ஞாயிறு, ஜூலை 28, 2013

Quinoa எனும் "திணை-அரிசி"




      என் நண்பன் "சுரேஷ் பாபு" வெகுநாட்களாய் "Quinoa" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்கு நல்லது என்று கூறிவருகிறான். என்னுடைய உடல் பருமன் கூடிக்கொண்டே போவதால் - என்னை அதை உண்ணும்படி வற்புறுத்தினான்! நானும், போர்த்துக்கல் நாட்டில்  இருந்தபோதும்; இங்கே அபு-தாபியிலும் அதை தொடர்ந்து  தேடிக்கொண்டே இருந்தேன்!! ஆனால், இதுவரை "Organic" மூலம் பயிரடப்பட்ட விலையுரந்த "Quinoa"-வையே பார்த்தேன். நானும், அது அவனிருக்கும் "அமெரிக்கா" போன்ற நாடுகளில் தான் கிடைக்கும் என்று விட்டுவிட்டேன். என் சமீபத்திய இந்திய-பயணத்தின் போதுதான் "Quinoa" என்பது "திணை-அரிசி" என்று உணர்ந்தேன். நண்பனாலும், அது எப்படி இருக்கும் என்று விளக்கமுடிந்ததே தவிர அது "திணை-அரிசி" என்று தெரியவில்லை. எனக்கு பெருத்த அதிர்ச்சியாய் இருந்தது; ஏனெனில், நான் சிறு-பிள்ளையாய் இருந்த போது என்-அம்மா திணை-அரிசியில் பல உணவு வகைகள் செய்து கொடுத்தது நினைவிலிருக்கிறது.

     இப்போது என்னுடைய கிராமத்தில் கூட கேழ்வரகு, கம்பு போன்ற பல தானியங்களை போல் "திணை-அரிசி"-யின் புழக்கமும் மலிந்துவிட்டது. திணை-அரிசி அங்கங்கே இயற்கையாய் விளைவதை கூட என் கிராமத்தில் கண்டிருக்கிறேன். இந்த உணவு வகைகள் குறையத்-துவங்கி, பின் அதை உண்போர் "வசதி-இல்லாதவர்" என்ற உருவகமும் தோன்ற ஆரம்பித்தது. திணை-மாவு, கேழ்வரகு-மாவு, கம்பு-மாவு போன்ற வேறு-வகைகளில் உண்டனர்; பின், அதுவும் அறவே நின்றுவிட்டது. இப்போது, உணவகங்களில் "Raagi-Dosa" தின்பது வசதியானோர் என்றாகிவிட்டது. ஏன்டா! அதைத்தானடா கிராமத்தில் "கூழ்" என்றும் முருங்கை-இல்லை சேர்த்து "கேழ்வரகு-அடை" போன்று கொடுத்தனர் என்று கூவத்தோன்றுகிறது! இப்போது - சென்னை, புதுவை பொன்ற நகரங்களில் "கூழை" சாலையோர கடைகளில் வாங்கி-குடிப்பது வெகுவாய் பெருகிவிட்டது!! திணை-அரிசியும் மறுபிரவேசம் எடுக்குமோ??? இதுபோன்ற மாற்றங்கள் தானாய் விளைந்ததாய் தெரியவில்லை! சரி...

இதை எவர் குற்றம் என்று கூறுவது???    

4 கருத்துகள்:

  1. தற்செயலாக திணையை தேடி உங்கள் தளம் வந்தேன். ஆனால் quinoa தினை அல்ல அது வேறு வகை பயிராகத் தெரிகிறது. ஆனால் millet என்ற வகையில் தினையை போன்றது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி, Shree!

    "Millet" பற்றி நானும் படித்தேன்; ஆனால், திணை அன்று என்பதாய் எனக்கு தெளிவாகிறது. "கம்பு" தான் Millet என்று நினைக்கிறேன். நான் முயன்ற அளவிற்கு, Quinoa என்பது "திணை" என்றே தெரிகிறது.

    http://www.google.ae/imgres?imgurl&imgrefurl=http%3A%2F%2Fknowaboutingredients.blogspot.com%2F2012%2F06%2Fquinoa.html&h=0&w=0&sz=1&tbnid=F4MB6Z-8WCnQ_M&tbnh=218&tbnw=231&prev=%2Fsearch%3Fq%3Dquinoa%2Bin%2Btamil%26tbm%3Disch%26tbo%3Du&zoom=1&q=quinoa%20in%20tamil&docid=tQQfpYatOLwVsM&ei=2XFyUtnFLceX1AXPmIGIAQ&ved=0CAEQsCU

    இந்த இணைப்பை பாருங்கள்! மேலும், Quinoa-வில் பல வகைகள் உள்ளதாய் படுகிறது - அதில் ஒன்று "திணை" என்பதாய் எனக்கு படுகிறது.

    இது சார்ந்து - உங்களுக்கு மேலும் ஏதேனும் தகவல் கிடைப்பின் - பகிரவும்.

    மீண்டும், நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. திணை என்பது ஒரு வகை தானியமாகும்.
    ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும்.

    பதிலளிநீக்கு
  4. @Sangeetha: தங்களின் கருத்துக்கு நன்றிகள்!

    முன்பொரு கருத்திற்கு இட்ட பதிலில் குறிப்பிட்டது போல், "மில்லட்" என்பது - எனக்கு இதுவரை கிடைத்த சான்றுகள் மற்றும் புகைப்படங்கள் அடிப்படையில் - "கம்பு" தான் என்பதை என்னால் உறுதியாய் கூறமுடியும். எங்கள் விளை-நிலத்தில் கம்பு, கேழ்வரகு, சோலம், மக்காச்சோலம் போன்ற பல தானியங்களை - உதவியாளர்களுடன் நானும் என் கையால் தொட்டு விதைத்தவன் என்ற அடிப்படையிலும், மேலும் "வினாயகர்" சதுர்த்தி நாளன்று - என்னுடைய தலையங்கம் ஒன்றில் குறிப்பிட்டது போல் - நானே சென்று "பால்-முற்றிய" கதிர்களை அறுத்து வந்ததன் அடிப்படையிலும் - "மில்லட்" என்ற பெயரில் விற்கப்படும் பொருளில் அல்லது அது சார்ந்து கிடைக்கும் புகைப்படங்களில் - எந்த தவறும்/மாற்றும் இல்லை எனில் - "மில்லட்" என்பது "கம்பு" தான் என்பதை மீண்டும் சொல்ல கடமப்பட்டு இருக்கிறேன்.

    மேலும், "Quinoa" என்ற பெயரிட்டு இங்கு விற்கப்படும் பொருள் மற்றும் "திணை-அரிசி" என்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விற்கப்படும் பொருள் - இவை இரண்டையும் ஒப்பிட்டு சொல்கிறேன்! என்னப்பொருத்த அளவில் "Quinoa" என்ற பெயரிட்ட பொருள் உண்மை எனில் - "தோற்றம்" மற்றும் "சுவை" இரண்டிலும் "Quinoa" மற்றும் "திணை-அரிசி" இரண்டும் ஒன்றே!

    இவை அனைத்தையும் தாண்டி - என்னால் இயன்ற அளவில் இதை மென்மேலும் உறுதி-செய்ய தொடர்ந்து முயன்று கொண்டே தான் இருக்கிறேன். அப்படி, எனக்கு - எவரேனும் சான்றுகள் கொடுப்பின் - என்னுடைய பதிவை திருத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை!

    மீண்டும், நன்றிகள்!

    பதிலளிநீக்கு