திங்கள், பிப்ரவரி 23, 2015

சிறிய வார்த்தைகளுள் பெரிய வலி...  "என்னை அறிந்தால்" என்ற தமிழ் திரைப்படத்தில் "ஈஷாவுக்கு அப்புறம் நமக்கு வேற குழந்தைகளே வேண்டாம்! என்ன... மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி போகவேண்டி வரும்!" என்ற வசனம் ஒன்று வரும். பலருக்கும், இது சாதாரணமான வசனமாய் தோன்றியிருக்கும்! அந்த சிறிய வார்த்தைகளுள் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய வலியை/அந்த வசனம் தரும் புரிதலை; எத்தனை பேர் யோசித்திருப்பர் என்று எனக்கு தெரியவில்லை! அதை, இப்படியொரு பதிவாய் பதியவேண்டும் என்று தோன்றியது. 

   அஜித் மாதிரி ஒரு நடிகர் இதை "ஒப்புக்கொண்டு" பேசியிருப்பது தனிச்சிறப்பு! அதுபோலவே, த்ரிஷா போன்ற நடிகை அந்த காட்சியில் இடம்பெற்று இருப்பதும்!!

    தமிழ் திரைப்படவேண்டும் இதுபோன்ற கூறிய வசனங்களை மேலும் கையாளவேண்டும் என்பது என் ஆவல்! காதல்/காமம் இவற்றின் மேலிருக்கும் நம் புரிதல் மென்மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். அதுபோலவே, காதலும் காமமும் எப்படி இயல்பாய் கலக்கவேண்டும் என்று நான் எழுதியதும் இன்னும் பலரை சென்றடையும் என்றும் நம்புகிறேன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக