செவ்வாய், ஜூலை 25, 2017

குறள் எண்: 0723 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0723}

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்

விழியப்பன் விளக்கம்: பகைவர்கள் சூழ்ந்த களத்தில், அச்சமின்றி வீரமரணம் எய்துவோரைக் காண்பது எளிது! சான்றோர்கள் நிறைந்த அவையில், அச்சமின்றி சொற்பொழிவு ஆற்றுவோரைக் காண்பது அரிது!
(அது போல்...)
சிக்கல்கள் நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரை எளிதில் காணலாம்! மகிழ்ச்சி நிறைந்த உறவில், குற்றவுணர்வின்றி துரோகம் செய்வோரைக் காண்பது அரிதானது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக