செவ்வாய், டிசம்பர் 04, 2018

அதிகாரம் 122: கனவுநிலை உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்

1211.  காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
           யாதுசெய் வேன்கொல் விருந்து

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் வாடும் எனக்கு ஆறுதலாக, காதலரின் தூதுச் 
           செய்தியோடு வந்த நல் கனவுக்கு; நன்றி விருந்தாக, எதைச் செய்வேன்?
(அது போல்...)
           பேரிடரால் வாடும் எமக்கு உறுதியாக, மீள்வாழ்வின் ஆரம்ப உதவியோடு வந்த புது 
           தலைவருக்கு; உரிய கைம்மாறாக, எதைச் செய்வோம்?
      
1212.  கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
           உயலுண்மை சாற்றுவேன் மன்

           விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்; 
           கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை 
           எடுத்துரைப்பேன்!
(அது போல்...)
           யாம் கேட்டதும், பதவியில் இருக்கும் ஆட்சியர் வருவாரெனின்; நேரில் வரும் எம்மை 
           ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!
           
1213.  நனவினால் நல்கா தவரைக் கனவினால்
           காண்டலின் உண்டென் உயிர்

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது 
           காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
(அது போல்...)
           ஆட்சி காலத்தில், மக்களைக் காணாத அரசியலாரை; தேர்தல் நேரத்திலாவது காண்பதால் 
           தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?

1214.  கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
           நல்காரை நாடித் தரற்கு

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்; 
           கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
(அது போல்...)
           நிகழ் ஆட்சியில் மக்களைக் காக்காத அரசியலார், தந்த நம்பிக்கைத் துளிகள்; பேரிடர் 
           காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?

1215.  நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
           கண்ட பொழுதே இனிது

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே; 
           கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
(அது போல்...)
           நாட்டிற்கு சென்று, குடும்பத்தைக் கண்டதும் உடனே எழுவது போலவே; வெளிநாட்டு 
           வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!

1216.  நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
           காதலர் நீங்கலர் மன்

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது 
           இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
(அது போல்...)
           நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் 
           நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!

1217.  நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
           என்எம்மைப் பீழிப் பது

           விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன 
           காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
(அது போல்...)
           அரசியல் வாழ்வில், கடமையைச் செய்யாத அரசியலார்; என்ன ஆதாயத்தால், நிகழும் 
           பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?

1218.  துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
           நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

           விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும் 
           போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
(அது போல்...)
           தேர்தலின் போது, தெருவில் கும்பிட்டுப் பணியும் அரசியலார்; ஆட்சியின் போது, புதிராக 
           மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!

1219.  நனவினால் நல்காரை நோவர் கனவினால்
           காதலர்க் காணா தவர்

           விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்; 
           நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
(அது போல்...)
           தனிக் குடும்பத்தில் கூட, பெற்றோர் பயிற்றுவிப்பதை அறியாதோர் தான்; கூட்டுக் 
           குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!

1220.  நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
           காணார்கொல் இவ்வூ ரவர்

           விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும் 
           இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
(அது போல்...)
           கூட்டுக் குடும்பத்தில் எம்மை விட்டுப் பிரிந்தனர், என விமர்சிக்கும் சுற்றத்தார்; அதே 
           பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?

குறள் எண்: 1220 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1220}

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்

விழியப்பன் விளக்கம்: நடைமுறை வாழ்வில் எம்மை விட்டுப் பிரிந்தார், என தூற்றும் இவ்வூரார்; அதே காதலர், கனவில் கலந்து அன்பைப் பரிமாறுவதைக் காண மாட்டாரோ?
(அது போல்...)
கூட்டுக் குடும்பத்தில் எம்மை விட்டுப் பிரிந்தனர், என விமர்சிக்கும் சுற்றத்தார்; அதே பிள்ளைகள், எங்களைப் பேணி உறவை வளர்ப்பதை அறிய மாட்டாரோ?

திங்கள், டிசம்பர் 03, 2018

குறள் எண்: 1219 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1219}

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்

விழியப்பன் விளக்கம்: கனவு வாழவில் கூட, காதலர் கலந்திருப்பதை உணராதோர் தான்; நடைமுறை வாழ்வில் அன்பைப் பரிமாறவில்லை என, காதலரை விமர்சிப்பர்!
(அது போல்...)
தனிக் குடும்பத்தில் கூட, பெற்றோர் பயிற்றுவிப்பதை அறியாதோர் தான்; கூட்டுக் குடும்பத்தில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என, பெற்றோரை விமர்சிப்பர்!

ஞாயிறு, டிசம்பர் 02, 2018

குறள் எண்: 1218 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1218}

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

விழியப்பன் விளக்கம்: உறங்கும் போது, கனவில் தோள்தழுவிப் படரும் என்னவர்; விழிக்கும் போது, விரைவாக என்னை விலகி நெஞ்சினுள் வாழ்பவர் ஆகிறார்!
(அது போல்...)
தேர்தலின் போது, தெருவில் கும்பிட்டுப் பணியும் அரசியலார்; ஆட்சியின் போது, புதிராக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவோர் ஆகின்றனர்!

சனி, டிசம்பர் 01, 2018

குறள் எண்: 1217 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1217}

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பரிமாறாத கொடியவர்; என்ன காரணத்தால், காணும் கனவிலும் என்னைத் தொடர்ந்து வருத்துகிறார்?
(அது போல்...)
அரசியல் வாழ்வில், கடமையைச் செய்யாத அரசியலார்; என்ன ஆதாயத்தால், நிகழும் பேரிடரிலும் எம்மைத் தொடர்ந்து வதைக்கின்றனர்?

வெள்ளி, நவம்பர் 30, 2018

குறள் எண்: 1216 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1216}

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வு என்பது, கனவு வாழ்விலிருந்து மாறுபட்டது இல்லையெனில்; கனவில் என்னுள் கலந்து வாழும் என்னவர், என்னை விட்டு பிரியமாட்டார்!
(அது போல்...)
நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!

வியாழன், நவம்பர் 29, 2018

குறள் எண்: 1215 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1215}

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், காதலரைக் கண்டதும் ஆங்கே அளித்தது போலவே; கனவு வாழ்வு கூட, அவரைக் கண்ட நொடிப்பொழுதே இனிமை அளிக்கிறதே!
(அது போல்...)
நாட்டிற்கு சென்று, குடும்பத்தைக் கண்டதும் உடனே எழுவது போலவே; வெளிநாட்டு வாழ்வு கூட, அவர்களை நினைத்த அப்பொழுதே மகிழ்ச்சி எழுகிறதே!

புதன், நவம்பர் 28, 2018

குறள் எண்: 1214 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1214}

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில் அன்பைப் பகிராத காதலர், அளித்த காம உணர்வுகள்; கனவு வாழ்வில் எழக் காரணம், அவரைத் தேடிப் புரிய வைத்திட தானோ?
(அது போல்...)
நிகழ் ஆட்சியில் மக்களைக் காக்காத அரசியலார், தந்த நம்பிக்கைத் துளிகள்; பேரிடர் காலத்தில் நினைவெழக் காரணம், அவர்களைப் பார்த்து எதிர்ப்பை தெரிவித்திட தானோ?

செவ்வாய், நவம்பர் 27, 2018

குறள் எண்: 1213 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1213}

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

விழியப்பன் விளக்கம்: நிகழ் வாழ்வில், அன்பைப் பகிராத என்னவரை; கனவு வாழ்விலாவது காண்பதால் தான், என் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ?
(அது போல்...)
ஆட்சி காலத்தில், மக்களைக் காணாத அரசியலாரை; தேர்தல் நேரத்திலாவது காண்பதால் தான், நம் வாழ்க்கை இன்னும் நம்பிக்கையுடன் தொடர்கிறதோ?

திங்கள், நவம்பர் 26, 2018

குறள் எண்: 1212 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1212}

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்

விழியப்பன் விளக்கம்: நான் இரந்ததும், துன்பத்தில் உழலும் கண்கள் உறங்குமாயின்; கனவில் வரும் என்னில் கலந்தவர்க்கு, இறப்பின் விளிம்பில் இருக்கும் என் நிலையை எடுத்துரைப்பேன்!
(அது போல்...)
யாம் கேட்டதும், பதவியில் இருக்கும் ஆட்சியர் வருவாரெனின்; நேரில் வரும் எம்மை ஆள்பவர்க்கு, பேரிடரின் பிடியில் வாழ்விழக்கும் எம் நிலையை எடுத்துரைப்போம்!

ஞாயிறு, நவம்பர் 25, 2018

குறள் எண்: 1211 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1211}

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் வாடும் எனக்கு ஆறுதலாக, காதலரின் தூதுச் செய்தியோடு வந்த நல் கனவுக்கு; நன்றி விருந்தாக, எதைச் செய்வேன்?
(அது போல்...)
பேரிடரால் வாடும் எமக்கு உறுதியாக, மீள்வாழ்வின் ஆரம்ப உதவியோடு வந்த புது தலைவருக்கு; உரிய கைம்மாறாக, எதைச் செய்வோம்?

வெள்ளி, அக்டோபர் 26, 2018

குறள் எண்: 1181 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 119 - பசப்புறு பருவரல்; குறள் எண்: 1181}

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற

விழியப்பன் விளக்கம்: என்னை விரும்பியவர்க்காக, அவர் அளித்த பிரிவை ஏற்றேன்! இப்போது பிரிவுத் துயரால் பசலை நோய் கொண்ட என் நிலையை, வேறு யார்க்கு தான் உரைப்பதோ? 
(அது போல்...)
நம்மை ஆள்வதற்காக, அரசியலார் அளித்த இலவசத்தை ஏற்றோம்! இன்று இலவசம் தந்ததால் கருவூலம் வீழ்ச்சி அடைந்த நம் தவறுக்கு, வேறு யாரிடம் மன்னிப்பு கோருவதோ?

வியாழன், அக்டோபர் 25, 2018

அதிகாரம் 118: கண்விதுப்பு அழிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்

1171.  கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
           தாம்காட்ட யாம்கண் டது

           விழியப்பன் விளக்கம்: காதல் எனும் தணியாத நோயை, கண்கள் தாம் காட்டவே யாம் 
           அறிந்தோம்! பிரிந்திருக்கும் காதலரைக் காட்டாமல், இப்போது கண்கள் தாமும் அழுவது 
           எதனாலோ?
(அது போல்...)
           குடும்பம் எனும் தீராத சிக்கலில், பெற்றோர் தாம் சொல்லவே நாம் நுழைந்தோம்! 
           சேர்ந்திருக்கும் சிக்கலை அவிழ்க்காமல், இப்போது பெற்றோர் தாமும் சிக்கலாக்குவது 
           எதனாலோ?
      
1172.  தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
           பைதல் உழப்பது எவன்

           விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து உணராமல், அன்று கண்டதும் காதலுற்ற கண்களே! 
           நடந்த பிரிவை உணராமல், இன்றும் உடனடியாய் துன்பத்தில் வருந்துவது ஏன்?
(அது போல்...)
           தகுதியை மதிப்பிடாமல், அன்று கொடுத்ததும் வாக்களித்த மக்களே! நடந்த தவறை 
           உணராமல், இன்றும் அவசரமாய் கோபத்தில் விமர்சிப்பது ஏன்?
           
1173.  கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
           இதுநகத் தக்க துடைத்து

           விழியப்பன் விளக்கம்: அன்று, கண்டதும் காதல் கொண்ட கண்களே; இன்று, பிரிந்ததும் 
           விரைவாய் அழுகின்றன! இம்முரண்பாடு, நகைக்கத் தக்க தன்மை உடையது!
(அது போல்...)
           அன்று, கண்டதும் கும்பிட்டு ஓட்டுகேட்ட கைகளே; இன்று, வென்றதும் துப்பாக்கியால் 
           கொல்கின்றன! இம்முரண்பாடு, அருவருக்கத் தக்க தன்மை கொண்டது!

1174.  பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
           உய்வில்நோய் என்கண் நிறுத்து

           விழியப்பன் விளக்கம்: குணப்படுத்த முடியாத மற்றும் அழிவில்லாத, காதல் எனும் நோயை 
           எனக்கு அளித்துவிட்டு; கண்ணீரைப் பொழிய முடியாத, நீர் வற்றிய கண்களும் 
           வருந்துகின்றன!
(அது போல்...)
           விடுதலை இல்லாத மற்றும் முடிவில்லாத, ஆட்சி எனும் கொடுங்கோலே யாமே 
           தேர்ந்தெடுத்து; விமர்சனம் செய்ய முடியாத, சுயம் இழந்த நாங்களும் வருந்துகிறோம்!

1175.  படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
           காமநோய் செய்தஎன் கண்

           விழியப்பன் விளக்கம்: கடல் கொள்ளாத அளவுக்கு, காதல் எனும் காம நோயை அளித்த 
           என் கண்கள்; தூங்க முடியாத அளவுக்கு, துன்பம் அடைந்து வருந்துகின்றன!
(அது போல்...)
           வானம் கொள்ளாத அளவுக்கு, பணம் எனும் ஊழல் விதையைப் பெற்ற எம் மக்கள்; வாழ 
           முடியாத அளவுக்கு, உரிமை இழந்து வாடுகின்றனர்!

1176.  ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
           தாஅம் இதற்பட் டது

           விழியப்பன் விளக்கம்: என்ன விந்தை? காதல் எனும் காம நோயை, எமக்கு அளித்த கண்கள் 
           தாமும்; நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி அழுகின்றனவே. இது மகிழ்ச்சியானதே!
(அது போல்...)
           என்ன ஆச்சரியம்? இலவசம் எனும் ஊழல் விதையை, எம்முள் விதைத்த அரசியலார் 
           தாமும்; ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கின்றனரே. இது முன்னேற்றமானதே!

1177.  உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
           வேண்டி அவர்க்கண்ட கண்

           விழியப்பன் விளக்கம்: விரும்பி மகிழ்ந்து, தொடர்ந்து அவரைக் கண்ட கண்களே! அவரைப் 
           பிரிந்த துன்பத்தால், வருந்தி வருந்தி உம்முள் இருக்கும் கண்ணீர் அற்றுப் போக!
(அது போல்...)
           விரும்பி ஏற்று, தொடர்ந்து ஆட்சியை அளித்த மக்களே! அவர்கள் செய்த 
           கொடுங்கோன்மையால், வாழ்விழந்து வாழ்விழந்து உம்மிடம் இருக்கும் ஆதரவு அழிந்து 
           போக!

1178.  பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
           காணாது அமைவில கண்

           விழியப்பன் விளக்கம்: மனதால் விரும்பாமல், சொல்லால் விரும்பியோர் இருக்கிறார்கள் 
           தானே? ஆனாலும், அவர்களைக் காணாமல் அமைதி கொள்வதில்லை கண்கள்!
(அது போல்...)
           செயலால் செய்யாமல், வாக்குறுதியால் செயதோர் இருக்கிறார்கள் தானே? ஆனாலும், 
           அவர்களை ஆதரிக்காமல் திருப்தி அடைவதில்லை தொண்டர்கள்!

1179.  வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
           ஆரஞர் உற்றன கண்

           விழியப்பன் விளக்கம்: காதலர் வராதபோதும் தூங்காமல், வந்தபோதும் தூங்காமல்; 
           மத்தளம் போல் இருவழியிலும், அரிய கொடுமையான துன்பத்தை அடைந்தன கண்கள்!
(அது போல்...)
           சோம்பல் வராதபோதும் முனையாமல், வந்தபோதும் முனையாமல்; உலக்கை போல் 
           இருபுறமும், அதிக ஆழமானச் சிதறலை அடைந்தன சிந்தனைகள்!

1180.  மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
           அறைபறை கண்ணார் அகத்து

           விழியப்பன் விளக்கம்: எம்போல், பறையடித்து அறிவிக்கும் கண்களை உடையோரிடம்; 
           காதற்பிரிவு மறைக்கப்படுவதை அறிவது, ஊரில் இருப்போர்க்கு அரிதானது அல்லவே!
(அது போல்...)
           தவளைபோல், குரலெழுப்பி சொல்லும் குணம் உடையோருடன்; கண்ணாமூச்சி 
           விளையாட்டை விளையாடுவது, அவருடன் இருப்போர்க்கு உகந்தது அல்லவே!

குறள் எண்: 1180 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1180}

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து

விழியப்பன் விளக்கம்: எம்போல், பறையடித்து அறிவிக்கும் கண்களை உடையோரிடம்; காதற்பிரிவு மறைக்கப்படுவதை அறிவது, ஊரில் இருப்போர்க்கு அரிதானது அல்லவே!
(அது போல்...)
தவளைபோல், குரலெழுப்பி சொல்லும் குணம் உடையோருடன்; கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடுவது, அவருடன் இருப்போர்க்கு உகந்தது அல்லவே!

புதன், அக்டோபர் 24, 2018

குறள் எண்: 1179 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1179}

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்

விழியப்பன் விளக்கம்: காதலர் வராதபோதும் தூங்காமல், வந்தபோதும் தூங்காமல்; மத்தளம் போல் இருவழியிலும், அரிய கொடுமையான துன்பத்தை அடைந்தன கண்கள்!
(அது போல்...)
சோம்பல் வராதபோதும் முனையாமல், வந்தபோதும் முனையாமல்; உலக்கை போல் இருபுறமும், அதிக ஆழமானச் சிதறலை அடைந்தன சிந்தனைகள்!

செவ்வாய், அக்டோபர் 23, 2018

குறள் எண்: 1178 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1178}

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்

விழியப்பன் விளக்கம்: மனதால் விரும்பாமல், சொல்லால் விரும்பியோர் இருக்கிறார்கள் தானே? ஆனாலும், அவர்களைக் காணாமல் அமைதி கொள்வதில்லை கண்கள்!
(அது போல்...)
செயலால் செய்யாமல், வாக்குறுதியால் செயதோர் இருக்கிறார்கள் தானே? ஆனாலும், அவர்களை ஆதரிக்காமல் திருப்தி அடைவதில்லை தொண்டர்கள்!

திங்கள், அக்டோபர் 22, 2018

குறள் எண்: 1177 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1177}

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்

விழியப்பன் விளக்கம்: விரும்பி மகிழ்ந்து, தொடர்ந்து அவரைக் கண்ட கண்களே! அவரைப் பிரிந்த துன்பத்தால், வருந்தி வருந்தி உம்முள் இருக்கும் கண்ணீர் அற்றுப் போக!
(அது போல்...)
விரும்பி ஏற்று, தொடர்ந்து ஆட்சியை அளித்த மக்களே! அவர்கள் செய்த கொடுங்கோன்மையால், வாழ்விழந்து வாழ்விழந்து உம்மிடம் இருக்கும் ஆதரவு அழிந்து போக!

ஞாயிறு, அக்டோபர் 21, 2018

குறள் எண்: 1176 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1176}

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது

விழியப்பன் விளக்கம்: என்ன விந்தை? காதல் எனும் காம நோயை, எமக்கு அளித்த கண்கள் தாமும்; நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி அழுகின்றனவே. இது மகிழ்ச்சியானதே!
(அது போல்...)
என்ன ஆச்சரியம்? இலவசம் எனும் ஊழல் விதையை, எம்முள் விதைத்த அரசியலார் தாமும்; ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கின்றனரே. இது முன்னேற்றமானதே!

சனி, அக்டோபர் 20, 2018

குறள் எண்: 1175 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1175}

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்

விழியப்பன் விளக்கம்: கடல் கொள்ளாத அளவுக்கு, காதல் எனும் காம நோயை அளித்த என் கண்கள்; தூங்க முடியாத அளவுக்கு, துன்பம் அடைந்து வருந்துகின்றன!
(அது போல்...)
வானம் கொள்ளாத அளவுக்கு, பணம் எனும் ஊழல் விதையைப் பெற்ற எம் மக்கள்; வாழ முடியாத அளவுக்கு, உரிமை இழந்து வாடுகின்றனர்!

வெள்ளி, அக்டோபர் 19, 2018

குறள் எண்: 1174 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1174}

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

விழியப்பன் விளக்கம்: குணப்படுத்த முடியாத மற்றும் அழிவில்லாத, காதல் எனும் நோயை எனக்கு அளித்துவிட்டு; கண்ணீரைப் பொழிய முடியாத, நீர் வற்றிய கண்களும் வருந்துகின்றன!
(அது போல்...)
விடுதலை இல்லாத மற்றும் முடிவில்லாத, ஆட்சி எனும் கொடுங்கோலே யாமே தேர்ந்தெடுத்து; விமர்சனம் செய்ய முடியாத, சுயம் இழந்த நாங்களும் வருந்துகிறோம்!

வியாழன், அக்டோபர் 18, 2018

குறள் எண்: 1173 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1173}

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து

விழியப்பன் விளக்கம்: அன்று, கண்டதும் காதல் கொண்ட கண்களே; இன்று, பிரிந்ததும் விரைவாய் அழுகின்றன! இம்முரண்பாடு, நகைக்கத் தக்க தன்மை உடையது!
(அது போல்...)
அன்று, கண்டதும் கும்பிட்டு ஓட்டுகேட்ட கைகளே; இன்று, வென்றதும் துப்பாக்கியால் கொல்கின்றன! இம்முரண்பாடு, அருவருக்கத் தக்க தன்மை கொண்டது!

புதன், அக்டோபர் 17, 2018

குறள் எண்: 1172 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1172}

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்

விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து உணராமல், அன்று கண்டதும் காதலுற்ற கண்களே! நடந்த பிரிவை உணராமல், இன்றும் உடனடியாய் துன்பத்தில் வருந்துவது ஏன்?
(அது போல்...)
தகுதியை மதிப்பிடாமல், அன்று கொடுத்ததும் வாக்களித்த மக்களே! நடந்த தவறை உணராமல், இன்றும் அவசரமாய் கோபத்தில் விமர்சிப்பது ஏன்?

செவ்வாய், அக்டோபர் 16, 2018

குறள் எண்: 1171 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1171}

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது

விழியப்பன் விளக்கம்: காதல் எனும் தணியாத நோயை, கண்கள் தாம் காட்டவே யாம் அறிந்தோம்! பிரிந்திருக்கும் காதலரைக் காட்டாமல், இப்போது கண்கள் தாமும் அழுவது எதனாலோ?
(அது போல்...)
குடும்பம் எனும் தீராத சிக்கலில், பெற்றோர் தாம் சொல்லவே நாம் நுழைந்தோம்! சேர்ந்திருக்கும் சிக்கலை அவிழ்க்காமல், இப்போது பெற்றோர் தாமும் சிக்கலாக்குவது எதனாலோ?

திங்கள், அக்டோபர் 15, 2018

அதிகாரம் 117: படர் மெலிந்து இரங்கல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்

1161.  மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
           ஊற்றுநீர் போல மிகும்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமநோயை மறைக்கவே செய்கிறோம்! 
           ஆனால், நீரை இறைக்கும் விவசாயிகளுக்கு ஊரும் ஊற்றுநீர் போல்; மறைக்கும் அளவு 
           மிகும்!
(அது போல்...)
           ஆசையால் பழகும் தீச்செயலை ஒழிக்கவே முயல்கிறோம்! ஆனால், தீயன அழிக்கும் 
           அரசியலாரை எதிர்க்கும் தீயசக்திகள் போல்; ஒழிக்கும் அளவு அதிகமாகும்!
      
1162.  கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
           உரைத்தலும் நாணுத் தரும்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமநோயை, மறைப்பதை செய்வதறியேன்! 
           நோயை உருவாக்கியவரிடம் சொல்வதும், நாணத்தைத் தரும் என்பதால்; அதையும் 
           செய்கலேன்!
(அது போல்...)
           ஆசையால் விளையும் தீயசிந்தனையை, மறுப்பதை செய்வதறியேன்! சிந்தனையை 
           செயலாக்க முயல்வதும், துன்பத்தைத் தரும் என்பதால்; அதையும் செய்கலேன்!
           
1163.  காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
           நோனா உடம்பின் அகத்து

           விழியப்பன் விளக்கம்: காதலர் பிரிந்த துயரத்தை, பொறுக்க முடியாத என் உடம்பின் 
           உள்ளே; காமமும் நாணமும், உயிரெனும் காவடித் தண்டின் இருபுறமாய் தொங்குகின்றன!
(அது போல்...)
           வேலை பறிபோன இழப்பை, சமாளிக்க முடியாத நம் செயலின் பின்னே; குடும்பமும் பயமும், 
           சிந்தனையெனும் தொடர் வண்டியின் இருபுறமாய் இயங்குகின்றன!

1164.  காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
           ஏமப் புணைமன்னும் இல்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமம் எனும் கடல் என்றும் இருக்கிறதே?! 
           ஆனால், அதை நீந்திக் கடக்கும் பாதுகாப்பான தோணிதான் என்றுமே இல்லை!
(அது போல்...)
           ஊழலால் விளையும் அழிவு எனும் எரிமலை எங்கும் இருக்கிறதே?! ஆனால், அதை அடக்கி 
           ஆளும் முறையான வழிதான் எங்குமே இல்லை!

1165.  துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
           நட்பினுள் ஆற்று பவர்

           விழியப்பன் விளக்கம்: காதல் எனும் நட்பில் உள்ளபோதே, பிரிவு எனும் துயர் அளிக்கும் 
           காதலர்; பகைமை வளர்ந்திடின், என்னவாக ஆவாரோ?!
 (அது போல்...)
           தேசம் எனும் பிணைப்பில் உள்ளபோதே, பிரிவினை எனும் கொடுங்கோல் புரியும் 
           அரசியலார்; தேசம் பிரிந்திடின், என்னவெல்லாம் செய்வரோ?!

1166.  இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
           துன்பம் அதனிற் பெரிது

           விழியப்பன் விளக்கம்: காதலில் விளையும் காமம் தரும் மகிழ்ச்சி, கடலளவு பெரிது! 
           ஆனால், பிரிவு நேரும்போது; அதே காம உணர்வு தரும் துன்பம், கடலை விட மிகப் பெரிது!
(அது போல்...)
           புரிதலில் விளையும் சிந்தனை தரும் முழுமை, வானளவு பரந்தது! ஆனால், குழப்பம் 
           நேரும்போது; அதே சிந்தனைச் சிதறல் தரும் குறை, வானை விட மிகப் பரந்தது!

1167.  காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
           யாமத்தும் யானே உளேன்

           விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமம் எனும் பெருங்கடலில், தொடர்ந்து 
           நீந்தியும் கரையை அடையாமல் தவிக்கிறேன்! நள்ளிரவிலும், நான் மட்டுமே தனித்து 
           இருக்கிறேன்!
(அது போல்...)
           தேடலால் விளையும் பணம் எனும் பேரரங்கில், தொடர்ந்து ஓடியும் முடிவே இல்லாமல் 
           ஓடுகிறேன்! எஞ்ஞான்றும், நான் மட்டுமே தனியே தேடுகிறேன்!

1168.  மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
           என்னல்லது இல்லை துணை

           விழியப்பன் விளக்கம்: புவியிலுள்ள எல்லா உயிர்களையும், உறங்க வைத்து அமைதி 
           அளித்த இரவு; காதற்பிரிவால் தனித்திருக்கும் என்னைத் தவிர்த்து, வேறு துணையின்றி 
           இருக்கிறது!
(அது போல்...)
           சமூகத்திலுள்ள எல்லா மதங்களையும், இணைய வைத்து ஒற்றுமை அளித்த மனிதம்; 
           மதப்பிரிவால் பிறந்திருக்கும் பிரிவினைத் தவிர்த்து, வேறு வழியின்றி இருக்கிறது!

1169.  கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
           நெடிய கழியும் இரா

           விழியப்பன் விளக்கம்: விடியலை நோக்கி விழித்தே இருந்ததால், நீண்டதாய் கழியும் 
           இரவுடைய இந்நாள்; கொடியரான வாழ்க்கைத்துணை பிரிந்த கொடுமையை விட, 
           கொடுமையாகும்!
(அது போல்...)
           மாற்றத்தை நோக்கி மெளனித்தே இருந்ததால், துன்பமாய் தொடரும் இயல்புடைய 
           இவ்வாழ்க்கை; கொடுங்கோலான அரசாள்வோர் செலுத்தும் கொடுங்கோன்மையை விட, 
           கொடுங்கோலாகும்!

1170.  உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
           நீந்தல மன்னோஎன் கண்

           விழியப்பன் விளக்கம்: பிரிந்திருக்கும் காதலரைச் சேர, மனதைப் போல் ஊடுருவிச் செல்ல 
           முடியுமெனில்; இப்படி கண்ணீர் வெள்ளத்தில், என் கண்கள் நீந்தமாட்டாது தானே?
(அது போல்...)
           நாட்டிலிருக்கும் குடும்பத்தைக் காண, மின்னலைப் போல் விரைந்து செல்ல முடியுமெனில்; 
           இப்படி சிந்தனை வலையில், என் செயல்கள் சிறைபடாது தானே?