வெள்ளி, அக்டோபர் 06, 2017

குறள் எண்: 0796 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 080 - நட்பு ஆராய்தல்; குறள் எண்: 0796}

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

விழியப்பன் விளக்கம்: நமக்கு நிகழும் கேட்டிலும், ஓர் நன்மையுண்டு! அக்கேடு, நட்பில் இருப்போரை; துல்லியமாய் அளவிடும் அளவுகோல் ஆகும்!
(அது போல்...)
ஆட்சியில் நிகழும் பதவிப்போரிலும், ஓர் வெற்றியுண்டு! அப்போர், அரசியல் தீயசக்திகளை, முழுமையாய் அழிக்கும் களைக்கொல்லி ஆகும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக