வியாழன், ஜூலை 20, 2017

குறள் எண்: 0718 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0718}

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று

விழியப்பன் விளக்கம்: பிறரின் பேச்சை உணர்ந்தறியும் திறமுடைய, சான்றோர் அவையில் பேசுவது; வளரும் நிலையிலுள்ள பயிர்கள் நிறைந்த பகுதியில், நீரைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.
(அது போல்...)
பிறரின் உணர்வை மதிக்கும் குணமுடைய, உறவுகளின் பிணைப்பில் இருப்பது; வளரும் பருவமுள்ள இளைஞர்கள் நிறைந்த ஊரில், வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கு நிகராகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக