சனி, ஏப்ரல் 30, 2016

குறள் எண்: 0272 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0272}

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
தான்அறி குற்றப் படின்

விழியப்பன் விளக்கம்: மனசாட்சிக்குத் தெரிந்தே, குற்றச்செயல்களைச் செய்வாராயின்; ஒருவரின்  விண்ணளவு தவத்தால் என்ன பயன்?
(அது போல்...)
குடிமக்களுக்குத் தெரிந்தே, ஊழல்களைச் செய்கிறதெனின்; ஓர்கட்சியின் கண்டமளவு ஆதரவாளர்களால் என்ன நன்மை?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஏப்ரல் 29, 2016

குறள் எண்: 0271 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0271}

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

விழியப்பன் விளக்கம்: வஞ்சக மனதுடையோரின், பொய்யான ஒழுக்கத்தைக் கண்டு; அவரின் உடம்பிலுள்ள ஐவகை பூதங்களும், தம்முள்ளே சிரிக்கும்.
(அது போல்...)
காழ்ப்புணர்வு உடையோரின், போலியான உறவைக் கண்டு; அவரின் பிணைப்பிலுள்ள ஐவகை உறவுகளும், மனதுள்ளே இகழும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கம்யூனிசத்தின் தோல்வி...


கொள்கைகளை...
தம்செயலில் பிரதிபலிக்காது,
எண்ணத்திலும் உள்வாங்காது;
மேடைகளில் மட்டும்,
"வீர-வசனமாய்" பேசுவதே...

கம்யூனிசத்தின் தோல்வி!

வியாழன், ஏப்ரல் 28, 2016

அதிகாரம் 027: தவம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 027 - தவம்

0261.  உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 
           அற்றே தவத்திற் குரு

           விழியப்பன் விளக்கம்: தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுப்பது மற்றும் பிற உயிர்களுக்கு
           துன்பம் விளைவிக்காதது - போன்ற தன்மைகளே, தவத்தின் காரணிகளாம்.
(அது போல்...)
           நாம் செய்த தவறுகளை ஏற்பது மற்றும் பிறரின் தவறுகளைப் பூதாகரமாக சித்தரிக்காதது -
           போன்ற குணங்களே, மனிதத்தின் கோட்பாடுகளாம்.

0262.  தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை 
           அஃதிலார் மேற்கொள் வது

           விழியப்பன் விளக்கம்: நல்லறம் பழகும் மனத்திடம் உள்ளவர்க்கே, தவம் செய்வது 
           சாத்தியமாகும்; நல்லறம் இல்லாதோர், தவம் பழகுவது  வீண்செயலாகும்.
(அது போல்...)
           சுயம் காக்கும் ஒழுங்கியல் தெரிந்தவர்க்கே, சமூக சேவை கைகூடும்; சுயம் உணராதோர்,
           சமூகசேவை ஆற்றுவது பயனற்றதாகும்.
           
0263.  துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் 
           மற்றை யவர்கள் தவம்

           விழியப்பன் விளக்கம்: அறமல்லவற்றைத் துறந்து, தவம் மேற்கொள்வோர்க்கு; 
           உணவளித்து உதவிடத்தான், மற்றவர்கள் தவம் மேற்கொள்வதை மறந்தனரோ?
(அது போல்...)
           சுயவாழ்வைத் தொலைத்து, அரசியலில் ஈடுபடுவோர்க்கு; ஆதரவுக்கரம் நீட்டத்தான், 
           பொதுமக்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்தனரோ?

0264.  ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
           எண்ணின் தவத்தான் வரும்

           விழியப்பன் விளக்கம்: பகைவரை வீழ்த்தவும் மற்றும் சுற்றத்தாரை உயர்த்தவும் 
           எண்ணினால்; அவை தவம் செய்யும் இயல்பினால் நிறைவேறும்.
(அது போல்...)
           தீவினைகளை அழிக்கவும் மற்றும் நல்வினைகளைப் பெருக்கவும் முனைந்தால்; அவை 
           தேடல் விதைக்கும் சிந்தனையால் சாத்தியமாகும்.

0265.  வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
           ஈண்டு முயலப் படும்

           விழியப்பன் விளக்கம்: வேண்டியதை வேண்டிய வண்ணமே, பெறமுடியும் என்பதால்; 
           செய்யக்கூடிய தவம் சார்ந்த செயல்களை, உடனடியாய் செய்ய முயலவேண்டும்.
(அது போல்...)
           உணர்வுகளை உணர்வுப் பூர்வமாக, உணரமுடியும் என்தால்; பேணக்கூடிய தாய் சார்ந்த 
           உறவுகளை, விரைவாய் பேணத் துவங்கவேண்டும்.

0266.  தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் 
           அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

           விழியப்பன் விளக்கம்: தவம் சார்ந்த செயல்கள் செய்வோரே, பிறவிக்கடனை செய்வோர் 
           ஆவர்; மற்றவரெல்லாம் ஆசைக்கு அடிமையாகி, வீண்செயல்கள் செய்வராவர்.
(அது போல்...)
           வாய்மை சார்ந்த வாக்குறுதிகள் அளிப்பவையே, மக்களாட்சியை உணர்ந்த
           கட்சிகளாகும்; மற்றவையெல்லாம் பதவிக்கு அடிமையாகி, ஊழல்கள் செய்பவையாகும்.

0267.  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் 
           சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: நெருப்பில் சுடுவதால், சுடுவதற்கு ஏற்ப ஒளிரும் பொன் போல்; தவம் 
           மேற்கொள்வோரின் பகுத்தறிவு, துன்பங்களின் அளவுக்கேற்ப விரிவடையும்.
(அது போல்...)
           அறச்செயலில் ஈடுபடுவதால், ஈடுபாட்டிற்கு ஏற்ப வளரும் மனிதம் போல்; வாழ்வியலை 
           ஆய்வோரின் தெளிவு, சிந்தனைத் திறனுக்கேற்ப வலுவடையும்.

0268.  தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய 
           மன்னுயி ரெல்லாந் தொழும்

           விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால், தன்னுயிர் மற்றும் தான் எனும் அகந்தையைத் 
           துறந்தவரை; மன்னுலகிலுள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் வணங்கும்.
(அது போல்...)
           பொதுமை பழகுவதால், சுயகுடும்பம் மற்றும் சுயகட்சி எனும் வளர்ச்சிகளைத்
           தவிர்த்தவரை; சமூகத்திலுள்ள மற்ற தலைவர்கள் அனைவரும் மதிப்பர்.

0269.  கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் 
           ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால் விளையும், ஆற்றலைப் பெற்றவர்க்கு; இறப்பைக் 
           கடக்கும் அதிசயமும் சாத்தியமாகும்.
(அது போல்...)
           சுயம் உணர்வதால் விளையும், புரிதலை உடையவர்க்கு; காமத்தை வெல்லும் 
           தனித்திறமும் தன்வயப்படும்.

0270.  இலர்பல ராகிய காரணம் நோற்பார் 
           சிலர்பலர் நோலா தவர்

           விழியப்பன் விளக்கம்: மனவலிமை இல்லாத மக்கள், பலராக இருக்க காரணம்; தவம் 
           செய்வோர் சிலராகவும், தவம் செய்யாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
(அது போல்...)
           நல்லாட்சி செய்யாத தலைவர்கள், பலராக இருக்க காரணம்; பொதுநலம் கருதுவோர் 
           சிலராகவும், பொதுநலம் கருதாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0270 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0270}

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

விழியப்பன் விளக்கம்: மனவலிமை இல்லாத மக்கள், பலராக இருக்க காரணம்; தவம் செய்வோர் சிலராகவும், தவம் செய்யாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
(அது போல்...)
நல்லாட்சி செய்யாத தலைவர்கள், பலராக இருக்க காரணம்; பொதுநலம் கருதுவோர் சிலராகவும், பொதுநலம் கருதாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஏப்ரல் 27, 2016

குறள் எண்: 0269 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0269}

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால் விளையும், ஆற்றலைப் பெற்றவர்க்கு; இறப்பைக் கடக்கும் அதிசயமும் சாத்தியமாகும்.
(அது போல்...)
சுயம் உணர்வதால் விளையும், புரிதலை உடையவர்க்கு; காமத்தை வெல்லும் தனித்திறமும் தன்வயப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஏப்ரல் 26, 2016

குறள் எண்: 0268 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0268}

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால், தன்னுயிர் மற்றும் தான் எனும் அகந்தையைத் துறந்தவரை; மன்னுலகிலுள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் வணங்கும்.
(அது போல்...)
பொதுமை பழகுவதால், சுயகுடும்பம் மற்றும் சுயகட்சி எனும் வளர்ச்சிகளைத் தவிர்த்தவரை; சமூகத்திலுள்ள மற்ற தலைவர்கள் அனைவரும் மதிப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஏப்ரல் 25, 2016

குறள் எண்: 0267 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0267}

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

விழியப்பன் விளக்கம்: நெருப்பில் சுடுவதால், சுடுவதற்கு ஏற்ப ஒளிரும் பொன் போல்; தவம் மேற்கொள்வோரின் பகுத்தறிவு, துன்பங்களின் அளவுக்கேற்ப விரிவடையும்.
(அது போல்...)
அறச்செயலில் ஈடுபடுவதால், ஈடுபாட்டிற்கு ஏற்ப வளரும் மனிதம் போல்; வாழ்வியலை ஆய்வோரின் தெளிவு, சிந்தனைத் திறனுக்கேற்ப வலுவடையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஏப்ரல் 24, 2016

குறள் எண்: 0266 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0266}

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் 
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

விழியப்பன் விளக்கம்: தவம் சார்ந்த செயல்கள் செய்வோரே, பிறவிக்கடனை செய்வோர் ஆவர்; மற்றவரெல்லாம் ஆசைக்கு அடிமையாகி, வீண்செயல்கள் செய்வராவர்.
(அது போல்...)
வாய்மை சார்ந்த வாக்குறுதிகள் அளிப்பவையே, மக்களாட்சியை உணர்ந்த கட்சிகளாகும்; மற்றவையெல்லாம் பதவிக்கு அடிமையாகி, ஊழல்கள் செய்பவையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஏப்ரல் 23, 2016

ஒரே நேரத்தில் - இரண்டு காதல்கள் சாத்தியமா???



           8 மாதங்களுக்கு முன், நண்பர் ஒருவர் "ஒரே நேரத்தில் 2 காதல்கள் சாத்தியமா?"  என்று கேட்டார். சற்றும் யோசிக்காமல்... "என்னளவில், நிச்சயம் சாத்தியம் இல்லை!" என்றேன். வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு காதல்கள்; வேறு விடயம் - அப்படி இராதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், என்னிடம் வைக்கப்பட்ட கேள்வி "ஒரே நேரத்தில் 2 காதல்கள் சாத்தியமா?" என்பதே. நிச்சயமாய், இரண்டில் ஒன்றிற்கான அடிப்படை "காதலாய் இருக்காது" என்பது என் திண்ணமான எண்ணம். இன்றையக் காலக்கட்டத்தில் "ஆண்/பெண் என்ற பேதமேதுமின்றி" திருமணமான பலருக்கும் வேறொருவருடன் தொடர்பு இருக்கிறது. இதில், பழையக் காதலைப் புதுப்பிப்பதும் ஓர் காரணி. ஏதேனும் ஓர் சூழ்நிலையில், திருமண உறவில் திருப்தி இல்லாத்தால், இவை நடக்கின்றன. ஆனால், இவற்றை "கள்ளத்தொடர்பு அல்லது கள்ளக்காதல்" என்ற பிரிவிலேயே நான் பார்க்கிறேன். உண்மையான காதல்களாய்...

        இருந்திருப்பின், வேறொரு திருமணம் சாத்தியப்பட்டிருக்காது. அல்லது திருமணக்-காதல் உண்மையெனில், பழையக் காதல் புதுப்பிக்கப்படாது. எனவே, எப்படிப் பார்ப்பினும், இரண்டில் ஒன்றிற்கு காதல் அடிப்படை அல்ல (அல்லது) இரண்டு காதல்கள் சாத்தியம் இல்லை! ஆனால், இது "இரண்டு பேர் மீதும் காதல்" என்ற "மாயப்"போர்வையில் நடக்கிறது. அவரிடம் சொன்னதையே மீண்டும் இங்கே சொல்கிறேன்: என்னளவில் "இந்த இரண்டு காதல் கோட்பாடு" சாத்தியமிலை. அப்படி சாத்தியம் என்று எவரேனும் சொன்னால் அது உண்மையல்ல! என்பது என் திண்ணமான நம்பிக்கை - நிச்சயம், அதில் ஏதோவொன்று காதல் அல்லாத காரணத்துக்காய் நடக்கிறது. இந்தக் காரணிகளில் "காமம் முதல் காதல் வரை" பல்வேறு அதிருப்தி காரணிகள் அங்கம் வகிக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் "சரியா? தவறா?" என்றால் - நம் பெருந்தகை "பிறனில் விழையாமை" என்ற அதிகாரத்தில் சொன்னது போல், மிக நிச்சயமாய் தவறு. ஆனால்...

      என் நண்பர் கேட்டது "ஒரே நேரத்தில் 2 காதல்கள் சாத்தியமா?" என்பதே. இங்கே, இன்னொன்றையும் தெளிவுபடுத்த வேண்டும்; அவர் கேட்டது "இரண்டு பெண்களில், குறைந்தது ஒரு பெண்ணுக்கு, மற்றோர் உறவைப் பற்றி தெரியாது!" என்ற அடிப்படையில். அதாவது, இரண்டில் ஒன்று "கள்ளத்தொடர்பு". ஓர் காதல் மற்ற உறவுக்கு; அல்லது வேறெவருக்கும் தெரியக்கூடாது என்ற நிபந்தனை எழுந்தாலே "அது காதல் அல்ல!" என்பது என் புரிதல். காதல் என்ற போர்வையில் வேண்டுமானால், அது நடக்கலாம் - இதில் ஆண்/பெண் பாகுபாடு இல்லை. ஆனால், கீழ்வருவது போல், விதிவிலக்கான "ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள்" உண்டு: சில செல்வந்தர்கள் போல்; வெளிப்படையாய் தெரிந்தே "2/3 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ங்கள்" கொண்டவர்கள் பலரை நமக்கு தெரியும். எல்லோருக்கும் இல்லை எனினும், அவர்களில் பலருக்கும் "ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டும் காதல்கள்" இருப்பதை மறுப்பதற்கில்லை. என் எழுத்துகுரு கூட...

           இன்றுவரை "ஒரே வீட்டில் 2 மனைவியர்களுடன்" இருப்பதை எல்லோரும் அறிவர். அவரும், அதை மறைக்காமல், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இன்றும் வெளிப்படையாய் சொல்வார். அதுதான் நிதர்சனம்! மறைத்து நிகழ்த்தப்படும் ஒரு உறவில், உண்மையான காதல் இருப்பது சாத்தியமில்லை; அதை காதலென்று, எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது/கூடாது. உண்மைக்காதல் எனில், மேற்குறிப்பிட்ட விதிவிலக்குகளைப் போல் அப்பட்டமாய் வெளியே சொல்லப்படும். அதில் சிறிதும் அவமானம் அல்லது தவறென்ற குற்ற-உணர்வு இருக்காது! இருக்கமுடியாது! ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. "வெகு சிலருக்கே" அது சாத்தியம். அதற்கு பெருத்த உண்மை தேவைப்படுகிறது. தகுதி பிரிக்காத; உயர்வு/தாழ்வு இல்லாத "பரஸ்பரக் காதல்" தேவைப்படுகிறது. ஒரு காதலை ஒழுங்காய் வெளிப்படுத்தி, பரஸ்பரம் உண்மையாய் இருப்பதற்கே - இங்கே பற்பல போராட்டங்கள். அதுதான், ஒரு இயல்பான...

     மனிதனின் குணம். என்னளவில் "ஒரே நேரத்தில் இரண்டு காதல்கள்" சாத்தியமில்லை. மேற்குறிப்பிட்டது போல், விதிவிலக்குகள் உண்டு.  வெகு நிச்சயமாய், மறைத்து வைத்து நிகழ்த்தப்படுவது காதலே இல்லை! என்பது என் பார்வை. இதை, தீர்க்கமாய்/சுருக்கமாய் அவருக்கு வெளிப்படுத்தி இருந்தேன். ஆனால், அது எந்த அளவிற்கு அவருக்குப் புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால், இம்மாதிரியான குழப்பங்கள் பலருக்கும் இருக்கக்கூடும்! இருக்கிறது. அதற்காகத்தான், அதை இப்படியோர் தலையங்கமாய் எழுதுவது அவசியம் என்றுணர்ந்தேன். இப்படி "காதல் என்ற போர்வையில்" தான் பலதரப்பட்ட இன்றைய "ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகள்" அரங்கேறுகின்றன. காதலுக்கு பின்னால் "வேறொரு காரணம்" இருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் தெரியும்; ஆனால், ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அப்படி, உண்மையை ஒப்புக்கொண்டால், அந்த உறவை அவர்களே...

          மதிக்கமாட்டார்கள்! மேலுள்ள கருத்துப்படத்தில் சொல்லியிருப்பது போல் "ஒரேநேரத்தில், இரண்டு (அல்லது) அதற்கு மேற்பட்டவர்களை "உண்மையாய்" காதலிக்க முடியாது எனில், அங்கே ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அந்த உறவில் இருப்பவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் "அப்படி ஏதும் பிரச்சனை இல்லை; வேறு காரணமும் இல்லை!" என்று அவர்களை ஏமாற்றிக் கொள்ளவே; அதைக் காதலென்று அழைக்கின்றனர் என்பதே என் பார்வை. ஏனெனில், உண்மையான காதல் வெளிப்படையாய் நடந்தேறும்! எக்காரணத்துக்காகவும், அதை மறைப்பது சாத்தியமாகாது/தேவைப்படாது. குறைந்தது, இன்னொரு காதலெனும் உறவில் இருப்பவரிடமாவது பகிரப்படும்! ஒரு காதலை, இன்னொரு காதலைக் கொண்டிருப்பவர் இடம் கூட பகிரமுடியாது! என்றால் அதெப்படி காதல் ஆகும்?! இந்த சிந்தனையும்/கேள்வியும் நம்முள் எழுவது முக்கியம். எனவே, நமக்கிருப்பது...

எத்தனைக் காதல்"கள்" என்பதைவிட; இருப்பது ஒரேயொரு காதல் எனினும், அது...
"உண்மையான காதலா?!" என்ற புரிதல் முக்கியம்!!!      

குறள் எண்: 0265 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0265}

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
ஈண்டு முயலப் படும்

விழியப்பன் விளக்கம்: வேண்டியதை வேண்டிய வண்ணமே, பெறமுடியும் என்பதால்; செய்யக்கூடிய தவம் சார்ந்த செயல்களை, உடனடியாய் செய்ய முயலவேண்டும்.
(அது போல்...)
உணர்வுகளை உணர்வுப் பூர்வமாக, உணரமுடியும் என்தால்; பேணக்கூடிய தாய் சார்ந்த உறவுகளை, விரைவாய் பேணத் துவங்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஏப்ரல் 22, 2016

குறள் எண்: 0264 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0264}

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
எண்ணின் தவத்தான் வரும்

விழியப்பன் விளக்கம்: பகைவரை வீழ்த்தவும் மற்றும் சுற்றத்தாரை உயர்த்தவும் எண்ணினால்; அவை தவம் செய்யும் இயல்பினால் நிறைவேறும்.
(அது போல்...)
தீவினைகளை அழிக்கவும் மற்றும் நல்வினைகளைப் பெருக்கவும் முனைந்தால்; அவை தேடல் விதைக்கும் சிந்தனையால் சாத்தியமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஏப்ரல் 21, 2016

குறள் எண்: 0263 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0263}

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்

விழியப்பன் விளக்கம்: அறமல்லவற்றைத் துறந்து, தவம் மேற்கொள்வோர்க்கு; உணவளித்து உதவிடத்தான், மற்றவர்கள் தவம் மேற்கொள்வதை மறந்தனரோ?
(அது போல்...)
சுயவாழ்வைத் தொலைத்து, அரசியலில் ஈடுபடுவோர்க்கு; ஆதரவுக்கரம் நீட்டத்தான், பொதுமக்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்தனரோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஏப்ரல் 20, 2016

குறள் எண்: 0262 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0262}

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது

விழியப்பன் விளக்கம்: நல்லறம் பழகும் மனத்திடம் உள்ளவர்க்கே, தவம் செய்வது சாத்தியமாகும்; நல்லறம் இல்லாதோர், தவம் பழகுவது  வீண்செயலாகும்.
(அது போல்...)
சுயம் காக்கும் ஒழுங்கியல் தெரிந்தவர்க்கே, சமூக சேவை கைகூடும்; சுயம் உணராதோர், சமூகசேவை ஆற்றுவது பயனற்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், ஏப்ரல் 19, 2016

குறள் எண்: 0261 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0261}

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

விழியப்பன் விளக்கம்: தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுப்பது மற்றும் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காதது - போன்ற தன்மைகளே, தவத்தின் காரணிகளாம்.
(அது போல்...)
நாம் செய்த தவறுகளை ஏற்பது மற்றும் பிறரின் தவறுகளைப் பூதாகரமாக சித்தரிக்காதது - போன்ற குணங்களே, மனிதத்தின் கோட்பாடுகளாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஆதிக்கமும் - குடும்பங்கள் இணைந்திருப்பதும்...


திங்கள், ஏப்ரல் 18, 2016

புலால் மறுத்தல் (அதிகாரம் 026)




        நான் கடைப்பிடிக்காத ஒன்றை என் எழுத்தில் சொல்வதில்லை. குறைந்த பட்சம், எண்ண-ஓட்டத்தில் இருக்கும் விடயங்களைத்தான் நான் எழுதுவேன். சில நட்புகள் பரிந்துரை செய்வது போல், சொல்ல முனையும் விடயத்தை கதையாய் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தான் "10 வரியில் ஒரு கதை" என்றோர் பிரிவைத் துவங்கியும், பின் அதில் தொடர்ந்து எந்த பதிவையும் எழுத என் மனம் ஒப்பவில்லை. நகைச்சுவை பகுதியான "ச்சும்மா, தமாஷா..." என்ற பிரிவில் கூட, என் வாழ்வில் நிகழ்ந்தவற்றைத் தான் எழுதி இருக்கிறேன். நகைச்சுவையில் கூட, கற்பனை கலந்து; நடக்காத ஒன்றைப் பற்றி எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. உடன்பாடில்லாத விடயத்தை, எக்காரணத்துக்காகவும் செய்யக்கூடாது என்பது என் நிலைப்பாடுகளில் ஒன்று. அதுதான், திரு. கலாபவன் மணி அவர்களின் மரணம் குறித்து - பலரும் "தவறாய் விமர்சித்ததை"ப் பற்றிய பதிவின் அடிப்படையும்/நோக்கமும். 

       மதுவின் உண்மையான பாதிப்பை நான் "தெளிவாய்" உணர்ந்திருந்தும், குறைந்தது நான் மதுவை நிறுத்தி ஓராண்டு கழித்து தான் அதை எழுதவேண்டும் என்ற உறுதியும், இந்த நிலைப்பாட்டால் விளைந்ததே. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் பணியையும் அவ்வாறே மேற்கொண்டு வருகிறேன். ஓரிரு விடயங்கள் தவிர, இதுவரை விளக்கவுரை எழுதிய 25 அதிகாரங்களிலும் - நான் எதிலும் முரண்படவில்லை. புரளி-பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும், நானும் அம்மாதிரி பேசி இருக்கிறேன் என்பதைக் கூட - நெடுநாட்களுக்கு முன்பே பதிந்து இருக்கிறேன். இது, திட்டமிட்டதல்ல; என் செயல்கள், என் சிந்தனையைத் தழுவியே இருக்கின்றன என்பதாலேயே இது சாத்தியமாகி இருக்கிறது. என் சிந்தனை தவறென்று தெரிந்தவுடனேயே, அதை சரிசெய்து - செயல்களை நேர்படுத்தும் திறம் எனக்கு இயல்பிலேயே இருப்பதும் இதற்கோர் பெரிய பலம். திருக்குறளை எழுதியது நம் பெருந்தகை ஆயினும்...

         விளக்கவுரை எழுதுவதிலும் - ஓர் நேர்மையும்/உண்மையும் இருக்கவேண்டும் என்பதில் மிக உறுதியாய் இருக்கிறேன். என் விளக்கவுரை, பெரிதளவில் பிரபலம் ஆகவில்லை என்பது தெரியும்! அதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இப்பணியை என் கடமையாய் செய்கிறேன்; அதை இந்த வலைப்பதிவின் மூலம் பகிர்கிறேன். காலம் கடந்தேனும், இது பலரையும் சென்று சேரக்கூடும்; இல்லையெனினும், என் பணி என் மூச்சிருக்கும் வரை தொடரும். என் நட்புகளும் "குறளும் கோவல் நட்பும்" என்ற வாட்ஸ்-ஆப் குழுவில், என் குறைகளை சரியாய் சுட்டிக்காட்டி; என்னை சரிசெய்து கொள்ள உதவுகிறார்கள். அவர்களின் முனைப்பு,  என்னை  மேலும் முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுகிறது. அந்த வகையில், அதிகாரம் 26-இற்கான விளக்கவுரைக்கான வரைவு எழுத முனைந்த போது, என்னுள் பெருத்த தடுமாற்றம்! நான் எப்படி இதற்கு விளக்கவுரை எழுதுவது? சமைத்தது என்றால், எல்லா விலங்கையும்/உயிரையும் உண்பவன் ஆயிற்றே?!...

        உனக்கென்னடா அருகதை இருக்கிறது? - மனம் கேள்வி கேட்டது. மற்ற நாட்டினர் பலர் என்னிடம் "நீ இந்து ஆயிற்றே?! நீ மாட்டிறைச்சி உண்கிறாயே?!" என்று கேட்பர். எந்த தயக்கமும் இன்றி நான் இதுவரை கூறிய பதில் - "சாப்பிடுவது என்று முடிவெடுத்த பின், எந்த உயிர் என்ற பாகுபாடு ஏன்?!" என்பதே. ஆம், பன்றி-இறைச்சி துவங்கி; இங்கே வந்தபின் "ஒட்டக-இறைச்சி" வரை எந்த பாகுபாடும் எனக்கு இருந்ததில்லை! இவை மட்டுமல்ல; அணில்/வயல்-எலி/உடும்பு/காக்கை - இப்படி மேலும் பலவகையான இறைச்சியையும் உண்டிருக்கிறேன். இடையில் "ஸ்ரீ இராகவேந்திரர்" மேலிருந்த பக்தியால் 8 ஆண்டுகள் அசைவம் உண்ணாமல் இருந்திருக்கிறேன். பின், மீண்டும் 1991-இல் அசைவம் உண்ண ஆரம்பித்தேன்; நிறுத்தியதும்/ஆரம்பித்ததும் ஆழ்ந்த சிந்தனையால் நடக்கவில்லை. ஒரு மேலோட்டமான எண்ணத்தில் எழுந்த செயல் வடிவங்களே அவை! இந்த அதிகாரத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்தும், என் எழுத்தில்... 

           விளக்கவுரை எழுத அமர்ந்தபோது - மனம் பல கேள்விகள் கேட்டது. விளக்கவுரைப் பணியை ஆரம்பித்த பின், ஒரு குறளுக்கான விளக்கவுரையை குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே "முதல் வரைவு" எழுதுவது வழக்கம். ஆனால், குறள் எண் 0251-இற்கான விளக்கவுரையை என்னால் அப்படி எழுத முடியவில்லை. நான் இறைச்சி உண்பதை நிறுத்திய பின்தான் எழுதவேண்டும்! என்ற உறுதி கொண்டேன்.  முடியுமா?! என்ற கேள்வி எழுந்தது! ஏன் முடியாது? என்ற எதிர்கேள்வியும் எழுந்தது. ஏன் இப்படி? நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்த பின், உடனடியாய் நிறுத்தமுடியாதா?! நிச்சயம் முடியும்; ஆனால் தொடர்வது கடினம்!!" என்பது புகைத்தல்/மது - பழக்கங்களை பலமுறை நிறுத்த முனைந்து/தோற்ற எனக்கு நன்றாகத் தெரியும். இம்மாதிரியான நிறுத்தல்கள் ஆழ்ந்த சிந்தனையின் விளைவாய் இருக்கவேண்டும்! என்பது என் புரிதல்/அனுபவம். சரி, உடலின் வலிமைக்கு "புரதம் (Protein)" தேவையாயிற்றே?! - முட்டையாவது சாப்பிடலாமா?!...

    என்றோர் குழப்பம் எழுந்தது. ஆம், புரதம் முக்கியமாயிற்றே?! ஏன், அதற்கு மாற்று இருக்கவேண்டுமே?! இருக்கிறதா? - ஆராய்ந்தேன்; நண்பரிடம் கேட்டேன். "சோயா" போன்ற தானியங்களில் புரதம் இருப்பது தெரிந்தது. அடடே... பின் என்ன? சோயா உனக்கு மிகவும் பிடித்த ஒன்றாயிற்றே - மனம் தைரியம் சொன்னது. பிறகென்ன? மனதிடமும் மேலும் பெருகியது. நிறுத்துவது குறித்தான கவலை அனைத்தும் அகன்றது. எல்லா கேள்விகளும்/விடைகளும்; ஒரு வார கால இடைவெளியில் என்னுள் நிகழ்ந்தன. இறைச்சியை நிறுத்துவது என்ற உறுதியான முடிவு ஏற்பட்டது. அதன்படி, இறுதியாய் 0250-இற்கான விளக்கவுரையை பதிந்த இரவு - இறைச்சி உண்டுவிட்டு; அடுத்த நாள்தான் 0251-இற்கான விளக்கவுரையை எழுத ஆரம்பித்தேன். மனம் உற்சாகமாய் இருந்ததால், அன்று காலையிலேயே இந்த அதிகாரத்தில் 7 குறள்களுக்கு விளக்கவுரையை விரைந்து எழுதினேன். வழக்கத்திற்கும் மாறாய், அதிவிரைவில்...
  
      "நிகர்விளக்கமும்" உதித்தன. நிச்சயம், இனி இறைச்சி உண்ணும் பழக்கம் தொடராது என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்தப் பதிவைக் கூட "நிறுத்திய" அன்றே எழுதாமல், சில நாட்கள் கழித்து எழுதி; இந்த அதிகாரம் முடியும் இன்றுதான் பதிகிறேன். இன்றுடன் 10 நாட்கள் தான் ஆகின்றன எனினும்; என் நிலைப்பாட்டில், மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நம் பெருந்தகையின் அருள், என்னைத் தடம்புரளாமல் இட்டுச்செல்லும் என்ற திண்ணமும் இருக்கிறது. நம் பெருந்தகையின் பொதுமறையை, இப்படி அனுபவிக்க வேண்டும்! என்பதே என் விருப்பம். எல்லா விடயங்களும் சாத்தியமா?! என்றால்; நிச்சயமாய் சொல்ல முடியவில்லை. ஏனெனில், இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும். ஆனால், வெகுநிச்சயமாய் - நான் கடைப்பிடிக்காத விடயங்களை; கடைப்பிடிக்க முயல்வேன். எல்லாவற்றையும் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே என் நிலைப்பாடு! இல்லையேல், முடிந்தவற்றையாவது கடைப்பிடிக்கவேண்டும் என்ற... 

       வைராக்கியம் நிறைந்திருக்கிறது; பார்ப்போம். "புலால் உண்பது தவறு!" என்று பலரையும் போல் மேலோட்டமாய் சொல்லவில்லை நம் பெருந்தகை. அவருக்கே உரித்தான வகையில், அதை ஆழ சென்று சாட்டையால் அடித்து சொல்லி இருக்கிறார்.  முதல் குறளான 0251-ஐக் கவனியுங்கள். "தன்னூன் பெருக்கற்கு தான்பிறிது ஊனுண்பான்" என்று ஆரம்பிக்கிறார்! அட... அட... அட... சற்று பேச்சுத் தமிழில் சொல்லவேண்டும் எனில் "தான் ஒடம்ப வளக்கறதுக்கு; இன்னொரு ஒடம்ப தின்னுறவங்க" என்று சொல்லி இருக்கிறார். இப்படிப் பேச்சுத் தமிழில் நினைத்துப் பார்த்தாலேயே; அதன் ஆழம் புரியும். அத்துடன் நிற்கவில்லை! தொடர்ந்து "அப்படி உண்பது, எப்படி அருள் ஆகும்?!" என்று வினவி முடித்திருக்கிறார். இதுதான், நம் பெருந்தகையின் அனுபவத்தின்/சிந்தனையின் ஆழம். அதை முழுமையாய் உள்வாங்குவது தான் குறளைப் புரிந்து கொள்வதாகும். அதைக் கடைப்பிடிக்கப் பழகும் முன், முதலில், அவர் சொன்ன/சொல்ல முனைவதன்... 

            ஆழத்தை உள்வாங்கவேண்டும். அப்படி உள்வாங்கப் பழகினாலே போதும்! நிச்சயம், நம்முள் பல மாற்றங்கள் நிகழும். திருக்குறளை மனனம் செய்வதில் எனக்கு எந்த நம்பிக்கையும்/உடன்பாடில்லை. அதனாலேயே, அப்படி எவரும் மனனம் செய்து ஒப்பிப்பதைப் பார்த்து - நான் பெரிதும் வியப்பதில்லை. இது ஆணவம் அல்ல! அவர்களின் "மனனத் திறனை" அவமதிக்கும் செயல் அல்ல! அந்த மனனத் திறனை நான் நிச்சயம் மதிக்கிறேன். ஆனால், வெறும் மனனம் செய்து படிக்கும் கல்வியே; எந்தப் பயனையும் அளிக்காது என்பதைக் கூட பதிந்திருக்கிறேன். கல்வி என்பது மனனம் செய்து ஒப்பித்தலல்ல; அது படித்ததை உள்வாங்கி, புரிந்துகொண்டு செயலில்/வேலையில் பிரதிபலிப்பது. திருக்குறளும் அதுபோலவே! திருக்குறளை அறிவதென்பது, அதை படித்து ஒப்பித்தல் அல்ல; படித்ததை உள்வாங்கி, புரிந்துகொண்டு வாழ்வியலில்/சிந்தனையில் பிரதிபலிபப்து. எனவே, திருக்குறளை ஆழ உணர்வதே முக்கியம். என்னளவில்...

1330 குறள்களை மனனம் செய்ய முயல்வதை விட; 
சிலவற்றையாவது வாழ்வியலில்/சிந்தனையில் பிரதிபலித்தலே மகத்தானது!!!

பின்குறிப்பு: மேலே உள்ள புகைப்படங்கள், இறைச்சி உண்பதை நிறுத்தியது முதல், பெரும்பான்மையில் நான் உண்ணும் உணவுமுறை. வழக்கம்போல், நானே சமைத்தவை தான். இடையில் இரண்டு முறை, உணவுவிடுதியில் சைவ உணவுகளைச் சாப்பிட்டேன். சமைப்பதில் - குறிப்பாய், சைவ உணவைச் சமைப்பதிலும் - எனக்கெந்த சிரமமும் இல்லை. என்னுடைய சமையல் திறன் பற்றி கூட முன்பே பதிந்திருக்கிறேன்; ஒருவேளை, அந்த கலையை கற்றதெல்லாம் - தனிமையில் இருக்கும் என் வாழ்க்கைச் சூழலில் - இம்மாதிரியான வேளையில் கைகொடுக்கத் தானோ?! அப்படித்தான் இருக்கவேண்டும்; "Chaos Theory" போல், வாழ்வில் தொடர்பில்லாத விடயங்களே இல்லைதானே?!

அதிகாரம் 026: புலால் மறுத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 026 - புலால் மறுத்தல்

0251.  தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
           எங்ஙனம் ஆளும் அருள்

           விழியப்பன் விளக்கம்: தன்னுடைய தேகத்தை வலிமையாக வைத்துக்கொள்ள, பிறவுயிரின் 
           தேகத்தை உண்பவர்; எப்படி அருளைப் பழகமுடியும்?
(அது போல்...)
           தம்மக்களின் சொத்தை அளவுகடந்து பெருக்கிட, பொதுமக்களின் சொத்தை 
           அபகரிப்பவர்; எப்படி மக்களாட்சியை உணரமுடியும்?

0252.  பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
           ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பொருட்களைப் பேணாதவர்க்கு, அவற்றை அனுபவித்தல் இயலாது! 
           அதுபோல், இறைச்சியை உண்பவர்க்கு; அருளை அனுபவித்தல் இயலாது!
(அது போல்...)
           சுயத்தைத் தேடாதோர்க்கு, தன்னை உணர்தல் சாத்தியமில்லை! அதுபோல், வாய்மையை 
           மறந்தோர்க்கு; அறத்தை உணர்தல் சாத்தியமில்லை!
           
0253.  படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
           உடல்சுவை உண்டார் மனம்

           விழியப்பன் விளக்கம்: அழிவுகளை விளைவிக்கும், ஆயுதங்களைக் கொண்டவரின் உள்ளம் 
           போல்; பிறவுயிரின் உடலை சுவைத்து உண்பவர் மனமும், நல்லறத்தை நினைக்காது.
(அது போல்...)
           சீரழிவை உருவாக்கும், தீப்பழக்கத்தை உடையவரின் உறவு போல்; பிறரின் செல்வத்தை 
           அபகரித்து மகிழ்பவர் சிநேகமும், மனிதத்தை விதைக்காது.

0254.  அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
           பொருளல்ல தவ்வூன் தினல்

           விழியப்பன் விளக்கம்: அருளற்றது என்னவெனில், கொல்லாமை எனும் தத்துவத்தைக் 
           கைவிடுவது! அதுபோல், பொருளற்றது என்னவனில்; அப்படிக் கொல்லப்பட்ட 
           இறைச்சியை உண்பது!
(அது போல்...)
           முறையற்றது என்னவெனில், களவாமை எனும் ஒழுக்கத்தை மறப்பது! அதுபோல், 
           மனிதமற்றது என்னவெனில்; அப்படிக் களவாடிய, பொருளை அனுபவிப்பது!

0255.  உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
           அண்ணாத்தல் செய்யாது அளறு

           விழியப்பன் விளக்கம்: மாமிசத்தை உண்ணாத அறத்தில் உள்ளது, உயிரினங்களின் 
           நிலைத்தன்மை; புலால் உண்டால், நரகம் வாசல்திறந்து வெளியனுப்பாது.
(அது போல்...)
           நலிந்தோரை ஒடுக்காத நேர்மையில் உள்ளது, பொதுவுடைமயின் நிலைத்தன்மை; 
           நலிந்தோரை ஒடுக்கினால், சமுதாயம் மனமுவந்து ஆதரிக்காது.

0256.  தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
           விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

           விழியப்பன் விளக்கம்: உண்பதற்காக, உலகத்தார் உயிர்களைக் கொல்லமாட்டார்கள் 
           எனில்; பொருளாதார வளர்ச்சிக்காக, இறைச்சியை விற்பவரும் இருக்கமாட்டார்கள்.
(அது போல்...)
           பேராசைக்காக, பொதுமக்கள் விதிகளை மீறமாட்டார்கள் எனில்; கையூட்டைப் 
           பெறுவதற்கு, விதிமீறும் அதிகாரிகளும் இருக்கமாட்டார்கள்.

0257.  உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
           புண்ணது உணர்வார்ப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: றைச்சி என்பது, வேறோர் உயிரின் புண்ணிலிருந்து உருவான சதை; 
           என்ற உணர்வைப் பெற்றவராயின், இறைச்சியை உண்ணாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           கையூட்டு என்பது, சகமனிதர் ஒருவரின் வியர்வையிலிருந்து விளைந்த பணம்; என்ற 
           உணர்வைக் கொண்டவராயின், கையூட்டைப் பெறாமல் இருக்கவேண்டும்.

0258.  செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
           உயிரின் தலைப்பிரிந்த ஊன்

           விழியப்பன் விளக்கம்: குற்றசெயல்களின் ஆதியை உணர்ந்து, அவற்றைப் பிரிந்த
           அறிவுடையோர்; தலையைப் பிரிந்த ஓருயிரின், உடலை உண்ணமாட்டார்கள்.
(அது போல்...)
           அவநம்பிக்கையின் மூலத்தை ஆராய்ந்து, அதனை முறித்த பண்புடையோர்;
           உறவிலிருந்து முறிக்கப்பட்ட ஒருவரின், அந்தரங்கத்தை ஆராயமாட்டார்கள்.

0259.  அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
           உயிர்செகுத் துண்ணாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: பல்வேறு எரிபொருட்களைப் பெய்து, ஆயிரம் வேள்விகளைச் 
           செய்வதைவிட; ஓருயிரைக் கொன்று, அதன் உடலை உண்ணாதது சிறந்தது.
(அது போல்...)
           பல்வகை அறமல்லவற்றைச் செய்து, கோடிப் பணத்தைச் சேமிப்பதைவிட; ஒருவரை 
           ஏமாற்றி, அவர் பொருளை அபகரிக்காதது செல்வமானது.

0260.  கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
           எல்லா உயிருந் தொழும்

           விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாதோர் மற்றும் கொல்லப்பட்ட உயிரின் 
           இறைச்சியை உண்ண மறுப்போர் - இவர்களை, எல்லா உயிர்களும் கைகுவித்து 
           வணங்கும்.
(அது போல்...)
           மக்களை ஏமாற்றாதோர் மற்றும் ஏமாற்றியவரின் ஆட்சியை ஆதரிக்க மறுப்போர் - 
           இவர்களை, எல்லா பொதமக்களும் மனமுவந்து வாழ்த்துவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0260 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0260}

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாதோர் மற்றும் கொல்லப்பட்ட உயிரின் இறைச்சியை உண்ண மறுப்போர் - இவர்களை, எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும்.
(அது போல்...)
மக்களை ஏமாற்றாதோர் மற்றும் ஏமாற்றியவரின் ஆட்சியை ஆதரிக்க மறுப்போர் - இவர்களை, எல்லா பொதமக்களும் மனமுவந்து வாழ்த்துவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, ஏப்ரல் 17, 2016

குறள் எண்: 0259 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0259}

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

விழியப்பன் விளக்கம்: பல்வேறு எரிபொருட்களைப் பெய்து, ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிட; ஓருயிரைக் கொன்று, அதன் உடலை உண்ணாதது சிறந்தது.
(அது போல்...)
பல்வகை அறமல்லவற்றைச் செய்து, கோடிப் பணத்தைச் சேமிப்பதைவிட; ஒருவரை ஏமாற்றி, அவர் பொருளை அபகரிக்காதது செல்வமானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஏப்ரல் 16, 2016

குறள் எண்: 0258 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0258}

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

விழியப்பன் விளக்கம்: குற்றசெயல்களின் ஆதியை உணர்ந்து, அவற்றைப் பிரிந்த அறிவுடையோர்; தலையைப் பிரிந்த ஓருயிரின், உடலை உண்ணமாட்டார்கள்.
(அது போல்...)
அவநம்பிக்கையின் மூலத்தை ஆராய்ந்து, அதனை முறித்த பண்புடையோர்; உறவிலிருந்து முறிக்கப்பட்ட ஒருவரின், அந்தரங்கத்தை ஆராயமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

தெறி (2016)



      பெரும்பாலான விமர்சனங்கள் "தெறி" படத்திற்கு, ஏனோ "துப்பாக்கி" திரைப்படத்தைப் போன்ற ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன. ஒருவேளை அவர்களுக்கு "புலி" திரைப்படத்தின் பாதிப்பு இன்னமும் விலகவில்லையோ?! என்ற ஐயம் எழுகிறது. என்னளவில், இது "கத்தி" திரைப்படத்தின் தரத்தில் கூட இல்லை என்ற பார்வையே இருக்கிறது. அதற்கு மிக-முக்கிய காரணம், படத்தின் கதையில் நல்ல வாய்ப்புகள் இருந்தும் - திரைக்கதையில் அது வீணடிக்கப்பட்டு இருக்கிறது என்றே தோன்றுகிறது.


+ அம்சங்கள்:
  • முதலில், படத்தின் "நிஜ நாயகியாக" வலம்வரும் அந்தக் குட்டிப்பெண் (நடிகை மீனாவின் மகள் என்று அறிந்தேன்). நல்ல உடல்/வாய் மொழியால் அசத்தி இருக்கிறாள். குறைந்த இடைவெளியில், பல பிரபல நாயகர்கள் படத்தில் இம்மாதிரியான "குழந்தை பாத்திரப்படைப்பு" தொடர்ந்து வந்திருப்பினும் - இந்தப் பெண்ணும் மற்ற படங்களைப் போல், படத்தின் அச்சாணியாய் வலம்வருகிறாள். அவளின் பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கிறது. அவளுக்கு என் வாழ்த்துகள்.
  • பலரும் சொல்லி இருப்பது போல், விஜய்யின் நடிப்பில் சில முன்னேற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. துப்பாக்கி திரைப்படம் வெளிவரவில்லை எனில், நானும் அவர் நடிப்பைப் புகழ்ந்திருப்பேன். ஆனால், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு - இதில் அவர் நடிப்பு மெருகேறி இருப்பதாய் சொன்னால் - அது, அவரை இழிவு படுத்தும் "வஞ்சிப் புகழ்ச்சியாய்" அமையக்கூடும்.  
  • ராதிகா-சமந்தா இடையே வரும் அந்த ஒருசில நிமிட காட்சிகள். உண்மையில், நடைமுறை வாழ்க்கையில் இப்படியோர் உறவு வாய்க்காதா?! என்று ஒவ்வொரு பெண்ணும் ஏங்கும் வகையில் இருப்பது பாராட்டுக்குரியது.
  • சமந்தாவின் தந்தையிடம் விஜய் பேசும் வசனங்கள். (விஜய்யின் வழக்கமான உடல்மொழி என்னைப் பெரிதும் எரிச்சலடையச் செய்தாலும்) அருமையான கூறிய வசனங்கள். "துப்பாக்கி"பட விஜய் போல், அடக்கி நடித்திருந்தால் - இம்மாதிரியான காட்சிகள் மிகப்பலமானதாய் உணரப்பட்டு இருக்கும். 

- அம்சங்கள்:
  • அடுத்த காட்சியிலேயே, ஒரு பெண்ணை அரசு-வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வருவதற்கு "காமராஜை இணைத்து" ஒரு வசனம் பேசி இருப்பது பெருத்த அபத்தம். அதிலும், விஜயின் எரிச்சலூட்டும் அந்த "வாய் மொழியால்" அந்த வசனத்தை உச்சரித்து இருப்பது அபத்தத்தின் உச்சம். இதைவிட, ராதிகா "தான் வருகிறேன்!" என்று சொல்லும்போதே அடுத்த காட்சிகளை ஒரு சாமான்ய இரசிகன் கூட எதிர்பார்ப்பவையே! அந்த நிலையில், இப்படிப்பட்ட வசனங்கள் தேவையா? சிந்திப்பீர் படைப்பாளிகளே...
  • ஒரு சாதாரண வில்லன், நாயகனைப் பழி வாங்குவதற்காய் அவனின் குடும்பத்தை - அதிலும், ஒரு குழந்தையை அப்படிக் கொடுமைப்படுத்தும் விதத்தில் காண்பித்து இருப்பதை ஏற்க முடியவில்லை. ஒருவேளை, சாதாரண சண்டைக்கு கூட - குடும்பத்தில் இருக்கும் பெரியோர்கள், குழந்தைகளிடம் தம் கோபத்தை வெளிப்படுத்துவது தான் இப்படிப்பட்ட காட்சிகளுக்கு அடிப்படை ஆகிறதோ?
  • இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு நாயகனுக்கு "வீரம் வருவதற்காய்" - ஒரு பெண்ணை (குறிப்பாய் தங்கை எனும் பாத்திரத்தில் அல்லது தங்கையாய் ஏற்றுக்கொள்ளப்படும் பாத்திரப் படைப்பில்) திரைப்படங்களில் கற்பழிக்கப் போகிறார்கள்? 1991-இல் நான் எழுதிய புதுக்கவிதை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது! அசிங்கமாய் இருக்கிறது திரைப்பட படைப்பாளிகளே! இப்படி கறைபடிந்த வகையில், திரைக்கதை அமைக்கும் உங்களின் மனம் என்றுதான் மாறிடும்? அதென்ன... ஒரு ஆணின் வீரத்தை உணர்த்த "ஒரு பெண்ணை அவமானப்பட" வைக்கும் நிகழ்வு? அதிலும், விஜய் போன்ற பிரபலங்களின் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் வருவது மிகவும் தவறு.
  • இப்படிப்பட்ட காட்சிகள் தவறு என நான் கூறுவதற்கு காரணம், அந்த காட்சி தவிர - நாயகனுக்கு - வில்லனாய் வருபவரிடம் எந்த தொடர்பும் இல்லை. அந்த காட்சி தான், நாயகன் வேறோர் ஊருக்கும் சென்று/மறைந்து வாழும் வாழ்க்கைக்கு ஆதாரம் எனும் நிலையில் - அந்த காரணிகளை எப்படியெல்லாம் வலுவூட்டி இருக்கலாம்?! அடப் போங்கய்யா!... என்று வேதனைதான் கொள்ள முடிகிறது. 
  • எண்ணபின்னூட்டமாய் (Flash Back) நாயகனின் முற்பகுதி வாழ்க்கையை நினைவு கூறும்போது, அவரைத் திருமண வாழ்க்கையை நேரடியாய் ஆரம்பித்து இருக்கவேண்டும். அப்படி இருந்திருப்பின், நாயகிக்கு படத்திற்கு வலிவூட்டும் வகையில் திரைக்கதை அமைத்து இருக்கலாம். மாறாய், பலபடங்களையும் போல் - தேவையற்று "நிழல் கதாநாயகி"யாய் வருகிறார். ஆடலுக்கும்/பாடலுக்கும் தானா ஒரு பெண் பயன்படவேண்டும்? "ராஜா-ராணி" போல் ஒரு நாயகியை மரியாதையாய் காண்பிக்க முடியாதா? "தாரைத் தப்பட்டை" போல் ஒரு நாயகியின் - நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாய காட்சி அமைப்புகள் வைக்கவே முடியாதா? அடப் போங்கய்யா...!
  • ஒரு பிரபல நடிகை "ஆசிரியையாய்" வரும்போது அவரை "கவர்ச்சியான உடையில்/வகையில் தான் காட்டவேண்டுமா?" - ஒரு கண்ணியமான ஆசிரியையாய் காண்பிக்கவே முடியாதா? இந்த இலக்கணத்தை எவர் வகுப்பது? படத்தில், இன்னுமோர் பெண்ணைத் துகிலுரித்து "கவர்ச்சியாய்" காண்பிப்பது தான் நோக்கம் எனின் "வேறோர் பாத்திரப் படைப்பாய்" சொல்லி இருக்கலாம். அருவருப்பாய் இருக்கிறது படைப்பாளிகளே! கொஞ்சம் செவி மடுங்கள்.

       இன்னும் நிறைய எழுதிக்கொண்டே செல்லலாம்! அது ஏனோ, நான் விஜய்க்கு எதிரானவன் என்ற உணர்வைக் கொடுத்துவிடக் கூடும். ஆனால், உண்மை அதுவல்ல. இத்தனை பிரபலமான அவர் மேலும் நல்ல-படங்களில்/நல்ல-பாத்திரப்படைப்பில் நடிக்கவேண்டும் என்ற ஆவல் தான் காரணம். "இன்னுமோர் ரஜினிகாந்தாய்" ஆக விரும்புவதில் தவறில்லை! எல்லா துறையில் இருப்பவருக்கும் - அதில் உச்சம் தொட்டவர் போல் வளரவே ஆசை இருக்கும். ஆனால், ரஜினிகாந்த் எனும் அந்த நடிகர் வேறொருவராய் ஆகவேண்டும் என்று திரைத்துறைக்கு வரவில்லை! திரைக்குடும்பத்தின் ஆதரவில், திரைத்துறைக்கு வராத அவரே; அவராய் நடித்தபோது, ஏன் விஜய் போன்ற நடிகர்களால் முடியவில்லை?! ரஜினிகாந்தின் சுயம்தான் அவரின் முழுப்பலம். சுயம் இல்லாத எதுவும் நிலைத்தல் சாத்தியமில்லை. அந்த ஆசை உள்ள எல்லா நடிகர்களுக்குமே இது பொருந்தும். இதை உணர்ந்தால், விஜய்யை நல்ல நடிகராய் பார்க்கலாம்.

நான் எல்லாப் படங்களுக்கும் என் பார்வையை எழுவதில்லை! 
விஜய் படங்களுக்கு எழுதுகிறேன் என்றால்...
அவர் மேல் இன்னும் தொடரும் நம்பிக்கை மட்டுமே காரணம்!!

நாம் விரும்புபவர்களை அணுகும் விதம்...


இது மொழி வெறியல்ல! "மொழி உணர்வு"...



     தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஓர் விளம்பரம்; பலரும் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் உரையாடலைக் கவனியுங்கள்:

பேட்டி காண்பவர்: Sir உங்க mass of theme?
பேட்டி கொடுப்பவர்: Tough and Stylish.

      "உங்க" என்ற அந்த ஒற்றைச்சொல் தவிர, மற்ற எல்லா சொற்களும் ஆங்கிலம். அதைத் தொடர்ந்து பின்னணியில் சொல்லப்படும் வசனம் முழுக்க முழுக்க "ஆங்கிலச் சொற்கள்". நான் பல “ஆங்கிலம் தாய்மொழி அல்லாத” மேலை நாடுகளில் கவனித்து இருக்கிறேன். அவர்களின் எல்லா “வியாபார விளம்பரங்களும்” முழுக்க/முழுக்க அவர்களின் தாய்மொழியிலேயே இருக்கும். தவிர்க்கமுடியாத காரணத்தால், தாய்மொழியில் விளம்பரம் கொடுக்கமுடியவில்லை எனில்…

       தவறாமல், அவர்கள் மொழியில் கீழே “எழுத்து வடிவில்” மொழி பெயர்க்கப்படும்!

        ஏனோ... நிச்சயமாய், இது "தொலைக்காட்சி நிறுவனங்களின் தவறு மட்டும்" என்று நான் உணரவில்லை. நம் உணர்வுகளை/செயல்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்றே நம்புகிறேன். இதை நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பழகினால் மட்டுமே மாற்ற முடியும்.

இது மொழி வெறியல்ல! இது "முழுக்க முழுக்க" மொழி உணர்வு!!

வெள்ளி, ஏப்ரல் 15, 2016

பிறிதொன்றன் புண்ணது (குறள் எண்: 0257)



         இதுவரை விளக்கவுரை எழுதிய அதிகாரங்களுள், நான் மிகவும் அனுபவித்து/சிந்தித்து எழுதும் அதிகாரம் "புலால் மறுத்தல்" என்றால் அது மிகையல்ல. மேலும் இந்த அதிகாரம், என்னுள் ஒரு பெருத்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அதிகாரத்தின் மற்ற குறள்களைப் போல் 0257-இற்கான விளக்கவுரையையும் மிகுந்த ஆர்வத்துடன் எழுதினேன். அதில் "பிறிதொன்றன் புண்ணது" என்றோர் சொற்றொடர் வருகிறது. இதற்கு நேரடியான அர்த்தம் "வேறொரு உயிரின் புண்" என்பதே. அதே அடிப்படையில் தான் பின்வரும் அர்த்தங்களைப் பார்க்க முடிந்தது. 
  • பரிமேலழகர்: புலாலாவது பிறிதோர் உடம்பின் புண்
  • மு. வரதராசன்: அப்புலால் வேறோர் உயிரின் புண்
  • மு. கருணாநிதி:  புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண்
  • சாலமன் பாப்பையா: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்
          மேற்குறிப்பிட்ட சான்றோர்கள் சொல்லி இருக்கும் அர்த்தத்தில் எந்த தவறும் இல்லை; அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதை இன்னும் அழுத்தமாய் சொல்லி இருக்கலாம்! என்று தோன்றியது. மேலும் அழுத்தமாய், எப்படி சொல்லலாம்? என்று ஆழ யோசிக்கலானேன். உடனே, ஒரு விளக்கம் வந்தது. நான் எழுதிய விளக்கம்...

இறைச்சி என்பது வேறோர் உயிரின், புண்ணிலிருந்து உருவான சதை

       ஆம்! புண் என்பது வெட்டப்பட்டு (அல்லது) அறுக்கப்பட்டு உருவாவது. மேலும், புண் என்பது சதையை "பிய்த்தெறிந்தது போன்ற" தோற்றத்தை வெளிப்படுத்தும். இப்படி சதை வெளிப்படும் புண்ணைப் பார்ப்பது, நல்ல உணர்வைக் கொடுக்காது. அதனால் தான், புண்ணை மறைக்க முயல்வது மனித இயல்பாய் இருக்கிறது.  எனவே, இறைச்சி என்ற சொல்லைக் கேட்கும் போது, புண்ணை பார்க்கும்போது வெளிப்படும் "அதே" உணர்வு எழவேண்டும் என்று தோன்றியது. மேலும், அந்த அடிப்படையில் தான் பெருந்தகையும்; இறைச்சியைப் புண்ணுடன் தொடர்பு படுத்தி இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன். இறைச்சி என்பது "புண்ணைப் போல்" ஒரு உயிர் வெட்டப்படும் (அல்லது) அறுக்கும் போது உருவாவது; அந்நிகழ்வு புண்ணையும் தாண்டி ஒரு உயிரின் சதையோடு நேரடி தொடர்புடையது. எனவே தான், என்னுடைய விளக்கவுரையை இவ்வாறு எழுதினேன். என் புரிதல் உங்களுக்கு பரிமாறப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

குறள் எண்: 0257 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0257}

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

விழியப்பன் விளக்கம்: இறைச்சி என்பது, வேறோர் உயிரின் புண்ணிலிருந்து உருவான சதை; என்ற உணர்வைப் பெற்றவராயின், இறைச்சியை உண்ணாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
கையூட்டு என்பது, சகமனிதர் ஒருவரின் வியர்வையிலிருந்து விளைந்த பணம்; என்ற உணர்வைக் கொண்டவராயின், கையூட்டைப் பெறாமல் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஏப்ரல் 14, 2016

குறள் எண்: 0256 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0256}

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

விழியப்பன் விளக்கம்: உண்பதற்காக, உலகத்தார் உயிர்களைக் கொல்லமாட்டார்கள் எனில்; பொருளாதார வளர்ச்சிக்காக, இறைச்சியை விற்பவரும் இருக்கமாட்டார்கள்.
(அது போல்...)
பேராசைக்காக, பொதுமக்கள் விதிகளை மீறமாட்டார்கள் எனில்; கையூட்டைப் பெறுவதற்கு, விதிமீறும் அதிகாரிகளும் இருக்கமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், ஏப்ரல் 13, 2016

குறள் எண்: 0255 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0255}

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

விழியப்பன் விளக்கம்: மாமிசத்தை உண்ணாத அறத்தில் உள்ளது, உயிரினங்களின் நிலைத்தன்மை; புலால் உண்டால், நரகம் வாசல்திறந்து வெளியனுப்பாது.
(அது போல்...)
நலிந்தோரை ஒடுக்காத நேர்மையில் உள்ளது, பொதுவுடைமயின் நிலைத்தன்மை; நலிந்தோரை ஒடுக்கினால், சமுதாயம் மனமுவந்து ஆதரிக்காது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை