சனி, ஜூலை 29, 2017

குறள் எண்: 0727 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0727}

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்

விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்த அவையினர் முன், பேசுவதற்கு அஞ்சுவோர் கற்ற நூல்; அச்சுறுத்தும் பகைவர்கள் முன், கோழையின் கையிலிருக்கும் வாளைப் போன்றதாகும்.
(அது போல்...)
தேர்ந்தெடுத்த மக்கள் முன், தோன்றுவதற்கு பயப்படுவோர் பெற்ற வாக்குகள்; கொடிய விலங்குகள் முன், பயிற்சியற்றோர் கொண்டிருக்கும் கூண்டைப் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக