வெள்ளி, செப்டம்பர் 30, 2016

"ஆண்/பெண் உறவு" - ஓர் அலசல்! (பாகம் 1)


            "ஆண்/பெண்" என்ற இரு-துருவர்களைக் கொண்ட எவ்வகை உறவானாலும்; சிக்கலாகவே  இருக்கிறது. ஒரு பெண்ணிடம் இருந்து - "நான் எதிர்பார்க்கற மாதிரி, நீ என்னைக்கும்/எதையும் செய்தததில்லை!" என்ற குற்றச்சாட்டு எழாத; காதல்/திருமணம்/கள்ளத்தொடர்பு - இல்லாத உறவுகளே இல்லை எனலாம். தவறான தொடர்பே எனினும்; இங்கே, கள்ளத்தொடர்பையும் இணைத்தது - அதுவும், ஒருவகை உறவு என்பதால் தான்! உதாரணத்திற்கு, திருட்டைத் தொழிலாகக் கொண்ட திருடர்கள் எனினும்; அவர்களுக்குள் "கூட்டுத்திருட்டு" என்ற ஒப்பந்தம் ஏற்பட்டபின் - அவர்களும் "தொழில் தர்மத்துடன்" இருத்தல் அவசியமாகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றாமல் இருப்பதும் (அல்லது) அவர்கள் வீட்டுக்குள்ளேயே திருடாமல் இருப்பதும் அவசியமாகிறது. அதுபோல், கள்ளத்தொடர்பும் ஓர் உறவு என்பதால்தான், அதையும் இணைத்தேன். பல குற்றசாட்டுகள் உண்டெனினும்; "காதலை வெளிப்படுத்துதல்" சார்ந்த...

         எதிர்பார்ப்புகளால், விளையும் ஏமாற்றங்களால்; மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு, பொதுவில் முன்வைக்கும் ஒன்றாக இருக்கிறது. பொதுப்புத்தியில் - "ஆண்களுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாது!" என்ற குற்றச்சாட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே; அதில், உண்மையும் இருக்கிறது. அதை மேலும் ஆழமாய் ஆராயும் முயற்சியே இத்தலையங்கம். உறவுக்குள் செல்லும் முன் - ஆண், தன் காதலை பலவகையில் எளிதாய் சொல்கிறான்.  ஆனால், அவ்வுறவு மலர்ந்த பின் - நாளடைவில், ஆண் தன் காதலை வெளிப்படுத்த தவறுகிறான் (அல்லது) வெளிப்படுத்த (தெரி/முடி)யாமல் இருக்கிறான். "காதலும் காமமும்" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் - உறவுக்குள் நுழைந்தபின் - காதலை; ஆண், காமத்தை முன்வைத்தே அணுகுகிறான். உண்மையில், தன் காமத்திற்குப் பின் - காதல் இருப்பது கூட பல ஆண்களுக்குத் தெரியாது. வெகுநிச்சயமாய், இது இயற்கையான விடயமே! இப்பதிவின் நோக்கம், ஆண்களின் தவறை...

             நியாயப்படுத்துவதில்லை! மாறாய், உண்மையை உண்மையாய் ஆராய்வது. ஒரு பெண்ணின் மேல் (காதல்/திருமணம்/கள்ளத்தொடர்பு - எவ்வுறவானாலும்) இருந்த காதல் மறைந்திட, என்ன காரணம் இருக்கமுடியும்? "வேறொரு பெண்ணுடன் தொடர்பு" போன்ற பல காரணங்களால், காதல் குறையும் வாய்ப்புண்டு. அவ்வகையினர், வேறு பிரிவில் வருவோர்; அதுபோன்ற எந்த வகையினரையும் கருத்தில் கொள்ளவில்லை! இங்கே நான் எடுத்துக் கொண்டிருப்பது, இயல்பாய் - காதலை விட்டு, விலகி நிற்கும் ஆண்களைப் பற்றியே! அப்படி விலகியோர், தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதங்களில் ஒன்றுதான் - காமம்! இப்படி, ஆண்; தன் காதலை வெளிப்படுத்துவதில் இருந்து விலகி நிற்க முழுமுதற்காரணம், உறவுக்குள் நுழைந்தவுடன் - ஆண், அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பிப்பது! ஆம், காதலன் எனில் - திருமணம்/குடும்பம் பற்றிய சிந்தனை எழும். திருமணம் எனில், அந்த எண்ணங்களுடன்; செயல் வடிவங்களும் துவங்கிவிடும்.

    மேலும், குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணமும்/செயல்திட்டமும் மேலோங்கும். கள்ளத்தொடர்பு எனில், "அந்த தொடர்பு சார்ந்த விளைவுகளை" யோசிக்க ஆரம்பிப்பான்; அவன் மறப்பினும், சூழல் - அவனை அப்படி யோசிக்க வைக்கும். ஏனெனில், கள்ளத்தொடர்பு என்பது - இரகசியமாய் செய்யவேண்டிய விடயம். ஆண்களுக்கு, இரகசியம் காக்கும் அனுபவம் இல்லை; அதை முயற்சிப்போர் கூட மிக குறைவே! அதனால் தான், ஒரு பெண்ணால் - வெகு எளிதில், ஆணின் தவறுகளை, அவன் வாயாலேயே சொல்ல வைக்க முடிகிறது. எனவே, அது சார்ந்த பயமும் அவனைத் தொற்றிக்கொள்ளும். எனவே, கள்ளத்தொடர்பில் - ஒரு ஆனால், நிச்சயம் காதலை வெளிப்படுத்த முடியாது. மன்னிக்கவும்! "கீழ்வருவது போல்" சொல்வது தவறாய் தோன்றலாம்; ஆனால், அதுதான் உண்மை: பெரும்பான்மையில், ஒரு ஆணுக்கு - அவனின் உடல் உணர்ச்சிகளின் வடிகாலாய் தான் "கள்ளத்தொடர்பு" தேவைப்படுகிறது. ஆனால், அந்த உறவிலும்....

       ஒரு பெண்ணின் நிலைப்பாடு; மற்ற உறவுகளில் இருப்பது போலவே இருக்கிறது. எனவே, எவ்வகையில் பார்த்தாலும்; ஆண், தன் காதலை வெளிப்படுத்துவதில் இருந்து விலகி இருக்கும் சூழலே அமைகிறது. "இது சரியா? தவறா?" என்றால்;  நிச்சயமாய், ஏதும் சொல்ல இயலவில்லை!. சரி - "அடுத்தக் கட்டம் பற்றி, பெண்கள் பற்றி யோசிப்பதே இல்லையா?!" என்றால்; வெகுநிச்சயம் யோசிப்பார்கள்/யோசிக்கிறார்கள்! சென்ற தலைமுறைப் பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை! ஆனால், அதிலிருந்து விலகி; வாழ்க்கையை, காதலை மையப்படுத்திப் பார்க்கும் சூழலை - அவர்களைச் சுற்றியிருக்கும் ஆண்கள் அமைக்கிறார்கள். அது, காதலனாகவோ/கணவனாகவோ (மட்டும்) இருக்க வேண்டியதில்லை! அவர்களின், தந்தை/தமையன் போன்ற மற்ற உறவுகளாகவும் இருக்கலாம். எனவே - "அமைதியாய்/இயல்பாய்" - வாழ்க்கையை, காதலை மையப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு; ஆணுக்கு வாய்க்கவில்லை! என்பதே என் பார்வை.

"இது எப்போதுமே முடியாதா?" என்றால்;
நிச்சயம் மாறும்! அப்படித்தான் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முடியும்!!
"அப்படியா? எப்போது? எப்படி?" என்றால்...

தொடரும்!!!

ஆங்கில வடிவம்: 

குறள் எண்: 0425 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0425}

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் இல்ல தறிவு

விழியப்பன் விளக்கம்: உலக உயிர்களை, அரவணைத்து செல்வதே சிறந்த அறிவாகும்; ஆர்ப்பரித்து விரிந்து, பின்னர் சுருங்கும் இயல்பற்றதே - அறிவாகும்.
(அது போல்...)
சக ஊழியர்களை, தகுதியறிந்து உயர்த்துவதே தேர்ந்த நேர்மையாகும்; நம்பிக்கை அளித்து, பின் வஞ்சிக்கும் குணமற்றதே - நேர்மையாகும்.

எவ்வகை உறவிலும் இருக்கும் பிரச்சனை...


வியாழன், செப்டம்பர் 29, 2016

குறள் எண்: 0424 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0424}

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் 
நுண்பொருள் காண்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: நாம் அறிந்தவற்றைப், பிறருக்கு எளிதாய் விளக்குவதும்; பிறர் சொல்வதை,  ஆழமாய் விளங்கிக் கொள்வதுவமே - பகுத்தறிவாகும்.
(அது போல்...)
நாம் பெற்றதைத், தேவையானோர்க்கு மனமுவந்துப் பகிர்வதும்; பிறர் கொடுப்பதில், தேவையானதை மட்டும் ஏற்பதுமே - மனிதமாகும்.

உறவின் விரிசலைச் சரிசெய்தல்...


புதன், செப்டம்பர் 28, 2016

குறள் எண்: 0423 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0423}

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: எந்த விளக்கத்தையும், எவர் எப்படி விவரித்தாலும்; அவ்விளக்கத்தின், உண்மையான விளக்கத்தை உணர்வதே - பகுத்தறிவாகும்.
(அது போல்...)
எந்த மோகத்தையும், எவர் எப்படி வற்புறுத்தினாலும்; அம்மோகத்தின், ஆழமான விளைவை ஆராய்வதே - சுயமாகும்.

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

குறள் எண்: 0422 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0422}

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ 
நன்றின்பால் உய்ப்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: விரும்பும் எல்லாவற்றிலும் மனதைச் செலுத்தாமல், தீயவற்றை அழித்து; நல்லறப் பாதையில், மனதைச் செலுத்துவதே - அறிவாகும்.
(அது போல்...)
மயக்கும் விடயங்களில் நேரத்தைச் செலவிடாமல், சிற்றின்பம் குறைத்து; பேரின்பம் பெருக்கும், சிந்தனையை வளர்ப்பதே - பிறவியாகும்.

திங்கள், செப்டம்பர் 26, 2016

குறள் எண்: 0421 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0421}

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்க லாகா அரண்

விழியப்பன் விளக்கம்: அறிவு - ஒருவரைக் குற்றமறக் காக்கும் கருவியாகவும்; பகைவர்களாலும் அழிக்கமுடியாத, பாதுகாக்கும் உள்-அரணாகவும் அமையும்.
(அது போல்...)
பயம் - ஒருவரை அறம்தவறாது காக்கும் திசைக்காட்டியாயும்; சிற்றின்பங்களும் சலனப்படுத்தாத, நிலைப்படுத்தும் நங்கூரமாகவும் இருக்கும்.

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

24 மணி-நேரமும் மனித-இயந்திரமும்...


மண்பெண்பொன்ஜா திமதம்எனப்பல
பண்பழித்தஏற்றத் தாழ்வுகள்இருந்தும்
ஒருதினத்தின்இரு பத்துநான்குமணியில்
ஒருபோதுமில்லைஎக் குறையும்நிறையும்!

மணியளக்கும்இயந் திரம்போல்மண்ணில்
மனிதரையும்அவர் தம்மனிதத்தையும் 
பகிர்ந்திடவோர்இயந் திரமொன்றையும்
பகற்கனவுபோல்எவர் ஒருவரேனும்எக்

குறையுமின்றியேக் கண்டெடுத்துதந்திடின்
இறைவனோஇயற் கையோஇரண்டுமோ
செயமுடியாவொன் றைசெய்தபேருபெற்று
சாகாவரம்அதைப் பெற்றுவாழ்ந்திடுவார்!

அதிகாரம் 042: கேள்வி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி

0411.  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
           செல்வத்துள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: தேடலால் கேட்டறியும் அறிவுச்செல்வமானது, பல்வகைச்
           செல்வங்களில் ஒன்றாகும்; அச்செல்வம், செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
(அது போல்...)
           நட்பால் பிணைக்கப்படும் அன்பு-உறவானது, பல்வகை உறவுகளில் ஒன்றாகும்; அவ்வுறவு,
           உறவுகள் அனைத்திலும் சிறப்பானதாகும்.
        
0412.  செவுக்குண வில்லாத போழ்து சிறிது 
           வயிற்றுக்கும் ஈயப் படும்

           விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான கேள்வியெனும் அமிழ்தம், இல்லாத நேரத்தில்; 
           கேள்வியைத் தொடர்ந்திட, வயிற்றுக்கும் சிறிய அளவில் உணவளிக்க வேண்டும்.
(அது போல்...)
           மனதை மகிழ்விக்கும் சிந்தனையெனும் தேடல், நிகழாத போது; சிந்தனையைப்
           பெருக்கிட, உடலுக்கும் போதிய அளவில் மகிழ்வளிக்க வேண்டும்.
           
0413.  செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
           ஆன்றாரோ டொப்பர் நிலத்து

           விழியப்பன் விளக்கம்: செவியுணவான கேள்வியறிவை உண்பவர், புவியில் வாழ்ந்தாலும்;
           வேள்வியில் வார்க்கும் நெய்போன்ற உணவை, உண்டுவாழும் தேவர்களுக்கு இணையாவர்.
(அது போல்...)
           பேரின்பமான பொதுநலனைப் பேணுவோர், சாதாரண மனிதராயினும்; உயிர்களைக்
           காக்கும் உயிரணுபோன்ற சக்தியை, அளிக்கும் வல்லமைக்கு ஒப்பாவார்.

0414.  கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு 
           ஒற்கத்தின் ஊற்றாந் துணை

           விழியப்பன் விளக்கம்: கற்கமுடியவில்லை எனினும், கேள்வியறிவை வளர்த்தல் வேண்டும்; 
           அது ஒருவருக்கு, தளர்வடையும் சூழலில் "ஊன்றுகோல்" போல் துணையாய் இருக்கும்.
(அது போல்...)
           பொதுத்தொண்டு செய்யாவிடினும், தொண்டாற்றுவோரை ஆதரித்தல் வேன்டும்; அது
           ஒருவர்க்கு, மரணப் படுக்கையில் "உயிர்சக்தி" போல் மனத்திடம் அளிக்கும்.

0415.  இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
           ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடைய சான்றோர் மூலம் பெறப்படும் கேள்விஞானம்; 
           வழுக்கும் தன்மையுடைய இடத்தில், உறுதியாய் நிற்கவுதவும் ஊன்றுகோல் போன்றதாகும்.
(அது போல்...)
           தன்மையுடைய குரு வாயிலாய் கற்கும் மெய்ஞானம்; “மூடநம்பிக்கை ஆற்றில்”
           மூழ்காமால், கரையேற உதவும் மிதவைக்கு இணையானதாகும்.

0416.  எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
           ஆன்ற பெருமை தரும்

           விழியப்பன் விளக்கம்: நம்மால் இயன்ற அளவில், நல்லவற்றைக் கேள்வியறிவால்       
           பெறவேண்டும்; அப்படி நாம் பெருமளவிற்கேற்ப, நிலைத்த பெருமை கிடைக்கும்.
(அது போல்...)
           நம்மால் முடிந்த வரை, நல்லவர்களை நட்புறவால் தொடரவேண்டும்; அப்படி நாம் 
           தொடருமளவில், சிறந்த பிறவிப்பயன் விளையும்.

0417.  பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
           ஈண்டிய கேள்வி யவர்

           விழியப்பன் விளக்கம்: கேள்வியெனும் தேடலால், ஆழ்ந்தறிந்த அறிவைப் பெற்றவர்; 
           தவறான நிகழ்வுகளைக் கூட, அறிவிலியான முறையில் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           பொதுநலம் பேணுதலில், முழுமையாய் தம்மை ஆட்படுத்தியோர்; குறையுடைய 
           எதிர்கட்சிகளைக் கூட, சுயநலமான எண்ணத்தில் விமர்சிக்கமாட்டார்கள்.

0418.  கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
           தோட்கப் படாத செவி

           விழியப்பன் விளக்கம்: கேட்பவற்றால் - கேள்விஞானத்தை வளர்க்கும் திறனற்றோரின் 
           செவிகள்; கேட்கும் திறனிருப்பினும், கேட்கவியலாச் செவிகளாகவே உணரப்படும்.
(அது போல்...)
           சிந்தனையால் - பகுத்தறிவைப் பெருக்கும் இயல்பற்றோரின் மூளை; இயங்கும்
           தன்மையுடையினும், மூளைச்சாவு அடைந்ததற்கு இணையாகும்.

0419.  நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 
           வாயின ராதல் அரிது

           விழியப்பன் விளக்கம்: ஆழ்ந்தறியும் கேள்விஞானம் இல்லாதவர், பிறர் வணங்கும் 
           வண்ணம்; பண்பான சொற்களைப் பேசுபவராதால் - சாத்தியமில்லை.
(அது போல்...)
           வியத்தகு உறவுப்புரிதல் இல்லாதோர்; சமுதாயம் போற்றும் வகையில், உயர்வான 
           சந்ததிகளை உருவாக்குதல் - அரிதானது.

0420.  செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் 
           அவியினும் வாழினும் என்

           விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான, கேள்வியறிவின் சுவை உணராமல்; வாயின் 
           சுவை மட்டும் உணர்ந்தோர் - இறந்தாலும்/வாழ்ந்தாலும் என்ன பயன்?
(அது போல்...)
           உலகின் உயிரான, விவசாயத்தின் உன்னதம் புரியாமல்; பணத்தின் உன்னதம் மட்டும் 
           உணர்ந்தோர் - உயர்ந்தாலும்/தாழ்ந்தாலும் என்ன வித்தியாசம்?

குறள் எண்: 0420 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0420}

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் 
அவியினும் வாழினும் என்

விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான, கேள்வியறிவின் சுவை உணராமல்; வாயின் சுவை மட்டும் உணர்ந்தோர் - இறந்தாலும்/வாழ்ந்தாலும் என்ன பயன்?
(அது போல்...)
உலகின் உயிரான, விவசாயத்தின் உன்னதம் புரியாமல்; பணத்தின் உன்னதம் மட்டும் உணர்ந்தோர் - உயர்ந்தாலும்/தாழ்ந்தாலும் என்ன வித்தியாசம்?

சனி, செப்டம்பர் 24, 2016

குறள் எண்: 0419 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கேள்வி; குறள் எண்: 0419}

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 
வாயின ராதல் அரிது

விழியப்பன் விளக்கம்: ஆழ்ந்தறியும் கேள்விஞானம் இல்லாதவர், பிறர் வணங்கும் வண்ணம்; பண்பான சொற்களைப் பேசுபவராதால் - சாத்தியமில்லை.
(அது போல்...)
வியத்தகு உறவுப்புரிதல் இல்லாதோர்; சமுதாயம் போற்றும் வகையில், உயர்வான சந்ததிகளை உருவாக்குதல் - அரிதானது.

வெள்ளி, செப்டம்பர் 23, 2016

குறள் எண்: 0418 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0418}

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
தோட்கப் படாத செவி

விழியப்பன் விளக்கம்: கேட்பவற்றால் - கேள்விஞானத்தை வளர்க்கும் திறனற்றோரின் செவிகள்; கேட்கும் திறனிருப்பினும், கேட்கவியலாச் செவிகளாகவே உணரப்படும்.
(அது போல்...)
சிந்தனையால் - பகுத்தறிவைப் பெருக்கும் இயல்பற்றோரின் மூளை; இயங்கும் தன்மையுடையினும், மூளைச்சாவு அடைந்ததற்கு இணையாகும்.

விலகியும் இணைந்திருத்தல்...வியாழன், செப்டம்பர் 22, 2016

குறள் எண்: 0417 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0417}

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்

விழியப்பன் விளக்கம்: கேள்வியெனும் தேடலால், ஆழ்ந்தறிந்த அறிவைப் பெற்றவர்; தவறான நிகழ்வுகளைக் கூட, அறிவிலியான முறையில் பேசமாட்டார்கள்.

(அது போல்...)

பொதுநலம் பேணுதலில், முழுமையாய் தம்மை ஆட்படுத்தியோர்; குறையுடைய எதிர்கட்சிகளைக் கூட, சுயநலமான எண்ணத்தில் விமர்சிக்கமாட்டார்கள்.

புதன், செப்டம்பர் 21, 2016

குறள் எண்: 0416 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0416}

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்

விழியப்பன் விளக்கம்: நம்மால் இயன்ற அளவில், நல்லவற்றைக் கேள்வியறிவால் பெறவேண்டும்; அப்படி நாம் பெருமளவிற்கேற்ப, நிலைத்த பெருமை கிடைக்கும்.

(அது போல்...)

நம்மால் முடிந்த வரை, நல்லவர்களை நட்புறவால் தொடரவேண்டும்; அப்படி நாம் தொடருமளவில், சிறந்த பிறவிப்பயன் விளையும்.

செவ்வாய், செப்டம்பர் 20, 2016

குறள் எண்: 0415 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0415}

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடைய சான்றோர் மூலம் பெறப்படும் கேள்விஞானம்; வழுக்கும் தன்மையுடைய இடத்தில், உறுதியாய் நிற்கவுதவும் ஊன்றுகோல் போன்றதாகும்.

(அது போல்...)

தன்மையுடைய குரு வாயிலாய் கற்கும் மெய்ஞானம்; “மூடநம்பிக்கை ஆற்றில்” மூழ்காமால், கரையேற உதவும் மிதவைக்கு இணையானதாகும்.

திங்கள், செப்டம்பர் 19, 2016

குறள் எண்: 0414 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0414}

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு 
ஒற்கத்தின் ஊற்றாந் துணை

விழியப்பன் விளக்கம்: கற்கமுடியவில்லை எனினும், கேள்வியறிவை வளர்த்தல் வேண்டும்; அது ஒருவருக்கு, தளர்வடையும் சூழலில் "ஊன்றுகோல்" போல் துணையாய் இருக்கும்.

(அது போல்...)

பொதுத்தொண்டு செய்யாவிடினும், தொண்டாற்றுவோரை ஆதரித்தல் வேன்டும்; அது ஒருவர்க்கு, மரணப் படுக்கையில் "உயிர்சக்தி" போல் மனத்திடம் அளிக்கும்.

ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

குறள் எண்: 0413 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0413}

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

விழியப்பன் விளக்கம்: செவியுணவான கேள்வியறிவை உண்பவர், புவியில் வாழ்ந்தாலும்; வேள்வியில் வார்க்கும் நெய்போன்ற உணவை, உண்டுவாழும் தேவர்களுக்கு இணையானவர்.

(அது போல்...)

பேரின்பமான பொதுநலனைப் பேணுவோர், சாதாரண மனிதராயினும்; உயிர்களைக் காக்கும் உயிரணுபோன்ற சக்தியை, அளிக்கும் வல்லமைக்கு ஒப்பாவார்.

சனி, செப்டம்பர் 17, 2016

ஓ... அப்பாவிகளே!


         "தமிழ்/தமிழர்" என்ற "மொழி/இன" உணர்வுகளை வைத்து கீழ்த்தரமான அரசியல் நடத்தும் சுயநலவாதிகளால் - இன்னுமோர் அப்பாவி இளைஞர், தீக்குளித்து இறந்திருக்கிறார். தமிழ்-ஈழப் பிரச்சனையில் நடந்த ஒரு தீக்குளிப்பு இறப்பு போல்; இன்னுமோர் நிகழ்வு, இரு தினங்களுக்கு முன்னர் அரங்கேறி இருக்கிறது. இதில், மிகவும் வருந்தத் தக்க விடயம் என்னவென்றால் - "தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம்" என்ற பெயரில் கட்சி நடத்துபவர்களால்;  தமிழகத்திலேயே ஓர் உயிர் இழந்திருப்பதே! "தமிழ்-ஈழம்" மற்றும் "காவேரி நீர் பகிர்வு" பிரச்சனைகளில் - தமிழகத்தைக் கடந்து, வேறு இடங்களில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக; இவர்களின் "குரல் கொடுக்கும்" நாடகத்தில் - தமிழகத்திலேயே உயிர்கள் பலியாவதை என்னவென்று சொல்வது? மற்ற கட்சிகளாளும், தீக்குளித்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. ஆனால், அவை தமிழகத்தில் நிகழும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே நடக்கின்றன.

       இப்படியான அரசியல் செய்யும் கட்சிகளில், என் பார்வையில், மிகவும் ஆபத்தானவையாய் பின்வரும் இரண்டு கட்சிகளைப் பார்க்கிறேன்: 1. கட்சி ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகின்றன; "தமிழ்/தமிழர்" சார்ந்து அரசியல் நடத்தும் கட்சி; அக்கட்சியின் தலைவர் - வேறொரு கட்சியில் இருந்து "தன்மானத்திற்காக (??!!)" பிரிந்து வந்தவர். தன் கட்சியின் பெயரைக் கூட - தாய்க் கட்சியின் பெயரில் இருந்து மாறுபட்டு வைக்கத் தெரியாதவர்; 2. கட்சி ஆரம்பித்து 2 / 3 ஆண்டுகள் தான் ஆகின்றன; இவர் பரவாயில்லை - கட்சியின் பெயரையாவது வித்தியாசமாய் வைக்கத் தெரிந்தவர். ஆனால், புரட்சி என்ற பெயரில் "சற்றும் தேவையற்ற/சம்பந்தமற்ற" உணர்ச்சியின் விளிம்பில் இருந்து பேசி - தேவையற்ற தீவிரவாத எண்ணங்களை விதைப்பவர். முன்னவரை விட - இவர் மிகவும் ஆபத்தனாவர். இவர்கள் இருவருக்கும் ஓர் ஒற்றுமை - இலங்கை தமிழினத்தின்; ஒப்பற்ற தலைவராய் இருந்த தலைவர் திரு. பிரபாகரனை விரும்புபவர்கள்.

         இவர்களுக்குப் பின்னிருக்கும் "சின்னஞ்சிறு கூட்டம்" - பெரும்பான்மயில், பிரபாகரன் எனும் அந்த மாவீரனின் அன்பர்களைக் கொண்டது. ஆனால், இக்கட்சித் தலைவர்கள், அந்த மாவீரனைப் பின்பற்றுகிறோம் - என்ற போர்வையில்; அவரை அசிங்கப்படுத்தும் செயலைச் செயகிரார்கள். உண்மையில், இவர்கள் தான் "இனத் துரோகிகள்" போல் தோன்றுகிறார்கள். "தமிழ்(தனி)-ஈழம்" கனவு, இனியும் வேண்டுமா??? - என்ற தலையங்கத்தில் சொல்லியது போல்; இவர்கள் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு (அகதிகள்) கூட உருப்படியாய் ஏதும் செய்யவில்லை! இலங்கைத் தமிழர்களுக்கும் ஏதும் செய்யவில்லை. உண்மையில், இவர்கள் தமிழகம் கடந்த பகுதிகளில் நடக்கும் கொடுமைகளில் இருந்து; அங்குள்ள தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனில் - அங்கு சென்று போராட வேண்டும். அதுதான் நியாயம்! சரி... இலங்கைப் பிரச்சனையில் கூட - இவர்களுக்கு கடவுச்சீட்டு கிடைக்காது போன்ற "நியாயமான (??!!)"...

           காரணங்கள் சொல்லப்படலாம். வெகு அருகில் இருக்கும் பெங்களூர் சென்று போராடுவதில் என்ன தடை இருக்கமுடியும்? பேருந்துகள் இயங்கவில்லை என்றாலும் கூட - இவர்களுக்கு - உலகத் தமிழர்கள் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கும் "வசதியான மகிழ்வுந்து" போதுமே?  எரிபொருளுக்குப் பணம் வேண்டுமெனில், நாம் கூட கொடுக்கலாம். பிரச்சனை நடக்கும் இடத்திற்கு செல்லாமல்; தமிழகத்தில் கூக்குரலிட்டு என்ன பயன்? சரி... அதையாவது - முறையாய் செய்கிறார்களா? உணர்ச்சிவயப்பட்டு இவர்கள் பேசும் "நாடகத்தனமான வசனங்களைக் கேட்டு" - அப்பாவிகள் தான் உயிரிழக்கிறார்கள். என்ன கொடுமை ஐயா இது? இம்மாதிரியான கொலைகள் மிகப்பெரிய "இனத் துரோகம்" இல்லையா? இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்த பின்னால், இவர்களின் அணுகுமுறையை மாற்றிக் கொ(ள்ள/ல்ல)ப் போகிறார்கள்? இவர்களைப் போன்றோர்களிடம், பின்வரும் கேள்விகளை எழுப்ப எண்ணுகிறேன்:
 • பிரச்சனைகள் நடக்கும் இடத்திற்கு சென்று போராடக் கூட வேண்டாம். அங்கு சென்று, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேசலாமே ஐயா? அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
 • ஆளும் கட்சி செய்யவேண்டும் என்ற கருத்தில், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், அவர்கள் இப்படி செய்திருக்கலாம்/அப்படி செய்திருக்கலாம் - என்று இலவசமாய் அறிவுரை வழங்குவதை விடுத்து - நீங்கள் அங்கு சென்று "தமிழகம் சார்பாய்" பேசலாமே?
 • ஆட்சியையும்/அதிகாரமும் கொடுத்தால் தான் - இம்மாதிரியான செயல்களை செய்யமுடியும் என்பது இல்லையே?! உண்மையான உணர்வு போதுமே?
 • எதிர்க்கட்சித் தலைவர் - தமிழக முதல்வர், வெறுமனே கடிதமே எழுதிக் கொண்டிருக்கிறார் - என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அதை முழுதாய் ஏற்கிறேன்! தனது தந்தை (கழக தலைவர்) - இதை வலியுறுத்தினார்/அதை வலியுறுத்தினார் என்று சொல்கிறாரே?! - ஏன் இவர்(கள்) அந்த செயல்களைச் செய்யக்கூடாது? அந்த மாநில முதல்வரை இவர்(கள்) சென்று சந்திக்கலாமே?
 • சட்டசபையில், சபாநாயகர்கூட நடுநிலையாய் இல்லை என்று வாதாடி வெளியேறுகிறார்கள்! மறுக்கவில்லை; அப்படித்தான் நடக்கிறது. கர்நாடக மாநிலம் செல்ல - உங்களை யாரால் தடுக்கமுடியும் ஐயா? பிறகேன் செல்லமாட்டேன் என்கிறீர்?
 • நிலைமை இப்படியேத்தான் இருக்கப்போகிறது. அதைத்தான் நேற்றைய தலைமுறையில் குறிப்பிட்டிருந்தேன். இன்றைய எதிர்க்கட்சியினர் அடிக்கடி சொல்வதுபோல் "நாளை(யும்) ஆட்சி மாறும்! ஆனால், காட்சிகள் மாறாது!!" - ஒரே திரைப்படத்தை 2 மொழிகளில் எடுப்பது போல் - ஏற்று நடிக்கும் நடிகர்ளின் பாத்திரங்கள் தான் (ஆளும் கட்சி/எதிர்க்கட்சி) மாறும் - ஆனால் திரைக்கதை அப்படியேதான் இருக்கும்.
    எனக்கென்னவோ - இன்னும் அரசியல்வாதிகளைக் குறைகூறுவதில், எந்த நியாயமும் இருப்பதாய் தெரியவில்லை; குறைந்தது, இப்போதிருக்கும் அரசியல்வாதிகளை! இவர்கள் நாம் எதிர்பார்ப்பது போல், அதிநன்மையைக் கூட செய்யவேண்டியதில்லை. நேற்றைய தலையங்கத்தில் சொன்னது போல் - சாமான்ய மக்கள் பாதிக்காமல் காத்தாலே போதும். குறைந்தபட்சம்,  தன்னுடன் இருக்கும் "அப்பாவித் தொண்டர்களை" ஆவது நல்வழிப்படுத்திக் காக்கட்டும். அதற்கு, இவர்கள் "உணர்ச்சியைக் கிளப்பும்" வகையில் பேசாமல் இருத்தல் அவசியமாகிறது. இன்று கூட, 23 ஆண்டு கால கட்சி நடத்துபவர் "தேர்தல் நேரத்தில், ஒரு கட்சி மேல் குற்றம் சுமத்தியது போல்" - கர்நாடக அரசின் மேல் எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை வைக்கிறார். "தமிழகம் எத்தியோப்பியா போல் ஆகிவிடும்!"  என்று கூக்குரல் இடுகிறார்! - ஒருவேளை, அவர் போன்றோரை இன்னமும் அரசியலில் இருந்து அகற்றவில்லை எனில், அப்படி நடக்கும் என்று... 

        "மறைமுகமாய்" சொல்கிறாரோ?! அவர்கள் இப்படியே தொடர்ந்து, கீழ்த்தரமான அரசியல் நடத்தட்டும் - அது அவர்களின் தேர்வு. அவர்கள் பின்னிருக்கும் அப்பாவிகளே! ஒரு குடும்பத்தில் கூட - உணர்ச்சியும்/ஆதிக்க மனப்பான்மையும் - எந்த நன்மையையும் பயப்பதில்லை! அதைத்தான், பெருகிவரும் "விவாகரத்து வழக்குகள்" நிரூபிக்கின்றன. அப்படியிருக்க, ஒரு நாட்டின் அரசியலில் - உணர்ச்சியும்/ஆதிக்கமும்/புரட்சியும் - எப்படி நன்மையளிக்கும்? அப்படிப் பேசும், தலைவர்களுக்கு இறுதிவரைப் புரியாமலேயே இருக்கட்டும். அதனால், அவர்களின் வாழ்வாதாரமோ (அல்லது) குடும்பமோ எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை! எனவே, நீங்களாவது இவற்றை உணர்ந்து - அதன்பின், அவர்கள் பின் செல்லுங்கள்! ஆம்... அவர்கள் பின்னே செல்லாதீர்கள் என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை! ஆனால், கவனமோடு இருங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. உங்களை நம்பி இருக்கும்...

"பெற்றோர்/மனைவி-மக்கள்/உடன்பிறந்தோர்/நட்பு/சுற்றம்"
இவர்களில் எவரேனும் ஒருவரையாவது மனதில் நிறுத்தி;
இம்மாதிரி நிகழ்வுகளைத் தவிருங்கள்!!!

குறள் எண்: 0412 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0412}

செவுக்குண வில்லாத போழ்து சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும்

விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான கேள்வியெனும் அமிழ்தம், இல்லாத நேரத்தில்; கேள்வியைத் தொடர்ந்திட, வயிற்றுக்கும் சிறிய அளவில் உணவளிக்க வேண்டும்.

(அது போல்...)

மனதை மகிழ்விக்கும் சிந்தனையெனும் தேடல், நிகழாத போது; சிந்தனையைப் பெருக்கிட, உடலுக்கும் போதிய அளவில் மகிழ்வளிக்க வேண்டும்.

நம் சுயத்தைக் காக்கும் வழி...


வெள்ளி, செப்டம்பர் 16, 2016

காவேரி பிரச்சனையில் என் பார்வை...


           "வழக்கம்போல்" - காவேரி பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. "வழக்கம்போல்" என்ற சொல்லை அடிக்கோடிட காரணம், இது தொடர்ந்து நடந்து வருகிறது என்பதால் மட்டுமல்ல; மேலும், இது நமக்கு இயல்பான/வழக்கமான ஒன்றாய் மாறி வருகிறது என்பதை"யும்" உணர்த்தவே. நமக்கு என்றால் - பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இருவருக்குமே! உண்மையிலேயே இது தீர்வு காண முடியாத பிரச்சனையா?! என்ற ஐயம் எழுகிறது. ஒருவேளை, பலரும் சொல்வது போல்; இம்மாதிரியான பிரச்சனைகளை - இருமாநில & மத்திய அரசுகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும் "தீர்க்க விரும்பவில்லையா?!" என்ற சந்தேகம் வலுக்கிறது. ஒருவேளை, இவ்விரு மாநிலங்களும்; மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியால் "நேரடியாக" ஆளப்படும்போதுதான் - இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு வருமா? வெறும் பேச்சில் மட்டும்; இந்தியர்கள் அனைவரும் "சகோதர/சகோதரிகள்" என்று மார் தட்டிக் கொண்டால் போதுமா? உண்மையில் அப்படியோர்...

       ஒற்றுமை இருப்பின் - இம்மாதிரியான சூழலில் தானே தலையெடுக்க வேண்டும்? மாறாய், ஒருவரை ஒருவர்; "இப்படி அநாகரீகமாய்" தாக்கிக் கொள்வது எப்படி சகோதரத்துவம் ஆகும்? இப்படி ஒருவரை, மற்றொருவர் தாக்கும் அதிகாரத்தை எவர் கொடுக்கிறார்கள்? இதில், எந்த மாநிலத்தைச் சார்ந்தவரையும் - தனித்து குற்றம்சாட்ட ஏதுமில்லை! இரு மாநிலங்களைச் சார்ந்தவர்களும் செயகிறார்கள் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதில் - எவர் எந்த விழுக்காட்டில் செய்திருக்கிறார்கள் என்ற அளவீடு அபத்தமானது. தவறில் ஏது - சிறியது? பெரியது?; தவறென்றால் தவறு! அவ்வளவுதான். இதில், இரு மாநில அரசியல் கட்சிகள் செய்யும் போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள் குறித்து எனக்கு எந்த விவாதமும் இல்லை. அது அவர்களின் இயலாமையைத் தெளிவாய் உணர்த்தினாலும்; அதுதான் அவர்களின் இயல்பாகவும் ஆகிவிட்டது. அதைத் தவிர்த்து; அவர்களால் உருப்படியாய் ஏதும் செய்யமுடியாது. அவர்களின் தொழில்...

       அரசியல்! அதை அவர்கள் சரியாய் செய்கிறார்கள். எனவே, அவர்களைப் பற்றி விவாதிக்க பெரிதாய் ஏதுமில்லை. ஆனால் - சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. "உணர்ச்சி கலந்த" செயல் என்பது போன்ற எந்த காரணியாலும், இந்த இழிசெயல்களை நியாயப்படுத்தக் கூடாது. இரு தரப்பிலும், சில குழுக்கள் தான் இந்த செயல்களைச் செயகிறார்கள் என்பது தெரிந்தாலும் - இதைக் கூடவா, இரு மாநிலங்களைச் சார்ந்த அரசுகளால் தடுக்கமுடியாது? ஏதோ, இது இப்போதுதான் - முதன்முதலில் - திடீரென நடக்கிறது என்பதல்ல! இது தொடர்ந்து நடந்து வரும் ஒன்றுதான்; இனிமேலாவது, இம்மாதிரியான செயல்கள் நடக்கக்கூடாது எனில்...
 • இம்மாதிரி சாமானியர்களை தாக்கும் - எவரையும் எளிதில் விடக்கூடாது! தண்டனைகள் மிகக் கடுமையாய் ஆக்கப்பட வேண்டும் - இருமாநில அரசுகளும்; இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் எல்லா மாநில அரசுகளும்; அதற்குரிய சட்டங்களை உடனடியாய் வரையறுக்க வேண்டும்.
 • இவை தடுக்கப்படவில்லை எனில் - சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு; இதில் "மறைமுக" உடன்பாடு இருக்கிறது என்று பொருள்படும். அப்படியெனில், இரு மாநிலங்களிலும் உள்ள மற்ற மாநிலத்தவரை உடனடியாய் வெளியேற்றி விடலாம். இனிமேல், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர் தங்கள் மாநிலத்திற்குள்  நுழையக்கூடாது என்று சட்டம் தீட்டட்டும்.
 • அவரவர், அவரவர் மாநிலத்தில் இருந்துவிட்டால் - இம்மாதிரியான சூழலில், சாமான்யர்கள் தாக்கப்பட்ட மாட்டார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் - வல்லரசு ஆகவேண்டும் என்ற கனவில் இருக்கும் ஒரு நாட்டில் - இம்மாதிரியான காட்டுமிராண்டித் தனமான செயல்கள் நடைபெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது!
        என்னுடைய நோக்கம், இரு மாநிலங்களும் பிளவுபட்டு நிற்கவேண்டும் என்பதல்ல! மாறாய், எப்போதும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதே. அப்படி இருக்கமுடியாதெனில், எப்போதும் சேர்ந்து"ம்" இருக்கவேண்டாம். இங்கே இருக்கும் பிரச்சனை என்ன? ஒரு மாநிலம், இன்னோர் மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்கவேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவர், உடன்பிற(ந்த/வா) இன்னொருவரிடம் கோரும் உதவி போன்றது தான் இது. நாம் எல்லோரும் "சகோதர/சகோதரி" எனில் - கேட்பதும்/கொடுப்பதும் தார்மீகம் ஆகிறது. வேண்டும் என்போர் கேட்கிறார்; இருப்போர் கொடுக்கலாம் (அல்லது) மறுக்கலாம்! மறுக்கும்போது, உரிமையோடு - வற்புறுத்தி கேட்பதும் நிகழலாம். அதையும், முறையான விதத்தில் மறுக்க வேண்டும். இது சுமூகமாய் நடக்காத போது, குடும்பத் தலைவர் என்ற நிலையில் இருக்கும் "உச்ச நீதிமன்றம்" இந்த நிகழ்வுக்குள் வருகிறது. இவ்வளவு கொடுங்கள் என்று பரிந்துரை செயகிறது. மொத்தத்தில்...

        இது, ஒரு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வு போன்றது. கேட்பதும்/கொடுப்பதும்/மறுப்பதும் - சம்பந்தப்பட்டவர் உரிமையாகிறது. இவை எல்லாமும் பேச்சாய்/விவாதமாய் தான் இருக்கவேண்டும். அதை விடுத்து - சிறு குழுக்களால் - ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது எப்படி நியாயமாகும்? அதிலும், சாமான்யர்கள் தாக்கப்படுவது எப்படி நியாயமாகும்? சம்பந்தப்பட்ட அரசுகள், இந்த முறையாவது - இதற்கு நிரந்தரமான தீர்வை வகுக்கவேண்டும்! ஒவ்வொரு முறையும் நடப்பது போல் - சரி, இப்போது நிலைமை சுமூகமாக ஆகிவிட்டது; மீண்டும் அடுத்த முறை நிகழும் வரை - நம் அரசியலை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று தொடர்ந்து செயல்பட்டால் அதில் எந்த நியாயமும் இல்லை. படித்தவர்கள்/இளைஞர்கள் அரசியலுக்குள் நுழையவேண்டும்; காலம் காலமாய் அரசியல் செய்வோரை அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டும். இவர்களால், இனியும் - ஏதேனும் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது; நம் இயலாமையை காட்டுகிறது.

நம் எதிர்ப்பை - இதுபோன்ற வகையிலாவது காண்பிக்க "ஆரம்பிப்போம்"!!!

குறள் எண்: 0411 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0411}

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை

விழியப்பன் விளக்கம்: தேடலால் கேட்டறியும் அறிவுச்செல்வமானது, பல்வகைச் செல்வங்களில் ஒன்றாகும்; அச்செல்வம், செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

(அது போல்...)

நட்பால் பிணைக்கப்படும் அன்பு-உறவானது, பல்வகை உறவுகளில் ஒன்றாகும்; அவ்வுறவு, உறவுகள் அனைத்திலும் சிறப்பானதாகும்.

வியாழன், செப்டம்பர் 15, 2016

அதிகாரம் 041: கல்லாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை


0401.  அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
           நூலின்றிக் கோட்டி கொளல்

           விழியப்பன் விளக்கம்: அறிவை நிரப்பும் நூல்களைக் கற்காமல், கற்றோர் அவையில் 
           பேசுதல்; முறையான சூதாடும் அரங்கம் இல்லாமல், சூதாடுதல் போன்றதாகும்.
(அது போல்...)
           குடும்பம் நடத்தும் தகுதியைக் கொண்டிராமல், இல்லற வாழ்வில் இணைதல்;
           உண்மையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம்-ஓட்டுதல் போன்றதாகும்.
        
0402.  கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் 
           இல்லாதாள் பெண்காமுற் றற்று

           விழியப்பன் விளக்கம்: கல்வியறிவை வளர்க்காதவர் சொற்பொழிவாற்ற விரும்புவது;
           இரண்டு முலையும் வளர்ச்சியடையாத பெண், காமத்திற்கு ஆசைப்படுவது போன்றதாகும்.
(அது போல்...)
           திறமையைக் கொண்டிராதவர் உலகப்போட்டியில் பங்கேற்பது; இராணுவப் பயிற்சிப் 
           பெற்றிடாத ஒருவர், எல்லைப்போருக்கு தயாராவது போன்றதாகும்.
           
0403.  கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் 
           சொல்லா திருக்கப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: கற்றோர் அவையில், பேசாதிருக்கும் திண்மையைப் பெற்றிடின்;  
           கற்காதவர்களும் மிக நன்மை அளிப்பவரேயாவார்.
(அது போல்...)
           போர்க் களத்தில், புறமுதுகிடாத மனவலிமைப் பெற்றிருப்பின்; வலிமையற்ற-வீரர்களும்
           வெற்றிக்கு பங்களிக்கும் வீரராவார்.

0404.  கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் 
           கொள்ளார் அறிவுடை யார்

           விழியப்பன் விளக்கம்: "படிக்காத மேதை" எனப்படும், கற்காதவரின் அறிவு மிக நன்றாக 
           இருப்பினும்; அதைக் கல்விபயின்ற சான்றோர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பர்.
(அது போல்...)
           "இணைந்து வாழ்தல்" முறையில், திருமணமாகாதோரின் இல்வாழ்வு மிக  நன்றாக
           இருப்பினும்; அதைத் திருமணமான பெரியோர்கள் ஏற்க மறுப்பர்.

0405.  கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து 
           சொல்லாடச் சோர்வு படும்

           விழியப்பன் விளக்கம்: கற்காதவரின் தற்பெருமை எண்ணம், கற்றவர்களுடன் ஒன்றுகூடி  
           பேசும்போது; அவர்களின் பேச்சாலேயே உறுதியாய் கெடும்.
(அது போல்...)
           அறமற்றவரின் போலியான தோற்றம், அறமுள்ளோருடன் சேர்ந்து பழகும்போது;
           அவர்களின் செயலாலேயே நிச்சயம் அழியும்.

0406.  உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் 
           களரனையர் கல்லா தவர்

           விழியப்பன் விளக்கம்: கற்காதவர் உயிரோடிருப்பது - அவர்கள் இருக்கிறார்கள் என்ற 
           அளவீட்டைத் தவிர்த்து; பயன்படாத மண்ணைக் கொண்ட நிலத்திற்கே ஒப்பாவர்.
(அது போல்...)
           நேர்மையற்றோர் பதவியிலிருப்பது - அவர்கள் ஆள்கிறார்கள் என்ற உண்மையைத் தவிர; 
           பயனற்று பூத்துக் காய்க்கும் எட்டிமரத்திற்கு இணையாவர்.

0407.  நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 
           மண்மாண் புனைபாவை யற்று

           விழியப்பன் விளக்கம்: ஆழமாய்/சிறப்பாய் பகுத்தறியும் ஆற்றலற்ற, கற்காதவரின் எழில்மிகு 
           தோற்றம்;  மண்ணால் சிறப்பாய் செய்த அழகிய பெண்சிலைக்கு இணையாகும். 
(அது போல்...)
           வாய்மையாய்/நேர்மையாய் வாழும் இயல்பற்ற, இல்லறத்தின் அழகிய மாடமாளிகை; 
           கற்பனையால் மாயையாய் புனைந்த இனிய கனவுக்கு ஒப்பாகும்.

0408.  நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே 
           கல்லார்கண் பட்ட திரு

           விழியப்பன் விளக்கம்: கற்றறிந்த நல்லவர்களுக்கு நேரும் வறுமையைவிட;     
           கற்காதவர்களிடம் சேரும் செல்வம் - தீயதாகும்.
(அது போல்...)
           அறமுணர்ந்த நேர்மையானோர்க்கு கிடைக்கும் தோல்வியைவிட; நேர்மையற்றோர்க்கு 
           கிடைக்கும் அரசாட்சி - கொடியதாகும்.

0409.  மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
           கற்றார் அனைத்திலர் பாடு
    
           விழியப்பன் விளக்கம்: வசதியானக் குடும்பத்தில் பிறந்தும் கற்காதவரெனின்; வறியக் 
           குடும்பத்தில் பிறந்த, கற்றவரின் பெருமைக்கு - இணையற்றவர் ஆவர்.
(அது போல்...)
           ஆகச்சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்தும் திறமையற்றோர்; சிறுதொழில் நிறுவனத்தில் 
           பணிபுரியும், திறமையானவரின் சிறப்புக்கு - ஒப்பற்றவர் ஆவர்.

0410.  விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 
           கற்றாரோடு ஏனை யவர்

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவை வளர்க்கும் கல்வியைக் கற்றவருடன், மற்றவர்களை 
           ஒப்பிடுதல்; விலங்குகளோடு, மனிதர்களை ஒப்பிடுவதற்கு இணையாகும்.
(அது போல்...)
           நலிந்தோரை வாழ்விக்கும் அரசாட்சியைக் கொடுப்பவருடன், பிறரை ஒப்பிடுதல்; 
           பொன்னுடன், பித்தளையை ஒப்பிடுவதற்கு இணையாகும்.

குறள் எண்: 0410 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0410}

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 
கற்றாரோடு ஏனை யவர்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவை வளர்க்கும் கல்வியைக் கற்றவருடன், மற்றவர்களை ஒப்பிடுதல்; விலங்குகளோடு, மனிதர்களை ஒப்பிடுவதற்கு இணையாகும்.

(அது போல்...)

நலிந்தோரை வாழ்விக்கும் அரசாட்சியைக் கொடுப்பவருடன், பிறரை ஒப்பிடுதல்; பொன்னுடன், பித்தளையை ஒப்பிடுவதற்கு இணையாகும்.

திருமணமானப் பெண்களின் "பெயர் மாற்றம்"...


        ஒரு வாரத்திற்கு முன், என்மகள் "அப்பா! என்பேருக்குப் பின்னால, உங்க பேரு இருக்கு? அம்மா பேருக்குப் பின்னாடி மட்டும் ஏன் சின்ன-தாத்தா பேரு இருக்கு?" என்று வினவினாள். கேட்பதற்கு சாதாரணமான கேள்வியாய் தோன்றினாலும், பல விடயங்கள் அதில் மறைந்து இருக்கின்றன; நிச்சயம் என்மகள் அவற்றை உணர்ந்து கேட்கவில்லை! அவளைப் பொறுத்த அளவில், அவள் பெயரைப் போல் - என்னவளின் பெயரிலும். என் பெயர் இருப்பதே சரி என்று நம்புகிறாள். அவளிடம் "உன் பெயர் என்ன?" என்று வினவினேன்; அவள் "விழியமுதினி" என்றாள். சரிடா... "உன் முழுப் பெயர் என்ன?" என்றவுடன் "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்றாள். "உன் பெயருக்குப் பின்னால், உன் அப்பாவான என் பெயர் இருப்பது போல்; அம்மாவின் பெயருக்குப் பின்னால், அவளின் அப்பாவான சின்ன-தாத்தா பெயர் இருக்கிறது" என்று விளக்கினேன். அவளுக்குத் தேவையான பதில் கிடைத்துவிட்டதாய் ஆமோதித்து நகர்ந்துவிட்டாள்.

          ஆனால், அவளுக்கு முழுமையான பதிலை சொல்லிவிட்டதாய் நான் எண்ணவில்லை; அந்த கேள்வியைச் சார்ந்த "என் மனதில் ஆழ்ந்திருந்த" சில விடயங்களை பகிரவே இந்த தலையங்கம். என்றேனும் ஓர் நாள் அவள் இதைப் படிக்கக்கூடும்; இல்லையெனினும், அவளுக்குத் தேவையான நேரத்தில் நான் விளக்குவேன். நல்லவேளை! என் மருதாயின் பெயரின் பின்னால் இருப்பதும்; அவரின் தந்தை பெயர் தான். என் மருதந்தையும், பலரும் செய்வது போல் - தத்தம் "மனைவியின் பெயருக்குப் பின்னால்" தன் பெயரை இணைக்கும் முறையற்ற செயலை செய்யவில்லை! இல்லையேல், என்மகள் அதை உதாரணமாய் எடுத்துக்கொண்டு மேற்கொண்டும் வினவி இருப்பாள். தொடர்ந்த சிந்தனையில், பலரும் - அவ்வாறு மனைவியின் பெயருக்குப் பின்னால், தன் பெயரை இணைக்கும் செயலும்; அதைச் சார்ந்த எண்ணங்களும் அடிமனதில் இவர்ந்து மேலெழ ஆரம்பித்தன. என்மகளின் பெயரில், என்னவளின் பெயரை"யும்" இணைத்த...

      நியாயமான செயலைப் போலவே; என்னவளின் பெயரில் இருக்கும், என் மருதந்தையின் பெயரை அழிப்பதிலும் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. நாளை ஏதேனும் குடும்ப நிகழ்ச்சிக்காய் அழைப்பிதழ் அச்சடிப்பினும், என்னவள் பெயர் "வேனில் பாண்டியன்" என்றே இருக்கும். அவள் பெயரில் இருக்கும் அவள் தந்தையின் பெயரை மாற்றும் உரிமை எனக்கில்லை என்பது என் புரிதல். ஒரு குழந்தை (ஆணோ/பெண்ணோ) பிறந்தவுடன் அதன் அடையாளத்திற்காகவே "பெயர்" இடப்படுகிறது. அதில் - மிகப்பெரும்பான்மையான பங்கு - அக்குழந்தையின் பெற்றோர்களுக்கே இருக்கிறது. அப்படி, பலவிதக் கற்பனைகளுடன் ஒரு பெற்றோர் இட்ட பெயருடன் - பெற்றோர் பெயர் இணைந்திருப்பதே சிறப்பு. அப்படியோர் எண்ணம், எனக்கு எப்போதும் எழுந்ததில்லை. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் - மனைவியர் பெயரில் இருக்கும் பெற்றோர் பெயரை மாற்றுவதில்லை எனினும்; இன்னும் பெரும்பான்மையில் பலரும்...

       அப்படிச் செய்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. சென்ற தலைமுறையினர் இப்படிச் செய்ததற்கு பின்னணியில், ஆணாதிக்கம் போன்ற பல காரணங்கள் இருந்திருக்கும். மேலும், பெரும்பான்மையை சென்ற தலைமுறைப் பெண்கள் படிக்கவில்லை என்பதால் - அவர்களிடம் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இருந்திருக்காது; எனவே, பெயர் மாற்றம் பெரிய சிக்கலாய் இருந்திருக்காது. எனவே "தவறான காரணங்கள் கற்பிக்கப்பட்டு; அதுதான் நியதி"; என்று சொல்லப்பட்டு இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறைப் பெண்கள் பலரும் அதிகம் படித்து குறைந்தது ஒரு "பட்டமாவது" பெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் பல சான்றிதழ்கள் இருக்கும்; அதையும் கடந்து, அவற்றிலும் பெயரை மாற்றும் செயலையும் பலரும் செயகின்றனர். இதில் பலருக்கும், சில சான்றிதழ்களில் "தந்தையின் பெயர் இணைந்தும்"; சில சான்றிதழ்களில் "கணவன் பெயர் இணைந்தும்" - இருக்கும்; அதனால், பல தேவையற்ற...

           குழப்பங்களும் விளைகின்றன. அதுபோல், சிரமங்கள் அனுபவிக்கும் பெண்களைச் சந்தித்து இருக்கிறேன். விருமாண்டி திரைப்படத்தில், ரோஹிணி பேசும் கீழ்வரும் வசனம் வரும்: "என் பெயர் ஏஞ்சலா காத்தமுத்து. நான் சந்தோசமா இருக்கனும்னு எங்கப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சார் - நான் ஏஞ்சலா ஜேம்ஸ் ஆக மாறினேன்; அப்புறம், என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு, அவரை வெட்டிட்டு எங்கப்பா ஜெயிலுக்குப் போயிட்டார்; நான் மறுபடியும் ஏஞ்சலா காத்தமுத்து வாக மாறினேன்" - என்பதே அந்த வசனம். மேலோட்டமாய் கேட்போர்க்கு - இது வெறும் அறிமுக வசனமாய் தான் தோன்றும். அந்த வசனத்தைப் பேசி முடிக்கும்போது, ஒரு மெல்லிய பெருமூச்சுடன்; குரலில் தொய்வுடன் சொல்லி முடிப்பார் ரோஹிணி. ஆழ்ந்து கவனிப்போர்க்கு, அதில் ஆயிரமாயிரம் உணர்வுகள் வெளிப்படுவது தெளிவாய் தெரியும். அது வெறும் வசனம் அல்ல; பெயர் மாற்றத்தில், பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை...

        ஆழ்ந்து சொல்வதாகவே நான் உணர்ந்தேன். திருமணமான பெண்களின் பெயரில் மாற்றம் செய்வது - வெறுமனே பெயர் மாற்றம் மட்டுமல்ல! அது ஒருமகளின் உணர்வும்/உறவும் சார்ந்த விடயம்; அதுபோல், அது ஒரு தந்தையின் பாசம்/நேசம் சார்ந்த விடயமும் கூட. ஒரு கணவனாய், இந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கடக்கக்கூடும். ஆனால், ஒரு தந்தையின் நிலையை எட்டி - தன் மகளின் பெயர் மாற்றப்படும்போது, இது நிச்சயம் புரியும். நாளை என்மகளின் பெயரும் அப்படி மாற்றப்படுமா?! என்பது தெரியவில்லை; அப்படி நடப்பினும், நான் எதையும் விவாதிக்காமலே தான் இருப்பேன். காரணம், இம்மாதிரியான உணர்வும்/உறவும் - கேட்டுப் பெறவேண்டியவை அல்ல! மாறாய், அவை இயல்பாய் உணரப்பட்டு; இயல்பாய் செய்யப்பட வேண்டிய விடயம். திருமணமான ஓர் பெண்ணின் பெயருக்குப் பின்னால் இருக்கும், ஓர் தந்தையின் பெயர் மாற்றப்படுவதில் எந்த நியாயமும் இல்லை. என்னளவில்...

திருமணமானாலும், ஓர் பெண் தன் தந்தையின் பெயரைத் தங்கியிருத்தலே நியாயம்!!!   

புதன், செப்டம்பர் 14, 2016

குறள் எண்: 0409 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0409}

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு

விழியப்பன் விளக்கம்: வசதியானக் குடும்பத்தில் பிறந்தும் கற்காதவரெனின்; வறியக் குடும்பத்தில் பிறந்த, கற்றவரின் பெருமைக்கு - இணையற்றவர் ஆவர்.

(அது போல்...)

ஆகச்சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்தும் திறமையற்றோர்; சிறுதொழில் நிறுவனத்தில் பணிபுரியும், திறமையானவரின் சிறப்புக்கு - ஒப்பற்றவர் ஆவர்.

கரும்புள்ளி கற்பிப்பது என்ன?


வெள்ளைத்தாளின் கரும்புள்ளியைத்
தள்ளிவைத்துஎஞ்சி யிருக்கும்பரந்த
வெண்மையைக்கவ னித்தல்ஓர்கலை
பள்ளியேதுமில்லைஇக் கலைகற்பிக்க

வெள்ளைத்தாளோ மனிதஉறவோ-கூர்
முள்ளைஒதுக்கிநல் ரோசாவைநாமும்
கொள்வதுபோல் கரும்புள்ளிநீக்கியே
வெள்ளைத்தாளை; மனிதஉறவுகளை

கொள்ளைகொள்ளும் உறுதிவளர்த்து;
பள்ளியில்கற்கவி யலாஇத்திறத்தையும்
பிள்ளைகளுக்கும் இனிதேகற்பிப்போம்
வெள்ளை(யும்)உள்ளமும் ஒளிவீசட்டும்!

அறத்தின் அடிப்படை - பயமா??? (பாகம்-2)


     "அறத்தின் அடிப்படை பயமா???" என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன்.  வழக்கம் போல், பலதையும் ஆழ்ந்து விவாதிக்கும் என் நண்பன் கதிர் "தீய வினைகளை செய்யக்கூடாது என்ற உணர்வுதானேடா அறம்?!" என்ற விவாதத்தை வைத்தான். வெகுநிச்சயமாய் அவனின் கேள்வி சரி! அறமற்றவைகளை செய்யக்கூடாது என்ற உணர்வுதான்; அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உறுதியை நிலைநாட்டும். ஆனால், அந்த தலையங்கத்தின் அடிப்படை "அற்ப ஆசைகளில்" நாம் செய்ய முனையும் சில செயல்கள். எல்லா அற்ப ஆசைகளும் அப்படித்தான்; அங்கே அறம் சார்ந்த உணர்வுகள் பின்னுக்கு செல்லும். அதுபோன்ற நேரங்களில் "மனசாட்சிக்கு பயப்படும் நம் இயல்பு மட்டுமே" அறம் தவறாமல் காக்கும் என்பதையே அதில் வலியுறுத்தி இருந்தேன். அதுபோல், சிலர் "கடவுளுக்கு பயப்படுவதும்; மனசாட்சிக்குப் பயப்படுவதும்; மற்றும் "செய்யும் வினை(கர்மா)களுக்கு பயப்படுவதும் தான்"...

        அறம் என்று சொல்வர். அதிலும், எந்த மறுப்பும் இல்லை; கடவுளும், கடவுள் சார்ந்த கர்மா போன்றவைகளும் - அறம் சார்ந்த பயத்தை உருவாக்க, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பதால் - "அறத்தின் அடிப்படை பயமே!" என்பது உறுதியாகிறது. அறத்தின் அடிப்படையில், மனிதர்களை மூன்று விதமாய் பிரிக்க விரும்புகிறேன்:
 1. முதல் வகை: கடவுள் போன்ற காரணிகளால் அறத்தைக் கடைப்பிடிப்போர். இப்பிரிவினர், பயம் என்ற காரணியை பின்னுக்கு தள்ளி "எந்த நிலையிலும்" அறத்தை மீறக்கூடாது என்ற உறுதி கொண்டவர்கள். இவ்வகை மனிதர்கள் - இப்போது "மிக மிக" அரிது (ஏன், எவரும் இல்லை என்றே கூட சொல்லலாம்!).  இருப்பினும், அவர்களுக்கும் "கடவுள்/மனசாட்சி/கர்மவினை - இப்படி ஏதோ ஒன்றின் மீதான பயமே" - அறத்தின் அடிப்படை ஆகிறது. மேற்குறிப்பிட்ட தலையங்கம் அவர்களைச் சார்ந்தது அல்ல!
 2. இரண்டாவது வகை: அறம் என்ற ஒன்றைப் பற்றி எந்த சிந்தனையும்/புரிதலும்/பயமும் இல்லாதோர்! அவர்களுக்கு அறம் பற்றிய எந்த அக்கரையும் இருப்பதில்லை. இப்பிரிவில், அறம் பற்றிய சிந்தனையும்/அறிவும் இருந்தும் - தெரிந்தும்; மனசாட்சிக்கு தெரிந்தே - மீறுவோரும் அடக்கம். இந்தத் தலையங்கம் அவர்களைக் குறித்தானதும் அல்ல. "அறத்தின் அடிப்படையான பயம்" இல்லாதது தான் - இவர்கள் அறத்தை மீறக் காரணம்.
 3. மூன்றாவது வகை: இவ்வகையினர் அறம் பற்றிய சிந்தனையும்/புரிதலும்/அறிவும் இருப்போர் - அதனால், பல அறமீறல்களையும் தவிர்த்து வாழ்வர். இருப்பினும் - சூழல்/அற்ப-ஆசை போன்ற காரணிகளால் தவறுகளைச் செய்ய முற்படுவர். இந்த வகையினர் தான் - நம்மில் பெரும்பான்மையோர். சில குறிப்பிட்ட செயல்கள் - "அற மீறல்" என்பது தெளிவாய் தெரியும்; அவர்களின் புத்திக்கு மிகத்தெளிவாய் தெரியும். இருப்பினும், மனது அவர்களை வற்புறுத்தும். செய்யடா! பார்த்துக் கொள்ளலாம் என்று உந்தும். அவர்களை மையப்படுத்தியது தான் என் தலையங்கம்.
       இரண்டாம் வகையினர் தவிர்த்து, மற்றவர்களுக்கு அறம் மீறியவற்றைச் செய்ய முனையும் போது - அவர்களுக்குள் இனம் புரியாத பயம் வரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அது - கடவுள் தண்டிப்பார் (அல்லது) மனசாட்சி தண்டிக்கும் (அல்லது) கர்மவினைகள் தண்டிக்கும் (அல்லது) சட்டம் தண்டிக்கும் - போன்ற எந்த காரணியாலும் நிகழலாம். "எது காரணம்?!" என்பது முக்கியமில்லை. உண்மை என்னவெனில், எதுவொன்றையோ சார்ந்த "பயம் தான்" அவர்களைத் தடுக்கிறது என்பதே இங்கே முக்கியக் கரு. இந்த அடிப்படையில் தான், இவர்களை மையப்படுத்தி தான் - மேற்குறிப்பிட்ட தலையங்கத்தை எழுதினேன். "கடவுள் என்பதே கற்பிக்கப்பட்டது என்பதால்" - எனக்கும் கடவுள் பக்தி இருப்பினும் - நான் கடவுளை ஒரு உயர்சக்தி என்பதாய் மட்டுமே பார்க்கிறேன். அதைத் தாண்டி, கடவுள் தண்டிப்பார்! என்ற மாயையான-நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கையில்லை. என் கடவுள் சார்ந்த நம்பிக்கை வேறு!...

     கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கை வேறு!! என்னளவில் முக்கியமான "அறம் சார்ந்த அடிப்படை பயம்" - 1. என் மனசாட்சி 2. ஒவ்வொரு வினைக்கும் - எதிர்வினை உண்டு என்ற கோட்பாடு (கர்மவினை) மற்றும் 3. சட்டம் - இந்த வரிசையிலேயே எழுகிறது. எது காரணமென்பதும்; எந்த காரணம் முதன்மையென்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் "அடிப்படை பயம் மட்டுமே!"; என் பயத்திற்கு காரணம் மனசாட்சி. "கடவுள் தண்டிப்பாரா?!" என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! சொர்க்கம்/நரகம் என்பவை எல்லாம் கற்பனையானவை என்பது என் புரிதல். அப்படியே, அது உண்மையெனினும் - அதுபற்றி நான் இப்போது பயப்படுவதில் எந்த நியாயம் இல்லை. சட்டம் தண்டிக்கும் என்பது - சட்டமாய் இருக்கிறது! பலருக்கும் பலவித தண்டனைகளைச் சட்டம் வழங்கினாலும் - சட்டம் கண்டிப்பாய் தண்டிக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. தொடர்வண்டி நிலையத்தில்... 

          ஒரு பெண்ணைக் கொன்றவன் யாரென்று இன்னும் நிரூபணம் ஆகவில்லை; அதைப் பலரும் இப்போது விவாதிப்பது கூட இல்லை. என்னால் இன்னும், அந்நிகழ்வை மறக்க முடியவில்லை! "அறம் சார்ந்த பயம்" இருந்திருப்பின், அக்கொலை நடந்திருக்காது என்று திடமாய் நம்புகிறேன். அக்கொலைக்கு காரணமானவர் - எங்கோ உயிரோடு உலவிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, சட்டத்தின் மேலும் பெருத்த பயமில்லை; என் பயமெல்லாம் "என் மனசாட்சி தான்!" தெய்வம் போலவோ (அல்லது) அரசு(அன்) போலவோ - நின்று கொல்லக் கூட மறப்பதில்லை; மனசாட்சி அன்றே/அப்போதே கொல்லும்! எனவே, மனசாட்சி விளைவிக்கும் பயத்தையே, அறத்தின் அடிப்படையாய் பார்க்கிறேன். நம்மை மதிப்பிடும் மிகச்சிறந்த கருவியாய் "மனசாட்சியை" தான். "நம்மைத் தவறென சிலரும்; சரியென சிலரும் விமர்சிக்கலாம்!" - உண்மை எதுவென்பது, நம் மனசாட்சிக்குத் தெளிவாய்/உண்மையாய் தெரியும். எனவே...

மனசாட்சி சார்ந்த பயமே - அறத்தின் அடிப்படையாய் நான் பார்க்கிறேன்!!!   

வெங்காயச் சட்னியால் ஓர் பதிவு...


       "புலால் மறுத்தல்" அதிகாரத்திற்கான என் விளக்கவுரையை எழுதும்போது, அதற்கு தகுதி உடையவனாய் ஆக்கிக்கொள்ள; புலால் உண்பதை மறுத்துவிட்டதையம் ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அதுமுதல், அப்பதிவில் வெளியிட்டிருந்த படத்தில் இருப்பது போல், பெரும்பாலும் என் உணவு "அவித்த காய்கறிகள்" தான். எவரேனும் விருந்தினர் வந்தால், மற்ற உணவுகளைச் சமைப்பது வழக்கம். நேற்று ஒரு விருந்தினர் வருவதாய் இருந்தது; எனவே வெங்காயச்-சட்னி அரைத்து; இட்லி சமைப்பதாய் ஒரு திட்டமிருந்தது. ஆனால், சூழல் காரணமாய் அந்த திட்டம் கைவிடப்பட்டது. சரி, வாங்கிவைத்த பொருட்களை என்ன செய்வது? சமைத்து தானே ஆகவேண்டும்? வெங்காயச் சட்னி அரைக்கும் முறைப் பற்றி எனக்கு ஓர் அறிவு இருப்பினும்; நான் இதுவரை செய்ததில்லை. சமைத்து பழக்கமில்லாத உணவைச் சமைக்க கூட, எனக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. அதற்கு காரணம்...

        "சமையல் எனும் கலை..." தலையங்கத்தில் குறிப்பிட்டது போல்; "என் சமையல் குருவான" என் தமக்கை.  எனக்கு மட்டுமல்ல; பலருக்கும் - அவரே சமையல் குரு. அவரிடம் என்னென்ன பொருட்கள் தேவை என்பதை உறுதிசெய்து கொண்டு நேற்றிரவு, வெங்காயச் சட்னியை அரைத்தேன். மேலிருக்கும் புகைப்படங்கள் அந்த நிகழ்வைத்தான் விளக்கமாய் காண்பிக்கின்றன. வெங்காயச்-சட்னிக்கு ஆலோசனை தேவையா? என்ற கேள்வி எழலாம். என் தமக்கையும், என்னம்மையும் செய்யும் வெங்காயச் சட்னிகள் - இருவகை அருமையான சுவை கொண்டவை. எல்லோரையும் போல், எனக்கும் பழக்கப்பட்ட சமையல் முறை மேல் ஓர் பிரியம். அதேபோல், இருக்க வேண்டுமென்று என் தமக்கையின் ஆலோசனைப்படி செய்தேன். சட்னியின் நிறத்தைப் பார்த்தவுடன் - சுவை அதேபோல் இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது; அந்த நம்பிக்கைப் பொய்க்கவில்லை. வெங்காயச் சட்னியோ/வெஜிடபிள் பிரியாணியோ...

நமக்கு பழக்கப்பட்ட சுவையும்; அதை நம்முள் விதைப்பவரும் - என்றுமே சிறப்புதான்!!!

செவ்வாய், செப்டம்பர் 13, 2016

குறள் எண்: 0408 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0408}

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே 
கல்லார்கண் பட்ட திரு

விழியப்பன் விளக்கம்: கற்றறிந்த நல்லவர்களுக்கு நேரும் வறுமையைவிட; கற்காதவர்களிடம் சேரும் செல்வம் - தீயதாகும்.

(அது போல்...)

அறமுணர்ந்த நேர்மையானோர்க்கு கிடைக்கும் தோல்வியைவிட; நேர்மையற்றோர்க்கு கிடைக்கும் அரசாட்சி - கொடியதாகும்.

என்னை மன்னித்தருள்வாய் குருவியே!!!


குருவியொன்றுமகிழ் வுந்துமேல்மோதி
உருவின்றிசிதைந் துஎன்மகிழ்வையும்
கருவழியச்செய் ததுநேற்றுகாலையில்
சுருக்கெனத்தடைக் கட்டையைநான்

அழுத்தமுடியாமல் குருவியின்வாழ்வை
அழித்தஅந்தநி னைவும்இன்றுகாலை
மகிழ்வுந்தின்கறை போக்கியபின்னும்
மனதின்கறைமட் டுமின்னும்குறையாய் 

உன்தாயோபிள்ளை யோஉனைப்பிரிந்து
நொந்துஇருப்பரோ இந்தக்கயவனை?
இல்லைநீஇறந்த செய்திதெரியாமலே
இருள்சூழ்ந்துஅழுது கொண்டிருப்பரோ?

உறவுகள்அவர்க்கு எப்படிச்சொல்வேன்?
உனைக்கொன்றகய வனும்நானென்றே
என்னையறியாமல் நடந்தசெயலுக்காய் 
என்னைமன்னித் தருள்வாய்குருவியே!!!

காமத்தைப் பற்றிப் பேசத் தயக்கமேன்???


         "காதலும், காமமும்" என்ற தலையங்கத்தைப் படித்திருப்பீர்கள். அது சார்ந்த கருத்துக்களை கவிதை, புதுக்கவிதை என்று பல வடிவங்களிலும் எழுதி இருக்கிறேன். இம்மாதிரியான விடயங்களை எழுதும் போது, அதைப் படித்த பலரும் அதுசார்ந்து விவாதிப்பதில்லை. குறிப்பாய் - ஆண்கள் அதிகம் தயங்குவதை உணரமுடிகிறது. என்னுடைய சில நண்பிகள் கூட அதுசார்ந்த பதிவுகளுக்கு கருத்திடுகின்றனர் - "கூட" என்ற சொல் பெண்களை தாழ்த்தி சொல்லும் நோக்கத்தில் இல்லை! ஆண்களை விட பெண்களைத்தான் இந்த சமூகம் மிகப்பெரிய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது; "அவர்களே பேசத் தயங்குவதில்லை" என்பதை வலியுறுத்த தான் "கூட" என்ற சொல்லக் கூட சேர்த்தேன். இந்த தயக்கத்தைப் பற்றி விரிவாய் எழுதவேண்டும் என்பதே இந்த தலையங்கத்தின் நோக்கம். தலையங்கத்திற்குள் செல்வதற்கு முன், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காமத்தைப் பற்றி பேசுதல் என்பது வேறு!

        "காமத்தை விவரித்துப் பேசுதல் வேறு!!" இங்கே வேடிக்கையான விந்தை என்னவென்றால், ஆண்கள் அல்லது பெண்கள் தனித்திருக்கும்போது - ஒருவன் ஒருவளிடம் நடத்திய காமம் (அல்லது) ஒருவள் ஒருவனிடம் நடத்திய காமத்தை - விவரித்துப் பேசுவதில் கூட தயக்கம் இருப்பதில்லை. ஆனால், காமம் பற்றிய ஒரு புரிதலை உருவாக்கிட விவாதிக்க மட்டும் தயங்குகின்றனர் - அதிலும், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பேச முயற்சிப்பது கூட இல்லை. சமீபத்தில் "காமத்தில் ஏதுமில்லை" என்றோர் கவிதையைப் பதிந்திருந்தேன். அதன் இணைப்பை என் "வாட்ஸ்-ஆப்" குழுக்கள் சிலவற்றிலும் கொடுத்திருந்தேன்; ஆண்கள் மட்டுமே உலவும் அக்குழுக்களில் - பலரும் சிலாகித்து விவரித்து இருந்தனர். அதை முகநூலில் பதிந்தபோது - அவர்களும் அதை "லைக்கிட" கூட இல்லை. என்னுடைய ஆதங்கம், எதற்கும் உதவாத அந்த "லைக்" குறித்தானது இல்லை; மாறாய், அதே விடயத்தை தனிமையில்...

         சிலாகித்து பேசியோரில் ஒருவர் கூட "அருமை/நன்று" போன்ற ஒற்றை வார்த்தையை கூட சொல்லவில்லை என்பதே. பெண்களே தயங்காமல் பேசும்போது; ஆண்கள் ஏன் இப்படி தயங்குகின்றனர்? ஆனால் "காமம் பற்றிய புரிதலைப்" பேசுவதில் இருக்கும் தயக்கம் - மற்றவர் செய்யும் காமத்தை "நீலப்படம் அல்லது இன்னபிற காணொளிகளில்" பார்க்கும்போது ஏன் எழுவதில்லை? பார்ப்பதில்லாமல், பிறருக்கு பகிரவும் தயங்குவதில்லை. நானும் அப்படிப்பட்ட காணொளிகளைப் பார்த்திருக்கிறேன் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், இப்படி "காசுக்காகப் பிறர் செய்யும் அசிங்கத்தைப்" பார்க்கும்போது எழாத தயக்கம் - காமம் பற்றிய புரிதலைப் பேசுவதில் எப்படி வருகிறது என்பதே என் வியப்பாய் இருக்கிறது. முகநூலில் சிலர் "அப்படிப்பட்ட காணொளிகளை விரும்பியதாய்" தகவல் வரும்; அதாவது, அப்படிப்பட்ட காணொளிகளைக் காண சில ஊடகங்கள் "விருப்பம்" தெரிவிக்க வற்புறுத்தும். 

     அதை தைரியமாய் "விருப்பக்"குறியிடும் சில தகவல்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி தகவல்கள் வரும்போது; அவர்கள் மேல் எனக்கு மரியாதை வரும். அந்த தைரியம் பாராட்டுக்குரியது; ஆனால், இங்கே பலரும் - அப்படிப்பட்ட காணொளிகளைப் பார்ப்பதைக் கூட மறைவாய் செய்யவே விரும்புகிறார்கள். மதுவருந்தும் பலரும் கூட இப்படித்தான் - அவர்கள் மதுவருந்துவது ஊருக்கே தெரியும்; ஆனால், மதுக்கடைக்கு சென்று மதுக்குடுவை வாங்க மாட்டார்கள். ஏனென்று கேடடால் - அவர்கள் கெளரவம் பாதிக்கும் என்பார்கள்; அதைக் கேட்டெழும் சிரிப்பை விட, அவர்கள் மேல் பரிதாபமே அதிகமாய் எழும். இதை ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனையாகவே நான் பார்க்கிறேன். காமத்தைப் பார்க்கவோ (அல்லது) காமத்தை விவரிக்கவோ - இல்லாத தயக்கம், காமத்தைப் பற்றி புரிந்து கொள்ள எப்படி வருகிறது? "மன்மதன் அம்பு" திரைப்படத்தில் ஒரு பாடலில் கீழ்க்காணும் வரி வரும்:

        "காமக் கழிவுகள் கழுவும் வேளையில், கூட நின்றவன் உதவிடவேண்டும்!" - கமல் என்னும் ஞானி எழுதிய வரிகள்.  அதை ஒரு பெண் தனது ஏக்கமாய் சொல்வதாய் எழுதி இருப்பார். இது வெறும் எதிர்பார்ப்பல்ல! அது ஆண்களைப்  பார்த்து "ஏன் டா கூட சேர்ந்து செய்யமட்டும் முடியும்! அந்தக் கழிவை கழுவ உதவ முடியாதாடா?!" என்று கேட்பதாகவே நான் பார்க்கிறேன். அதுபோல், நானும் செய்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால், கமல் அப்படி செய்திருப்பார் என்று உறுதியாய் நம்புகிறேன்; அது வெறுமனே கற்பனையில் விளைந்த வார்த்தைகள் அல்ல! அது, அனுபவத்தில் தான் வந்திருக்கும். இப்படி அந்த பாடல் முழுக்க காமத்தைப் பற்றிய அருமையான புரிதல்களைக் கொடுக்கும் வரிகள் இருக்கும். அந்த வரிகளின் அர்த்தம் பலருக்கும் "புரிந்திருக்காது என்ற கசப்பான உண்மை கூட" என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை! ஆனால், அதையெல்லாம் சிறிதும் யோசிக்காமல் விலக்கிவிட்டு... 

       "உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாயகன் ஆள், எப்படி?" என்ற வரியை வைத்து "ஆன்மீக அரசியல்" செய்த சில அசிங்கங்கள் தான் என்னை அதிகம் பாதித்தது! அந்தப் பாடலின் துவக்கத்திலேயே "இது, ஒரு பெண் கடவுளிடம் முறையிடும் தோத்திரப் பாடல்!" என்று தெளிவாய் சொல்லி இருப்பார். காமத்தை வெறுமனே "பார்வையாய்/விவரிப்பாய்" பார்க்கும்/பேசும் சாதாரணர்களுக்கு இது புரிய வாய்ப்பேயில்லை.  இது ஒரு பெண்ணின் குமுறல்/ஆதங்கம் - என்பதே அந்த வரி. "திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை!" என்ற சொல்லாடல் போல் - அப்படிப்பட்ட பெண்கள் வேறென்ன செய்யமுடியும்? இங்கே, ஆண்கள் தங்கள் புரிதலை விவாதிக்கவே இத்தனை சிக்கல்கள்; அப்படியிருக்க ஒரு பெண்ணின் உணர்வு எப்படி புரியும்? அமைதியாய்  கேட்டு விலகிவிட்டு - ஆண்கள் வட்டத்தில் - அவளை "வேசி" என்று பழிச்சொல்லும். இம்மாதிரியான சூழலில், ஒரு பெண் தன் ஏக்கத்தை வேறெவரிடம் சொல்வாள்?

         அதனால் தான் "அரங்கநாயகனைப் பார்த்து" அப்படிக் கேட்கிறாள். காமச் செயல்களுக்கு மட்டும் தன்னை உபயோகிக்கும் ஆண்களிடம்; ஒரு பெண்ணால் காமம் சார்ந்த புரிதலைப் பற்றி எப்படிப் பேசமுடியும்? இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் - கமலை விமர்சிப்பது அவர்களின் மனக்குறைப்பாட்டையே காண்பிக்கிறது. கமல் போன்றோர் சொல்வதையே புரிந்து கொள்ளாதபோது - நான் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் - என்னிடம் விவாதிக்க மறுப்பதில் எனக்குப் பெருத்தக்  கவலையில்லை. ஆனால், காமத்தைப் பார்க்க/விவரிக்கும் போது வராத தயக்கம் - அது சார்ந்த புரிதலைப் பற்றி பேசும்போது எழுவது மிகப்பெரிய ஆபத்து! இது ஓர் மனக்குறைபாடு; இந்தக் குறைபாடின் வீரியம் அதிகமாகும்போது தான் "காமம் சார்ந்த குற்றங்கள்" நடக்கின்றன என்று நான் திடமாய் நம்புகிறேன்.  காமம் சார்ந்த புரிதல் மிகவும் முக்கியம்; குறிப்பாய், இன்றைய தலைமுறைகளுக்கு காமம் சார்ந்த காணொளிகள்...

      மிக எளிதாய் கிடைக்கின்றன; எனவே, அவர்கள் எளிதில் தடம் புரள்வர். அப்படிப்பட்ட இளைஞர்/இளைஞிகள்  தடுமாறாமல் இருக்க - முதலில் நமக்கு அந்தப் புரிதல் இருக்கவேண்டும். அதற்கு, நாம் காமம் சார்ந்த விவாதத்தை எந்த தயக்கமும் இல்லாமல் செய்யவேண்டும். காமத்தை நாம் புரிந்துகொண்டால் தான் - பெற்றோராய்/வயதில் மூத்தோராய் - அடுத்த தலைமுறைக்கு விளக்கமுடியும். இல்லையேல் சென்ற தலைமுறை போல் "அதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது!" என்று வெறுமனே அதட்டத்தான் போகிறோம். அது அவர்களை மிகத்தவறான பாதையில் தான் இட்டுச்செல்லும். காதல் இல்லாத "காமத்தில் ஏதுமில்லை!" என்பதை அவர்களுக்கு புரியவைக்க, அந்தப் புரிதலை முதலில் நமக்குள் உருவாக்கவேண்டும். இல்லையேல் - நம் பிள்ளைகள்/நட்புகள்/மற்றவர்கள் - இப்படி எவருக்கும் காமம் சார்ந்தப் புரிதலை உருவாக்க முடியாது. இதற்கும் எந்த விவாதமும் எழாமல் போகலாம்; ஆனால், காமத்தைப் பற்றிய என் புரிதலை அதிகரிக்க...

காமத்தைப் பற்றிப் பேச; எனக்கு எந்த தயக்கமும் இல்லை!!!