புதன், ஜனவரி 31, 2018

குறள் எண்: 0913 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0913}

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

விழியப்பன் விளக்கம்: பொருளைப் பொருட்படுத்தும் விலைமகளிரோடு, கொள்ளும் பொய்யானத் தழுவல்; இருட்டறையில், உணர்வேதும் இல்லாதப் பிணத்தைத் தழுவுவதற்கு இணையாகும்!
(அது போல்...)
ஊழலை வளர்த்திடும் அரசியலரோடு, கைகோர்க்கும் ஆபத்தான வளர்ச்சி; வயற்பரப்பில், பயனேதும் இல்லாத முற்செடியை வளர்ப்பதற்கு ஒப்பாகும்!

செவ்வாய், ஜனவரி 30, 2018

குறள் எண்: 0912 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0912}

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

விழியப்பன் விளக்கம்: பயனை அளவிட்டு, பொய்யாய் பண்புடன் பேசும்; பண்பற்ற விலைமகளரின் தரத்தை அளவிட்டு, அவர்களைச் சேராது விலகவேண்டும்!
(அது போல்...)
பதவியை மதிப்பிட்டு, பொய்யாய் பொதுநலம் பேசும்; பொதுநலமற்ற அரசியலாரின் சுயத்தை மதிப்பிட்டு, அவர்களைத் தொடராது ஒதுக்கவேண்டும்!

திங்கள், ஜனவரி 29, 2018

குறள் எண்: 0911 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0911}

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

விழியப்பன் விளக்கம்: அன்பு சார்ந்த உணர்வுகளை நாடாமல், பணம் சார்ந்த உடைமைகளை நாடும் விலை-மகளிரின்; இனிமையான சொற்கள், கெடுதலையே விளைவிக்கும்!
(அது போல்...)
அறம் சார்ந்த கொள்கைகளைத் தொடராமல், ஊழல் சார்ந்த கட்சிகளைத் தொடரும் அரசியல்-வியாபாரிகளின்; எழுச்சியான உரைகள், ஏமாற்றத்தையே அளிக்கும்!

புதன், ஜனவரி 24, 2018

குறள் எண்: 0906 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0906}

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்

விழியப்பன் விளக்கம்: மனைவியின் அழகில் மயங்கி, மூங்கில் போன்ற அவள் தோளுக்குப் பயப்படுவோர்; தேவர்களுக்கு இணையாய் வாழ்ந்தாலும், புகழ் இல்லாதவரே!
(அது போல்...)
அரசியலாரின் ஊழலில் பங்கிட்டு, சேவகர் போன்ற அவர்களிடம் அடிபணியும் அதிகாரிகள்; மன்னர்களுக்கு இணையாய் வாழ்ந்தாலும், சுயம் இல்லாதோரே!

செவ்வாய், ஜனவரி 23, 2018

குறள் எண்: 0905 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0905}

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

விழியப்பன் விளக்கம்: பரஸ்பர உணர்வுப் பகிர்தல் இல்லாததால், மனைவிக்கு அஞ்சும் கணவன்; எந்நாளும், நல்லோர்க்கு நல்லவற்றை செய்ய அஞ்சுவர்.
(அது போல்...)
ஆழ்ந்த மக்களாட்சிப் புரிதல் இல்லாததால், மக்களுக்குத் துரோகம் செய்வோர்; எந்நிலையிலும், நம்பியோர்க்குத் துரோகம் செய்யத் தயங்கார்.

திங்கள், ஜனவரி 22, 2018

குறள் எண்: 0904 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0904}

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று

விழியப்பன் விளக்கம்: உரிமையைப் பகிரும் அறமின்றி மனைவிக்கு அஞ்சும், மறுமைப் பயனை அடையாத கணவனின்; வினைகளைச் செய்யும் ஆளுமை, புகழடைதல் சாத்தியமில்லை!
(அது போல்...)
சட்டத்தை நிலைநாட்டும் முனைப்பின்றிக் குண்டர்களுக்கு அஞ்சி, மக்கள் சேவையை ஆற்றாத காவலர்களின்; கடமையைச் செய்யும் திறமை, சட்டவொழுங்கைக் காப்பதில்லை!

ஞாயிறு, ஜனவரி 21, 2018

குறள் எண்: 0903 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0903}

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

விழியப்பன் விளக்கம்: மோகத்தை விரும்பி, மனைவியின் குறைகளைக் களையும் முனைப்பின்றித் தாழ்ந்து போகும் இயல்பு; நல்லோர் மத்தியில், எந்நாளும் அவமானத்தையே அளிக்கும்!
(அது போல்...)
நம்பிக்கையை நம்பி, மடமையின் உண்மையைப் பகுத்தறியும் ஆர்வமின்றிக் கடந்து செல்லும் பக்தி; பகுத்தறிவோர் மத்தியில், எப்போதும் விமர்சனத்தையே பெறும்!

சனி, ஜனவரி 20, 2018

குறள் எண்: 0902 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0902}

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

விழியப்பன் விளக்கம்: இல்லறக் கடமையைப் பேணாமல், மனைவியின் பெண்மையை மட்டுமே விரும்புவோரின் செல்வம்; மிகப்பெரிய அவமானமாக நிலைக்கும், அவமானத்தை அளிக்கும்!
(அது போல்...)
மக்களாட்சி தர்மத்தை உணராமல், மக்களின் சொத்துக்களை மட்டுமே அபகரிப்போரின் ஆட்சி; அதீதமான கொடுங்கோன்மையை வரையறுக்கும், கொடுங்கோன்மை நிறைந்திருக்கும்!

வெள்ளி, ஜனவரி 19, 2018

குறள் எண்: 0901 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0901}

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது

விழியப்பன் விளக்கம்: மனைவியை மட்டுமே நேசித்து மற்ற உறவுகளை மறுப்போர், இல்லறத்தின் பெரும்பயனை அடையார்! வினையை நேசிப்போர், வேண்டாத வரமும் அதுவேயாகும்!
(அது போல்...)
ஊழலை மட்டுமே பழகி மற்ற கடமைகளை மறப்போர், பொதுவாழ்வின் மகிமையை அடையார்! பொதுநலனைப் பேணுவோர், விரும்பாத அமுதமும் அதுவேயாகும்!

வியாழன், ஜனவரி 18, 2018

அதிகாரம் 090: பெரியாரைப் பிழையாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை

0891.  ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
           போற்றலுள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: அனுபவம் வாய்ந்த பெரியோரின், செயலைச் செய்யும் வலிமையை 

           இகழாமல் இருப்பது; ஒருவர், தமக்கு அமைக்கும் காவல்கள் அனைத்திலும் 
           முதன்மையானது ஆகும்.
(அது போல்...)
           நேர்மை மிகுந்த தலைவரின், பொதுநலன் காக்கும் கொள்கையை மறக்காமல் இருப்பது; 
           மக்கள், சந்ததிக்கு கற்பிக்கும் அனுபவங்கள் அனைத்திலும் சிறந்தது ஆகும்.
      
0892.  பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
           பேரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: நம்மிற் பெரியோரைப் பேணாமல் இருப்பின்; அப்பெரியோரின் 

           ஆதரவு இல்லாத நிலைமை, என்றுமழியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
           நம் பெற்றோர்களுடன் இணையாமல் வாழ்ந்தால்; அவர்களின் வாழிகாட்டுதல் இல்லாத 
           நிலைமை, அறமில்லாத சந்ததியை உருவாக்கும்.
           
0893.  கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
           ஆற்று பவர்கண் இழுக்கு

           விழியப்பன் விளக்கம்: கெடுதல் வேண்டுமாயின், பெரியோரின் அறிவுரையைக் கேளாமல் 

           செய்க! அழிவு வேண்டுமாயின், வலிமையாய் செயல்படுவோரிடம் தவறு செய்க!
(அது போல்...)
           துன்பம் வேண்டுமெனில், நற்தலைவரின் ஆட்சியை ஏற்காமல் விடுக! கொடுமை 
           வேண்டுமெனில், கொடுங்கோலாய் ஆள்வோரிடம் அதிகாரம் தருக! 

0894.  கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
           ஆற்றாதார் இன்னா செயல்

           விழியப்பன் விளக்கம்: செயலாற்றும் திறமுடைய பெரியோர்க்கு, செயலாற்ற இயலாதோர் 

           தீமை செய்வது; எமனைக் கைதட்டி அழைப்பதற்கு நிகரானதாகும்!
(அது போல்...)
           வாழ்வளிக்கும் கடவுளான தொழிலுக்கு, வாழ இயலாதோர் உண்மையின்றி இருப்பது; 
           வறுமையை கைகூப்பி வரவேற்பதற்குச் சமமாகும்!

0895.  யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
           வேந்து செறப்பட் டவர்

           விழியப்பன் விளக்கம்: எவ்விதப் பகைவரையும் வெல்லும் அனுபவமுடைய அரசனின், 

           கோபத்துக்கு ஆளானவர்; தப்பிக்க எவ்விடம் புகுந்தாலும், எவ்விடத்திலும் 
           நிம்மதியில்லாமல் போவர்!
(அது போல்...)
           எத்தகைய மனிதரையும் சாகடிக்கும் குணமுடைய போதையின், ஆதிக்கத்திற்கு 
           ஆளானவர்; மீண்டிட எவ்வளவு செலவிட்டாலும், எள்ளளவும் வாழ்வில்லாமல் போவர்!

0896.  எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
           பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

           விழியப்பன் விளக்கம்: காட்டுத்தீ போன்ற நெருப்பால் சுடப்பட்டாலும், பிழைப்பதற்கு 

           வழியுண்டாம்! ஆனால், பெரியோரைப் பிழையாகச் சித்தரித்து வாழ்வோர்; பிழைக்கவே 
           மாட்டார்!
(அது போல்...)
           உயிர்க்கொல்லி போன்ற போதைக்கு ஆட்பட்டவரும், திருந்துவதற்கு வாய்ப்புண்டாம்! 
           ஆனால், மக்களை ஏய்த்து ஊழலாடிப் பழகியோர்; திருந்தவே மாட்டார்!

0897.  வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
           தகைமாண்ட தக்கார் செறின்

           விழியப்பன் விளக்கம்: தகைமைப் பண்புடையப் பெரியோரின் கோபத்திற்கு ஆளாவார் 

           எனின்; ஒருவரின், வசதியான வாழ்க்கையும் வானளாவிய பொருளும் எதற்கு உதவும்?
(அது போல்...)
           பொதுநலன் பேணும் தலைவரின் தோலிவிக்கு காரணமாவர் எனின்; வாக்காளர்களின், 
           உயரிய கல்வியும் உலகளாவிய பொதுவறிவும் எதைச் சாதிக்கும்?

0898.  குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
           நின்றன்னார் மாய்வர் நிலத்து

           விழியப்பன் விளக்கம்: உயர்மலைக்கு நிகரான- பெரியோரின் வலிமையை, குறைவாக 

           மதிப்பிட்டால்; பூமியில் நிலைத்து வாழ்பவர் போல் தோன்றியோரும், குடியோடு சேர்ந்து 
           அழிவர்!
(அது போல்...)
           பெருங்கடலுக்கு இணையான மக்களின் அதிகாரத்தை, இழிவாக எண்ணினால்; ஆட்சியில் 
           நிரந்தரமாய் இருப்பவர் போல் தோன்றியவரும், கட்சியோடு சேர்ந்து வீழ்வர்!

0899.  ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
           வேந்தனும் வேந்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: சீர்மிகு கொள்கையுடைய பெரியோர் கோபப்பட்டால்; 

           அரசாள்பவரும் கூட, தம் அரசாட்சியை இடையிலேயே இழந்து கெடுவர்!
(அது போல்...)
           பகுத்தறியும் இயல்புடைய மனிதர்கள் மிருகமானால்; துறவிகளும் கூட, தம் துறவறத்தைப் 
           பாதியிலேயே கைவிட்டு விலகுவர்!

0900.  இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
           சிறந்தமைந்த சீரார் செறின்

           விழியப்பன் விளக்கம்: சிறந்த குணங்கள் நிறைந்த, பெரியோர் வெகுண்டால்; மிகுந்த 

           வலிமைகள் நிறைந்த துணைகளை உடையவர் ஆயினும், பிழைக்க மாட்டார்!
(அது போல்...)
           தேர்ந்த திறமைகள் கொண்ட, இளைஞர்கள் திரண்டால்; வலிந்த துறைகள் கொண்ட 
           அரசையே நடத்துவோர் எனினும், உறுதி இழப்பர்!

குறள் எண்: 0900 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0900}

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

விழியப்பன் விளக்கம்: சிறந்த குணங்கள் நிறைந்த, பெரியோர் வெகுண்டால்; மிகுந்த வலிமைகள் நிறைந்த துணைகளை உடையவர் ஆயினும், பிழைக்க மாட்டார்!
(அது போல்...)
தேர்ந்த திறமைகள் கொண்ட, இளைஞர்கள் திரண்டால்; வலிந்த துறைகள் கொண்ட அரசையே நடத்துவோர் எனினும், உறுதி இழப்பர்!

புதன், ஜனவரி 17, 2018

குறள் எண்: 0899 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0899}

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

விழியப்பன் விளக்கம்: சீர்மிகு கொள்கையுடைய பெரியோர் கோபப்பட்டால்; அரசாள்பவரும் கூட, தம் அரசாட்சியை இடையிலேயே இழந்து கெடுவர்!
(அது போல்...)
பகுத்தறியும் இயல்புடைய மனிதர்கள் மிருகமானால்; துறவிகளும் கூட, தம் துறவறத்தைப் பாதியிலேயே கைவிட்டு விலகுவர்!

செவ்வாய், ஜனவரி 16, 2018

குறள் எண்: 0898 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0898}

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து

விழியப்பன் விளக்கம்: உயர்மலைக்கு நிகரான- பெரியோரின் வலிமையை, குறைவாக மதிப்பிட்டால்; பூமியில் நிலைத்து வாழ்பவர் போல் தோன்றியோரும், குடியோடு சேர்ந்து அழிவர்!
(அது போல்...)
பெருங்கடலுக்கு இணையான மக்களின் அதிகாரத்தை, இழிவாக எண்ணினால்; ஆட்சியில் நிரந்தரமாய் இருப்பவர் போல் தோன்றியவரும், கட்சியோடு சேர்ந்து வீழ்வர்!

திங்கள், ஜனவரி 15, 2018

குறள் எண்: 0897 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0897}

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்

விழியப்பன் விளக்கம்: தகைமைப் பண்புடையப் பெரியோரின் கோபத்திற்கு ஆளாவார் எனின்; ஒருவரின், வசதியான வாழ்க்கையும் வானளாவிய பொருளும் எதற்கு உதவும்?
(அது போல்...)
பொதுநலன் பேணும் தலைவரின் தோலிவிக்கு காரணமாவர் எனின்; வாக்காளர்களின், உயரிய கல்வியும் உலகளாவிய பொதுவறிவும் எதைச் சாதிக்கும்?

ஞாயிறு, ஜனவரி 14, 2018

குறள் எண்: 0896 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0896}

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

விழியப்பன் விளக்கம்: காட்டுத்தீ போன்ற நெருப்பால் சுடப்பட்டாலும், பிழைப்பதற்கு வழியுண்டாம்! ஆனால், பெரியோரைப் பிழையாகச் சித்தரித்து வாழ்வோர்; பிழைக்கவே மாட்டார்!
(அது போல்...)
உயிர்க்கொல்லி போன்ற போதைக்கு ஆட்பட்டவரும், திருந்துவதற்கு வாய்ப்புண்டாம்! ஆனால், மக்களை ஏய்த்து ஊழலாடிப் பழகியோர்; திருந்தவே மாட்டார்!

சனி, ஜனவரி 13, 2018

குறள் எண்: 0895 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0895}

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

விழியப்பன் விளக்கம்: எவ்விதப் பகைவரையும் வெல்லும் அனுபவமுடைய அரசனின், கோபத்துக்கு ஆளானவர்; தப்பிக்க எவ்விடம் புகுந்தாலும், எவ்விடத்திலும் நிம்மதியில்லாமல் போவர்!
(அது போல்...)
எத்தகைய மனிதரையும் சாகடிக்கும் குணமுடைய போதையின், ஆதிக்கத்திற்கு ஆளானவர்;   மீண்டிட எவ்வளவு செலவிட்டாலும், எள்ளளவும் வாழ்வில்லாமல் போவர்!

தமிழர் திருநாள் (2018)


"பழையனக் கழிதலும்
புதியனப் புகுதலும்"
பயணத்தின் மூலமெனப்
பதியவைக்க; “போகி”யில்
பொங்கலைத் துவக்கிடும்
பெருந்தமிழர் யாவர்க்கும்;
பெருந்தகையின் குறளுணர்ந்த
பொன்மனதனின் வாழ்த்துகள்!

அம்மாவழி நடக்கிறதென்றே
சும்மாவாக ஆள்வோரையும்;
தையொன்றே புத்தாண்டென்றே
தமிழரசியல் நடத்துவோரையும்;
போகிநெருப்பில் புகையாக்கியே,
புதுஇரத்தம் பாய்ச்சிடவே;
புகவிருக்கும் கலைஞானியை
பொங்கலன்றே வரவேற்போம்!

தமிழையும் தமிழரையும்;
தன்னலனுக்காய், அரசியலெனும்
தனலதனில் உலையிலிட்ட
திராவிடரையும்; உலையிலிடும்
துடிப்புடனே களம்புகுந்துள்ள
"தமிழ்போர்வை" போர்த்தியோரையும்
தடுத்திடுவோம்! "போகி"யிடுவோம்
தமிழ்முதலீடு செய்திட்டயாரையும்!

போகிதினத்தில் பொருட்களோடு
பழுத்தும்பயனற்ற அரசியலாரையும்
பொசுக்கிடுவோம்! தமிழர்வாழ்வும்
பசுமையோடு துளிர்த்திடட்டும்
போகியன்றே! "அரசியலென்பது
பழஞ்சாக்கடை" என்றொதுங்கிய
பழமையை விரட்டியடிப்போம்!
புகுத்திடுவோம் மாற்றரசியலை!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
www.vizhiyappan.blogspot.com
13012018

வெள்ளி, ஜனவரி 12, 2018

குறள் எண்: 0894 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0894}

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

விழியப்பன் விளக்கம்: செயலாற்றும் திறமுடைய பெரியோர்க்கு, செயலாற்ற இயலாதோர் தீமை செய்வது; எமனைக் கைதட்டி அழைப்பதற்கு நிகரானதாகும்!
(அது போல்...)
வாழ்வளிக்கும் கடவுளான தொழிலுக்கு, வாழ இயலாதோர் உண்மையின்றி இருப்பது; வறுமையை கைகூப்பி வரவேற்பதற்குச் சமமாகும்!

வியாழன், ஜனவரி 11, 2018

குறள் எண்: 0893 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0893}

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

விழியப்பன் விளக்கம்: கெடுதல் வேண்டுமாயின், பெரியோரின் அறிவுரையைக் கேளாமல் செய்க! அழிவு வேண்டுமாயின், வலிமையாய் செயல்படுவோரிடம் தவறு செய்க!
(அது போல்...)
துன்பம் வேண்டுமெனில், நற்தலைவரின் ஆட்சியை ஏற்காமல் விடுக! கொடுமை வேண்டுமெனில், கொடுங்கோலாய் ஆள்வோரிடம் அதிகாரம் தருக!

புதன், ஜனவரி 10, 2018

குறள் எண்: 0892 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0892}

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: நம்மிற் பெரியோரைப் பேணாமல் இருப்பின்; அப்பெரியோரின் ஆதரவு இல்லாத நிலைமை, என்றுமழியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
நம் பெற்றோர்களுடன் இணையாமல் வாழ்ந்தால்; அவர்களின் வாழிகாட்டுதல் இல்லாத நிலைமை, அறமில்லாத சந்ததியை உருவாக்கும்.

செவ்வாய், ஜனவரி 09, 2018

குறள் எண்: 0891 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0891}

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

விழியப்பன் விளக்கம்: அனுபவம் வாய்ந்த பெரியோரின், செயலைச் செய்யும் வலிமையை இகழாமல் இருப்பது; ஒருவர், தமக்கு அமைக்கும் காவல்கள் அனைத்திலும் முதன்மையானது ஆகும்.
(அது போல்...)
நேர்மை மிகுந்த தலைவரின், பொதுநலன் காக்கும் கொள்கையை மறக்காமல் இருப்பது; மக்கள், சந்ததிக்கு கற்பிக்கும் அனுபவங்கள் அனைத்திலும் சிறந்தது ஆகும்.

திங்கள், ஜனவரி 08, 2018

குறள் எண்: 0890 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0890}

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று

விழியப்பன் விளக்கம்: உள்ளத்தால் உடன்பாடின்றி, உட்பகையோடு வாழ்வோரின் வாழ்க்கை; சிறிய குடிசையில், பாம்புடன் வாழ்வதற்கு இணையான ஆபத்து நிறைந்ததாகும்!
(அது போல்...)
கொள்கையில் இணையாமல், பதவிக்காக அமையும் கூட்டணி; சிறிய கூண்டில், சிங்கத்துடன் உறங்குவதற்கு நிகரான ஆபத்து கொண்டதாகும்!

ஞாயிறு, ஜனவரி 07, 2018

குறள் எண்: 0889 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0889}

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு

விழியப்பன் விளக்கம்: உட்பகை என்பது, எள்ளைப் பிளப்பது போன்ற சிறிய செயலே எனினும்; அது, அணுவைப் பிளப்பது போன்ற பெரிய கேட்டை விளைவிக்கும்!
(அது போல்...)
சேவைவரி என்பது, தண்ணீர் விலையைப் போன்ற சிறிய தொகையே எனினும்; அது, பொன்னின் விலையைப் போன்ற அதிக சுமையை அளிக்கும்!

சனி, ஜனவரி 06, 2018

குறள் எண்: 0888 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0888}

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி

விழியப்பன் விளக்கம்: அரத்தால் அறுக்கப்படும் பொன், தன் அளவை "சேதாரமாய்" இழப்பது போல்; உட்பகையால் பிளவுபடும் குடும்பம், அதன் வலிமையை "பரிகாரமாய்" இழக்கும்!
(அது போல்...)
செக்கில் அகப்படும் பொருள், தன் உருவை “சக்கையாய்” இழப்பது போல்; கொடுங்கோலால் ஆளப்படும் மக்கள், தம் வருமானத்தை “வரியாய்” இழப்பர்!

வெள்ளி, ஜனவரி 05, 2018

குறள் எண்: 0887 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0887}

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

விழியப்பன் விளக்கம்: வெளியுலகுக்கு, புறத்தோற்றத்தால் ஒன்றிணைந்த சிமிழும்/மூடியும் போல் கூடி இருப்பினும்; உட்பகையைக் கொண்ட குடும்பம், உள்ளத்தால் கூடி இருக்காது!
(அது போல்...)
மற்றவருக்கு, திரவவடிவால் சேர்ந்திட்ட பாலும்/தண்ணீரும் போல் ஒற்றுமையாய் தோன்றிடினும்; சாதிவெறி உடைய இனம், மொழியால் ஒன்றுபட்டு இருக்காது!

வியாழன், ஜனவரி 04, 2018

குறள் எண்: 0886 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0886}

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

விழியப்பன் விளக்கம்: ஒன்றிணைந்த குழுவினரிடையே, ஒற்றுமை இல்லாது உட்பகை வளர்ந்தால்; அதனால் விளையும் அழிவை, தடுப்பது அரிதானது ஆகும்!
(அது போல்...)
கூட்டுக்குடும்ப வாழ்க்கையை, சிற்றின்பம் காரணமாய் சிதைத்துப் பிரிந்தால்; அதனால் அழியும் கலாச்சாரத்தை, காப்பது அரிதானது ஆகும்!

புதன், ஜனவரி 03, 2018

குறள் எண்: 0885 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0885}

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

விழியப்பன் விளக்கம்: நட்பை மையப்படுத்திய உறவுகளுக்குள், உட்பகை உருவானால்; அது, இறப்பை மையப்படுத்திய துன்பங்கள் பலவற்றையும் அளிக்கும்!
(அது போல்...)
சிந்தனையை வளர்க்கும படைப்புகளில், புரிதல் தவறானால்; அது, தீவினையை வளர்க்கும் காரணிகள் பலவற்றையும் விளைவிக்கும்!