ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

திருமண-நாள் வாழ்த்து எவர்களுக்கு பொருந்தும்???



     "இவ்வாண்டு திருமண-நாள் வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா??" என்று(கவலையுடன்) கேட்டார் என் நண்பர்! கவலை இடம்பெயர்ந்து என்னுள் குடிகொண்டது; ஏனெனில், அந்த-திருமண பந்தத்தின் சமீபத்திய நிலை எனக்கு நன்றாய் தெரியும்! என் நண்பர் என்னைக் கேட்டதின் பின்னணியும், எனக்கு அது பற்றி அதிகம்-தெரியும் என்பதே. நான் தீர்க்கமாய் "இந்த வருஷம் நீ சொல்ல வேண்டாம்டா!" என்றேன். என்னடா?! இப்படி தடால்னு சொல்லிட்ட? என்றார் நண்பர்; "வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற?"என்றேன் நான். "போன வருஷம் கூட; உன் பெண்டாட்டிக்கு புடவை வாங்கி வச்சுக்கிட்டு" சாய்ந்தரம் வரைக்கும் அவள் ஒரு-தடவையாவது(முதலில்) "வாழ்த்து சொல்வாளான்னு" காத்துக்கிட்டு இருந்த! என்ன ஆச்சு?! சாய்ந்தரம் அவள் போன் பண்ணி "ஏன் ஒரு வாழ்த்து கூட சொல்லக்கூடாதா?! அந்த அளவுக்கு என்னை பிடிக்கலையான்னு?!" கேக்கலை?! அப்புறம் என்ன வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற? என்றேன் மீண்டும்.

      எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம்?! இது சரியான திருமண-பந்தம் தானா??!! என்பது பற்றியெல்லாம் - இங்கே பலருக்கும் "அக்கறையில்லை. குறிப்பாய், வேலைக்கு-செல்லும் "வசதி-படைத்த பெண்களுக்கு"! கணவனை பிரிந்து, குழந்தைகளுடன் தன்னப்பன் வீட்டில் இருந்துகொண்டு கணவன்-வேண்டுமானால் இங்கு வந்து இருக்கட்டும் என்போரும் உண்டு.  எல்லா செலவிற்கும் கணவன் பணம் கொடுக்கவேண்டும்; ஆனால், கணவன் பற்றி எந்த அக்கறையும் இருப்பதில்லை. என் நண்பரின் வாழ்க்கையும் அவ்வாறே! தமிழக தலைநகரில் அவர் தனியாய் வசிக்கிறார்...இல்லை கஷ்டப்படுகிறார்! 2 பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவர்-மனைவி மத்திய-தமிழகத்தில் அவரப்பன் வீட்டில் இருக்கிறார். எத்தனை முயன்றும், கணவனுடன் சென்று-சேர்ந்து இருக்க சம்மதிக்கவில்லை! என்ன விதமான வாழ்க்கை இது?! கணவன்/மனைவி இருவரும் சேர்ந்திருந்தால் தானே பிரச்சனைகளை ஆராய்ந்து/ அல்லது மறந்து உறவை தொடர்ந்திடுதல் சாத்தியம்?!

    எது-எப்படி இருப்பினும், திருமண-நாள் வாழ்த்து(மட்டும்) வேண்டும் என்பது என்ன விதமான நியாயம்?! அதிலும், பெரும்பான்மையில் மனைவி விரும்புவது - வாழ்த்தை முதலில் கணவன் சொல்லவேண்டும் என்பதே! "அந்த-நாளே" நினைவில் இல்லாதவரும் உண்டு! பிறந்த-நாள் என்றால் அடுத்தவர் முதலில் சொல்லவேண்டும் என்பது நியாயம்! திருமண-நாள் இருவருக்கு(ம்) பொதுவானது அல்லவா? சரி, ஓர் ஆண்டு கணவன் (முதலில்)சொல்லவில்லை எனில் ஏன் பிரச்சனை? உடனே, மேற்கூறியது போல் "என்னை பிடிக்கலையா?" என்று சண்டை போடுவது! மற்ற எல்லா நாட்களிலும், கணவன்-மனைவி என்ற பந்தம் "துளியும் இல்லாது" இருந்துவிட்டு அந்த நாளில் மட்டும் "வாழ்த்தையும், பரிசையும்" பெறுவதா வாழ்க்கை??!! அதில் ஓர் அபத்தம் இருப்பதாய் படுகிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் சண்டை எழலாம்! திருமண-நாளில் வாழ்த்து சொல்லவில்லை என்று சண்டையிடுதல் எந்த விதத்தில் நியாயம்; மனைவிக்கும் அது "திருமண-நாள்" தானே??!!

      இப்படி வருடம் முழுவதும், கணவன் என்ற அடிப்படையில் எதுவும் செய்யாது; திருமண-நாளில் வாழ்த்தை மட்டும் எதிர்பார்த்தல் சரியா? நம் முந்தைய-சந்ததியர் பலருக்கு அவர்களின் திருமண-நாள் நியாபகம் இருக்காது! அவர்களுக்குள்ளும் (நம்மை-விடவும்)பெரிய பிரச்சனைகள் இருந்தன; ஆனால், அவர்களுக்கு திருமணம் என்ற பந்தத்தின் அடிப்படை புரிந்திருந்தது!! தன் குடும்பத்திற்காய்/ சமுதாயத்திற்காய் என்று வாழ்க்கையை நடத்தியவர்கள் அவர்கள்! அதுதான் இயல்பு; திருமணமான புதிதில் "கணவன்-மனைவி" இடையே பிரச்சனை ஏற்படுவது இயற்கை; அது நியதியும் கூட! ஆனால், அந்த சில-ஆண்டுகளை கடந்துவிட்டால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்பமே! அதைத்தான் முந்தைய தலைமுறையினர் செய்தனர்; அதனால் தான், நாம் இந்த தலைமுறையாய் தலை-நிமிர்ந்து நடக்கிறோம்! எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்த அப்படிப்பட்ட கணவனும்/மனைவியும்தான் "அப்பாவும்/ அம்மாவுமாய்" - நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றனர்!

     இப்போது, எதற்கெடுத்தாலும் விவாகரத்து பெறுவது சர்வ-சாதாரணமாய் ஆகிவிட்டது; அந்த விரக்தியினால்தான், நண்பரிடம் அப்படி தீர்மானமாய் சொன்னேன்! பின், அவரின் திருமண நாளன்று "மரணத்திற்கு பிறகு என்ன???" எழுதிய நானே அப்படி சொல்லி இருக்கக்கூடாது என்று தோன்றியது! "திருமண-நிகழ்ச்சியின் மகத்துவம் என்ன???"  என்ற மனதங்கம் நினைவுக்கு வந்தது! "விவாகரத்து என்ற ஓர்-நிகழ்வு நடக்கும் வரை, திருமணம் எனும் உறவு" இருப்பதாய் தானே அர்த்தம்??!! என்ற உண்மை விளங்கியது. உடனே, நண்பரை அலைபேசியில் அழைத்து "சொல்லிடுடா"! என்றேன்; "காலைலேயே"வாழ்த்து சொல்லிட்டன்டா! என்றான். எனக்கு பெருத்த-மகிழ்ச்சி! என்ன நடந்தாலும், குடும்பம் எனும் அமைப்பை இயன்றவரை அழியாமல் காப்பது நம் கடமை என்று தோன்றியது. நம் தாயும்/ தந்தையும் எல்லாவற்றையும் மறந்து/மறைத்து நமக்காய் வாழ்ந்திட்ட வாழ்க்கையில் ஒரு குறைந்த சதவிகிதமாவது நாம் - நம் சந்ததியருக்காய் செய்யவேண்டாமா??? அதனால் (அதுவரையாவது)...

திருமண-நாள் வாழ்த்தென்பது அனைவருக்கும் பொருந்தும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக