திங்கள், ஜூலை 31, 2017

குறள் எண்: 0729 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0729}

கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்

விழியப்பன் விளக்கம்: பலவற்றைக் கற்றறிந்து இருப்பினும், நல்லறிவு கொண்டோர் அவைக்கு அஞ்சுவோர்; கல்வியறிவு இல்லாதவரை விட, அடுத்த நிலையிலேயே வைக்கப்படுவர்.
(அது போல்...)
பல்வகை உறவுகள் இருப்பினும், ஈன்றெடுத்தப் பெற்றோரை விலக்கி வைத்திருப்போர்; உறவேதும் இல்லாதவரை விட, அதிகமானத் துன்பத்தையே சந்திப்பர்.

ஞாயிறு, ஜூலை 30, 2017

குறள் எண்: 0728 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0728}

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்செல்லா தார்

விழியப்பன் விளக்கம்: நல்லறிவு கொண்ட அவையினர் மத்தியில், அச்சமின்றி நன்முறையில் எடுத்துரைக்க முடியாதோர்; பல்வகைப் பாடங்களைக் கற்றிருந்தும், பயனற்றவரே ஆவர்.
(அது போல்...)
முழுப்பலம் உடைய ஆட்சியினர் முன், தயக்கமின்றிக் குறைகளை இடித்துரைக்க இயலாதது; பல்வகை வசதிகளைக் கொண்டிருக்கும், பிணவறையைப் போன்றதாகும்.

சனி, ஜூலை 29, 2017

குறள் எண்: 0727 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0727}


பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்

விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்த அவையினர் முன், பேசுவதற்கு அஞ்சுவோர் கற்ற நூல்; அச்சுறுத்தும் பகைவர்கள் முன், கோழையின் கையிலிருக்கும் வாளைப் போன்றதாகும்.
(அது போல்...)
தேர்ந்தெடுத்த மக்கள் முன், தோன்றுவதற்கு பயப்படுவோர் பெற்ற வாக்குகள்; கொடிய விலங்குகள் முன், பயிற்சியற்றோர் கொண்டிருக்கும் கூண்டைப் போன்றதாகும்.

வெள்ளி, ஜூலை 28, 2017

குறள் எண்: 0726 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0726}

வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு

விழியப்பன் விளக்கம்: வலிமையான வீரர் அல்லாதவர்க்கு, வாளுடன் என்ன தொடர்பு? நுண்ணறிவு உடையோர் அவையைக் கண்டு அஞ்சுவோர்க்கு, நூலுடன் என்ன தொடர்பு?
(அது போல்...)
இயல்பான அன்பு இல்லாதவர்க்கு, உறவுடன் என்ன தொடர்பு? சுயவொழுக்கம் நிறைந்த கட்சியை விமர்சனம் செய்வோர்க்கு, பொதுநலத்துடன் என்ன தொடர்பு?

வியாழன், ஜூலை 27, 2017

குறள் எண்: 0725 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0725}

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு

விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் நிறைந்த அவையில், அவையச்சம் ஏதுமின்றி பதில் சொல்லும் பொருட்டு; வாழ்வியல் நெறிகளை, தேவையான அளவயறிந்து கற்கவேண்டும்.
(அது போல்...)
ஒழுக்கமானோர் நிறைந்த வம்சத்தில், குறையொழுக்கம் ஏதுமின்றி வாழ்ந்து காட்டும் பொருட்டு; முன்னோரின் வரலாற்றை, அவசியமான அளவுக்கு அறியவேண்டும்.

புதன், ஜூலை 26, 2017

குறள் எண்: 0724 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0724}

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்

விழியப்பன் விளக்கம்: கற்றறிந்தோர் அவையில் நாம் கற்றதை, அச்சமின்றி அவர்கள் ஒப்பப் பகிர்ந்து; நம்மை விட அதிகம் கற்றவர்களிடம் இருந்து, சிறந்ததைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(அது போல்...)
வாழ்ந்துணர்ந்த முதியோரிடம் நம் வாழ்க்கையை, தயக்கமின்றி அவர்கள் வாழ்த்த உரைத்து; நம்மை விட சிறந்து வாழ்ந்தவர்களிடம் இருந்து, அரிதானதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

செவ்வாய், ஜூலை 25, 2017

குறள் எண்: 0723 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0723}

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்

விழியப்பன் விளக்கம்: பகைவர்கள் சூழ்ந்த களத்தில், அச்சமின்றி வீரமரணம் எய்துவோரைக் காண்பது எளிது! சான்றோர்கள் நிறைந்த அவையில், அச்சமின்றி சொற்பொழிவு ஆற்றுவோரைக் காண்பது அரிது!
(அது போல்...)
சிக்கல்கள் நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரை எளிதில் காணலாம்! மகிழ்ச்சி நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரைக் காண்பது அரிதானது!

திங்கள், ஜூலை 24, 2017

குறள் எண்: 0722 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0722}

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்

விழியப்பன் விளக்கம்: அவையச்சம் இன்றி கற்றறிந்தோர் அவையில், தாம் கற்றவற்றை அவையோர் ஒப்ப சொல்லும் திறமுடையோர்; கற்றவர்களுள் "முழுமையாய் கற்றவர்" எனப்படுவர்.
(அது போல்...)
குறையேதும் இன்றி வம்சத்தினர் முன்னிலையில், தம் வாழ்வியலை வம்சத்தினர் போற்ற வாழும் இயல்புடையோர்; வாழ்ந்தவர்களில் "சிறப்பாய் வாழ்ந்தவர்" எனப்படுவர்.

ஞாயிறு, ஜூலை 23, 2017

குறள் எண்: 0721 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவை அஞ்சாமை; குறள் எண்: 0721}

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

விழியப்பன் விளக்கம்: சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய அறிவுடையோர்; வல்லவர் அவை என்பதறிந்து அஞ்சி, வாய் தவறியும் பிழையாய் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்; பணக்கார வம்சம் என்ற செருக்கில், தன்னிலை மறந்தும் இச்சையை நாடமாட்டார்கள்.

சனி, ஜூலை 22, 2017

அதிகாரம் 072: அவையறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்

0711.  அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
           தொகையறிந்த தூய்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: சொல்லும் சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய
           அறிவுடையோர்; கூடியிருக்கும் அவையின் தன்மையை, ஆராய்ந்து பேச வேண்டும்.
(அது போல்...)
           கொள்ளும் உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்;
           சார்ந்திருக்கும் கலாச்சாரத்தின் அடிப்படையை, உணர்ந்து உறவாட வேண்டும்.
      
0712.  இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
           நடைதெரிந்த நன்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: சொற்களின் ஆழ்ந்தப் பொருளை அறிந்த, அறத் தன்மை
           கொண்டோர்; அவையின் மாண்பை அறிந்து, சொற்களை ஆராய்ந்து உள்வாங்கி
           பேசவேண்டும்.
(அது போல்...)
           உறவுகளின் அடிப்படைத் தேவையை உணர்ந்த, இல்லற இலக்கணம் பழகியோர்;
           சமுதாயத்தின் சிறப்பை உணர்ந்து, உறவுகளைத் தெளிந்து ஒருங்கிணைந்து
           வாழவேண்டும்.
           
0713.  அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
           வகையறியார் வல்லதூஉம் இல்

           விழியப்பன் விளக்கம்: அவையின் மாண்பை அறியாமல், உரை ஆற்ற முற்படுவோர்;
           சொற்களின் தரத்தை அறியமாட்டார்கள். அவர்களுக்கு, சொல் வன்மையும்
           இருப்பதில்லை!
(அது போல்...)
           மக்களின் தேவையை உணராமல், அரசியல் செய்ய முனைவோர்; ஆட்சியின் வலிமையை
           உணரமாட்டார்கள். அவர்களுக்கு, ஆட்சித் திறனும் இருப்பதில்லை!

0714.  ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
           வான்சுதை வண்ணங் கொளல்

           விழியப்பன் விளக்கம்: அவையறிதல் என்பது - சான்றோர் முன், சான்றோராய் இருத்தலும்;
           கற்போர் முன், "சேரும் நிறத்திற்கேற்ப நிறம்மாறும்" வெண் சுண்ணாம்பாய் இருத்தலும் -
           ஆகும்.
(அது போல்...)
           அரசியல் திறமென்பது - அதிகாரத்திற்கு முன், அதிகாரத்தை நிலைநாட்டுவதும்;
           சாமான்யர்கள் முன், "வார்க்கும் அச்சுக்கேற்ப உருமாறும்" உலோகக் குழம்பாய் மாறுதலும்
           - ஆகும்.

0715.  நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
           முந்து கிளவாச் செறிவு

           விழியப்பன் விளக்கம்: அவையறிதல் உணர்ந்து, அறிவு முதிர்ந்த சான்றோர்களை
           முந்திக்கொண்டு பேசாத அடக்கம்; நல்லவை என்பவை எல்லாவற்றிலும், தலையாய
           நல்லதாகும்.
(அது போல்...)
           சமுதாயக்கடன் அறிந்து, அனுபவம் வாய்ந்த மூதாதையரை ஒதுக்கிவைத்து வாழாத
           ஒழுக்கம்; செல்வம் என்பவை அனைத்திலும், சிறந்த செல்வமாகும்.

0716.  ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
           ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

           விழியப்பன் விளக்கம்: பல்வகை துறைகளில் கல்வி அறிவு உடையோர் முன், செய்யும்
           சொற்பிழை; வாழ்வியல் நெறிகளில் இருந்து தடம்புரண்டு வாழும் , ஒழுக்கமின்மைக்கு
           ஒப்பாகும்.
(அது போல்...)
           பல்வகை உறவுகளில் அனுபவ அறிவு கொண்ட வம்சத்தில், வளர்க்கும் உறவுப்பகை;
           சமூகக் கடமையில் இருந்து விலகி நிற்கும், பொறுப்பின்மைக்கு நிகராகும்.

0717.  கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
           சொல்தெரிதல் வல்லார் அகத்து

           விழியப்பன் விளக்கம்: சொற்களைப் பிழையின்றிப் பேசும், சொல்வன்மை நிறைந்த
           அவையினர் முன்  பேசும்போது; பல்வகை நூல்களைக் கற்றறிந்தோரின், கல்வித்திறம்
           எளிதில் விளங்கும்.
(அது போல்...)
           உணர்வுகளை மறைவின்றி உணர்த்தும், அறத்தன்மை மிகுந்த மக்களுடன் உறவு
           கொள்ளும்போது; பல்வேறு அறங்களை உணர்ந்தோரின், சகிப்புத்தன்மை எளிதில்
           விளங்கும்.

0718.  உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
           பாத்தியுள் நீர்சொரிந் தற்று

           விழியப்பன் விளக்கம்: பிறரின் பேச்சை உணர்ந்தறியும் திறமுடைய, சான்றோர் அவையில்
           பேசுவது; வளரும் நிலையிலுள்ள பயிர்கள் நிறைந்த பகுதியில், நீரைப் பாய்ச்சுவதற்கு
           ஒப்பாகும்.
(அது போல்...)
           பிறரின் உணர்வை மதிக்கும் குணமுடைய, உறவுகளின் பிணைப்பில் இருப்பது; வளரும்
           பருவமுள்ள இளைஞர்கள் நிறைந்த ஊரில், வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கு நிகராகும்.

0719.  புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
           நன்கு செலச்சொல்லு வார்

           விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த நல்லோர் அவையில், பிறரொப்ப நல்லவற்றை
           சொல்லும் திறமுடையோர்; அறமற்றோர் நிறைந்த அவையில், மறந்தும் பேசாமல் இருப்பது
           சிறந்தது.
(அது போல்...)
           கடமையுணர்ந்த தலைவர்கள் அணியில், மக்களொப்பச் சேவைகளைச் செய்யும்
           உறுப்பினர்கள்; ஊழலாளர்கள் நிறைந்த அணியில், தவறியும் சேராமல் இருப்பது
           உயர்ந்தது.

0720.  அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
           அல்லார்முன் கோட்டி கொளல்

           விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த பேச்சாளர்கள், தமக்கு நிகரற்றோர் நிறைந்த
           அவையில் பேசுதல்; தூய்மையில்லாத முற்றத்தில், சிந்திய அமிழ்தின் தன்மையைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           சேவையறிந்த தலைவர்கள், தமக்கு ஈடற்றோர் சூழ்ந்த அணியில் இணைதல்; அறமில்லாத
           மனதில், விதைத்த சிந்தனையின் தன்மைக்கு ஒப்பாகும்.

குறள் எண்: 0720 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0720}

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்

விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த பேச்சாளர்கள், தமக்கு நிகரற்றோர் நிறைந்த அவையில் பேசுதல்; தூய்மையில்லாத முற்றத்தில், சிந்திய அமிழ்தின் தன்மையைப் போன்றதாகும்.
(அது போல்...)
சேவையறிந்த தலைவர்கள், தமக்கு ஈடற்றோர் சூழ்ந்த அணியில் இணைதல்; அறமில்லாத மனதில், விதைத்த சிந்தனையின் தன்மைக்கு ஒப்பாகும்.

வெள்ளி, ஜூலை 21, 2017

குறள் எண்: 0719 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0719}

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்

விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த நல்லோர் அவையில், பிறரொப்ப நல்லவற்றை சொல்லும் திறமுடையோர்; அறமற்றோர் நிறைந்த அவையில், மறந்தும் பேசாமல் இருப்பது சிறந்தது.
(அது போல்...)
கடமையுணர்ந்த தலைவர்கள் அணியில், மக்களொப்பச் சேவைகளைச் செய்யும் உறுப்பினர்கள்; ஊழலாளர்கள் நிறைந்த அணியில், தவறியும் சேராமல் இருப்பது உயர்ந்தது.

வியாழன், ஜூலை 20, 2017

குறள் எண்: 0718 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0718}

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று

விழியப்பன் விளக்கம்: பிறரின் பேச்சை உணர்ந்தறியும் திறமுடைய, சான்றோர் அவையில் பேசுவது; வளரும் நிலையிலுள்ள பயிர்கள் நிறைந்த பகுதியில், நீரைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.
(அது போல்...)
பிறரின் உணர்வை மதிக்கும் குணமுடைய, உறவுகளின் பிணைப்பில் இருப்பது; வளரும் பருவமுள்ள இளைஞர்கள் நிறைந்த ஊரில், வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கு நிகராகும்.

புதன், ஜூலை 19, 2017

குறள் எண்: 0717 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0717}

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து

விழியப்பன் விளக்கம்: சொற்களைப் பிழையின்றிப் பேசும், சொல்வன்மை நிறைந்த அவையினர் முன்  பேசும்போது; பல்வகை நூல்களைக் கற்றறிந்தோரின், கல்வித்திறம் எளிதில் விளங்கும்.
(அது போல்...)
உணர்வுகளை மறைவின்றி உணர்த்தும், அறத்தன்மை மிகுந்த மக்களுடன் உறவு கொள்ளும்போது; பல்வேறு அறங்களை உணர்ந்தோரின், சகிப்புத்தன்மை எளிதில் விளங்கும்.

செவ்வாய், ஜூலை 18, 2017

குறள் எண்: 0716 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0716}

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

விழியப்பன் விளக்கம்: பல்வகை துறைகளில் கல்வி அறிவு உடையோர் முன், செய்யும் சொற்பிழை; வாழ்வியல் நெறிகளில் இருந்து தடம்புரண்டு வாழும் , ஒழுக்கமின்மைக்கு ஒப்பாகும்.
(அது போல்...)
பல்வகை உறவுகளில் அனுபவ அறிவு கொண்ட வம்சத்தில், வளர்க்கும் உறவுப்பகை; சமூகக் கடமையில் இருந்து விலகி நிற்கும், பொறுப்பின்மைக்கு நிகராகும்.

திங்கள், ஜூலை 17, 2017

குறள் எண்: 0715 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0715}

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

விழியப்பன் விளக்கம்: அவையறிதல் உணர்ந்து, அறிவு முதிர்ந்த சான்றோர்களை முந்திக்கொண்டு பேசாத அடக்கம்; நல்லவை என்பவை எல்லாவற்றிலும், தலையாய நல்லதாகும்.
(அது போல்...)
சமுதாயக்கடன் அறிந்து, அனுபவம் வாய்ந்த மூதாதையரை ஒதுக்கிவைத்து வாழாத ஒழுக்கம்; செல்வம் என்பவை அனைத்திலும், சிறந்த செல்வமாகும்.

ஞாயிறு, ஜூலை 16, 2017

குறள் எண்: 0714 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0714}

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்

விழியப்பன் விளக்கம்: அவையறிதல் என்பது - சான்றோர் முன், சான்றோராய் இருத்தலும்; கற்போர் முன், "சேரும் நிறத்திற்கேற்ப நிறம்மாறும்" வெண் சுண்ணாம்பாய் இருத்தலும் - ஆகும்.
(அது போல்...)
அரசியல் திறமென்பது - அதிகாரத்திற்கு முன், அதிகாரத்தை நிலைநாட்டுவதும்; சாமான்யர்கள் முன், "வார்க்கும் அச்சுக்கேற்ப உருமாறும்" உலோகக் குழம்பாய் மாறுதலும் - ஆகும்.

சனி, ஜூலை 15, 2017

குறள் எண்: 0713 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0713}

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

விழியப்பன் விளக்கம்: அவையின் மாண்பை அறியாமல், உரை ஆற்ற முற்படுவோர்; சொற்களின் தரத்தை அறியமாட்டார்கள். அவர்களுக்கு, சொல் வன்மையும் இருப்பதில்லை!
(அது போல்...)
மக்களின் தேவையை உணராமல், அரசியல் செய்ய முனைவோர்; ஆட்சியின் வலிமையை உணரமாட்டார்கள். அவர்களுக்கு, ஆட்சித் திறனும் இருப்பதில்லை!

வெள்ளி, ஜூலை 14, 2017

குறள் எண்: 0712 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0712}

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்

விழியப்பன் விளக்கம்: சொற்களின் ஆழ்ந்தப் பொருளை அறிந்த, அறத் தன்மை கொண்டோர்; அவையின் மாண்பை அறிந்து, சொற்களை ஆராய்ந்து உள்வாங்கி பேசவேண்டும்.
(அது போல்...)
உறவுகளின் அடிப்படைத் தேவையை உணர்ந்த, இல்லற இலக்கணம் பழகியோர்; சமுதாயத்தின் சிறப்பை உணர்ந்து, உறவுகளைத் தெளிந்து ஒருங்கிணைந்து வாழவேண்டும்.

வியாழன், ஜூலை 13, 2017

குறள் எண்: 0711 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவை அறிதல்; குறள் எண்: 0711}


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

விழியப்பன் விளக்கம்: சொல்லும் சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய அறிவுடையோர்; கூடியிருக்கும் அவையின் தன்மையை, ஆராய்ந்து பேச வேண்டும்.
(அது போல்...)
கொள்ளும் உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்; சார்ந்திருக்கும் கலாச்சாரத்தின் அடிப்படையை, உணர்ந்து உறவாட வேண்டும்.