சனி, ஜூலை 15, 2017

குறள் எண்: 0713 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0713}

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

விழியப்பன் விளக்கம்: அவையின் மாண்பை அறியாமல், உரை ஆற்ற முற்படுவோர்; சொற்களின் தரத்தை அறியமாட்டார்கள். அவர்களுக்கு, சொல் வன்மையும் இருப்பதில்லை!
(அது போல்...)
மக்களின் தேவையை உணராமல், அரசியல் செய்ய முனைவோர்; ஆட்சியின் வலிமையை உணரமாட்டார்கள். அவர்களுக்கு, ஆட்சித் திறனும் இருப்பதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக