ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

21 ஆண்டுகளுக்கு பிறகு...



     21 ஆண்டுகளுக்கு பின் - இளங்கலை-யில் என்னுடன் படித்த நண்பன் ஒருவனுடன் நேற்று தொடர்பு கொள்ள முடிந்தது! வெகுநிச்சயமாய், என்னுடைய மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றிது!! என்னுடன் படித்தவர்களில் பலருடன் எனக்கு தொடர்பு இல்லை எனினும் - இவனை தொடர்பில் கொண்டு வர நான் மிகவும் முயன்றேன். எனக்காய் பலதும் (நான் ஏதும் செய்யாத நிலையிலும்) செய்த நண்பன்! அவன் பெயர் மோகன் சைபர்சாத் (Mohun Cyparsade) - மொரீஷியஸ் நாட்டை சேர்ந்தவன்!! அவன் என்னுடைய இளங்கலை "தற்காலிக பட்டத்தை (Provisional Certificate)" பெற்று அனுப்பிய அஞ்சல்-உரையை பல ஆண்டுகள் என்னுடன் வைத்திருந்தேன்; இறுதியாய் ஓர் ஆண்டுக்கு முன்பு கூட பார்த்தேன்! இன்னமும் இருக்கவேண்டும்; அடுத்த முறை இந்தியா செல்லும்போது உறுதி செய்யவேண்டும். எதற்கு என்று தெரியவில்லை! அந்த உரையை வைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்த நண்பனை தான் "முக-நூல் (Facebook)" மூலம் தொடர்பு கொண்டேன்.

    பின்னர், இணையதளம் மூலம் 70 நிமிடங்களுக்கு மேல் பேசினோம்! அவனுடைய குடும்பத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான்.  "மீன் குழம்பு" - டின்னில் அடைத்த(ம்) கிடைக்கும் என்பதை 1990-இல் எனக்கு காட்டியவன். மற்றவருக்கு எப்படியோ, அன்றைய தினம் எனக்கு அந்த விசயம் - பெருத்த ஆச்சர்யம்; அந்த குழம்பின் சுவையும், தரமும் கூட! இது மாதிரி, பல விசயங்களை கூறிக்கொண்டே போகலாம். இன்று, எங்கள் இருவருக்கும் பொதுவான ஓர் நெருங்கிய-நண்பனுக்கும் (அவர்களின் உறவு இன்னமும் வலிது); மேலும் ஓர் நண்பனுக்கும் தகவலையும் தொடர்பு-மூலத்தையும் கொடுத்தேன். என் மகிழ்ச்சியும், பரவசமும் அவர்களையும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. இதுதான், நட்பு என்ற உறவின் உணர்வு/வலிமை!! எந்த எதிர்பார்ப்பும் இல்லை; இங்குதான் எதிர்பாராமலே அனைத்தும் கிடைக்கிறதே. இப்போது, எனக்கு ஓர் ஆசை எழுகிறது; நாங்கள் எல்லோரும் இளங்கலை-முடித்து ஒருவரை ஒருவர் பிரியும்போது, பெருத்து-அழுதோமே; அந்த பாரிஸ்-கார்னர்...

 "பழைய பேருந்து-நிலையத்தை" எல்லோரும் ஒன்றுசேர்ந்து காணவேண்டும்!!!       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக