ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

இரத்த தானம்...



         கடந்த வியாழன் அன்று இங்கே அபுதாபியில் "இரத்த தானம்" செய்ய சென்றிருந்தேன். அன்று இராகவேந்திரர்-விரதம் இருக்கும் வழக்கம்; தானம்-செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் விரதத்தை முறித்துவிட்டு சென்றிருந்தேன். படிவங்கள் பூர்த்தி செய்து, இரத்த-மாதிரி, இரத்த அழுத்தம் எல்லாம் முடிந்தபின் - இரத்தம் எடுக்கவிருந்த நிலையில், என்னுடைய இரத்தத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள். காரணம், நான் 1980 முதல் இப்போது வரை உள்ள காலகட்டத்தில் - 5 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பா-கண்டத்தில் வசித்திருந்தால் "இரத்த-தானம்" செய்யமுடியாதாம்! அங்கிருக்கும் ஓர்-நோய் தான் அதற்கு காரணமாம்; அதை சரியாய் இரத்தத்தில்-கண்டறியும் செயல்முறைகள் இன்னமும் நடைமுறையில் வரவில்லையாம்! எனவே, முன்னெச்சரிக்கை-நடவடிக்கையாய் இரத்தம் எடுப்பதில்லையாம். நான், அங்கே 8 ஆண்டுகள் வசித்து ஓராண்டுக்கு முன்னர் தான் அங்கிருந்து இங்கு-வந்தேன்.

      "போர்ச்சுகல்"லில் இருந்தபோது எத்தனையோ முறை இரத்த-தானம் செய்யசென்று எனக்கு   அவர்களின் மொழி தெரியாது என்பதால் எடுக்க மறுத்துவிட்டனர்! காரணம்; மருத்துவர் "போர்ச்சுகீசு" மொழியில் கேட்கும் கேள்விகளை நான் புரிந்துகொண்ட அதற்கு சரியாய் பதில் சொல்லவேண்டுமாம்! ஒவ்வொரு முறையும் மிக-விரக்தியாய் இருக்கும்; ஆத்திரத்தில் இனிமேல் அவர்களே கேட்டாலும், கொடுக்கமாட்டேன் என்பேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் சென்று முயற்சிப்பேன். ஒருவாறாய், அங்கிருந்து கிளம்புவதற்கு ஓராண்டுக்கு முன் "அந்த மொழியில் சரியாய்" பேசி - இரத்ததானம் செய்தேன். அடுத்த முறை (இந்தியா சென்று-திரும்பிய 2 மாதத்திற்குள்), இந்தியாவில் "பன்றி-காய்ச்சல்" அதிகமாய் பரவிய-நேரம் என்பதால் எடுத்துக்கொள்ள முடியாது என்றார்கள்; மீண்டும் கோபம் தலைக்கேறியது. ஆனால், இந்த முறை எனக்கு எந்த கோபமும் வரவில்லை; அவர்கள் தரப்பு நியாயம் புரிந்தது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கலாம் என்று வந்துவிட்டேன்...

ஏனெனில், இரத்ததானம் செய்யவேண்டும் எண்ணம்தான் முக்கியம்!!!

பின்குறிப்பு: 2004-ஆம் ஆண்டு வரை போர்ச்சுக்கல் செல்லும் முன் சில ஆண்டுகள் அவ்வப்போது இரத்ததானம் செய்வது வழக்கம். அந்த எண்ணம் இன்னமும் இருக்கிறது; ஆயினும், பல காரணங்களுக்காய் என்னால் அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. பார்ப்போம்! மீண்டும் எப்போது முன்போல் அவ்வப்போது தானம் செய்ய இயலுகிறதென்று! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக