நாம் ஒவ்வொருவரும், ஓர் விசயத்தை ஏதாவது ஓர் சூழ்நிலையில் கவனித்திருக்கக்கூடும்! இறந்த ஒருவரைப் பற்றி பெரும்பாலும் எவரும் தவறாய் விமர்சிப்பது இல்லை!! இறந்தவர் ஓர் பெரிய-போக்கிரியாய் அல்லது பெரிய-சர்வாதிகாரியாய் இருந்திருப்பினும் - இறந்த பின் அவரைப் பற்றி பெரிதாய் விமர்சிப்பது இல்லை; அல்லது சில நாட்களுக்கு பிறகு விமர்சிப்பது (குறைந்து/நின்று) விடுகிறது!!! "விஸ்வரூபம்" திரைப்படத்தில் ஓர் காட்சி வரும்; தீவிரவாதத்துக்கு உதவிய ஒருவர் இறந்துவிடுவார். அவரைப் பற்றிய கலந்துரையாடல் வரும்போது, ஓர் பெண்மணி, அவர் தான் இறந்துவிட்டாரே; அவரைப்பற்றி ஏன் விமர்சிக்கவேண்டும்? என்பார். உடனே, கமல் "இறந்துவிட்டால், எல்லாவற்றையும் மன்னித்துவிட வேண்டுமா? அப்போ "ஹிட்லரையும்" மன்னித்துவிடலாம் என்பார்". காண்பதற்கு இது ஓர் சாதாரண உரையாடல் போல் தோன்றினாலும், ஆழ்ந்து பார்த்திடின் - சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஓர் குடிமகனின் கோபத்தை/அக்கறையை அது உணர்த்துவது புரியும். இந்த நிகழ்வை, இறப்பதற்கும் செய்த தவறுக்கும் என்ன தொடர்பு என்பது போல் பல-கோணங்களில் விவாதிக்க முடியும் - நான், தொடர்ந்து வலியுறுத்துவது போல், இது தான் கமல்! அவரை "உதட்டோடு முத்தம்" கொடுப்பவர் என்ற ஓர்-கீழ்த்தரமான வட்டத்துக்குள் பார்ப்பது முறையல்ல. எப்படியாயினும், ஒருவர் இறந்துவிட்டால் அனைத்தையும் மறந்துவிட்டு அவரை தூற்றிட்ட உறவுகள் அனைத்தும் - அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "உண்மையாய்" அழுவர்.
இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்; பார்த்து கொதித்திருக்கிறேன்! இது கமல் கேட்டது போல், ஏன் மன்னிக்கவேண்டும் என்றல்ல!! என்னுடைய பார்வை, வேறுவிதமாய் இருந்து வந்திருக்கிறது; இறந்தவுடன் (மன்னித்/மறந்)துவிட்டு அவரின் இறுதி-நிகழ்ச்சியில் அழுகிறீர்களே?! அதை ஏன் அவர்கள் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லை? என்ற கோபம் எனக்கு தலைதூக்கும்!! என்னதான், ஒருவர் இறந்தவுடன் வரும் அழுகை "உணர்ச்சி-வெடிப்பின் (Emotional Burst)" வெளிப்பாடு எனினும் - அதில் ஓர் உண்மை இருக்கிறது என்பதை எவரும் மறுக்கவோ/மறைக்கவோ முடியாது. இருப்பினும், அந்த உணர்வு ஏன் - சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது வருவதில்லை? என்னைப் பல நாட்கள் உறுத்திக்கொண்டிருக்கும் சிந்தனை இது; இருக்கும்போது ஒருவரை சிறிதும் மதிக்காது, அவர் இறந்தபின் அவருக்காய் கதறி-அழும் செயல் எனக்கு பெருத்த அபத்தமாய் தோன்றும்; இறந்தவருக்கு அந்த செயல் - தெரியப்போவதில்லை! "உணர்ச்சி-வெடிப்பின்" காரணமாய் விளைவது(தான்) எனினும் - அது பெருத்த தவறாய் எனக்கு தோன்றும். அதனாலேயே, என்னுடைய அத்தை ஒருவர் இறந்த போது நான் அவரின் இறுதிநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை; பெங்களூரில் இருந்து கிளம்பி, பின் நின்றுவிட்டேன். எங்கள் உறவுகள் அவர் இருக்கும்போது செய்த பலசெயல்கள் என்னுடைய நினைவுக்கு வந்து சென்றது; இதையெல்லாம் மீறி அவர்களின் "அர்த்தமில்லாத-அழுகையை" பார்க்க என் மனது ஒப்புக்கொள்ளவில்லை!!!
இம்மாதிரி ஓர் செயல் எப்படி நடக்கிறது - என்ன விதமான மனநிலை இது??? இதை தீவிரமாய் ஆழ்ந்து யோசிக்கும்போது - முதலில் புரிந்தது, இவர்கள் - சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்பதை உணர்கிறார்கள்; அவர்கள் மேல் இனியும் கோபமாய்/ஆதங்கமாய் இருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று உணர்வதாய் பட்டது! இது பாராட்டப்படவேண்டிய செயல் தானெனினும், இந்த நிகழ்வு சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது ஏன் நிகழவில்லை என்ற கேள்வி வந்தது!? ஒருவேளை, அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று தோன்றவில்லையா!? இருக்கக்கூடும்; ஏனெனில், எழுத்துசித்தர்-பாலகுமாரன் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல் "நமக்கு முன்னே பிறந்தவர், நம்முடன் பிறந்தவர், நமக்கு பின் பிறந்தவர் - இப்படி அனைவரும் இறந்தாலும்; நாம்(மட்டும்) உயிர்த்திருப்போம் என்று நாம்-ஒவ்வொருவரும் திடமாய் நம்புகிறோம்" என்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. எத்தனை பேருண்மை இது?! நாம் இறந்துவிடுவோம் என்று நாம் நம்புவதே இல்லை - எந்த நிலையிலும்! இதை ஓர் அம்சமாய் "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். நம்முடைய மரணத்தையே நாம் நம்பவில்லை எனும்போது - நம்முடைய எதிரியின் மரணத்தை பற்றி நாம் யோசிப்பதில்லை என்பதில் பெருத்த-ஆச்சர்யம் இல்லை என்று படுகிறது. இதை எண்ணும் போது, "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கத்தை மேலும் விளக்கவேண்டும் என்று தோன்றியது.
அத்தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் என்னுடைய சுற்றமும், நட்பும் செய்த/செய்யும் பல செயல்களை மரணத்திற்கு பின் ஒன்றுமேயில்லை என்ற உண்மையை உணர்ந்ததால்தான் என்னால் மன்னிக்கவும்/ மறக்கவும் முடிகிறது. கண்டிப்பாய், முதலில் நம்முடைய மரணத்திற்கு பின் எந்த காழ்ப்புணர்ச்சியும் இருக்கப்போவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். அதேபோல், நம் எதிரியாய் நினைக்கும் எவருடைய மரணத்திற்கு பின்னும் நம்முடைய காழ்ப்புணர்ச்சிகள் எதுவும் இருக்கப்போவதில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும். அதாவது, காழ்ப்புணர்ச்சியால் விளையும் எந்த செயலும் எவரேனும்-ஒருவரின் எவரின் மரணத்திற்கு பின் நிலைக்கப்போவதில்லை என்று விளக்கமாய் கூறிடவேண்டும் என்று தோன்றியது. பின் ஏன், நாம் உயிர்த்திருக்கும்போதே இதனை உணர்ந்து நம்-மனதை பண்பட செய்யக்கூடாது?! அதுவும், இங்கே எவரின் வாழ்வும் நிரந்தரமில்லை எனும் நிலையில்லாத-வாழ்க்கையில், முடிந்தவரை நாம் நம்முடைய காழ்ப்புணர்ச்சிகளை விரைவில் மாற்றிகொள்வது அவசியமில்லையா?! இதற்கு ஏன் ஒருவரின் மரணம் வரை காத்திருக்கவேண்டும்! மறுப்பின்றி, மண்ணில் பிறந்தோர் அனைவரும் இறக்கத்தான் போகிறோம்! எப்போது என்பது மட்டும்-தான் எவருக்கும் தெரியாது! பின் ஏன், இம்மாதிரி எண்ணத்தை முயன்று உருவாக்கி நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளக்கூடாது?! முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; இந்த கணத்தில் இருந்தாவது முயன்று தான் பார்ப்போமே!!!
இந்த முயற்சியில் நாம் வென்றால் - நாம் இழப்பது நம்முடைய காழ்ப்பு/ பகைமை உணர்ச்சிகளை தான்! அந்த இழப்பு நம்முடைய வாழ்க்கையை வெற்றியடையச்-செய்யும் என்பது தீர்க்கமான உண்மை. இம்மாதிரியான பல சிந்தனைகளுக்கும் வித்து என்-சிறிய வயதில் என்னுள்ளே எழுந்த "இறந்த பிறகு என்னவாய் ஆவோம்?" என்ற அந்த கேள்விதான். என்னுள் எழுந்த அந்த கேள்வியும்; அந்த கேள்வியால் விளைந்த நன்மைகளும் இன்னும் பலரையும் சென்று சேர்ந்திடவேண்டும் என்ற நல்லெண்ணத்தால்தான் - இதை என்னுடைய கடமையாய் எண்ணி மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன். இறந்தபின் நாம் சிந்தும் கண்ணீரால், எந்த பலனும் இருக்கப்போவதில்லை! அல்லது அந்தநேரத்தில் நிகழும் மனமாற்றம் சம்பந்தப்பட்டவருக்கு நிச்சயம் தெரியப்போவதில்லை! பின், எதற்காய்/எவர்க்காய் இம்மாதிரியான காழ்ப்பு/பகைமை உணர்ச்சிகளை கொள்ளவேண்டும்? இம்மண்ணுலகில் இருக்கும் வரை - நம்மால் இயன்றவரை இத்தகைய உணர்ச்சிகளை விட்டுவிட்டு - சம்பந்தப்பட்டவர் உயிர்த்திருக்கும் போதே அன்பு பாராட்ட முயல்வோம்!! இல்லையெனில், "என்ன விதமான மனநிலை இது?" என்ற கேள்வி எவர்-மூலமாவது தொடர்ந்துகொண்டே தானிருக்கும். என்ன ஓர் விந்தை! மரணம் என்ற ஓர் நிகழ்வு எத்தனை விதமான யோசனைகளைகளுக்கு வித்திடுகிறது? மரணத்தின் மர்மம் மட்டும் தெரிந்துவிட்டால், வாழ்க்கை சுவராசியமாய் இருக்காது போலும்! அதனால் தானோ, இன்னமும் தொடர்கிறது இந்த கேள்வி...

இறந்த பிறகு என்ன ஆவோம்???