திங்கள், நவம்பர் 30, 2015

அதிகாரம் 012: நடுவு நிலைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 012 - நடுவு நிலைமை

0111.  தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
           பாற்பட்டு ஒழுகப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி இருக்க முடிந்தால்; 
           அந்த நடுநிலைமை எனும் ஒப்பற்ற தகுதி, நன்மைப் பயக்கும்.
(அது போல்...)
           தன்கட்சி/எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி மக்களாட்சி அளித்தால்; அந்த சார்பின்மை
           அறிந்த இணையற்ற அரசாட்சி, மக்களைக் காக்கும்.

0112.  செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
           எச்சத்திற் கேமாப்பு உடைத்து

           விழியப்பன் விளக்கம்: நடுநிலைமை கொண்டவரின் சுவடுச்-செல்வம் அழிவில்லாதது; 
           அவரைப் பின்தொடர்வோர்க்கும், வலிமையளிக்கும் தன்மையுடையது.
(அது போல்...)
           பொதுவுடைமை காப்பவரின் ஆட்சிக்காலம் முடிவில்லாதது; அவரின் தொண்டர்களுக்கும்,
           ஆளுமை அளிக்கக்கூடியது.

0113.  நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
           அன்றே யொழிய விடல்

           விழியப்பன் விளக்கம்: நன்மையையே தந்திடினும், நடுநிலைமையைத் தவறுவதால் 
           கிடைக்கும் செல்வத்தை, அன்றே அழித்திடல் வேண்டும்.
(அது போல்...)
           மகிழ்ச்சியையே அளித்திடினும், அறத்தை இழப்பதால் கிடைக்கும் உறவை; அக்கணமே 
           அறுத்தெறிதல் வேண்டும்.

0114.  தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
           எச்சத்தாற் காணப்ப படும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் நடுநிலைமை உடையவரா? இல்லாதவரா?? என்பது, அவர் 
           விட்டுச்செல்லும் தாக்கத்தால் அறியப்படும்.
(அது போல்...)
           ஓராட்சி மக்கள்-நலனைப் பேணியதா? இல்லையா?? என்பது, அவ்வாட்சியைத்
           தொடர்ந்து நடத்துவோரால் அறியப்படும்.
          
0115.  கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
           கோடாமை சான்றோர்க் கணி

           விழியப்பன் விளக்கம்: அழிவும்/ஆக்கமும் இல்லாத, வாழ்க்கை ஏதுமில்லை என்பதால்;
           உள்ளத்தால்  நடுநிலைமையை தவறாதிருத்தலே, சான்றோர்க்கு அணிகலனாகும்.
(அது போல்...)
           தோல்வியும்/வெற்றியும் இல்லாத, விவாதம் எதுவுமில்லை என்பதால்; விவாதத்தில்
           சாடுதலைத் தவிர்த்தலே, வாதிடுவோர்க்கு சிறப்பாகும்.

0116.  கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
           நடுவொரீஇ அல்ல செயின்

           விழியப்பன் விளக்கம்: தன்னுள்ளம் நடுநிலைமையைத் தவிர்த்து, தகாதவற்றைச் செய்தால்; 
           "அழியப்போகிறோம்" என்று நாம் உணரவேண்டும்.
(அது போல்...)
           தம்மாட்சி மக்கள்-நலனை மறந்து, ஊழல்களைப் பெருக்கினால்; "வீழப்போகிறோம்" 
           என்று அக்கட்சியினர் உணரவேண்டும்.

0117.  கெடுவாக வையாது உலகம் நடுவாக 
           நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

           விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையோடு வாழ்ந்தும், வறுமையில் வாடுபவரை; ஒருபோதும் 
           - இவ்வுலகம் கெடுதலாய் எண்ணி, தூற்றாது.
(அது போல்...)
           அறநெறியோடு அரசாண்டும், சிக்கலில் இருப்போரை; எந்நிலையிலும் - மக்கள் தீயவராய்  
           எண்ணி, பேசமாட்டார்கள்.

0118.  சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
           கோடாமை சான்றோர்க் கணி

           விழியப்பன் விளக்கம்: இரண்டுபுறமும் சமம்செய்து, அளவை நிர்ணயிக்கும் துலாக்கோல் 
           போல்; ஒருபக்கம் சாராமல் இருத்தல், சான்றோர்க்கு அழகு.
(அது போல்...)
           ஆண்/பெண் பாகுபாடின்றி, குழந்தைகளை நடத்தும் தாயைப் போல்; பாலின 
           வேறுபாடின்றி இருத்தல், சமுதாயத்துக்கு சிறப்பு.

0119.  சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா 
           உட்கோட்டம் இன்மை பெறின்

           விழியப்பன் விளக்கம்:  ஒருபுறம் சாராமல், உள்ளத்தில் அறத்தை மீறாமல் 
           இருக்கமுடிந்தால் - சொல்லிலும் அறமீறல் இருக்காது; அதுவே, நடுநிலைமையாம்.
(அது போல்...)
           ஒருபாலினம் சாராமல், மகன்/மகள் பிரிவினை இல்லாமல் இருக்கப்பெற்றால் -
           வளர்ப்பிலும் பிரிவினை இருக்காது; அவர்களே சிறந்த-பெற்றோராவர்.

0120.  வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
           பிறவும் தமபோல் செயின்

           விழியப்பன் விளக்கம்:  நடுநிலையோடு - பிறர் பொருளையும், தம் பொருளாய் கருதுவதே; 
           வியாபாரம் செய்வோருக்கு, சிறந்த வியாபார யுக்தியாகும். 
(அது போல்...)
           பேரன்போடு - பிற குழந்தைகளையும், நம் குழந்தைகளாய் பேணுவதே; குழந்தை 
           வளர்ப்போர்க்கு, தேவையான வளர்ப்பு நெறியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0120 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0120}

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோல் செயின்

விழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு - பிறர் பொருளையும், தம் பொருளாய் கருதுவதே; வியாபாரம் செய்வோருக்கு, சிறந்த வியாபார யுக்தியாகும். 
(அது போல்...)
பேரன்போடு - பிற குழந்தைகளையும், நம் குழந்தைகளாய் பேணுவதே; குழந்தை வளர்ப்போர்க்கு, தேவையான வளர்ப்பு நெறியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, நவம்பர் 29, 2015

குறள் எண்: 0119 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0119}

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

விழியப்பன் விளக்கம்: ஒருபுறம் சாராமல், உள்ளத்தில் அறத்தை மீறாமல் இருக்கமுடிந்தால் - சொல்லிலும் அறமீறல் இருக்காது; அதுவே, நடுநிலைமையாம்.
(அது போல்...)
ஒருபாலினம் சாராமல், மகன்/மகள் பிரிவினை இல்லாமல் இருக்கப்பெற்றால் - வளர்ப்பிலும் பிரிவினை இருக்காது; அவர்களே சிறந்த-பெற்றோராவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, நவம்பர் 28, 2015

குறள் எண்: 0118 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0118}

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க் கணி

விழியப்பன் விளக்கம்: இரண்டுபுறமும் சமம்செய்து, அளவை நிர்ணயிக்கும் துலாக்கோல் போல்; ஒருபக்கம் சாராமல் இருத்தல், சான்றோர்க்கு அழகு.
(அது போல்...)
ஆண்/பெண் பாகுபாடின்றி, குழந்தைகளை நடத்தும் தாயைப் போல்; பாலின வேறுபாடின்றி இருத்தல், சமுதாயத்துக்கு சிறப்பு.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, நவம்பர் 27, 2015

குறள் எண்: 0117 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0117}

கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையோடு வாழ்ந்தும், வறுமையில் வாடுபவரை; ஒருபோதும் - இவ்வுலகம் கெடுதலாய் எண்ணி, தூற்றாது.
(அது போல்...)
அறநெறியோடு அரசாண்டும், சிக்கலில் இருப்போரை; எந்நிலையிலும் - மக்கள் தீயவராய் எண்ணி, பேசமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், நவம்பர் 26, 2015

குறள் எண்: 0116 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0116}

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

விழியப்பன் விளக்கம்: தன்னுள்ளம் நடுநிலைமையைத் தவிர்த்து, தகாதவற்றைச் செய்தால்; "அழியப்போகிறோம்" என்று நாம் உணரவேண்டும்.
(அது போல்...)
தம்மாட்சி மக்கள்-நலனை மறந்து, ஊழல்களைப் பெருக்கினால்; "வீழப்போகிறோம்" என்று அக்கட்சியினர் உணரவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், நவம்பர் 25, 2015

குறள் எண்: 0115 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0115}

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி

விழியப்பன் விளக்கம்: அழிவும்/ஆக்கமும் இல்லாத, வாழ்க்கை ஏதுமில்லை என்பதால்; உள்ளத்தால்  நடுநிலைமையை தவறாதிருத்தலே, சான்றோர்க்கு அணிகலனாகும்.
(அது போல்...)
தோல்வியும்/வெற்றியும் இல்லாத, விவாதம் எதுவுமில்லை என்பதால்; விவாதத்தில் சாடுதலைத் தவிர்த்தலே, வாதிடுவோர்க்கு சிறப்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், நவம்பர் 24, 2015

குறள் எண்: 0114 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0114}

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்

விழியப்பன் விளக்கம்: ஒருவர் நடுநிலைமை உடையவரா? இல்லாதவரா?? என்பது, அவர் விட்டுச்செல்லும் தாக்கத்தால் அறியப்படும்.
(அது போல்...)
ஓராட்சி மக்கள்-நலனைப் பேணியதா? இல்லையா?? என்பது, அவ்வாட்சியைத் தொடர்ந்து நடத்துவோரால் அறியப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், நவம்பர் 23, 2015

குறள் எண்: 0113 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0113}

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

விழியப்பன் விளக்கம்: நன்மையையே தந்திடினும், நடுநிலைமையைத் தவறுவதால் கிடைக்கும் செல்வத்தை, அன்றே அழித்திடல் வேண்டும்.
(அது போல்...)
மகிழ்ச்சியையே அளித்திடினும், அறத்தை இழப்பதால் கிடைக்கும் உறவை; அக்கணமே அறுத்தெறிதல் வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, நவம்பர் 22, 2015

குறள் எண்: 0112 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0112}

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து

விழியப்பன் விளக்கம்: நடுநிலைமை கொண்டவரின் சுவடுச்-செல்வம் அழிவில்லாதது; அவரைப் பின்தொடர்வோர்க்கும், வலிமையளிக்கும் தன்மையுடையது.
(அது போல்...)
பொதுவுடைமை காப்பவரின் ஆட்சிக்காலம் முடிவில்லாதது; அவரின் தொண்டர்களுக்கும், ஆளுமை அளிக்கக்கூடியது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, நவம்பர் 21, 2015

குறள் எண்: 0111 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0111}

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்

விழியப்பன் விளக்கம்: வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி இருக்க முடிந்தால்; அந்த நடுநிலைமை எனும் ஒப்பற்ற தகுதி, நன்மைப் பயக்கும்.
(அது போல்...)
தன்கட்சி/எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி மக்களாட்சி அளித்தால்; அந்த சார்பின்மை அறிந்த இணையற்ற அரசாட்சி, மக்களைக் காக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, நவம்பர் 20, 2015

அதிகாரம் 011: செய்ந்நன்றி அறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்

0101.  செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
           வானகமும் ஆற்றல் அரிது

           விழியப்பன் விளக்கம்: நாம் உதவிடாத ஒருவர் செய்த உதவிக்கு; இந்த மண்ணுலகும், 
           விண்ணுலகும் சேர்ந்தே கொடுத்தும் - இணையாகாது.
(அது போல்...)
           நம்மிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராத தாய்க்கு; நம் உடலையும், உயிரையும் 
           சேர்ந்தே கொடுத்தும் - பிரதிபலனாகாது.

0102.  காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
          ஞாலத்தின் மாணப் பெரிது

           விழியப்பன் விளக்கம்: வேறுவழியே இல்லாத வேளையில், செய்யப்பட்ட உதவி எத்தனை 
           சிறியதாயினும்; அது மண்ணுலகை விட மிகப்பெரியது.
(அது போல்...)
           வாழ்வே முடிந்ததான சூழலில், மறுவாழ்வளித்த உறவு எவ்வளவு விலகியிருப்பினும்; அது 
           எல்லா உறவுகளிலும் முதன்மையானது.

0103.  பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
           நன்மை கடலின் பெரிது

           விழியப்பன் விளக்கம்: பிரதிபலனை எதிர்பாராதோர் செய்த உதவியின், நேயத்தை 
           ஆராய்ந்தால்; அதன் நன்மை, கடலை விடப் பெரியதாகும்.
(அது போல்...)
           சுயநலத்தை நாடாதோர் ஆண்ட ஆட்சியின், தன்மையைப் பின்பற்றினால்; அதன் 
           விளைவு, வல்லரசை விடச் சிறந்திருக்கும்.

0104.  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
           கொள்வர் பயன்தெரி வார்

           விழியப்பன் விளக்கம்: தினையரிசியின் அளவுக்கு செய்யப்பட்ட நன்றியையும்; அதன் 
           பயனை உணர்ந்தவர், பனையின் அளவாய் கருதுவர்.
(அது போல்...)
           பொருளற்ற குழந்தையின் மழலையைக் கூட; குழந்தையை ஈன்றெடுத்த தாய், 
           இதிகாசங்களுக்கு இணையாய்ப் போற்றுவாள்.
          
0105.  உதவி வரைத்தன்று உதவி உதவி 
           செயப்பட்டார் சால்பின் வரைத்து

           விழியப்பன் விளக்கம்: உதவியோருக்கு உதவும் மறு-உதவி, பெறப்பட்ட உதவியைச் 
           சார்ந்ததன்று; மாறாய், உதவியைப் பெற்றவரின் பண்பைச் சார்ந்தது.
(அது போல்...)
           ஈன்றெடுத்தவளுக்கு செய்யும் பரியுபகாரம், சுமக்கப்பட்ட காலத்தைச் சார்ந்ததன்று; 
           மாறாய், உயிரைப் பெற்றவரின் வாழ்நாளைச் சார்ந்தது.

0106.  மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
           துன்பத்துள் துப்பாயார் நட்பு

           விழியப்பன் விளக்கம்: மனிதத்தில் குறையற்றோரை மறவாதீர்! அதுபோல், இன்னல்களில் 
           பங்கெடுத்தோரின் நட்பை விலக்கிடாதீர்!!
(அது போல்...)
           ஆட்சியில் குறையுள்ளோரை ஆதரிக்காதீர்! அதுபோல், மக்களில் ஒருவரானவரின் 
           சின்னத்தை மறவாதீர்!!

0107.  எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் 
           விழுமந் துடைத்தவர் நட்பு

           விழியப்பன் விளக்கம்: அறமறிந்தோர் - தம்முடைய துன்பத்தை நீக்கியவரின் நட்பை; 
           பிறக்கமுடிந்த ஏழு பிறப்பிலும் உணர்வர்.
(அது போல்...)
           அன்பறிந்தோர் - தம்முடைய உயிரைத் தாங்கியவளின் உறவை; பிறக்கமுடிந்த எல்லாப் 
           பிறப்புகளிலும் வேண்டுவர்.

0108.  நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
           அன்றே மறப்பது நன்று

           விழியப்பன் விளக்கம்: பிறர் செய்த நன்மையை மறத்தல் நன்மையன்று; ஆனால், அவர் 
           செய்த தீமைகளை அக்கணமே மறப்பது நன்மையானது.
(அது போல்...)
           நல்லாட்சி செய்பவரை தேர்ந்தெடுக்க தவறுதல் அறமன்று; ஆனால், முறையற்ற 
           ஆட்சியர்களை அத்தேர்தலோடு தவிர்த்தல் அறமாகும்.

0109.  கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
           ஒன்றுநன்று உள்ளக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் செய்திட்ட நன்மையொன்றை நினைத்தால்; அவர் 
           கொன்றதற்கு இணையான துன்பமே செய்தாலும், அந்த துன்பம் மறையும்.
(அது போல்...)
           ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால், மிகத்தீவிரமான கடவுள் மறுப்புக் 
           கொள்கைகளும்; இருந்த தடமறியாது அழியும்

0110.  எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
           செய்ந்நன்றி கொன்ற மகற்கு

           விழியப்பன் விளக்கம்: எந்த நல்வினைகளை மறந்தார்க்கும் மீள்-வழி உண்டாம்; ஆனால்,
           ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு மீள்-வழியில்லை.
(அது போல்...)
           எந்த உறவை உதறியவர்க்கும் விமோச்சனம் உண்டாம்; ஆனால், தன் பெற்றோரை
           உதறியவர்க்கு விமோச்சனம் ஏதுமில்லை.
*****

குறள் எண்: 0110 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0110}

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

விழியப்பன் விளக்கம்: எந்த நல்வினைகளை மறந்தார்க்கும் மீள்-வழி உண்டாம்; ஆனால், ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு மீள்-வழியில்லை.
(அது போல்...)
எந்த உறவை உதறியவர்க்கும் விமோச்சனம் உண்டாம்; ஆனால், தன் பெற்றோரை உதறியவர்க்கு விமோச்சனம் ஏதுமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

"கொன்றன்ன இன்னா" - என் நிகர்-விளக்க குறிப்பு (குறள் எண்: 0109)   "கொன்றன்ன இன்னா செயினும்" என்ற குறள் எண் 0109-இற்கான என்னுடைய விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் எப்போதும் போல், என்னுடைய நிகர்-விளக்கத்தை...

தக்க-சான்றுடன் ஓர்முறை கடவுள் தோன்றினால்; ஆத்திகர்களைக் காயப்படுத்தும் 
எல்லா வாதங்களும், இருந்த தடமறியாது அழியும்

என்று எழுதியிருந்தேன். அதை எழுதியபோதே, அது பலருக்கும் தவறுதலான பொருளைத் தரக்கூடும் என்று நம்பினேன். இருப்பினும், அதையும் தாண்டி, என்னுடைய பார்வை புரியக்கூடும் என்றுமோர் நம்பிக்கையும் இருந்தது. அதைப் படித்துவிட்டு, நான் முன்பே குறிப்பிட்டிருக்கும் என் "குறளும் கோவால்-நட்பும்" என்ற வாட்ஸ்-ஆப் குழுவில் நண்பர்கள் "பலத்த" எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். மிக-நீண்ட விவாதத்திற்கு பின்னரும் என் பார்வை "கடவுள் மறுப்பு சார்ந்தது அல்ல! அப்படி தோன்றினால், மறுப்பவர்கள் கூட, கடவுளை ஒப்புக்கொள்வார்கள்!!" என்பதை...

         அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை! என் பாலும்; என் எழுத்தின் பாலும் அதீத அன்பும்/அக்கறையும் கொண்ட நட்புகள். எனவே, அவர்களின் வேண்டுகோளை மறுக்க விரும்பவில்லை; ஆனால், அதை மாற்றி விடுகிறேன் என்று உறுதி தந்ததோடு; என்னுடைய பார்வை புரியாதது கொடுத்த "வலியுடனும்/வேதனையுடனும்" தான் அதை செய்கிறேன் என்பதையும் குறிப்பிட்டேன். ஒரு நட்பு "தோன்றினால்" என்பது எதிர்மறைப் பொருளைத் தருகிறது! அதனால் தான், அது தவறாகப் படுகிறது - என்பதை நேரடியாக சொல்லி இருந்தது எனக்கு பிடித்திருந்தது. அதுதான் சிக்கல் இங்கே; கடவுள் நம்பிக்கை என்று வந்துவிட்டால் "எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!" என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான், எனக்கும் கடவுள் நம்பிக்கை இருப்பினும்" - பல நேரங்களில் - அவர்களில் இருந்து வேறுபட்டு இருப்பதாய் ஒரு பிம்பம் இருக்கிறது. அதனால் தான் "இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு..." மற்றும்...

          "இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?..." என்ற தலையங்கங்கள் எழுத முடிந்தது. என் கடவுள் நம்பிக்கையை - என்னுடைய புரிதல் மற்றும் எனக்கு தெரிந்த உண்மையின் - அடிப்படையில் வரையறுக்கவே விரும்புகிறேன். இதையெல்லாம் விளக்கமாய் சொல்லி, அவர்களிடம் வாதிடவில்லை! இதைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அதை நம் "பெருந்தகையின் பொதுமறை" சார்ந்த இந்த பிரிவில் எழுத விரும்பவில்லை. அதை பொதுத்தளத்தில் ஒரு தலையங்கமாய் பின்னர் எழுதுகிறேன். எனவே, என் நிகர்-விளக்கத்தை...  

ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால்; மிகத்தீவிரமான கடவுள் மறுப்புக் 
கொள்கைகளும், இருந்த தடமறியாது அழியும்

என்று மாற்றவிருப்பதை மட்டும் சுட்டிக்காட்டி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஒரு நட்பு "கடவுள் மறுப்பு, உன் நோக்கமல்ல என்பது எனக்குப் புரிகிறது. இருப்பினும், இவ்விளக்கமே 

          (மாற்றாய் சொன்னது) மிகச் சரியானதும், பொருத்தமானதும்" என்று ஆமோதித்தது. அதே நட்பு தொடர்ந்து "காரணம், தக்க சான்றுகளுடன் ஒருபோதும் கடவுள் எக்காலத்திலும் காட்சியளிக்கப் போவதில்லை. ஆனால், எந்த மனிதனுக்குள்ளும் அடுத்த உயிர்க்கு நன்மை செய்யும் வாய்ப்பு இல்லாமல் போகப்போவதில்லை (அதில் தான், கடவுள் இருக்கிறார் என்ற பொருளில் ஒரு வாதம் இருந்ததால், இதைக் குறிப்பிட்டது அந்த நட்பு). கடவுள் காட்சியளிக்க வேண்டும் என்கிற ஆசையோ அல்லது எதிர்பார்ப்போ இரண்டுமே அறியாமையின் வெளிப்பாடாய் அமைந்துவிடும். கடவுள் என்ப(வர்/து) கண்ணால் கண்டு உறுதி செய்யும் விடயமல்ல. உன் (திருத்திய) விளக்கத்தில் கூறியதுபோல், உணர்தல் சம்மந்தப்பட்ட  விடயம். இப்போதிருக்கும் கடவுளரெலாம் குறியீடு மட்டுமே. இருப்பினும் அவற்றுக்கு சக்தியூட்ட முடியுமென்பதுதான் ஆன்மீகத் தொழில்நுட்பம்.  இந்த கருத்தைப் படித்துவிட்டு அந்த நட்பை வெகுவாய் 

       பாராட்டினேன். மிகக் குறிப்பாய் மூன்றே-மூன்று வார்த்தை கொண்ட அந்த "ஆன்மீகத் தொழில்நுட்பம்" என்ற சொற்றொடர் பலவற்றை உணர்த்தியது. மேற்குறிப்பிட்டது போல், அவற்றை நம் பெருந்தகையின் தளத்தில் எழுத விரும்பவில்லை! இதுவரை எதற்கும் என்னுடைய நிகர்-விளக்கத்தை கடவுளை மையப்படுத்தி எழுதியதில்லை. "உறவு/உண்மை/நேர்மை/அறம்/உறவுகள்/(பல இடங்களில்)தாய் மற்றும் பெற்றோர்/அரசியல்/ஆட்சி-மாண்மை - இவற்றை மைய்யப் படுத்தியே எழுதியிருக்கிறேன். ஆனால் "கொன்றன்ன இன்னா செயினும்" என்ற சொற்றொடர் "தக்க-சான்றுடன் ஓர்முறை கடவுள் தோன்றினால்" என்று எழுத வைத்தது. கடவுள் மறுப்பாளர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை தேவையில்லாமல் "அதீதமாய் விமர்சிப்பதை" பதிந்திருக்கிறேன். கடவுள் தோன்றினால் அவர்களின் "அதீத/தேவையற்ற விமர்சனம்" அறவே அழியும் என்ற பொருளில் தான் அப்படி எழுதினேன். இருப்பினும், என் நல-விரும்பிகள் மறுத்துவிட்டதால்... 

                       "ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால்" என்று மாற்றிவிட்டேன்!!! 

வியாழன், நவம்பர் 19, 2015

குறள் எண்: 0109 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0109}

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

விழியப்பன் விளக்கம்: ஒருவர் செய்திட்ட நன்மையொன்றை நினைத்தால்; அவர் கொன்றதற்கு இணையான துன்பமே செய்தாலும், அந்த துன்பம் மறையும்.
(அது போல்...)
ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால்; கடவுள் படங்களை உடைக்கும் அளவிலான கடவுள்-மறுப்பும், இருந்த தடமின்றி அழியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், நவம்பர் 18, 2015

குறள் எண்: 0108 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0108}

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

விழியப்பன் விளக்கம்: பிறர் செய்த நன்மையை மறத்தல் நன்மையன்று; ஆனால், அவர் செய்த தீமைகளை அக்கணமே மறப்பது நன்மையானது.
(அது போல்...)
நல்லாட்சி செய்பவரை தேர்ந்தெடுக்க தவறுதல் அறமன்று; ஆனால், முறையற்ற ஆட்சியர்களை அத்தேர்தலோடு தவிர்த்தல் அறமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், நவம்பர் 17, 2015

குறள் எண்: 0107 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0107}

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

விழியப்பன் விளக்கம்: அறமறிந்தோர் - தம்முடைய துன்பத்தை நீக்கியவரின் நட்பை; பிறக்கமுடிந்த ஏழு பிறப்பிலும் உணர்வர்.
(அது போல்...)
அன்பறிந்தோர் - தம்முடைய உயிரைத் தாங்கியவளின் உறவை; பிறக்கமுடிந்த எல்லாப் பிறப்புகளிலும் வேண்டுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், நவம்பர் 16, 2015

குறள் எண்: 0106 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0106}

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு

விழியப்பன் விளக்கம்: மனிதத்தில் குறையற்றோரை மறவாதீர்! அதுபோல், இன்னல்களில் பங்கெடுத்தோரின் நட்பை விலக்கிடாதீர்!!
(அது போல்...)
ஆட்சியில் குறையுள்ளோரை ஆதரிக்காதீர்! அதுபோல், மக்களில் ஒருவரானவரின் சின்னத்தை மறவாதீர்!!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, நவம்பர் 15, 2015

குறள் எண்: 0105 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0105}

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

விழியப்பன் விளக்கம்: உதவியோருக்கு உதவும் மறு-உதவி, பெறப்பட்ட உதவியைச் சார்ந்ததன்று; மாறாய், உதவியைப் பெற்றவரின் பண்பைச் சார்ந்தது.
(அது போல்...)
ஈன்றெடுத்தவளுக்கு செய்யும் பரியுபகாரம், சுமக்கப்பட்ட காலத்தைச் சார்ந்ததன்று; மாறாய், உயிரைப் பெற்றவரின் வாழ்நாளைச் சார்ந்தது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, நவம்பர் 14, 2015

குறள் எண்: 0104 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0104}

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

விழியப்பன் விளக்கம்: தினையரிசியின் அளவுக்கு செய்யப்பட்ட நன்றியையும்; அதன் பயனை உணர்ந்தவர், பனையின் அளவாய் கருதுவர்.
(அது போல்...)
பொருளற்ற குழந்தையின் மழலையைக் கூட; குழந்தையை ஈன்றெடுத்த தாய், இதிகாசங்களுக்கு இணையாய்ப் போற்றுவாள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, நவம்பர் 13, 2015

குறள் எண்: 0103 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0103}

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

விழியப்பன் விளக்கம்: பிரதிபலனை எதிர்பாராதோர் செய்த உதவியின், நேயத்தை ஆராய்ந்தால்; அதன் நன்மை, கடலை விடப் பெரியதாகும்.
(அது போல்...)
சுயநலத்தை நாடாதோர் ஆண்ட ஆட்சியின், தன்மையைப் பின்பற்றினால்; அதன் விளைவு, வல்லரசை விடச் சிறந்திருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், நவம்பர் 12, 2015

குறள் எண்: 0102 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0102}

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

விழியப்பன் விளக்கம்: வேறுவழியே இல்லாத வேளையில், செய்யப்பட்ட உதவி எத்தனை சிறியதாயினும்; அது மண்ணுலகை விட மிகப்பெரியது.
(அது போல்...)
வாழ்வே முடிந்ததான சூழலில், மறுவாழ்வளித்த உறவு எவ்வளவு விலகியிருப்பினும்; அது எல்லா உறவுகளிலும் முதன்மையானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், நவம்பர் 11, 2015

குறள் எண்: 0101 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 011 - செய்ந்நன்றி அறிதல்குறள் எண்: 0101}

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

விழியப்பன் விளக்கம்: நாம் உதவிடாத ஒருவர் செய்த உதவிக்கு; இந்த மண்ணுலகும், விண்ணுலகும் சேர்ந்தே கொடுத்தும் - இணையாகாது.
(அது போல்...)
நம்மிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராத தாய்க்கு; நம் உடலையும், உயிரையும் சேர்ந்தே கொடுத்தும் - பிரதிபலனாகாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், நவம்பர் 10, 2015

அதிகாரம் 010: இனியவைகூறல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 010 - இனியவைகூறல்

0091.  இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
           செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

           விழியப்பன் விளக்கம்: அறம் அறிந்தவரின் வாயிலிருந்து, வெளிப்படும் சொற்கள்; அன்பு 
           கலந்த, வஞ்சனையில்லாத - இனிய மொழியாய் இருக்கும்.
(அது போல்...)
           மனிதம் கடைப்பிடிப்போர் மூலமாய், உருவாகும் செயல்கள்; அறம் சேர்ந்து, சுயமற்று - 
           சமூகப் பொறுப்புடன் இருக்கும்.

0092.  அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
          இன்சொலன் ஆகப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: உள்ளம் மலர்ந்து, தானம் செய்வதை விட; முகம் மலர்ந்து, 
           நேயத்துடன் பேசுபவராய் இருப்பது - அதீத நன்றானது.
(அது போல்...)
           ஊழல் செய்து, செல்வந்தர் ஆவதை விட; அறம் உணர்ந்து, நேர்மையுடன் நடப்பவராய் 
           இருப்பது - பெரும் சிறப்பானது.

0093.  முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
          இன்சொ லினதே அறம்

           விழியப்பன் விளக்கம்: முகம் மலர்ந்து, மகிழ்ச்சியுடன் பிறரைப் பார்த்து; உள்ளத்தில் 
           இருந்து நேயத்துடன் பேசுவதே, அறம் எனப்படும்.
(அது போல்...)
           கடமை உணர்ந்து, பொறுப்புடன் மக்களைக் காத்து; வாய்மையில் பயணித்து 
           அறத்துடன் நடப்பதே, அரசாட்சி எனப்படும்.

0094.  துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
           இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: எவரிடமும் இன்பத்தை மிகுவிக்கும் வண்ணம், நேயத்துடன் 
           பேசுபவர்க்கு; துன்பத்தை மிகுவிக்கும், வெறுப்பு இல்லாமல் போகும்.
(அது போல்...)
           பிறரின் வாழ்க்கையை உயர்த்தும் நோக்கில், அறமுடன் நடப்போர்க்கு; நிம்மதியைக் 
           குலைக்கும், பொறாமை இல்லாமல் போகும். 
          
0095.  பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
          அணியல்ல மற்றுப் பிற

           விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருப்பதும், நேயத்துடன் பேசுவதுமே - மனிதரை 
           அலங்கரிக்கும் அணிகலன்கள்; மற்றவை அல்ல.
(அது போல்...)
           பொருளை ஈட்டுவதும், குடும்பத்தைப் பேணுதலுமே -  பெற்றோரைத் தரப்படுத்தும் 
           காரணிகள்; மற்றவை அல்ல.

0096.  அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
          நாடி இனிய சொலின்

           விழியப்பன் விளக்கம்: நன்மை பயப்பவற்றைப் பழகி, நேயத்துடன் பேசினால்; நல்வினை 
           அல்லாதவை குறைந்து, நல்வினைகள் பெருகும்.
(அது போல்...)
           வலிமை சேர்ப்பவைகளை உணர்ந்து, உறுதியுடன் கடைப்பிடித்தால்; வலிமை 
           அல்லாதவை விலகி, வலிமை மிகுந்திடும்.

0097.  நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
          பண்பின் தலைப்பிரியாச் சொல்

           விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு பலனை விளைவிக்கும் எண்ணத்திலிருந்து, மாறுபடாத 
           பேச்சு; நல்வினைகளை விளைவித்து, அறத்தை நிலைநாட்டும்.
(அது போல்...)
           பிறரின் வாழ்வை உயர்விக்கும் வைராக்கியத்திலிருந்து, விலகிடாத முனைப்பு; 
           மனிதத்தைப் பெருக்கி, சமூகத்தைத் திடப்படுத்தும்.

0098.  சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
           இம்மையும் இன்பம் தரும்

           விழியப்பன் விளக்கம்: சிறுமை தன்மையை அகற்றிய, நேயம் நிறைந்த பேச்சு; இப்பிறப்பு 
           மட்டுமல்லாமல், மறுபிறப்புக்கும் நன்மையை வழங்கும்.
(அது போல்...)
           பகைமை உணர்வை நீக்கிய, நேர்மை மிகுந்த ஆட்சி; நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், 
           எதிர்காலத்திலும் மக்களாட்சியைக் காக்கும்.

0099.  இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
           வன்சொல் வழங்கு வது

           விழியப்பன் விளக்கம்: நேயம்மிக்க சொற்கள் விளைவிக்கும் நற்பயன்களை அனுபவித்தவர்; 
           என்ன பயனுக்காக, கொடிய வார்த்தைகளை உதிர்க்கமுடியும்?
(அது போல்...)
           நேர்மையான ஆட்சி விளைவிக்கும் அழியாப்புகழை உணர்ந்தவர்; என்ன புகழுக்காக, 
           அறமற்ற ஆட்சியை வழங்கமுடியும்?

0100.  இனிய உளவாக இன்னாத கூறல் 
           கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

           விழியப்பன் விளக்கம்: நன்மை விளைவிக்கும் சொற்கள் பலவிருக்க, தீயவற்றைப் பேசுவது; 
           கனிந்தது இருக்க, காயைக் கொய்வது போன்றதாகும்.
(அது போல்...)
           வாழ்வை உயர்வுக்கும் அறவழிகள் பலவிருக்க, தீயவழியில் பயணிப்பது; மனைவி 
           உடனிருக்க, பிற-பெண்களைப் பார்ப்பது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

குறள் எண்: 0100 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0100}

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

விழியப்பன் விளக்கம்: நன்மை விளைவிக்கும் சொற்கள் பலவிருக்க, தீயவற்றைப் பேசுவது; கனிந்தது இருக்க, காயைக் கொய்வது போன்றதாகும்.
(அது போல்...)
வாழ்வை உயர்வுக்கும் அறவழிகள் பலவிருக்க, தீயவழியில் பயணிப்பது; மனைவி உடனிருக்க, பிற-பெண்களைப் பார்ப்பது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், நவம்பர் 09, 2015

குறள் எண்: 0099 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0099}

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது

விழியப்பன் விளக்கம்: நேயம்மிக்க சொற்கள் விளைவிக்கும் நற்பயன்களை அனுபவித்தவர்; என்ன பயனுக்காக, கொடிய வார்த்தைகளை உதிர்க்கமுடியும்?
(அது போல்...)
நேர்மையான ஆட்சி விளைவிக்கும் அழியாப்புகழை உணர்ந்தவர்; என்ன புகழுக்காக, அறமற்ற ஆட்சியை வழங்கமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, நவம்பர் 08, 2015

குறள் எண்: 0098 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0098}

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்

விழியப்பன் விளக்கம்: சிறுமை தன்மையை அகற்றிய, நேயம் நிறைந்த பேச்சு; இப்பிறப்பு மட்டுமல்லாமல், மறுபிறப்புக்கும் நன்மையை வழங்கும்.
(அது போல்...)
பகைமை உணர்வை நீக்கிய, நேர்மை மிகுந்த ஆட்சி; நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் மக்களாட்சியைக் காக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, நவம்பர் 07, 2015

குறள் எண்: 0097 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0097}

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்

விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு பலனை விளைவிக்கும் எண்ணத்திலிருந்து, மாறுபடாத பேச்சு; நல்வினைகளை விளைவித்து, அறத்தை நிலைநாட்டும்.
(அது போல்...)
பிறரின் வாழ்வை உயர்விக்கும் வைராக்கியத்திலிருந்து, விலகிடாத முனைப்பு; மனிதத்தைப் பெருக்கி, சமூகத்தைத் திடப்படுத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

விருந்தோம்பல் ஓம்பா மடமை (குறள் எண்: 0089)          குறள் எண் 0089-இற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் "விருந்தோம்பல் ஓம்பா மடமை" எனும் ஒரு அற்புதமான உவமையை கையாண்டிருக்கிறார் நம் பெருந்தகை. விருந்தோம்பல் என்றால் "விருந்தினரை உபசரிப்பது" என்ற பொதுவான புரிதலே நம்மிடம் உண்டு. ஆனால், விருந்தோம்பல் எனும் செயலை "ஒழுக்கம்/அறம்/மனிதம்" இப்படி பல்வேறு விசயங்களுடன் தொடர்புப் படுத்துகிறார் நம் பெருந்தகை. அவற்றை அனுபவித்து, பேரானந்தம் கொண்டு விருதோம்பலை நம் பெருந்தகை விவரிப்பதையே ஒரு பதிவாய் எழுத வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே இப்படிப்பட்ட உவமானங்களால் என்னை இன்பக்கடலில் மூழ்கடித்து திணற வைக்கிறார், நம் பெருந்தகை. அதென்ன "விருந்தோம்பல் ஓம்பா மடமை"? விருந்தோம்பலில், மடமை ஏன் வந்தது? எப்படி வந்தது? என்பன போன்ற கேள்விகள் எழும். அதை அழகாகவும் விவரித்திருக்கிறார் நம் பெருந்தகை. இதுதான் அந்த குறள்:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
                                            மடமை மடவார்கண் உண்டு 

இந்தக் குறளுக்கு பின்வரும் விளக்கவுரைகளைக் காண முடிந்தது:
  • விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
  • செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
  • செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
  • உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
           மேற்கண்ட விளக்கவுரைகள் எல்லாம், பெரும் தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்டவை. எனவே, அவர்களின் விளக்கவுரை தவறு என்பதல்ல என் பார்வை/வாதம்; ஆனால், இப்படிப்பட்ட ஓர் உவமையை மேலும் அழகாய்/அற்புதமாய் ஒப்பிட்டு சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. இங்கே அறியாமை என்பதை "வறுமை" என்பதோடு நம் பெருந்தகை உவமைப்படுத்தி; தொடர்புப் படுத்துவதை, நாம் எல்லோரும் அறிவோம். அப்படி இருக்க, அந்த உவமானத்தை மேற்கொண்டு குறிப்பாய் உணர்த்தி இருக்கலாம்! என்று தோன்றியது. மேற்குறிப்பிட்ட விளக்கவுரைகள் அனைத்தும் அதை மைய்யப்படுத்தியவை என்பதை மறுக்கவில்லை எனினும், அதை இன்னும் நேரடியாக - நம் பெருந்தகை சொல்வது போல் "அறியாமை எனும் வறுமை" என்று நேர்பட விளக்கி இருக்கலாம் என்று தோன்றியது. எனவே, என்னுடைய விளக்கவுரைய...

செல்வமிருந்தும், விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாத அறிவிலிகளிடம்; 
அறியாமை எனும் "வறுமை" உண்டு

       மேலும், எப்போதும் போல் என்னுடைய நிகர்-விளக்கம் எழுத முனைந்தபோது, அப்படி ஓர் அறியாமையை பக்தியைப் பற்றி பேசும் "ஆத்திகர்களிடம்" இருப்பது நினைவுக்கு வந்தது. ஆத்திகர்களிடம் இருக்கும் "அறியாமை எனும் மூட-நம்பிக்கை" பற்றி நான் நிறைய எழுதி இருப்பதால், என்னுடைய நிகர்-விளக்கத்தை...

பக்தியிருந்தும், நம்பிக்கைகளைப் பகுத்தறியத் தெரியாத ஆத்திகர்களிடம்; 
அறியாமை எனும் "மூட-நம்பிக்கை" உண்டு.

என்று எழுதிட எனக்கு பெருத்த-சிரமமோ; நிறைய-நேரவிரயமோ ஏற்படவில்லை. என்னுடைய விளக்கவுரையை எழுதிய உண்டனேயே, நிகர்-விளக்கம் இயல்பாய் வந்தது. அதில், என்னுடைய பதிவின் இணைப்பு ஒன்றையும் கொடுத்திருந்தேன்.

"இருந்தும் இல்லாமல் இருக்கும்" அறியாமையை அகற்றுவோம்!!!