வெள்ளி, நவம்பர் 25, 2011

தமிழ்த்-தாய்...




அறிவு அளித்-தாய்
ஆர்வம் அளித்-தாய்
இன்பம் இழைத்-தாய்
ஈர்ப்பு ஈந்-தாய்
உள்ளம் உவந்-தாய்
ஊக்கம் உவந்-தாய்
எழுச்சி கொடுத்-தாய்
ஏற்றம்   தந்-தாய்
ஐயம் தவிர்த்-தாய்
ஒழுக்கம் அளித்-தாய்
ஓம்பல் கற்பித்-தாய்
ஔவையும் தந்-தாய்

கல்வி கொடுத்-தாய்
இ'ங்'கிதம் அளித்-தாய்
சக்தி கொடுத்-தாய்
ஞானம் தந்-தாய்
க'ட'மை போதித்-தாய்
கு'ண'ம் கொடுத்-தாய்
தமிழ்(திறன்) தந்-தாய்
நற்பண்பு கொடுத்-தாய்
பகுத்தறிவு பகிர்ந்தளித்-தாய்
மடமை நீத்-தாய்
"யா"வரையும் படைத்-தாய்
'ரௌ'த்திரம் பழக்குவித்-தாய்
ந'ல'ம் காத்-தாய்
வக்கிரம் குறைத்-தாய்
'ழ'கரம் கொடுத்-தாய்
வ'ள'மை தந்-தாய்
கு'ற'ள் கொடுத்-தாய்
ம'ன'ம் நிறைத்-தாய்

அத்துனையும் கொடுத்-தாய்
தமிழ்த் தாய்!
என்னிடம் இல்லாத-தாய்
எதுவும் இருப்ப-தாய்
எவரெதும் உரைப்ப-தாய்
உரைக்க முடிவ-தாய்
உணர்த்தப் போவ-தாய்
முயன்றேனும் பார்ப்ப-தாய்
(முயன்றும்)முடியும் என்ப-தாய்
தோன்றவில்லையே தாய்!!
நவில்கிறேன் முழுமன-தாய்
நன்றியென தாய்!!!      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக