16.02.2014 தேதியில் வெளியான "நீயா நானா" நிகழ்ச்சியை பலரும் பார்த்திருக்கக்கூடும்! குழந்தை வளர்ப்பில் கணவன்/மனைவியின் பார்வை பற்றிய விவாதம். அதில் ஒரு தாய் (ஒருவரின் மனைவி) கூறியது என்னை மிகவும் காயப்படுத்தி/அதீத-கோபத்துக்கு உள்ளாக்கியது! அவர் சொன்னது இதுதான்: அவரின் மகளுக்கு 11-வயது ஆகிவிட்டதால் இனி-அப்பாவின் பக்கத்தில் படுக்கக்கூடாது என்று சொல்லி - பிரித்து படுக்க வைக்கிறாராம்! இது அந்த தந்தைக்கு மிகுந்த மன-வேதனை அளிப்பதாய் அவரே கூறினார்; அதற்கு அந்த தாய் சொன்ன பதில் "ஓர் தந்தைக்கு அதையெல்லாம் எடுத்து சொல்லி புரியவைக்கும் அளவிற்கு" பக்குவம் இருக்காதாம்?! அதனால் தான், தாய் என்பவள் அதை செய்ய நேரிடுகிறதாம்! இதை பலரும் ஆதரித்தனர்! ஆண்கள் என்ன அவ்வளவு கீழ்த்தனமானவர்களா??!! ஏதேனும் ஓரிரு "தகப்பன் எனும் மிருகங்கள்" தவறு செய்யலாம்; இல்லை எனவில்லை! ஆனால், எந்த அடிப்படையும் இல்லாமல் இப்படி செய்வது எந்த விதத்தில் நியாயம்?
இங்கே ஒரேயொரு கேள்வியைத்தான் கேட்க நினைக்கிறேன்?! 20-வயது ஆன மகனை "என் மகன் இன்னும் கூட; என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு தான் தூங்குவான்!" என்று மார்தட்டி சொல்லும் எத்தனை தாய்மார்கள் உண்டு?! ஏன், அங்கே அந்த பிரச்சனை எழதா??!! அப்பன் எனும் ஆண்-மட்டும் அத்தனை கீழ்த்தரமானவனா?! மகள் வயதுக்கு வந்த பின், அந்த கணம் முதல் அந்த நிகழ்வு உட்பட - அனைத்திலும்; தந்தையை புறந்தள்ளி வைப்பதை முன்பொரு தலையங்கத்தில் வெளிப்படுத்தி இருந்தேன்! ஏன் இந்த உரிமை-மீறல்களும்/உரிமை-மறுப்புகளும் தொடர்ந்து நடக்கின்றன?! இதை ஏன் பலரும், வெளிப்படையாய் "பலத்த குரலெழுப்பி மறுப்பதில்லை"! ஒவ்வொரு மகனும் (ஆணும்) கூட பருவ-வயதை அடைகிறான்! ஆனால், அவனுக்கு அந்த நிகழ்வின் விளைவு - வீரியமாய் இல்லாததால் பெரிதாய் கவனிக்கப்படாது போவது மட்டுமல்ல; இது சார்ந்த நிகழ்வுகளில் இருந்து தள்ளியும் வைக்கப்படுகிறான். ஆண்களுக்கு இது போன்ற நிகழ்வுகளில் குறைந்தபட்ச உரிமைகளாவது...
கிடைக்கும் வரை; இது சார்ந்த விசயத்தில் பரஸ்பர-புரிதல் வருதல் சாத்தியமன்று!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக