ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

என்மகளின் உறக்கம்...



          மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது போல் என்மகள் உறங்குவது எப்போதாவது நடக்கும் விசயம்; அது ஓர் அபூர்வமான/அழகான விசயம்! முதன்முதலில் அவள் அவ்வாறு உறங்கியது அவள் பிறந்து 1-வாரம் ஆனபோது! அந்த நிகழ்வை படம்பிடிக்க இயலாமல் போய்விட்டது; ஆனால், அதேபோல் அவளின் 23-ஆம் நாள்-வயதில் உறங்கியபோது - படம்பிடித்துவிட்டேன் (அதுதான் இடது படத்தில் இருப்பது). சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது அவள் அவ்வாறு உறங்குவதை காண முடிந்தது! உடனே, எடுத்த புகைப்படம்தான் வலது பக்கம் உள்ளது! ஏறக்குறைய, ஒரேவிதமான உறக்கநிலை; ஆனால், சுமார் 4.5 ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. குழந்தைகள் உறங்கும்போது புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்பார்கள்; ஆனால், நான் என்மகள் உறங்கும்போது நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். உண்மையில், அவள் உறங்கும்போதுதான் அதிக-அழகுடன்/ அதிக உடல்-மொழிகளுடன் இருப்பதாய் எனக்கு படுகிறது. 

        இப்படியாய், புகைப்படங்கள் எடுத்து சேகரிப்பது என்பது ஓர் சுவராஸ்யமான அனுபவம் என்பது என் எண்ணம்; குறிப்பாய், வளர்ந்தபின் என் மகளுக்கு. இதுமாதிரி, எவரேனும் எந்த உறவுகளுக்காகவும் செய்யலாம். என்னுடைய மகளின் 4-வயது பிறந்தநாளின் போது அவளின் ஆசிரியையை அழைத்து அதை புகைப்படமாய் ஆக்கியதை முன்பே கூறி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, என் மகள் அந்த நிகழ்வை சென்றமுறை இந்தியா சென்றபோதே மிக-மகிழ்வாய் இப்படி கூறினாள்: அப்பா "என் பர்த்-டே க்கு எங்க மிஸ் வந்திருந்தாங்கப்பா! என்னை "டைட்டா" கட்டிப்பிடிச்சாங்கப்பா!!" என்று என்னிடமே கூறினாள். "நான் தான் அவர்களை அழைத்து வந்தேன்; அதை புகைப்படமாகவும் பிடித்து வைத்தேன்" என்று என்மகளிடம் கூறவில்லை; அது அவசியமும் இல்லை! அவளுக்கு தெரிந்திருக்கும்; இல்லையெனில், பின்னாளில் தெரியப்போகிறது. அவளின் சந்தோசம்தான் முக்கியம்; அதற்காகத்தான் அதை செய்தேன் என்பதையும் முன்பே கூறியிருந்தேன். என்னால் இயன்ற அளவிற்கு...

இதுபோன்ற நிகழ்வுகளை ஆதாரங்களாய் என்மகளுக்கு கொடுப்பதே என் எண்ணம்!!!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக