாமையைப் பழிப்போர்க்கு, ஒருகணமே மனநிறைவு; அவ்வறியாமையை 
           நீக்குவோர்க்கு, வாழ்நாள் இறுதி வரை முழுமையிருக்கும்.

0157.  திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 
           அறனல்ல செய்யாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: பிறர், நமக்கு செய்யத் தகாதவற்றைச் செய்தாலும்; அதனால் மனம் 
           வருந்தி, அறனல்லாதவற்றை செய்யாமல் பொறுத்தருளுதல் நலம்.
(அது போல்...)
           மற்றவர், நம் உரிமைகளை மறுத்துச் செயல்பட்டாலும்; அதனால் தன்னிலை-இழந்து,  
           பகையை வளர்க்காமல் இருப்பது சிறப்பு.

0158.  மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
           தகுதியான் வென்று விடல்

           விழியப்பன் விளக்கம்: அதீதத்தால், தீயவை செய்தோரின் மனதை; நம் பொறுத்தருளும் 
           தகுதியால், வெல்லவேண்டும்.
(அது போல்...)
           சர்வாதிகாரத்தால், அவமரியாதை செய்தோரின் சுயத்தை; நம் மனிதநேய குணத்தால், 
           மாற்றவேண்டும்.

0159.  துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
           இன்னாச்சொல் நோற்கிற் பவர்

           விழியப்பன் விளக்கம்: பிறரின், எல்லையற்ற தீச்சொற்களையும் பொறுத்தருள்பவர்; 
           எல்லாப் பற்றுகளையும் துறந்தவரைப் போன்று, புனிதமானவர் ஆவர்.
(அது போல்...)
           உறவுகளின், எண்ணற்ற வரம்பு-மீறல்களையும் மன்னிப்போர், ஐந்து புலன்களையும் 
           அடக்கியோரைப் போன்ற,  மனத்திடம் கொண்டவராவார்.

0160.  உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
           இன்னாச்சொல் நோற்பாரின் பின்

           விழியப்பன் விளக்கம்: உணவைத் தவிர்த்து நோன்பிருப்போர்; பிறர் பேசும் தீய 
           சொற்களைப் பொறுத்தருள்வோர்க்கு, அடுத்த நிலையே அடைவர்.
(அது போல்...)
           அறமற்றதை மறுத்து வாழ்வோர்; பிறர் செய்யும் மனிதமற்ற செயல்களை மன்னிப்போர்க்கு, 
           அடுத்த போற்றுதலையே பெறுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை