ஜெய்ஹிந்த் 2 - அருமையான கதைக்களம்! அர்ஜூனின் சமுதாய அக்கறையை உணர்த்தும் இன்னுமொரு படம். இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பாடல்களை கேட்டு வந்ததாலும்; கதையின் கரு நான் நிறைய-எழுதிய "கல்வி"யை மையப்படுத்தியது என்பதாலும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. முதல் 1 மணி நேரம் வரை; எதிர்பார்ப்புக்கு எந்த குறைவும் இல்லாமல் இருந்தது! நானும், இத்திரைப்படம் பற்றி என் பார்வையை பதியவேண்டும் என்று குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், திரைக்கதையை அதிரடியாய் துவக்க வேண்டிய இடத்தில் "அதீத மசாலா"நெடியை தூவ ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர், சமூக அக்கறையுள்ள ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அருமையான கதையை திரைக்கதையால் சிதைத்துவிட்டார் அர்ஜூன்.
படம் பார்த்த பின்னர், அது பற்றிய என் பார்வையை எழுதினால் - படத்தின் வியாபாரத்திற்கு நன்றாக இருக்காது என்பதால் எழுதவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக