கடந்த வாரம் "பிரியாணி" செய்ய கோழி வாங்க சென்றிருந்தேன்; இங்கே, அபுதாபியில் கோழியை உரித்து "எடை "அடிப்படையில்" உரையில் போட்டு விற்பது வழக்கம்; 500-கிராம் கோழி கூட கிடைக்கும். 700 கிராம் கோழி ஒன்றை வாங்கி வந்தேன்; அதை பிரியாணி செய்து சாப்பிட்டபோது, அட...அட...அட...! என்ன ஒரு "சுவை?!". இத்தனைக்கும் இந்த முறை, வழக்கம்போல் "பாஸ்மதி-அரிசி" கூட உபயோகிக்கவில்லை; "சோனா-மசூரி"என்ற அரிசியைத்தான் பயன்படுத்தினேன். இருந்தும், வழக்கத்திற்கு மாறாய் - பிரியாணி அப்படி ஓர்-சுவை. கண்டிப்பாய் இது "இளம்-கோழி" என்பதால்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வழக்கமாய், கோழியின் மார்பு-பகுதி பிரியாணியில் அத்தனை சுவையாய் இருப்பதில்லை; ஏனெனில், வழக்கமாய் (முக்கியமாய், நம் ஊரில்)கிடைக்கும் கோழி முற்றியது - எனவே, மார்பு பகுதியும் முற்றிதாய் இருக்கும்; அதனால் சுவை குறையும். ஆனால், இந்த முறை கோழியின் எந்த பகுதியும் - சுவையில், குறைவின்றி இருந்தது.
நம் ஊரில் பொதுவாய், எடை-குறைவாய் உள்ள கோழி கிடைப்பதில்லை! எல்லா-கோழிகளும் குறைந்தது 1-கிலோவுக்கு அதிகமாய் இருக்கும். நம் ஊரில் கோழி எப்போது வாங்க சென்றாலும் - எடை குறைவாய் உள்ள கோழியை கேட்பது வழக்கம். 2 அல்லது 3 கோழிகள் கூட வாங்க தயங்குவதில்லை; ஆனால், எனக்கு இளம்-கோழி வேண்டுமென்று கேட்பேன். போர்ச்சுக்கல் நாட்டில் கூட "கிரில்-செய்வதற்கென்று" விற்கும் கோழி எடை-குறைவானதாய் இருக்கும்! நான் அங்கிருந்தபோது, பெரும்பாலும் அதைத்தான் வாங்குவது வழக்கம். இல்லையெனில், கோழியின் இறகு-பகுதி மட்டும் கிடைக்கும்; அதை வாங்குவேன். இறகு-பகுதி மென்மையாய் இருக்கும் - அதில் என்ன செய்தாலும், அப்படி ஓர்-சுவையாய் இருக்கும். ஏன், நம் ஊரில் அப்படி இளம்-கோழி கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுந்தது; ஒருவேளை, கேட்பவர் யாரும் - அதிக எடையுள்ள கோழியை கேட்கிறார்களா?! பெண்களில் கூட, சற்று-பூசலான உடம்புள்ளவர்களை விரும்புவது தானே தமிழரின் இயல்பும்??!! ஏன் அப்படி இளம்-கோழி வேண்டுமென்று "டிமாண்ட்" செய்யக்கூடாது?...
இந்த கணத்திலிருந்து "டிமாண்ட்" செய்ய ஆரம்பித்தால் கூட போதுமே??!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக