எங்க கேங்கை சேர்ந்த அந்த குட்டிப்பைய்யன் தான் இந்த செக்க்ஷனை ஓபன் பண்ண ஐடியா கொடுத்தான்னு போனவாரம் "இன்ட்ரொடக்க்ஷன்"-ல சொன்னது நியாபகம் இருக்குதுங்களா?!. என்னது நியாபகம் இல்லையா?! அட... என்னங்க நீங்க? முதல்ல அத நல்லா படிச்சு எல்லாரையும் நியாபகத்துல வச்சுக்குங்க... "எங்க வரலாறை கரெக்ட்டா தெரிஞ்சுக்கிட; எல்லா இன்சிடென்ட்ஸ்-களையும் செமையா ரசிக்க... அந்த இன்ட்ரொடக்க்ஷன், ரொம்ப முக்கியம்" மக்களே! போங்க...ப்ளீஸ்...அத தெளிவா படிச்சு வச்சுக்கோங்க!! அப்பத்தான் எங்கள நேர்ல பார்த்தவங்க ரசிக்கற மாதிரி; யாரப்பத்தியும் கவலைப்படாம சிரிக்கலாம். தேங்க்ஸ்-ங்க மக்களே!
ஒருதடவ, அந்த குட்டிப்பைய்யன் என்ன பைக்-ஓட்ட கூப்பிட்டான்! ஆங்...எங்கிட்ட பைக் இல்லைங்கறது ஒங்களுக்கே தெரியுமே!! அதனால, நம்மளோட முதல் "கெஸ்ட் அப்பியரன்ஸ்" இந்த ஃபர்ஸ்ட் ஆர்டிக்கல்லையே வரப்போறாரு! அதுவும், என் "மாமூ"வே முதல் ஆளா வர்றது எனக்கு ரொம்ப சந்தோசம். ஆமாங்க...என் மாமூ; அவருக்கு நான் மாமூ! சிலபேர பார்த்தவுடனே பிடிக்கும்பாங்கல?! அப்படி மொத தடவையா பாத்ததுமே, எனக்கு என் "மாமூ"வையும்; என் "மாமூ"வுக்கு என்னையும் ஸ்ட்ராங்-ஆ புடிச்சு போச்சு! எனக்கு, என் "மாமூ"வைப் புடிக்கும்; ரொம்ப புடிக்கும் அவ்வளோதான். சரி, இப்போதைக்கு என் மாமூ புராணம் போதும்னு நெனைக்கறேன்! ஆனா, அப்பாலைக்கு என் மாமூ - ஒரு சிங்கிள் ஆர்டிக்கல்ல "சிங்கிளா" வருவாப்ல!!
ஆங்...இங்க என் மாமூ ஏன் வந்தாப்புலன்னா?! பைக் என்னோட மாமுவோடது - SUZUKI MAX 100R! நான், முதல்ல பைக் ஓட்டக்கத்துக்கிட்டது எங்க பஞ்சகல்யாணி-லனாலும்; நான் அதிகமா ஓட்டனது என் "மாமூ"வோட வண்டிதான்! காரணம், ரொம்ப சிம்பிள்: அதான் இன்ட்ரொடக்க்ஷன்-லையே சொன்னனே! எங்க பஞ்சகல்யாணி பெரிய குடிகாரன்னு! அதுக்கு "ஊத்தி" நமக்கு கட்டுபடி ஆகாதுங்கறதால அத-ரொம்ப எடுக்கறதில்ல!! அப்படி ஒருநாள், எல்லாரும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தாங்க. இந்த குட்டிப்பைய்யன் செமையா கிரிக்கெட் ஆடுவான். காமெடி-பீசு நானே ஆடலாம்னு நெனைச்சுக்கிட்டு இருக்க, குட்டிப்பைய்யன் "ண்ணா! (ஆமாம், அவரு அண்ணாவை 'ண்ணா'ன்னு தான் ஸ்டைல்-ஆ கூப்பிடுவாரு)!" பைக் ஓட்டலாம் வாங்கனான்னான்! அன்னைக்கு என் மாமூ பைக் என்கிட்டே இருந்துச்சு.
இந்தப்பய அப்படி கேட்டதும், நான் மொதல்ல கேட்டது "முன்னபின்ன; பைக் ஒட்டியிருக்கியாடா?!"ங்கறது தான்! ஏன்னா, எனக்கே அப்ப அரை-கொறையா தான் ஓட்டத் தெரியும்! கொஞ்சம் கூட யோசிக்காம, "ண்ணா! நான் பஞ்சகல்யாணியே" ஓட்டியிருக்கண்ணா-ன்னு சொன்னான்! எங்க பஞ்சகல்யாணி "பெரிய குடிகாரன்னாலும்" செம வண்டி!! பெரிய வண்டி; அதை ஓட்டறது அவ்வளவு சுலபம் இல்ல!!! ஆனா, பழகிட்டா ச்சும்மா...கொழந்த கணக்கா போகும். சரி, பஞ்சகல்யாணியை ஓட்டியிருந்தா சரிதான்னு! அவன ஓட்ட சொல்லி நான் பின்னால ஒக்காந்து கிட்டேன். அப்படியே எல்லா டிபார்டுமெண்டு வழியாவும் ஒரு ரவுண்டு போனான்! அப்புறம், திரும்பி வந்து "அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக்" பக்கமா போனான்! அந்த பெண்டுல திரும்பி "லைப்ரரி"க்கு எதிரா போயிக்கினே இருந்தவன், திடீர்னு ரோட்ட-விட்டு சைடுல போக ஆரம்பிச்சான்! டே...டே... பிரேக்க போடுடா....போடுடான்னு கத்துறேன்! கத்துறேன்!! கத்திக்கிட்டே இருக்கேன்!!!
பய, லைப்ரரிக்கு எதுத்தாப்புல இருக்கற சின்ன-சிமெண்ட் கட்டமேல இடிச்சு ஏத்தி அங்க இருந்த செடில எல்லாம் ஏத்தி கிட்டத்திட்ட லைப்ரரி வாசல்ல கிட்ட-போயி வண்டிய படுக்க வச்சுட்டான்! எனக்கா செம டென்ஷன்... என்-மாமூ; வண்டிய வேற யாருக்கிட்டயும் கொடுக்காதன்னு சொல்லிட்டு போயிருந்தான்! ஏண்டா?! பிரேக்க போடு, போடுன்னு கத்தினனே ஏண்டா?! போடலைங்கறேன்?! பயபுள்ள! கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம "ண்ணா! பிரேக்கத்தான் தேடிக்கிட்டு இருந்தேங்கறான்!!". அவ்வளவு கோவத்துலயும் எனக்கு சிரிப்பே வந்துடுச்சு!! பயபுள்ள! வண்டி ஓட்டத்தெரியும்னு ஏங்கிட்ட புளுவிட்டு..."கீழ குனிஞ்சு" பிரேக்க தேடிக்கிட்டு இருந்திருக்கு!
பெட்ரோல் டேங்குல "ஒரு டொக்கு" விழுந்துடுச்சு! நல்ல வேலை, ஓட்டை எதுவும் விழலை!! சரி, என்னடா பண்றதுன்னு பக்கத்துல இருந்த வொர்க்-ஷாப்ல போயி விசாரிச்சா, அதை சரிபன்னனும்னா மெட்ராசுக்கு டேங்கை கழட்டி அனுப்பனும்னு சொல்லிட்டாய்ங்க! சரின்னு, ஒருவழியா ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தா என் மாமூ வண்டிக்காக காத்திட்டிருக்கான்! அவன் வழக்கமா கோபப்படறதே எனக்கு சிரிப்பா வரும்; அன்னைக்கும் அப்படியே கோபமா; "மாமூ! சொன்னன் இல்ல மாமூ! இவ்வளவு லேட்டா வர்ற"ங்கறான்! அடப்பாவி...லேட்டானதுக்கே இப்படின்னா; டேங்குக்கு எப்படின்னு... பொறுமையா அவன்கிட்ட இப்படி ஆயிடுச்சி மாமுன்னேன்! அவன், சரி விடு மாமூ! பாத்துக்கலாம்னு அசால்ட்டா சொல்லிட்டு போயிட்டான்.
இதெல்லாம் விட பெரிய தமாசு...இன்னொரு நாளு, நம்ம பயபுள்ள... "ண்ணா!" வாங்க! பஞ்சகல்யாணில ஒரு-ரவுண்டு போயிட்டு வரலாம்னான் பாருங்க!! அவனும், என்னென்னவோ சொல்லி பாத்தான். நானா?! சிக்குவேன்? அதுவும், பஞ்சகல்யாணிய போட்டுக்கிட்டு விழுந்தா எப்படி இருக்கும்?!
யெப்பா, சாமி! ஆள-விடுடான்னு நான் எஸ்கேப்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக