ஞாயிறு, ஜூன் 15, 2014

"குட்டைப்"பாவாடையும்; (சில)குழப்பங்களும்...



       கடந்த-வாரம் தினமலர் நாளிதழில்திரைப்பட விழா ஒன்றின் புகைப்படத்தை காண நேர்ந்தது! அதில் ஒரு நடிகை மிகக்குறுகிய பாவாடை ஒன்றை அணிந்து, உட்காரும் போது வேறெதையோ மறைக்க கால்-மேல் கால் போட்டு உட்கார, அது மிகவும் ஆபாசமாய் வந்திருந்தது. இதை என்னுடைய முக-நூலில் பகிர்ந்து என் கருத்தை இட்டிருந்தேன்; வழக்கம்போல், என்னுடைய மற்ற நல்ல சிந்தனைகள் போல் - இதுவும் பலரால் தவறாக நினைக்கப்பட்டு எவரும் கருத்திடவில்லை. என்னுடைய 3 நண்பர்கள் மட்டும் "லைக்"கிட்டிருந்தனர்; அதில் இருவர் விவாதித்தனர். என்னுடைய "நண்பி" ஒருவளும் விவாதித்தாள். நான் சொல்ல வந்ததன் பின்னணியை அங்கே சரிவர விளக்க முடியாமல் போனது வருத்தமே! உடை அணிவது பெண்களின் "சுதந்திரமாய் மட்டும்" பார்க்கப்படுவதாய் உணர்ந்தேன். உடனே, இந்த மாதிரி உடை மற்றும் அதை சார்ந்த குழப்பங்களை ஒரு தலையங்கமாய் பதியவேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த தலையங்கம்!

        அதன் பின் 2 நாட்கள் இதுசார்ந்தே சிந்தித்ததில் - எனக்கு முதலில் தோன்றிய கேள்வி இதை ஏன் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும்? சரி, இம்மாதிரியான புகைப்படங்கள் சம்பந்தப் பட்டவருக்கு ஒரு நேரத்தில் தெரியும் தானே?! அவர்கள் ஏன் இதை தடுப்பதில்லை? என்றொரு கேள்வியும் வந்தது. சரி, இதை ஏன் நான் வெளியிடவேண்டும்; எனக்கென்ன உரிமை இருக்கிறது? என்ற கேள்வி வந்தது. அவர்களின் முகங்களை மறைத்துவிட்டு வெளியிட்டு இருக்கிறேன். முக-நூலில், அந்த புகைப்படத்தை மாற்றமுடியவில்லை! தவறுக்கு வருந்துகிறேன்!! எனக்கு முக-நூலில் அதிகம் லைக்குகள் கிடைக்கவில்லை; எவரும் அதை ஆதரிக்கவில்லை! என்பது வருத்தமே. ஆனால், அதற்காய் கவலை கொள்ளும் நிலையை எல்லாம் நான் கடந்து விட்டேன். என்னுடைய பதிவுகள் வெறும் லைக்குகளுக்காக அல்ல! என் கருத்துகளும், சிந்தனைகளும் தான் முக்கியம் என்ற உண்மை மீண்டும் புரிந்தது. ஏன், இவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். 

        பெரும்பான்மையில் ஒவ்வொரு ஆணும் "தந்தையாய்/தமையனாய்/தம்பியாய்/கணவாய்..." இப்படி பல உறவு-முறையில் தன் குடும்பத்தில் உள்ள பெண்கள் இம்மாதிரி ஒரு உடை அணிவதை தொடர்ந்து தடுத்துக் கொண்டு; அவர்களை கண்டித்து கொண்டே தான் இருக்கிறான். எங்கள் வீட்டு ஆண் அப்படியில்லை என்ற வாதம் வேண்டாம்; சிறுபான்மையினர் எனினும், அவர்களை தலைவணங்குகிறேன். ஏன் இவர்கள் எவரேனும் ஒருவர் பொதுவில் குரலெழுப்பும் போது அமைதியாய் இருக்கின்றனர்? என்று யோசிக்க ஆரம்பித்தேன். "3 விதமானோர் தெரிந்தனர்: 1. எவர் எப்படி போனால் எனக்கென்ன?! என்போர்; 2. "அழகு பெண்ணின் தாயார் என்றால், அத்தை என்றே அர்த்தம்" என்பதாய் மற்ற பெண்களை இரசிப்பவர்கள்; 3. எவரேனும் ஒரு பெண் சண்டைக்கு வந்து "தம் இமேஜ்" போய்விடுமோ என்று எண்ணுவோர்". நான் ஒன்றும் ஞானி அல்ல; நானும் அழாகான பெண்களை இரசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், இது அழகல்லவே! இது ஆபாசம்...இது ஒழுக்கமின்மை...இது ஆபத்து!

       சரி பெண்கள் ஏன் அப்படி யோசிப்பதில்லை என்று யோசித்தேன். பெரும்பான்மையானோர், இப்படி உடை அணிவது தம்-உரிமை என்பதாய் நினைப்பது புரிந்தது. இல்லை எனவில்லை; இது அவர்கள் உரிமை/சுதந்திரம். ஆனால், மேலிருக்கும் புகைப்படத்தில் உள்ள உடையை மீண்டும் பாருங்கள். மன்னிக்கவும்! ஒரு-குறிப்பிட்ட உறுப்பை மறைத்தால் போதுமானது என்ற தவறான-புரிதலை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? அப்படியாயின், இலையும்/தழையும் போதுமென்று இருந்திருக்கலாமே? ஆடைகள் எதற்கு?. இது முற்போக்கு/மேற்கத்திய சிந்தனை என்று வாதிடுவோர் உண்டு; ஏன், மேலை நாட்டில் இப்படி பெண்கள் உடையணிவதை பார்க்கவில்லையா?! என்பர். இல்லை எனவேயில்லை! மேலை நாடுகளில் 6 மாதங்களுக்கும் மேலாய் குளிரும்/பனியும் மட்டுமே; அவர்களால் குறைந்தது 3-உடைகள் (முக்கியமாய் பெண்கள்) இல்லாமல் இருக்கமுடியாது. அதுவும் முழுக்க முழுக்க உடம்பை மறைத்த ஆடைகள்; முகத்தையே(கூட) முழுதாய் பார்க்கமுடியாது. 

    அதனால், கோடை காலம் அவர்களுக்கு - இம்மாதிரியான கடினமான உடைகளில் இருந்து கிடைக்கும் விடுதலையாய் பார்க்கப்படுகிறது. "கார்னிவால்" போன்ற பெயரில் அவர்கள் கோடையின் ஆரம்பத்தையே ஒரு விழாவாய் கொண்டாடுகின்றனர்! அதுவும் வெய்யிலை தங்கள் உடம்பில் உள்வாங்கிக் கொள்ளவே (Sun Bath)! அது அவர்களின் "மெலனின்" குறைப்பாட்டினால் இருக்கும் "மிக வெள்ளையான" தோலை "நிறமாற்றம் (Toning)" செய்ய ஒரு மருத்துவம் போல் செய்கின்றனர். இங்கே, வருடம் முழுதும் வெய்யில் கொளுத்துகிறதே ஐய்யா! (இறை/இயற்கை)யருளால், நம் தோல் ஏற்கனவே நிறமாற்றம் செய்யப்பட்டு "குறையற்று" இருக்கிறதே ஐய்யா!! அந்நாடுகளின் தட்பவெப்ப-நிலை மற்றும் அந்நாட்டவர்கள் தோல்-குறைப்பாடு சார்ந்தது! நம் பெண்கள் ஏன் கடைபிடிக்க வேண்டும்? அந்த பெண்கள் செய்வது அனைத்தையும் இவர்கள் செய்யமுடியுமா? "கடற்கரையில்" அப்பெண்கள் இருப்பது போன்று இருக்கமுடியுமா?! என்று கீழ்த்தரமாய் கேட்கவில்லை!

          குறிப்பிட்ட வயதிற்கு மேல், தன் தந்தை/தமையன்/காதலன்/கணவன் என்று எவருடன் வெளியில் சென்றாலும் தான் சாப்பிடும் சாப்பாட்டிற்கு தானே பணம் கொடுப்பது முதல் எவ்வளவு இருக்கின்றன?!  எனக்கும் மேற்கத்திய சிந்தனை தெரியும் என்பதை முன்பே எழுதி இருக்கிறேன். அவை நம் வாழ்க்கை முறைக்கும்/வாழ்க்கை சிக்கலுக்கும் எத்தனை பயனுள்ளதாய் இருக்குமே? எங்கே... நம் ஊரில் ஒரு கணவன் (மற்றவரை விடுங்கள்!) தன் மனைவி சாப்பிட்டதற்கு அப்பெண்ணை பணம் கொடுக்க சொல்லிவிட்டு அன்றிரவு நிம்மதியாய் தூங்கிவிட முடியுமா?! மீண்டும் விதிவிலக்கானவர்களை தலைவணங்குகிறேன்! "தேவைக்கு அதிகமாய்" தன் கணவனிடம் பணம் வாங்கும் பல பெண்களை எனக்கு தெரியும் - "என் அம்மா/ என் தமக்கை/ என்னவள்/ என் நண்பிகள்" உட்பட! அக்காலத்தில் வேலைக்கு செல்லாத பெண்கள் (என் அம்மா/ என் தமக்கை போன்று) அப்படி செய்தது மட்டுமல்ல; இப்போது நிரம்ப சம்பாதிக்கும் பெண்களும் அதையே செய்கிறார்கள்! இதை தவறெனவில்லை! 

       ஆனால், இங்கே ஏன் மேற்கத்திய/முற்போக்கு சிந்தனை வரவில்லை? என்பதே என் கேள்வி! உண்மையான மேற்கத்திய சிந்தனையில், ஒரு-குழந்தைக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்பதால் 2-ஆவது குழந்தை வேண்டாம் எண்ணமே வராது! அங்கே, குழந்தைகளை படிக்கவைப்பதோடு சரி! பின்னர் அவர்கள் வாழ்க்கை அவர்களுடையது! நாம் அந்த சிந்தனையுடனா இருக்கிறோம்? அங்கே, முன்பின் தெரியாத பெண்ணின் பக்கத்தில் பேருந்திலோ/பொதுவிடத்திலோ அமரமுடியும்! இங்கே? "அக்கா/தங்கையோட பிறக்கவில்லையா?" என்று கேள்வி வரும். தாம் அண்ணன்/தம்பியோட பிறக்கவில்லையா?? என்று யோசிப்பதேயில்லை?! எனக்கு தெரிந்து மேலை-நாட்டு பெண்கள்; "இது என்கனவனின் குழந்தை!" என்று எந்த முகமாற்றமும் இல்லாமல் "மாறா அன்போடு" சொல்வர்! இங்கே... "என் சக்களத்தி" குழந்தை! தனக்கு சாதகமான விசயங்களில் மட்டும் இம்மாதிரி சிந்திப்பது மேற்கத்திய சிந்தனையோ/முற்போக்கு சிந்தனையோ அல்ல என்பதை அருள்கூர்ந்து உணருங்கள்.

        அந்த நாட்டில் (நீங்கள்) சகித்து கொள்ளவில்லையா? ஆம்! உண்மைதான்; நீங்களும் அங்கே எந்த ஆண்-மகன் பக்கத்தில் உட்கார்ந்தாலும் அமைதியாய் தானே இருக்கிறீர்கள்? நல்ல விசயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் - தவறில்லை! சாதகமான விசயங்களை எடுத்துக்கொள்வது தவறு மட்டுமல்ல; ஆபத்தானது! அடுத்து, "பார்ப்பவரின் பார்வையில் கோளாறு!" என்ற வாதம்; மறுக்கவில்லை! இம்மாதிரி உடை அணியும் 100 பெண்களில் 0.5 % தான் அம்மாதிரி சிதைக்கப்படுகிறார்கள் என்போம்! நம் நாட்டில் சுமார் 30 கோடி இளம்பெண்கள் இருக்கின்றனர்; அதில் சுமார் 15 கோடி மாதிரி பெண்கள் இம்மாதிரி உடைகள் அணிகின்றனர் என்போம்! மொத்தத்தில் 0.5 % எத்தனை பெண்கள் என்று கணக்கிடுங்கள்; உண்மையை சொல்லுங்கள்! மனது பதறவில்லையா?! அந்த பதட்டம்தானைய்யா என்னை இப்போது சூழ்ந்துள்ளது! இது வெறும் "உடலால்" கற்பழிக்கப் படுபவர்கள் பற்றிய ஒப்பீடு. கண்ணால்/கனவால்/கற்பனையால்/மனதால் கற்பழிக்கப்படுவோர் எண்ணற்றோர்!  

        நான் 99.5 % சதவிகிதம் பெண்களில் பாதுகாப்பாய் இருக்கிறேன்; தவறில்லை! என்று ஒரு பெண் நினைப்பதும், 0.5 % சதவிகிதத்தில் என்வீட்டு பெண்ணில்லை; தவறில்லை! என்று ஒரு ஆண் நினைப்பதும், மிகவும் ஆபத்தானது. எல்லா ஆண்களுக்கும் "காம உணர்ச்சிகள்" வருவதில்லை!; எல்லா பெண்களும் அப்படியான உணர்வுகளை தூண்டுவதுமில்லை!! "ராஜ ராணி" திரைப்பட விமர்சனத்தில் குட்டைப்பாவாடை நயன்தாராவுக்கு அழகாய் இல்லை என்பதை விட; அசிங்கமாய் இருக்கிறது என்று விமர்சித்து இருந்தேன். அந்த காட்சியில் அஞ்சலி இருந்திருந்தால் என்னுடைய விமர்சனம் வேறுமாதிரி இருந்திருக்கும். அதுவே, ரம்பா போன்ற நடிகை இருந்திருந்தால் "அடடே! பாவாடையை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாமே!!" என்றிருந்திருக்கும். ஒரே பாவாடை! பார்ப்பவன் நான் ஒருவனே!! - பார்க்கப்படும் பெண்களும்; என் எண்ணங்களும் வேறுமாதிரியானவை! அதே போல், என்-வரிசையை மாற்றி அமைத்து யோசிக்கும் ஆண்கள் உண்டென்பதையும் உணரவேண்டும்.

    இதையே இங்கே வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி உடையணிந்தும் எத்தனை பெண்கள் பாதுகாப்பாய் இருக்கின்றனர்?! என்பதல்ல என் கவலை! இம்மாதிரியான உடைகளால் எத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்பதே என் பெருத்த கவலை!! 5 வயது குழந்தைகள்; 50 பெண்களின் கற்பழிப்புகளுக்கும் ஆடையா காரணம்? எனலாம்; கண்டிப்பாய், அங்கே ஆடைகள் காரணமே இல்லைதான்! அது "மிகக் கொடிய கொடூர-மிருகத்தின் செயல்". கற்பழிப்புக்கான பல காரணங்களில்; இம்மாதிரியான உடைகளும் ஒன்று! என்பதே நான் இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் களம். ஒருபெண்ணின் உடையை பார்த்து "காம வெறிகொண்டு"; அப்பெண்ணை அடையமுடியாமல் கிடைக்கக்கூடிய பெண்களை நாசப்படுத்தும் வேலைகளும் இங்கே நடைபெறுகின்றன. அப்போது... நீங்கள் நலமாய் இருந்தாலும்; உங்களால் இன்னுமோர் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதை(யும்) உணரவேண்டும். அதில் ஒன்றாய் கூட "இந்த 5-உம்; 50-உம் இருக்கக்கூடும்!.

இது பெண்களின் உரிமையை ஒடுக்க முனையும் குரல் அல்ல! 
      பெண்களின் உன்னதத்தை காக்க முனையும் குரல்!!      

பின்குறிப்பு: மீண்டும் ஓர்முறை தலையங்கத்தின் நீளம் அதிகமாகிவிட்டது! ஆனால், எடுத்துக் கொண்டிருக்கும் உன்னத விசயத்திற்காய் இதை பொறுத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. 

8 கருத்துகள்:

  1.   பெரும்பான்மையில் ஒவ்வொரு ஆணும் "தந்தையாய்/தமையனாய்/தம்பியாய்/கணவாய்..." இப்படி பல உறவு-முறையில் தன் குடும்பத்தில் உள்ள பெண்கள் இம்மாதிரி ஒரு உடை அணிவதை தொடர்ந்து தடுத்துக் கொண்டு; அவர்களை கண்டித்து கொண்டே தான் இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  2. 3 விதமானோர் தெரிந்தனர்: 1. எவர் எப்படி போனால் எனக்கென்ன?! என்போர்; 2. "அழகு பெண்ணின் தாயார் என்றால், அத்தை என்றே அர்த்தம்" என்பதாய் மற்ற பெண்களை இரசிப்பவர்கள்; 3. எவரேனும் ஒரு பெண் சண்டைக்கு வந்து "தம் இமேஜ்" போய்விடுமோ என்று எண்ணுவோர்". நான் ஒன்றும் ஞானி அல்ல; நானும் அழாகான பெண்களை இரசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், இது அழகல்லவே! இது ஆபாசம்...இது ஒழுக்கமின்மை...இது ஆபத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், என்னால் இப்படித்தான் யோசிக்க முடிகிறது.

      நீக்கு
  3. ம் ஊரில் ஒரு கணவன் (மற்றவரை விடுங்கள்!) தன் மனைவி சாப்பிட்டதற்கு அப்பெண்ணை பணம் கொடுக்க சொல்லிவிட்டு அன்றிரவு நிம்மதியாய் தூங்கிவிட முடியுமா?! மீண்டும் விதிவிலக்கானவர்களை தலைவணங்குகிறேன்! "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...! நான் அப்படிப்பட்ட உறவுகளை நிறையப் பார்த்திருக்கிறேன் பாலாஜி. ஆனால், அவர்களிடம் அருமையான புரிதல் இருக்கும். அது, அவர்கள் நீண்ட காலமாய் பழகி வரும், அவர்கள் வழக்கம்.

      நீக்கு
  4. இங்கே? "அக்கா/தங்கையோட பிறக்கவில்லையா?" என்று கேள்வி வரும். தாம் அண்ணன்/தம்பியோட பிறக்கவில்லையா?? என்று யோசிப்பதேயில்லை?! எனக்கு தெரிந்து மேலை-நாட்டு பெண்கள்; "இது என்கனவனின் குழந்தை!" என்று எந்த முகமாற்றமும் இல்லாமல் "மாறா அன்போடு" சொல்வர்! இங்கே... "என் சக்களத்தி" குழந்தை! தனக்கு சாதகமான விசயங்களில் மட்டும் இம்மாதிரி சிந்திப்பது மேற்கத்திய சிந்தனையோ/முற்போக்கு சிந்தனையோ அல்ல என்பதை அருள்கூர்ந்து உணருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மேற்கத்திய சிந்தனை என்ற பெயரில் நடக்கும் "கூத்து"களில் இந்த உடை-கலாச்சாரமும் ஒன்று. :)

      நீக்கு