செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

கசிந்திடும் கண்ணீரைத் "திரும்பிடச்" செய்யய்யா...


        "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா...!" - பாகுபலி 2 திரைப்படத்தின் "வந்தாய் அய்யா!" எனத் துவங்கும் பாடலின் இந்த மிக ஆழ்ந்த அர்த்தமுள்ளது. பாடலாசிரியர் திரு. மதன் கார்க்கி எந்த எண்ணத்தில், இந்த வரியை எழுதினார் என்று தெரியவில்லை! "திரும்பிட செய்யய்யா" என்பதை, வெகு நிச்சயமாய் "துடைத்து விடய்யா" என்ற சாதாரண அர்த்தத்தில் எழுதி இருக்க மாட்டார் என்றே  எண்ணுகிறேன். ஆம்... "துடைத்து விடுவதற்கும்" மற்றும் "திரும்பிட வைப்பதற்கும்" நிறைய வித்தியாசம் உண்டு. எந்தவொரு துன்பத்தின் போதும், எவரேனும் கண்ணீரைத் துடைத்து; அத்துன்பத்திலிருந்து விடுபட வைக்கமுடியும். ஆனால், அது அந்த நேரத்திற்கான மாற்று மட்டுமே; பல துன்பங்கள், நம்மை மீண்டும்/மீண்டும் நினைவலைகள் மூலம் புரட்டிப்போடும். சரி, இது இயல்புதானே? ஆம்... இயல்புதான்! அடியோடு மாற்றிட முடியுமா?! என்றால்... மாற்றிட முடியும்! ஆனால், சாமான்யர்களால் முடியாது! பின் எவரால்...?

     பாகுபலி போன்ற ஒருவரால்! ஆம், கதைக்களத்தின் அடிப்படையில்; பாகுபலி மிகப்பெரிய பலசாலி! அவனால், முடியாதது எதுவுமே இல்லை; அதுதான், அந்தப் பாத்திரப்படைப்பின் பிரம்மாண்டம்! அதுதான், படத்தின் பிரம்மாண்டமும்! எனவே, அப்படியொருவனிடம் சாதாரணர் போன்று "வெறுமனே, துடைத்து விடய்யா!" என்று வேண்டாமல்; திரும்பிடச் செய்யய்யா என்று வேண்டுகின்றனர் மக்கள். ஆம்... கண்ணீரை மீண்டும் திரும்பிட வைத்து; அத்துன்பம் நேரும் முன்; அத்துன்ப நிகழ்வையே அழித்து விடய்யா! என வேண்டுவதாய் தோன்றுகிறது. அதுதான், பாகுபலியை சாதாரணர்கள் இடமிருந்துப் பிரித்து, வெகு உயரத்தில் வைக்கும்! இந்த அர்த்தத்தில் தான் பாடலாசிரியர் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?" என்பது போல்; திரு. வைரமுத்துவின் மகனான திரு. மதன் கார்க்கி இப்படியோர் அர்த்தத்தில் எழுதி இருப்பின், அதில் வியப்பேதும் இருக்கமுடியாது. தொடரட்டும் அவரின் சிந்தனைகள்!

*******

பின்குறிப்பு: முதன்முதலாய், இப்பாடலை என்னவள் மற்றும் என்மகளோடு கேட்கும்போது; இதை விளக்கி "எப்படி எழுதியிருக்கார் பாரு! என்னவொரு சிந்தனை?" என்று, என்னவளிடம் சிலாகித்தேன். அதன் பின், ஒவ்வொரு முறை இப்பாடல் ஒலிக்கும்போது; என்மகள், என்னவளிடம் "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா!"; அம்மா! எப்படி எழுதியிருக்கார் பாரேன்! என்று சொல்லி, அவளும் சிலாகிப்பாள்! அவளுக்கு என்ன புரிந்தது என்பது சரியாய் தெரியவில்லை! ஆனால், அதை அவள் சொல்லும் அழகே - அதீத சிலாகிப்புக்கு உரியது.

- விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு 
22082017

குறள் எண்: 0751 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0751}

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்

விழியப்பன் விளக்கம்: பொருளற்ற வாழ்க்கையை வாழ்பவரையும், பொருட்படுத்தச் செய்வது; செல்வமெனும் பொருளைத் தவிர்த்து, வேறெந்தப் பொருளும் இல்லை.
(அது போல்...)
செயலற்ற இயல்பை உடையவரையும், செயல்பட வைப்பது; சிந்தனையெனும் செயலைத் தவிர்த்து, வேறெந்த செயலும் இல்லை.

ஓர் தந்தயின் சிறப்பு...

திங்கள், ஆகஸ்ட் 21, 2017

அதிகாரம் 075: அரண் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்

0741.  ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
           போற்று பவர்க்கும் பொருள்

           விழியப்பன் விளக்கம்: போர்களை வென்று மக்கள் பணியாற்றுவோர்க்கு, அரண்
           முக்கியமானது; போருக்குப் பயந்துத் தம்மைக் காக்க முயல்வோர்க்கும், அரணே
           முக்கியமானதாகும்.
(அது போல்...)
           அறத்தைப் பழகி நற்செயல் புரிவோர்க்கு, மனசாட்சி புனிதமானது; அறத்துக்குப் புறம்பாகித்
           தம்மைச் சிதைத்துக் கொள்வோர்க்கும், மனசாட்சியே புனிதமானது.
      
0742.  மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
           காடும் உடையது அரண்

           விழியப்பன் விளக்கம்: தெளிந்த நீர்பரப்பும்/புதர்களற்ற அகன்ற நிலமும்/உயர்ந்த
           மலைத்தொடரும்/படர்ந்த நிழலுடைய அடர்ந்த காடும் - கொண்டிருப்பதே, இயற்கையான
           அரண்களாகும்.
(அது போல்...)
           மலர்ந்த புன்சிரிப்பும்/வஞ்சமற்ற பரந்த நட்பும்/சிறந்த அறத்தழுவலும்/பரஸ்பர புரிதலுடைய
           ஆழ்ந்த அன்பும் - இருப்பதே, அடிப்படையான குணங்களாகும்.
           
0743.  உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
           அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

           விழியப்பன் விளக்கம்: ஏற முடியாத உயரம்/ஊடுருவ முடியாத அகலம்/தகர்க்க முடியாத
           உறுதி/கணிக்க முடியாத அமைப்பு - இந்நான்கும் அமையப் பெற்றதே, அரண் என்று
           மறைநூல் உரைக்கும்.
(அது போல்...)
           மறுக்க முடியாத அன்பு/பிரிக்க முடியாத பிணைப்பு/அழிக்க முடியாத நம்பிக்கை/சிதைக்க
           முடியாத குடும்பம் - இந்நான்கும் கிடைக்கப் பெற்றதே, வம்சம் என சமுதாயம் போற்றும்.

0744.  சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
           ஊக்கம் அழிப்பது அரண்

           விழியப்பன் விளக்கம்: காவல் வீரர்கள் நிற்குமிடம் சிறியதாகி, மற்றவிடங்கள் அகன்று
           பரந்தாதாகி; போரிட வரும் பகைவர்களின், வலிமையை அழிப்பதே அரணாகும்.
(அது போல்...)
           மாவட்ட நிர்வாகிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் உரிமையை
           அதிகமாக்கி; ஊழல் செய்யும் கயவர்களின், ஆதிக்கத்தை அழிப்பதே கட்சியாகும்.

0745.  கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
           நிலைக்கெளிதாம் நீரது அரண்

           விழியப்பன் விளக்கம்: பகைவரால் கைப்பற்ற இயலாததாய், எல்லோர்க்கும் உணவை
           அளிப்பதாகி; உள்ளிருக்கும் வீரர்கள் எளிதாய் போரிடும் வாய்ப்பை, அளிக்க வல்லதே
           அரணாகும்.
(அது போல்...)
           பிறரால் குறைகாண முடியாததாய், அனைத்து வளங்களையும் காப்பதாகி; குடியிருக்கும்
           மக்கள் எளிதாய் வாழும் வழியை, வழங்க வல்லதே அரசாகும்.

0746.  எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
           நல்லாள் உடையது அரண்

           விழியப்பன் விளக்கம்: உள்ளிருக்கும் யாவர்க்கும், தேவையான அனைத்தும் கொண்டு;
           பகைவர்கள் தாக்கும்போது அவர்களை அழித்து உதவும், வலிமையான வீரர்களை
           உடையதே அரணாகும்.
(அது போல்...)
           இளைஞர்கள் அனைவருக்கும், தகுதியான வேலையைக் கொடுத்து; பொருளாதார
           நெருக்கடியில் அனைத்தையும் சமாளித்து வெல்லும், திறமையான அலுவர்களைக்
           கொண்டதே அரசாகும்.

0747.  முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
           பற்றற்கு அரியது அரண்

           விழியப்பன் விளக்கம்: படைகளை அழித்து முற்றுகை இட்டோ, முற்றுகை இடாமல்
           நெருங்கியோ அல்லது உள்ளிருப்போரை வஞ்சனையால் வீழித்தியோ; கைப்பற்றுவதற்கு  
           இயலாததே அரணாகும்.
(அது போல்...)
           விதிகளைத் தளர்த்தி சூழ்ச்சி செய்தோ, சூழ்ச்சி செய்யாமல் திட்டமிட்டோ அல்லது
           உரிமையாளரை அச்சத்தால் பணித்தோ; அபகரித்தலைச் செய்யாததே அறமாகும்.

0748.  முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
           பற்றியார் வெல்வது அரண்

           விழியப்பன் விளக்கம்: முற்றுகையில் திறமடைந்து, பல முற்றுகைகளைச் செய்தவரையும்;    
           பற்றுவதில் திறமடைந்த உள்ளிருக்கும் வீரர்கள் பற்றியதை, வெல்லச் செய்வதே
           அரணாகும்.
(அது போல்...)
           பிரிவினைகளில் கைதேர்ந்து, பல பிரிவினைகளைச் செய்தவரையும்; அன்புடைமையில்
           கைதேர்ந்த குடும்பத்திலிருக்கும் அன்பர்கள் போற்றிட, விலக்கச் செய்வதே உறவாகும்.

0749.  முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
           வீறெய்தி மாண்டது அரண்

           விழியப்பன் விளக்கம்: போர்முனையில் இருக்கும் போது, பகைவர்களைச் சாய்க்கும்
           வண்ணம்; செயலாற்ற வேண்டிய போது, உள்ளிருக்கும் வீரர்களை வீறுகொளச் செய்வதே
           அரணாகும்.
(அது போல்...)
           பொருளாதாரச் சிக்கலின் போது, ஆடம்பரத்தைக் குறைக்கும் வண்ணம்; தேவையான
           தருணத்தின் போது, குடும்பத்து உறுப்பினர்களைப் பொறுப்புணர வைப்பதே
           தலைமையாகும்.

0750.  எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
           இல்லார்கண் இல்லது அரண்

           விழியப்பன் விளக்கம்: எவ்வகை மகிமையை உடையது ஆயினும்; போரை வெல்லும்
           மகிமையற்ற வீரர்களைக், கொண்டிராமல் இருப்பதே அரணாகும்.
(அது போல்...)
           எவ்வித முனைப்பை உடையது எனினும்; ஊழலை ஒழிக்கும் முனைப்பற்ற நிர்வாகிகளைக்,
           கொண்டிராமல் இருப்பதே கட்சியாகும்.

குறள் எண்: 0750 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0750}

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்

விழியப்பன் விளக்கம்: எவ்வகை மகிமையை உடையது ஆயினும்; போரை வெல்லும் மகிமையற்ற வீரர்களைக், கொண்டிராமல் இருப்பதே அரணாகும்.
(அது போல்...)
எவ்வித முனைப்பை உடையது எனினும்; ஊழலை ஒழிக்கும் முனைப்பற்ற நிர்வாகிகளைக், கொண்டிராமல் இருப்பதே கட்சியாகும்.

மனித உறவுகள்


உடல் உணர்ச்சிகளும்
உள்ள உணர்ச்சிகளும்
புரியாது போயிருப்பினும்...

மனிதவுறவுகள் மலர்ந்திருக்குமோ?!

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

குறள் எண்: 0749 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0749}

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்

விழியப்பன் விளக்கம்: போர்முனையில் இருக்கும் போது, பகைவர்களைச் சாய்க்கும் வண்ணம்; செயலாற்ற வேண்டிய போது, உள்ளிருக்கும் வீரர்களை வீறுகொளச் செய்வதே அரணாகும்.
(அது போல்...)
பொருளாதாரச் சிக்கலின் போது, ஆடம்பரத்தைக் குறைக்கும் வண்ணம்; தேவையான தருணத்தின் போது, குடும்பத்து உறுப்பினர்களைப் பொறுப்புணர வைப்பதே தலைமையாகும்.

சனி, ஆகஸ்ட் 19, 2017

குறள் எண்: 0748 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0748}

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்

விழியப்பன் விளக்கம்: முற்றுகையில் திறமடைந்து, பல முற்றுகைகளைச் செய்தவரையும்; பற்றுவதில் திறமடைந்த உள்ளிருக்கும் வீரர்கள் பற்றியதை, வெல்லச் செய்வதே அரணாகும்.
(அது போல்...)
பிரிவினைகளில் கைதேர்ந்து, பல பிரிவினைகளைச் செய்தவரையும்; அன்புடைமையில் கைதேர்ந்த குடும்பத்திலிருக்கும் அன்பர்கள் போற்றிட, விலக்கச் செய்வதே உறவாகும்.

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

குறள் எண்: 0747 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0747}

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்

விழியப்பன் விளக்கம்: படைகளை அழித்து முற்றுகை இட்டோ, முற்றுகை இடாமல் நெருங்கியோ அல்லது உள்ளிருப்போரை வஞ்சனையால் வீழித்தியோ; கைப்பற்றுவதற்கு இயலாததே அரணாகும்.
(அது போல்...)
விதிகளைத் தளர்த்தி சூழ்ச்சி செய்தோ, சூழ்ச்சி செய்யாமல் திட்டமிட்டோ அல்லது உரிமையாளரை அச்சத்தால் பணித்தோ; அபகரித்தலைச் செய்யாததே அறமாகும்.

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

குறள் எண்: 0746 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0746}

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்

விழியப்பன் விளக்கம்: உள்ளிருக்கும் யாவர்க்கும், தேவையான அனைத்தும் கொண்டு; பகைவர்கள் தாக்கும்போது அவர்களை அழித்து உதவும், வலிமையான வீரர்களை உடையதே அரணாகும்.
(அது போல்...)
இளைஞர்கள் அனைவருக்கும், தகுதியான வேலையைக் கொடுத்து; பொருளாதார நெருக்கடியில் அனைத்தையும் சமாளித்து வெல்லும், திறமையான அலுவர்களைக் கொண்டதே அரசாகும்.

புதன், ஆகஸ்ட் 16, 2017

குறள் எண்: 0745 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0745}

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்

விழியப்பன் விளக்கம்: பகைவரால் கைப்பற்ற இயலாததாய், எல்லோர்க்கும் உணவை அளிப்பதாகி; உள்ளிருக்கும் வீரர்கள் எளிதாய் போரிடும் வாய்ப்பை, அளிக்க வல்லதே அரணாகும்.
(அது போல்...)
பிறரால் குறைகாண முடியாததாய், அனைத்து வளங்களையும் காப்பதாகி; குடியிருக்கும் மக்கள் எளிதாய் வாழும் வழியை, வழங்க வல்லதே அரசாகும்.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

குறள் எண்: 0744 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0744}

சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்

விழியப்பன் விளக்கம்: காவல் வீரர்கள் நிற்குமிடம் சிறியதாகி, மற்றவிடங்கள் அகன்று பரந்தாதாகி; போரிட வரும் பகைவர்களின், வலிமையை அழிப்பதே அரணாகும்.
(அது போல்...)
மாவட்ட நிர்வாகிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் உரிமையை அதிகமாக்கி; ஊழல் செய்யும் கயவர்களின், ஆதிக்கத்தை அழிப்பதே கட்சியாகும்.

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

குறள் எண்: 0743 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0743}

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

விழியப்பன் விளக்கம்: ஏற முடியாத உயரம்/ஊடுருவ முடியாத அகலம்/தகர்க்க முடியாத உறுதி/கணிக்க முடியாத அமைப்பு - இந்நான்கும் அமையப் பெற்றதே, அரண் என்று மறைநூல் உரைக்கும்.
(அது போல்...)
மறுக்க முடியாத அன்பு/பிரிக்க முடியாத பிணைப்பு/அழிக்க முடியாத நம்பிக்கை/சிதைக்க முடியாத குடும்பம் - இந்நான்கும் கிடைக்கப் பெற்றதே, வம்சம் என சமுதாயம் போற்றும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

குறள் எண்: 0742 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0742}

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்

விழியப்பன் விளக்கம்: தெளிந்த நீர்பரப்பும்/புதர்களற்ற அகன்ற நிலமும்/உயர்ந்த மலைத்தொடரும்/படர்ந்த நிழலுடைய அடர்ந்த காடும் - கொண்டிருப்பதே, இயற்கையான அரண்களாகும்.
(அது போல்...)
மலர்ந்த புன்சிரிப்பும்/வஞ்சமற்ற பரந்த நட்பும்/சிறந்த அறத்தழுவலும்/பரஸ்பர புரிதலுடைய ஆழ்ந்த அன்பும் - இருப்பதே, அடிப்படையான குணங்களாகும்.

சனி, ஆகஸ்ட் 12, 2017

குறள் எண்: 0741 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0741}

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்

விழியப்பன் விளக்கம்: போர்களை வென்று மக்கள் பணியாற்றுவோர்க்கு, அரண் முக்கியமானது; போருக்குப் பயந்துத் தம்மைக் காக்க முயல்வோர்க்கும், அரணே முக்கியமானதாகும்.
(அது போல்...)
அறத்தைப் பழகி நற்செயல் புரிவோர்க்கு, மனசாட்சி புனிதமானது; அறத்துக்குப் புறம்பாகித் தம்மைச் சிதைத்துக் கொள்வோர்க்கும், மனசாட்சியே புனிதமானது.

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

அதிகாரம் 074: நாடு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு

0731.  தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
           செல்வரும் சேர்வது நாடு

           விழியப்பன் விளக்கம்: உற்பத்தியை நிறுத்தாத விவசாயிகள்/அறத்தை மறக்காத சான்றோர்
           /எதற்கும் தாழ்ச்சியடையாத செல்வந்தர் - இவர்கள் சேர்ந்ததே நாடாகும்.
(அது போல்...)
           அறத்தை மீறாத பெற்றோர்/நீதியைச் சிதைக்காத ஆட்சியர்/எதிலும் குறைவில்லாத
           முன்னோர் - இவர்களை உள்ளடக்கியதே சமுதாயமாகும்.
      
0732.  பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்
           ஆற்ற விளைவது நாடு

           விழியப்பன் விளக்கம்: அளவுகடந்த பொருள் வளத்தால், எல்லோரின் விருப்பத்திற்கும்
           உள்ளாகி; எவ்வித கேடுகளும் இல்லாமல், அளவற்ற விளைச்சலைக் கொண்டிருப்பதே
           நாடாகும்.
(அது போல்...)
           குறையற்ற சமுதாயப் பயனால், அனைவரின் ஆதரவையும் பெற்று; இயற்கைக்கு பாதகம்
           ஏதுமின்றி, எண்ணற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதே வளர்ச்சியாகும்.
           
0733.  பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு
           இறையொருங்கு நேர்வது நாடு

           விழியப்பன் விளக்கம்: பல்வகை சுமைகள் ஒருங்கிணைந்து, தம்மேல் சுமத்தப்படும் போது;
           அவற்றைத் தாங்கி அரசாள்பவரோடு ஒருங்கிணைந்து, அரசுக்குத் துணை நிற்பதே
           நாடாகும்.
(அது போல்...)
           பல்வேறு குழப்பங்கள் ஒருசேர, தம்முள் அழுத்தும் போது; அவற்றைக் களைந்து
           உறவுகளோடு ஒன்றுசேர்ந்து, இன்பத்திற்கு வழி வகுப்பதே இல்லறமாகும்.

0734.  உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
           சேராது இயல்வது நாடு

           விழியப்பன் விளக்கம்: அதீத பசி/தீராத நோய்/அண்டை நாட்டுப் பகை - இவை மூன்றும்;
           தன்னைச் சேராது, காக்க முயல்வதே நாடாகும்.
(அது போல்...)
           அதீத மோகம்/குறையாத மனவுளைச்சல்/உறவை வஞ்சிக்கும் தீக்குணம் - இவை மூன்றும்;
           தனக்கு இல்லாமல், வாழ முயற்சிப்பதே ஒழுக்கமாகும்.

0735.  பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
           கொல்குறும்பும் இல்லது நாடு

           விழியப்பன் விளக்கம்: பல்வகைப் பிரிவினைகள்/பொதுநலத்தைப் பாழாக்கும் உட்பகை/
           அரசை அலைக்கழிக்கும் துணை அரசாங்கம் - இவையேதும் இல்லாதிருப்பதே நாடாகும்.
(அது போல்...)
           பல்வேறு விரிசல்கள்/இல்லறத்தைப் பாதிக்கும் தனிப்பகை/சுற்றத்தை அழிக்கும் குடும்ப
           உறவுகள் - இவையாவும் இல்லாததே வம்சமாகும்.

0736.  கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
           நாடுஎன்ப நாட்டின் தலை

           விழியப்பன் விளக்கம்: பகைவர்களால் அழிவைச் சந்திக்காமல், அழிவேதும் நிகழ்ந்தாலும்;
           எவ்வித வளத்திலும் குறையாத நாடே, எல்லா நாடுகளிலும் தலையானது எனப்படும்.
(அது போல்...)
           உணர்வுகளால் பாதிப்புக்கு உள்ளாகாமல், பாதிப்பேதும் அடைந்தாலும்; எவ்வித
           உணர்ச்சியாலும் வெளிப்படுத்தாத மனிதரே, எல்லா மனிதரிலும் புனிதர் எனப்படுவர்.

0737.  இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
           வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

           விழியப்பன் விளக்கம்: நிலத்தடி-நீர் மற்றும் நிலப்பரப்பு-நீர்/நீண்டு உயர்ந்த
           மலைத்தொடர்கள்/மலையிலிருந்து வழியும் நீர்/வலிமையான கோட்டை - இவையாவும், ஓர்
           நாட்டின் முக்கியமான உறுப்புகளாகும்.
(அது போல்...)
           அனுபவ-அறிவு மற்றும் கேள்வி-அறிவு/ஆழ்ந்து உணர்ந்த அறநெறிகள்/அறநெறியிலிருந்து
           கிடைக்கும் அறிவு/உறுதியான சுயவொழுக்கம் - இவையாவும், ஓர் மனிதனின் உயர்வான
           அம்சங்களாகும்.

0738.  பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
           அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

           விழியப்பன் விளக்கம்: உயிரழிக்கும் நோய் இல்லாமை/பல்வகைச் செல்வங்கள்/குறையாத
           விளைச்சல்/இயல்பான இன்பம்/வலிமையான காவல் - இவை ஐந்தும், நாட்டை
           அலங்கரிக்கும் அணிகலன்கள் ஆகும்.
(அது போல்...)
           உணர்வழிக்கும் மூர்க்கம் இல்லாமை/பல்வேறு நற்குணங்கள்/பரஸ்பர புரிதல்/புனிதமான
           உறவு/உண்மையான ஒழுக்கம் - இவை ஐந்தும், வாழ்வை சிறப்பிக்கும் காரணிகள் ஆகும்.

0739.  நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
           நாட வளந்தரும் நாடு

           விழியப்பன் விளக்கம்: பெரு முயற்சியால், செயற்கையான வளங்களைப் பெறும் நாடு
           உயர்ந்தது அல்ல! பெரு முயற்சியின்றி, இயற்கையான வளங்களைப் பெற்றிருக்கும் நாடே
           உயர்ந்தது ஆகும்!
(அது போல்...)
           உணர்ச்சி வயப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சி சிறந்தது அல்ல!
           உணர்ச்சி வயப்படாமல், உண்மையான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சியே சிறந்தது
           ஆகும்!

0740.  ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
           வேந்தமைவு இல்லாத நாடு

           விழியப்பன் விளக்கம்: ஓர் நாட்டிற்கு, மக்களாட்சியை உணராத அரசு வாய்ப்பின்; நாட்டின்
           இலக்கணத்திற்கான எல்லாக் காரணிகள் இருப்பினும், அவற்றால் எவ்விதப் பயனும்
           இல்லை.
(அது போல்...)
           ஓர் மனிதனுக்கு, மனசாட்சியை மதிக்காத மனது இருப்பின்; மனித அடிப்படைக்கான
           அனைத்துத் தகுதிகள் இருப்பினும், அவற்றால் எந்தப் பலனும் இல்லை.

குறள் எண்: 0740 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0740}

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
வேந்தமைவு இல்லாத நாடு

விழியப்பன் விளக்கம்: ஓர் நாட்டிற்கு, மக்களாட்சியை உணராத அரசு வாய்ப்பின்; நாட்டின் இலக்கணத்திற்கான எல்லாக் காரணிகள் இருப்பினும், அவற்றால் எவ்விதப் பயனும் இல்லை.
(அது போல்...)
ஓர் மனிதனுக்கு, மனசாட்சியை மதிக்காத மனது இருப்பின்; மனித அடிப்படைக்கான அனைத்துத் தகுதிகள் இருப்பினும், அவற்றால் எந்தப் பலனும் இல்லை.

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

குறள் எண்: 0739 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0739}

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு

விழியப்பன் விளக்கம்: பெரு முயற்சியால், செயற்கையான வளங்களைப் பெறும் நாடு உயர்ந்தது அல்ல! பெரு முயற்சியின்றி, இயற்கையான வளங்களைப் பெற்றிருக்கும் நாடே உயர்ந்தது ஆகும்!
(அது போல்...)
உணர்ச்சி வயப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சி சிறந்தது அல்ல! உணர்ச்சி வயப்படாமல், உண்மையான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சியே சிறந்தது ஆகும்!

புதன், ஆகஸ்ட் 09, 2017

குறள் எண்: 0738 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0738}

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

விழியப்பன் விளக்கம்: உயிரழிக்கும் நோய் இல்லாமை/பல்வகைச் செல்வங்கள்/குறையாத விளைச்சல்/இயல்பான இன்பம்/வலிமையான காவல் - இவை ஐந்தும், நாட்டை அலங்கரிக்கும் அணிகலன்கள் ஆகும்.
(அது போல்...)
உணர்வழிக்கும் மூர்க்கம் இல்லாமை/பல்வேறு நற்குணங்கள்/பரஸ்பர புரிதல்/புனிதமான உறவு/உண்மையான ஒழுக்கம் - இவை ஐந்தும், வாழ்வை சிறப்பிக்கும் காரணிகள் ஆகும்.

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2017

குறள் எண்: 0737 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0737}

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

விழியப்பன் விளக்கம்: நிலத்தடி-நீர் மற்றும் நிலப்பரப்பு-நீர்/நீண்டு உயர்ந்த மலைத்தொடர்கள்/மலையிலிருந்து வழியும் நீர்/வலிமையான கோட்டை - இவையாவும், ஓர் நாட்டின் முக்கியமான உறுப்புகளாகும்.
(அது போல்...)
அனுபவ-அறிவு மற்றும் கேள்வி-அறிவு/ஆழ்ந்து உணர்ந்த அறநெறிகள்/அறநெறியிலிருந்து கிடைக்கும் அறிவு/உறுதியான சுயவொழுக்கம் - இவையாவும், ஓர் மனிதனின் உயர்வான அம்சங்களாகும்.

திங்கள், ஆகஸ்ட் 07, 2017

குறள் எண்: 0736 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0736}

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை

விழியப்பன் விளக்கம்: பகைவர்களால் அழிவைச் சந்திக்காமல், அழிவேதும் நிகழ்ந்தாலும்; எவ்வித வளத்திலும் குறையாத நாடே, எல்லா நாடுகளிலும் தலையானது எனப்படும்.
(அது போல்...)
உணர்வுகளால் பாதிப்புக்கு உள்ளாகாமல், பாதிப்பேதும் அடைந்தாலும்; எவ்வித உணர்ச்சியாலும் வெளிப்படுத்தாத மனிதரே, எல்லா மனிதரிலும் புனிதர் எனப்படுவர்.

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

குறள் எண்: 0735 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0735}

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

விழியப்பன் விளக்கம்: பல்வகைப் பிரிவினைகள்/பொதுநலத்தைப் பாழாக்கும் உட்பகை/அரசை அலைக்கழிக்கும் துணை அரசாங்கம் - இவையேதும் இல்லாதிருப்பதே நாடாகும்.
(அது போல்...)
பல்வேறு விரிசல்கள்/இல்லறத்தைப் பாதிக்கும் தனிப்பகை/சுற்றத்தை அழிக்கும் குடும்ப உறவுகள் - இவையாவும் இல்லாததே வம்சமாகும்.

சனி, ஆகஸ்ட் 05, 2017

குறள் எண்: 0734 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0734}

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு

விழியப்பன் விளக்கம்: அதீத பசி/தீராத நோய்/அண்டை நாட்டுப் பகை - இவை மூன்றும்; தன்னைச் சேராது, காக்க முயல்வதே நாடாகும்.
(அது போல்...)
அதீத மோகம்/குறையாத மனவுளைச்சல்/உறவை வஞ்சிக்கும் தீக்குணம் - இவை மூன்றும்; தனக்கு இல்லாமல், வாழ முயற்சிப்பதே ஒழுக்கமாகும்.

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

குறள் எண்: 0733 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0733}

பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு

விழியப்பன் விளக்கம்: பல்வகை சுமைகள் ஒருங்கிணைந்து, தம்மேல் சுமத்தப்படும் போது; அவற்றைத் தாங்கி அரசாள்பவரோடு ஒருங்கிணைந்து, அரசுக்குத் துணை நிற்பதே நாடாகும்.
(அது போல்...)
பல்வேறு குழப்பங்கள் ஒருசேர, தம்முள் அழுத்தும் போது; அவற்றைக் களைந்து உறவுகளோடு ஒன்றுசேர்ந்து, இன்பத்திற்கு வழி வகுப்பதே இல்லறமாகும்.

வியாழன், ஆகஸ்ட் 03, 2017

குறள் எண்: 0732 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0732}

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

விழியப்பன் விளக்கம்: அளவுகடந்த பொருள் வளத்தால், எல்லோரின் விருப்பத்திற்கும் உள்ளாகி; எவ்வித கேடுகளும் இல்லாமல், அளவற்ற விளைச்சலைக் கொண்டிருப்பதே நாடாகும்.
(அது போல்...)
குறையற்ற சமுதாயப் பயனால், அனைவரின் ஆதரவையும் பெற்று; இயற்கைக்கு பாதகம் ஏதுமின்றி, எண்ணற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதே வளர்ச்சியாகும்.

புதன், ஆகஸ்ட் 02, 2017

குறள் எண்: 0731 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0731}

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

விழியப்பன் விளக்கம்: உற்பத்தியை நிறுத்தாத விவசாயிகள்/அறத்தை மறக்காத சான்றோர்/எதற்கும் தாழ்ச்சியடையாத செல்வந்தர் - இவர்கள் சேர்ந்ததே நாடாகும்.
(அது போல்...)
அறத்தை மீறாத பெற்றோர்/நீதியைச் சிதைக்காத ஆட்சியர்/எதிலும் குறைவில்லாத முன்னோர் - இவர்களை உள்ளடக்கியதே சமுதாயமாகும்.

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

அதிகாரம் 073: அவையஞ்சாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை

0721.  வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
           தொகையறிந்த தூய்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய
           அறிவுடையோர்; வல்லவர் அவை என்பதறிந்து அஞ்சி, வாய் தவறியும் பிழையாய்
           பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்; பணக்கார வம்சம்
           என்ற செருக்கில், தன்னிலை மறந்தும் இச்சையை நாடமாட்டார்கள்.
      
0722.  கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
           கற்ற செலச்சொல்லு வார்

           விழியப்பன் விளக்கம்: அவையச்சம் இன்றி கற்றறிந்தோர் அவையில், தாம் கற்றவற்றை
           அவையோர் ஒப்ப சொல்லும் திறமுடையோர்; கற்றவர்களுள் "முழுமையாய் கற்றவர்"
           எனப்படுவர்.
(அது போல்...)
           குறையேதும் இன்றி வம்சத்தினர் முன்னிலையில், தம் வாழ்வியலை வம்சத்தினர் போற்ற
           வாழும் இயல்புடையோர்; வாழ்ந்தவர்களில் "சிறப்பாய் வாழ்ந்தவர்" எனப்படுவர்.
           
0723.  பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
           அவையகத்து அஞ்சா தவர்

           விழியப்பன் விளக்கம்: பகைவர்கள் சூழ்ந்த களத்தில், அச்சமின்றி வீரமரணம்
           எய்துவோரைக் காண்பது எளிது! சான்றோர்கள் நிறைந்த அவையில், அச்சமின்றி
           சொற்பொழிவு ஆற்றுவோரைக் காண்பது அரிது!
(அது போல்...)
           சிக்கல்கள் நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரை எளிதில்
           காணலாம்! மகிழ்ச்சி நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரைக்
           காண்பது அரிதானது!

0724.  கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
           மிக்காருள் மிக்க கொளல்

           விழியப்பன் விளக்கம்: கற்றறிந்தோர் அவையில் நாம் கற்றதை, அச்சமின்றி அவர்கள் ஒப்பப்
           பகிர்ந்து; நம்மை விட அதிகம் கற்றவர்களிடம் இருந்து, சிறந்ததைக் கற்றுக்கொள்ள
           வேண்டும்.
(அது போல்...)
           வாழ்ந்துணர்ந்த முதியோரிடம் நம் வாழ்க்கையை, தயக்கமின்றி அவர்கள் வாழ்த்த
           உரைத்து; நம்மை விட சிறந்து வாழ்ந்தவர்களிடம் இருந்து, அரிதானதைத்
           தெரிந்துகொள்ள வேண்டும்.

0725.  ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
           மாற்றம் கொடுத்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் நிறைந்த அவையில், அவையச்சம் ஏதுமின்றி பதில்
           சொல்லும் பொருட்டு; வாழ்வியல் நெறிகளை, தேவையான அளவயறிந்து கற்கவேண்டும்.
(அது போல்...)
           ஒழுக்கமானோர் நிறைந்த வம்சத்தில், குறையொழுக்கம் ஏதுமின்றி வாழ்ந்து காட்டும்
           பொருட்டு; முன்னோரின் வரலாற்றை, அவசியமான அளவுக்கு அறியவேண்டும்.

0726.  வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
           நுண்ணவை அஞ்சு பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வலிமையான வீரர் அல்லாதவர்க்கு, வாளுடன் என்ன தொடர்பு?
           நுண்ணறிவு உடையோர் அவையைக் கண்டு அஞ்சுவோர்க்கு, நூலுடன் என்ன தொடர்பு?
(அது போல்...)
           இயல்பான அன்பு இல்லாதவர்க்கு, உறவுடன் என்ன தொடர்பு? சுயவொழுக்கம் நிறைந்த
           கட்சியை விமர்சனம் செய்வோர்க்கு, பொதுநலத்துடன் என்ன தொடர்பு?

0727.  பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
           அஞ்சும் அவன்கற்ற நூல்

           விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்த அவையினர் முன், பேசுவதற்கு அஞ்சுவோர் கற்ற நூல்;
           அச்சுறுத்தும் பகைவர்கள் முன், கோழையின் கையிலிருக்கும் வாளைப் போன்றதாகும்.
(அது போல்...)
           தேர்ந்தெடுத்த மக்கள் முன், தோன்றுவதற்கு பயப்படுவோர் பெற்ற வாக்குகள்; கொடிய
           விலங்குகள் முன், பயிற்சியற்றோர் கொண்டிருக்கும் கூண்டைப் போன்றதாகும்.

0728.  பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
           நன்கு செலச்செல்லா தார்

           விழியப்பன் விளக்கம்: நல்லறிவு கொண்ட அவையினர் மத்தியில், அச்சமின்றி
           நன்முறையில் எடுத்துரைக்க முடியாதோர்; பல்வகைப் பாடங்களைக் கற்றிருந்தும்,
           பயனற்றவரே ஆவர்.
(அது போல்...)
           முழுப்பலம் உடைய ஆட்சியினர் முன், தயக்கமின்றிக் குறைகளை இடித்துரைக்க
           இயலாதது; பல்வகை வசதிகளைக் கொண்டிருக்கும், பிணவறையைப் போன்றதாகும்.

0729.  கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
           நல்லார் அவையஞ்சு வார்

           விழியப்பன் விளக்கம்: பலவற்றைக் கற்றறிந்து இருப்பினும், நல்லறிவு கொண்டோர்
           அவைக்கு அஞ்சுவோர்; கல்வியறிவு இல்லாதவரை விட, அடுத்த நிலையிலேயே
           வைக்கப்படுவர்.
(அது போல்...)
           பல்வகை உறவுகள் இருப்பினும், ஈன்றெடுத்தப் பெற்றோரை விலக்கி வைத்திருப்போர்;
           உறவேதும் இல்லாதவரை விட, அதிகமானத் துன்பத்தையே சந்திப்பர்.

0730.  உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
           கற்ற செலச்சொல்லா தார்

           விழியப்பன் விளக்கம்: அவையைக் கண்டு அஞ்சி, தாம் கற்றதை நன்முறையில்
           எடுத்துரைக்க இயலாதோர்; உயிருடன் இருப்பினும், இறந்தவருக்கு இணையாவர்.
(அது போல்...)
           பகைவரைப் பார்த்து பயந்து, தம் வலிமையை முழுமையாய் வெளிப்படுத்த முடியாதோர்;
           வீரராய் இருப்பினும், கோழைக்கு ஒப்பாவர்.

குறள் எண்: 0730 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0730}

உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்

விழியப்பன் விளக்கம்: அவையைக் கண்டு அஞ்சி, தாம் கற்றதை நன்முறையில் எடுத்துரைக்க இயலாதோர்; உயிருடன் இருப்பினும், இறந்தவருக்கு இணையாவர்.
(அது போல்...)
பகைவரைப் பார்த்து பயந்து, தம் வலிமையை முழுமையாய் வெளிப்படுத்த முடியாதோர்; வீரராய் இருப்பினும், கோழைக்கு ஒப்பாவர்.