செவ்வாய், அக்டோபர் 31, 2017

குறள் எண்: 0821 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு; குறள் எண்: 0821}

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

விழியப்பன் விளக்கம்: உறவாடுவது போல் நடித்து, சுயத்தேவைக்காகப் பழகுவோரின் கூடா-நட்பு; சரியானத் தருணத்தில் வெட்டியெறியத் தாங்கிப் பிடிக்கும், பட்டடைக்கல் போன்றதாகும்!
(அது போல்...)
வாழ்வியலை உயர்த்துவதாய் சித்தரித்து, வாக்குக்காக முழங்குவோரின் பொய்-பிரச்சாரம்; உரிய நேரத்தில் கழுத்தறுக்க ஏந்தி நிற்கும், பலிப்பீடம் போன்றதாகும்!

திங்கள், அக்டோபர் 30, 2017

அதிகாரம் 082: தீ நட்பு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு

0811.  பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
           பெருகலிற் குன்றல் இனிது

           விழியப்பன் விளக்கம்: நம்மை அன்பால் உள்வாங்குவோர் போலிருப்பினும், நட்பு எனும் 
           காரணி இல்லையெனில்; அவர்களின் நட்பு, வளர்வதை விட குறைவது நன்மையானது!
(அது போல்...)
           நம்மை மானியத்தால் வாழவைப்போர் போலிருப்பினும், நேர்மை எனும் தலைமை 
           இல்லையெனில்; அவர்களின் ஆட்சி, தொடர்வதை விட உடைவது சிறப்பானது!
      
0812.  உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
           பெறினும் இழப்பினும் என்

           விழியப்பன் விளக்கம்: பயன் இருப்பின் நட்பாடி, இல்லெனின் நட்பழிக்கும்; நட்பு எனும் 
           காரணி இல்லாதோரின் நட்பை, அடைந்தாலும் இழந்தாலும் என்ன வேறுபாடு?
(அது போல்...)
           ஓட்டு தேவையாயின் கும்பிட்டு, இல்லையாயின் சுட்டுக்கொல்லும்; மக்களாட்சி எனும் 
           அடிப்படை அறியாதோரின் ஆட்சி, இருந்தாலும் மாறினாலும் என்ன மாறுபாடு?
           
0813.  உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
           கொள்வாரும் கள்வரும் நேர்

           விழியப்பன் விளக்கம்: பலனை மதிப்பிட்டு நட்பாடும் நண்பர்/காமத்தை முதலீட்டிச் 
           சம்பாதிக்கும் விலைமகளிர்/பயத்தைத் தூண்டி அபகரிக்கும் கள்வர் - இவர்கள் 
           ஒருவருக்கொருவர் ஒப்பானவர்!
(அது போல்...)
           உரிமையை அழித்து அரசாளும் ஆட்சியர்/விவசாயத்தை அழித்து கட்டடம் கட்டுவோர்/
           பொதுமை அழித்து சுயம் காப்போர் - இவர்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்!

0814.  அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
           தமரின் தனிமை தலை

           விழியப்பன் விளக்கம்: போர்க்களத்தில் போர்வீரரைக் கீழே தள்ளி கைவிடும்பயிற்சியற்ற 
           குதிரையைப் போன்றவரின் நட்பை விடதனிமை முதன்மையானது!
(அது போல்...)
           விவசாயத்தில் விவசாயியை நலியச் செய்து அழிக்கும்இரசாயன உரத்தைப் போன்றோரின் 
           ஆட்சியை விடஅடிமைத்தனம் மேலானது!

0815.  செய்துஏமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
           எய்தலின் எய்தாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: எதனைச் செய்தும், பாதுகாப்பாக இல்லாத முதிற்சியற்றோரின் தீய 
           நட்பை; அடைவதை விட, அடையாமல் இருப்பது சிறந்ததாகும்.
(அது போல்...)
           எவ்வளவு கற்பித்தும், மக்களுக்காக அமையாத சுயநலவாதிகளின் குறை ஆட்சியை; 
           அனுமதிப்பதை விட, அனுமதிக்காமல் இருப்பது நன்றாகும்.

0816.  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
           ஏதின்மை கோடி உறும்

           விழியப்பன் விளக்கம்: அறியாமை உடையோரிடம் கொண்டிருக்கும், அதீத நெருக்கமான 
           நட்பை விட; அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகைமைக் கூட, கோடி நன்மையைப் 
           பயக்கும்!
(அது போல்...)
           அன்பின்மை மிகுந்தோரிடம் கொண்டிருக்கும், மிக அதிகமான பயத்தை விட; 
           அன்புடையோரிடம் வெளிப்படுத்தும் மூர்க்கம் கூட, பன்மடங்கு நிம்மதியை அளிக்கும்!

0817.  நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
           பத்தடுத்த கோடி உறும்

           விழியப்பன் விளக்கம்: தவறுகளை நேரடியாகச் சுட்டாமல், புறங்கூறி நகைக்கும் நட்பை 
           விட; பகைவர் செய்யும் யாவும், பன்மடங்கு கோடி நன்மையையே விளைவிக்கும்.
(அது போல்...)
           எதிர்ப்புகளை கூட்டணியில் தெரிவிக்காமல், சூழ்ச்சியை செய்யும் கட்சியை விட; 
           எதிர்க்கட்சி வைக்கும் விமர்சனம், பன்மடங்கு கோடி ஆதரவையே அளிக்கும்.

0818.  ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
           சொல்லாடார் சோர விடல்

           விழியப்பன் விளக்கம்: செய்ய முடிந்த செயல்களை, செய்ய முடியாததாய் மாற்றுவோரின் 
           நட்பை; அவருக்குத் தெரிவிக்காமல், தானாக அழியும் வகையில் விட்டுவிட வேண்டும்.
(அது போல்...)
           ஆதரிக்க வேண்டிய நபர்களை, ஆதரிக்க வேண்டாதவராய் சித்தரிப்போரின் 
           விமர்சனத்தை; அதற்கு பதிலளிக்காமல், தாமாக அடங்கும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.

0819.  கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
           சொல்வேறு பட்டார் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்/சொல்லும் செய்தி - இரண்டிலும் வேறுபட்டோரின்  
           நட்பு; நனவில் மட்டுமல்லாமல் கனவிலும், துன்பத்தை அளிக்கும்!
(அது போல்...)
           கற்ற விதம்/கற்பிக்கும் விதம் - இரண்டிலும் முரண்பட்டோரின் வழிகாட்டல்; தமக்கு 
           மட்டுமின்றி சார்ந்தோர்க்கும், தோல்வியை அளிக்கும்!

0820.  எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
           மன்றில் பழிப்பார் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: வீடு போன்ற தனியிடத்தில் நன்றாக நட்பாடிவிட்டு, தெரு போன்ற 
           பொதுவிடத்தில் பழிப்போரின் நட்பை; அணுவளவும் அணுக விடாமல் பாதுக்காக்க 
           வேண்டும்!
(அது போல்...)
           மேடை போன்ற நேர்பார்வையில் உயர்வாக பேசிவிட்டு, மக்களவை போன்ற மறைவிடத்தில் 
           தாழ்வோரின் கட்சியை; எத்தொகுதியிலும் வெற்றி பெறாமல் வாக்களிக்க வேண்டும்!

குறள் எண்: 0820 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0820}

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு

விழியப்பன் விளக்கம்: வீடு போன்ற தனியிடத்தில் நன்றாக நட்பாடிவிட்டு, தெரு போன்ற பொதுவிடத்தில் பழிப்போரின் நட்பை; அணுவளவும் அணுக விடாமல் பாதுக்காக்க வேண்டும்!
(அது போல்...)
மேடை போன்ற நேர்பார்வையில் உயர்வாக பேசிவிட்டு, மக்களவை போன்ற மறைவிடத்தில் தாழ்வோரின் கட்சியை; எத்தொகுதியிலும் வெற்றி பெறாமல் வாக்களிக்க வேண்டும்!

ஞாயிறு, அக்டோபர் 29, 2017

கண்ணகியின் கற்பும், கோவலனின் நடத்தையும்...


கோவலனின் நடத்தையை
கேவலமாய் சித்தரித்தது;
"கண்ணகியின் கற்பதனை"
கலியுகத்தார் கொண்டாடவா?
"கல்லானாலும் கணவனெனும்"
கற்பித்தலை நிலைநாட்டவா??

குறள் எண்: 0819 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0819}

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு

விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்/சொல்லும் செய்தி - இரண்டிலும் வேறுபட்டோரின் நட்பு; நனவில் மட்டுமல்லாமல் கனவிலும், துன்பத்தை அளிக்கும்!
(அது போல்...)
கற்ற விதம்/கற்பிக்கும் விதம் - இரண்டிலும் முரண்பட்டோரின் வழிகாட்டல்; தமக்கு மட்டுமின்றி சார்ந்தோர்க்கும், தோல்வியை அளிக்கும்!

சனி, அக்டோபர் 28, 2017

குறள் எண்: 0818 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0818}

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்

விழியப்பன் விளக்கம்: செய்ய முடிந்த செயல்களை, செய்ய முடியாததாய் மாற்றுவோரின் நட்பை; அவருக்குத் தெரிவிக்காமல், தானாக அழியும் வகையில் விட்டுவிட வேண்டும்.
(அது போல்...)
ஆதரிக்க வேண்டிய நபர்களை, ஆதரிக்க வேண்டாதவராய் சித்தரிப்போரின் விமர்சனத்தை; அதற்கு பதிலளிக்காமல், தாமாக அடங்கும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.

வெள்ளி, அக்டோபர் 27, 2017

குறள் எண்: 0817 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0817}

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

விழியப்பன் விளக்கம்: தவறுகளை நேரடியாகச் சுட்டாமல், புறங்கூறி நகைக்கும் நட்பை விட; பகைவர் செய்யும் யாவும், பன்மடங்கு கோடி நன்மையையே விளைவிக்கும்.
(அது போல்...)
எதிர்ப்புகளை கூட்டணியில் தெரிவிக்காமல், சூழ்ச்சியை செய்யும் கட்சியை விட; எதிர்க்கட்சி வைக்கும் விமர்சனம், பன்மடங்கு கோடி ஆதரவையே அளிக்கும்.

வியாழன், அக்டோபர் 26, 2017

குறள் எண்: 0816 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0816}

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

விழியப்பன் விளக்கம்: அறியாமை உடையோரிடம் கொண்டிருக்கும், அதீத நெருக்கமான நட்பை விட; அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகைமைக் கூட, கோடி நன்மையைப் பயக்கும்!
(அது போல்...)
அன்பின்மை மிகுந்தோரிடம் கொண்டிருக்கும், மிக அதிகமான பயத்தை விட; அன்புடையோரிடம் வெளிப்படுத்தும் மூர்க்கம் கூட, பன்மடங்கு நிம்மதியை அளிக்கும்!

புதன், அக்டோபர் 25, 2017

குறள் எண்: 0815 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0815}

செய்துஏமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

விழியப்பன் விளக்கம்: எதனைச் செய்தும், பாதுகாப்பாக இல்லாத முதிற்சியற்றோரின் தீய நட்பை; அடைவதை விட, அடையாமல் இருப்பது சிறந்ததாகும்.
(அது போல்...)
எவ்வளவு கற்பித்தும், மக்களுக்காக அமையாத சுயநலவாதிகளின் குறை ஆட்சியை; அனுமதிப்பதை விட, அனுமதிக்காமல் இருப்பது நன்றாகும்.

செவ்வாய், அக்டோபர் 24, 2017

குறள் எண்: 0814 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0814}

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

விழியப்பன் விளக்கம்: போர்க்களத்தில் போர்வீரரைக் கீழே தள்ளி கைவிடும்பயிற்சியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பை விடதனிமை முதன்மையானது!
(அல்லது)
விவசாயத்தில் விவசாயியை நலியச் செய்து அழிக்கும், இரசாயன உரத்தைப் போன்றோரின் ஆட்சியை விட; அடிமைத்தனம் மேலானது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், அக்டோபர் 23, 2017

குறள் எண்: 0813 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0813}

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்

விழியப்பன் விளக்கம்: பலனை மதிப்பிட்டு நட்பாடும் நண்பர்/காமத்தை முதலீட்டிச் சம்பாதிக்கும் விலைமகளிர்/பயத்தைத் தூண்டி அபகரிக்கும் கள்வர் - இவர்கள் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்!
(அது போல்...)
உரிமையை அழித்து அரசாளும் ஆட்சியர்/விவசாயத்தை அழித்து கட்டடம் கட்டுவோர்/பொதுமை அழித்து சுயம் காப்போர் - இவர்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 22, 2017

குறள் எண்: 0812 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0812}

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

விழியப்பன் விளக்கம்: பயன் இருப்பின் நட்பாடி, இல்லெனின் நட்பழிக்கும்; நட்பு எனும் காரணி இல்லாதோரின் நட்பை, அடைந்தாலும் இழந்தாலும் என்ன வேறுபாடு?
(அது போல்...)
ஓட்டு தேவையாயின் கும்பிட்டு, இல்லையாயின் சுட்டுக்கொல்லும்; மக்களாட்சி எனும் அடிப்படை அறியாதோரின் ஆட்சி, இருந்தாலும் மாறினாலும் என்ன மாறுபாடு?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, அக்டோபர் 21, 2017

குறள் எண்: 0811 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 082 - தீ நட்பு; குறள் எண்: 0811}

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

விழியப்பன் விளக்கம்: நம்மை அன்பால் உள்வாங்குவோர் போலிருப்பினும், நட்பு எனும் காரணி இல்லையெனில்; அவர்களின் நட்பு, வளர்வதை விட குறைவது நன்மையானது!
(அது போல்...)
நம்மை மானியத்தால் வாழவைப்போர் போலிருப்பினும், நேர்மை எனும் தலைமை இல்லையெனில்; அவர்களின் ஆட்சி, தொடர்வதை விட உடைவது சிறப்பானது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 20, 2017

அதிகாரம் 081: பழைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை

0801.  பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
           கிழமையைக் கீழ்த்திடா நட்பு

           விழியப்பன் விளக்கம்: நட்பில் பழைமையைப் போற்றுவது என்னவெனில்; பழைமையால் 
           விளைந்த உரிமையில் செய்யும் தவறுகளை, தரக்குறைவாய் விமர்சிக்காததே ஆகும்!
(அது போல்...)
           உறவில் உரிமையை நிலைநாட்டுவது யாதெனில்; உரிமையால் கிடைத்த சுதந்திரத்தில் 
           செய்யும் அத்துமீறல்களை, பிரச்சனையாய் கருதாததே ஆகும்!
      
0802.  நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
           உப்பாதல் சான்றோர் கடன்

           விழியப்பன் விளக்கம்: பழமையான நட்பின் இயல்பென்பது, உரிமையைப் பகிர்வதாகும்! 
           மற்றும் அதற்கு துணையாய் இருப்பது, பழைமையை உணர்ந்த சான்றோரின் கடமையாகும்!
(அது போல்...)
           நேர்மையான ஆட்சியின் சிறப்பென்பது, மனிதத்தை வளர்ப்பதாகும்! மற்றும் அதற்கு 
           விதையாய் இருப்பது, நேர்மையை உணர்ந்த வாக்காளர்களின் பணியாகும்!
           
0803.  பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
           செய்தாங்கு அமையாக் கடை

           விழியப்பன் விளக்கம்: நெடுநாள் பழகிய உரிமையில், உடன்பாடற்ற விடயங்களை செய்யும் 
           போது; அவற்றோடு உடன்படவில்லை எனில், பழமையான நட்பு என்ன பயன் அளிக்கும்?
(அது போல்...)
           நெடுநாள் உழைத்த அனுபவத்தில், பழக்கமற்ற தொழில்களைப் பரிந்துரைக்கும் போது; 
           அவற்றைப் பழகவில்லை எனில், பாரம்பரியமான நிறுவனம் எப்படி விரிவு அடையும்?

0804.  விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
           கேளாது நட்டார் செயின்

           விழியப்பன் விளக்கம்: நெடுநாள் பழகிய உரிமையில், தம்மைக் கேட்காமல் நண்பர்கள் 
           செய்த விருப்பமற்ற செயல்களை; பழைமையின் பெருமையை உணர்ந்தோர், பொறுத்துக் 
           காப்பர்!
(அது போல்...)
           நெடுங்காலம் பணிபுரிந்த உரிமையில், தம்மை ஆலோசிக்காமல் மேலாளர்கள் எடுக்கும் 
           சரியற்ற முடிவுகளை; பொருளாதாரத் தேவையை அறிந்தோர், விரும்பி ஏற்பர்!

0805.  பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
           நோதக்க நட்டார் செயின்

           விழியப்பன் விளக்கம்: நண்பர்கள் வருந்தும் செயல்களைச் செய்தால், அறியாமை ஒன்றே 
           காரணமாகுமா? மாறாய், பழமையால் விளைந்த பேருரிமையே காரணமென உணர்வீர்!
(அது போல்...)
           அரசியலார் கொடுங்கோல் ஆட்சியைச் செய்தால், அதிகாரம் ஒன்றே காரணியா? மாறாய், 
           பழையகட்சி என்பதற்காக ஓட்டளித்ததே காரணியென உணர்வோம்!

0806.  எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
           தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: நட்பின் வரையறையைப் பின்பற்றுவோர்; நெடுங்காலமாக நட்பில் 
           இருந்தவர் தொல்லை தருவதாய் மாறினாலும், அவர்களின் தொடர்பை எஞ்ஞான்றும் 
           கைவிடார்!
                                                                (அது போல்...)
           உறவின் உன்னதத்தை மதிப்போர்; நீண்டகாலம் நல்லாட்சி அளித்தவர் மண்ணுலகை 
           விட்டு நீங்கினாலும், அவர்களின் நினைவை எப்போதும் மறக்கமாட்டார்!

0807.  அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
           வழிவந்த கேண்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: அன்பின் அடிப்படையில், பழமையான நட்பைப் பேணுவோர்; 
           எவரேனும் அழிவின் அடிப்படையில் செயல்களைச் செய்தாலும், அன்பை அறுக்கமாட்டார்!
(அது போல்...)
           உரிமையின் அடிப்படையில், பிறந்த ஊரை நேசிப்போர்; எவரேனும் மொழியின் 
           அடிப்படையில் பிரிவினைகளைச் செய்தாலும், உரிமையை இழக்கமாட்டார்!

0808.  கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
           நாளிழுக்கம் நட்டார் செயின்

           விழியப்பன் விளக்கம்: நண்பர்களின் குறைகளைப் பிறர் சுட்டுவதைப் பொருட்படுத்தாத, 
           பழைமை உணர்ந்த ல்லவர்க்கு; நண்பர்கள் தவறு செய்யும் நாளும், பயனுள்ள நாளே!
(அது போல்...)
           பிள்ளைகளின் பிழைகளைப் பிறர் விமர்சிப்பதை மிகைப்படுத்தாத, வாழ்வு அறிந்த 
           பெற்றோர்க்கு; பிள்ளைகள் பிழை செய்யும் நாளும், நிறைவுள்ள நாளே!

0809.  கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
           விடாஅர் விழையும் உலகு

           விழியப்பன் விளக்கம்: பழைமையை இழக்காமல், நெடுங்காலம் தொடரும் நண்பர்களின் 
           நட்பைக் கைவிடாதவர்களை; இவ்வுலகம் போற்றும்!
(அது போல்...)
           வம்சத்தை முறிக்காமல், தலைமுறைகள் தொடரும் பெண்களின் பெண்மையை 
           மறக்காதவர்களை; இச்சமூகம் வணங்கும்!

0810.  விழையார் விழையப் படுப பழையார்கண்
           பண்பின் தலைப்பிரியா தார்

           விழியப்பன் விளக்கம்:ழைய நண்பர்களிடம், பழைமை எனும் நட்புக் காரணியை 
           மாற்றாதோர்; அவரின் நட்பை விரும்பாதப் பகைவரால் கூட விரும்பப்படுவர்!
(அது போல்...)
           வம்ச உறவுகளிடம், தலைமுறை எனும் உறவுச் சங்கிலியை அறுக்காதோர்; அவரின் 
           குடும்பத்தை நேசிக்காத உறவுகளால் கூட உறவாடப்படுவர்!
*****

குறள் எண்: 0810 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0810}

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

விழியப்பன் விளக்கம்: பழைய நண்பர்களிடம், பழைமை எனும் நட்புக் காரணியை மாற்றாதோர்; அவரின் நட்பை விரும்பாதப் பகைவரால் கூட விரும்பப்படுவர்!
(அது போல்...)
வம்ச உறவுகளிடம், தலைமுறை எனும் உறவுச் சங்கிலியை அறுக்காதோர்; அவரின் குடும்பத்தை நேசிக்காத உறவுகளால் கூட உறவாடப்படுவர்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், அக்டோபர் 19, 2017

குறள் எண்: 0809 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0809}

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

விழியப்பன் விளக்கம்: பழைமையை இழக்காமல், நெடுங்காலம் தொடரும் நண்பர்களின் நட்பைக் கைவிடாதவர்களை; இவ்வுலகம் போற்றும்!
(அது போல்...)
வம்சத்தை முறிக்காமல், தலைமுறைகள் தொடரும் பெண்களின் பெண்மையை மறக்காதவர்களை; இச்சமூகம் வணங்கும்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், அக்டோபர் 18, 2017

குறள் எண்: 0808 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0808}

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்

விழியப்பன் விளக்கம்: நண்பர்களின் குறைகளைப் பிறர் சுட்டுவதைப் பொருட்படுத்தாத, பழைமை உணர்ந்த ல்லவர்க்கு; நண்பர்கள் தவறு செய்யும் நாளும், பயனுள்ள நாளே!
(அது போல்...)
பிள்ளைகளின் பிழைகளைப் பிறர் விமர்சிப்பதை மிகைப்படுத்தாத, வாழ்வு அறிந்த பெற்றோர்க்கு; பிள்ளைகள் பிழை செய்யும் நாளும், நிறைவுள்ள நாளே!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், அக்டோபர் 17, 2017

குறள் எண்: 0807 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0807}

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்

விழியப்பன் விளக்கம்: அன்பின் அடிப்படையில், பழமையான நட்பைப் பேணுவோர்; எவரேனும் அழிவின் அடிப்படையில் செயல்களைச் செய்தாலும், அன்பை அறுக்கமாட்டார்!
(அது போல்...)
உரிமையின் அடிப்படையில், பிறந்த ஊரை நேசிப்போர்; எவரேனும் மொழியின் அடிப்படையில் பிரிவினைகளைச் செய்தாலும், உரிமையை இழக்கமாட்டார்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், அக்டோபர் 16, 2017

குறள் எண்: 0806 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0806}

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

விழியப்பன் விளக்கம்: நட்பின் வரையறையைப் பின்பற்றுவோர்; நெடுங்காலம் நட்பில் இருந்தவர் தொல்லை தருவதாய் மாறினாலும், அவர்களின் தொடர்பை எஞ்ஞான்றும் கைவிடார்!
                                                                (அது போல்...)
உறவின் உன்னதத்தை மதிப்போர்; நீண்டகாலம் நல்லாட்சி அளித்தவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும், அவர்களின் நினைவை எப்போதும் மறக்கமாட்டார்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 15, 2017

குறள் எண்: 0805 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0805}

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

விழியப்பன் விளக்கம்: நண்பர்கள் வருந்தும் செயல்களைச் செய்தால், அறியாமை ஒன்றே காரணமாகுமா? மாறாய், பழமையால் விளைந்த பேருரிமையே காரணமென உணர்வீர்!
(அது போல்...)
அரசியலார் கொடுங்கோல் ஆட்சியைச் செய்தால், அதிகாரம் ஒன்றே காரணியா? மாறாய், பழையகட்சி என்பதற்காக ஓட்டளித்ததே காரணியென உணர்வோம்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, அக்டோபர் 14, 2017

குறள் எண்: 0804 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0804}

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

விழியப்பன் விளக்கம்: நெடுநாள் பழகிய உரிமையில், தம்மைக் கேட்காமல் நண்பர்கள் செய்த விருப்பமற்ற செயல்களை; பழைமையின் பெருமையை உணர்ந்தோர், பொறுத்துக் காப்பர்!
(அது போல்...)
நெடுங்காலம் பணிபுரிந்த உரிமையில், தம்மை ஆலோசிக்காமல் மேலாளர்கள் எடுக்கும் சரியற்ற முடிவுகளை; பொருளாதாரத் தேவையை அறிந்தோர், விரும்பி ஏற்பர்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 13, 2017

குறள் எண்: 0803 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை; குறள் எண்: 0803}

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

விழியப்பன் விளக்கம்: நெடுநாள் பழகிய உரிமையில், உடன்பாடற்ற விடயங்களை செய்யும் போது; அவற்றோடு உடன்படவில்லை எனில், பழமையான நட்பு என்ன பயன் அளிக்கும்?
(அது போல்...)
நெடுநாள் உழைத்த அனுபவத்தில், பழக்கமற்ற தொழில்களைப் பரிந்துரைக்கும் போது; அவற்றைப் பழகவில்லை எனில், பாரம்பரியமான நிறுவனம் எப்படி விரிவு அடையும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை