வியாழன், ஜூலை 13, 2017

குறள் எண்: 0711 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0711}

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

விழியப்பன் விளக்கம்: சொல்லும் சொற்களின் வினைப்பொருளை அறிந்த, குழப்பமற்ற தூய அறிவுடையோர்; கூடியிருக்கும் அவையின் தன்மையை, ஆராய்ந்து பேச வேண்டும்.
(அது போல்...)
கொள்ளும் உறவுகளின் வரையறையை உணர்ந்த, கள்ளமற்ற இனிய இல்லறத்தார்; சார்ந்திருக்கும் கலாச்சாரத்தின் அடிப்படையை, உணர்ந்து உறவாட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக