ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

ஐஃபோன்5-உம்; கவரும்...



          எனக்கு தெரிந்த வரையில், ஐஃபோன்5 உபயோகிப்பவர்களுக்கு - ஒரு குழப்பமும்/அசெளகர்யமும் இருக்கிறது! எனக்கு அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆம்! ஐஃபோன்5-ஐ "கவருடன்" உபயோகிப்பதா? வேண்டாமா?? என்பது குழப்பம்; கவருடன் உபயோகிப்பது ஒரு அசெளகர்யம்! ஐஃபோன்5-ஐ எந்த-கவரும் இல்லாமல் தொடுவதில் ஒரு பரவசம் கிடைக்கிறது. அந்த "உலோக"உடல் கொண்ட போனை அப்படியே தொடும்போது "ஒரு ஜில்லிப்பு" வரும் பாருங்கள்; அது பெருத்த-சந்தோசம்! ஆனால், எந்த-கவரும் இல்லாமல் பயன்படுத்தும் போது, சிறிதாய் எங்கேனும் மோதிவிட்டால் - ஒரு "மெல்லிய டொக்கு" விழுந்துவிடும். என்னதான், கீழே போட்டால் உடைவதில்லை; மேலே, ஒரு வாகனம் ஏறினாலும் நசுங்குவதில்லை என்பது உண்மையானாலும், எதிலேனும் மோதும்போது ஏற்படும் - அந்த "மெல்லிய டொக்கு" தவிர்க்கமுடியாதது! எனக்கு, இன்னமும் - கவரை உபயோகிக்கப்படுத்துவதா? வேண்டாமா?? என்ற குழப்பம் நீங்கவில்லை.

       முதலில், வாங்கிய விலை-குறைந்த "கவர்" பொத்தானை அழுத்துவதில் சிரமம் கொடுக்க, "உமிழ்ந்த பகுதியினை" அறுத்தெறிந்துவிட்டு முயற்சித்தபோது - பொத்தானை தொடுவதே சிரமமாய் இருந்தது; அதை - தூக்கி எறிந்துவிட்டேன். பின்னர் கவர்-இல்லாமல் சிறிது நாட்கள் உபயோகித்தபோது; முதல் "டொக்கு" விழுந்தது. சரியென்று, விலை-உயர்ந்த கவர் ஒன்று வாங்கினேன்; அது மிக அருமையாய் இருந்தது! ஆனால், போனின் எடை - ஒன்றரை மடங்கிற்கும் மேல் கூடியதாய் உணர்ந்தேன். அதனால், அடிக்கடி உபயோகிக்காமல் இருந்தபோது இரண்டாம் "டொக்கு" விழுந்தது. 1 மாதத்திற்கு முன் "இடைப்பட்ட விலையில்" ஒரு கவரை வாங்கி 2 நாட்கள் முன்-வரை உபயோகித்தேன். அன்றிரவு மீண்டும் "போனின் எடை கூடியது போல் உணர"; அடுத்த நாள் காலை, அடிப்பகத்தில் இருந்த "ப்லாஸ்டிக்"கை பிரித்துவிட்டு "சைடில்"கவராவது போல் உபயோகிக்கலாம் என்று பார்த்தால்; அது "லூசாக"இருக்கிறது (வலது புகைப்படம்!). இப்போது அதையும் தூக்கிப்போட வேண்டும்; ம்ம்ம்...

பார்ப்போம்! இந்த முறை "டொக்கு" எப்படி ஏற்படுகிறதென்று!!!      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக