கண்டிப்பா எல்லாருக்கும் மொத, மொத "தண்ணி அடிச்சது" நியாபகம் இருக்கும்! எனக்கு ரொம்ப-தெளிவா நியாபகத்துல இருக்குது!! 1991-ல B. Sc., செகண்ட்-இயர் படிக்கும்போது நான் மொத "பியர" அடிச்சேன். நான் தண்ணி அடிக்க ஆரம்பிச்ச கதை ரொம்ப வித்தியாசமானது! இதுமாதிரி, யாருக்காவது நடந்திருமாங்கறது சந்தேகம் தான்... ஆனா, எனக்கு அப்படித்தான் நடந்தது.
நானும், என் ஃபிரண்டும் "கார்ட்ஸ்"ஆடிக்கிட்டு இருந்தோம்! கார்ட்ஸ்-ஆடும்போது "பெட்" இல்லாம ஆடறது நெறைய பேருக்கு புடிக்காது! எனக்கு கண்டிப்பா புடிக்காது; அதனால, "அது-இது"ன்னு யோசிச்சப்போ என் ஃபிரண்ட் "எது"ன்னு சொன்னான்; அவன் சொன்ன பெட் "பியர்"! அதாவது, தோக்கறவங்க; ஜெயிக்கரவங்களுக்கு "பியர்"வாங்கிக் கொடுக்கனம்னு முடிவானது. எனக்கு, அந்த பழக்கம் இல்லைன்னாலும்; சரின்னு ஒத்துக்கிட்டேன். அப்புறம், ஒரு வழியா ஆடி கேம்-முடியும்போது பார்த்தா "நான் தோத்துட்டேன்!". நான், என் ஃபிரண்டுக்கு பியர் வாங்கி கொடுக்கணும்.
சரின்னு "மெட்ராஸ்-டிரிப்லிகேன்ல" அப்போ இருந்த ஒரு "ஒயின் ஷாப்"புக்கு போனோம்! கடைக்குள்ள போனதும் "ஒரு திருட்டு யோசனை?!" வந்துச்சு... சரி, அவனுக்கு மட்டும் ஏன் வாங்கி கொடுக்கணும்?! நாமளும் ஒன்னு வாங்கி அடிச்சா என்னனு தோனுச்சு! சரின்னு, மச்சி "ரெண்டா வாங்கலாம்டா!"; நானும் அடிக்கப்போறேன்னு சொன்னேன். அவன், சரி மச்சி! ஆனா, முடியலைன்னா ஏதும் அசிங்க பண்ணிடாதடா! என்கிட்ட கொடுத்துடுன்னான்; சரி, மச்சி! என்னால முடியலன்னா ஒனக்கு கொடுத்துடறேன்னு சொல்லி 2-பியர் வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்!
நான், அன்னைய தேதிக்கு சுமார் 1-வருஷத்துக்கு மேல காலைல எழுந்ததும் 1 அல்லது 1.5 லிட்டர் தண்ணி குடிக்கற பழக்கத்த வச்சிருந்தேன்! இன்னைக்கு வரைக்கும் காலைல எழுந்ததும், மொதல்ல செய்யற வேலை அது தான்! அதனாலேயே என்னவோ, அந்த பியரை (வெறும் 650 மில்லி லிட்டர் தானே??!!) ரெண்டு மொடக்குல குடிச்சுட்டேன். நல்ல எதமான-கூலிங்ல இருந்ததாலையோ என்னவோ?! எனக்கு ஒண்ணுமே தடங்களா இல்லை! அவன் சரியான காண்டாயிட்டான்... அவன் இன்னும் அரை-பியர் கூட குடிச்சி முடிக்கல! அவன் மெட்ராசுக்கே உரிய அந்த வார்த்தைய சொல்லி..."நெஜமா இதுக்கு முன்னாடி" தண்ணி அடிச்சதுல்ல?! அப்படின்னு கொஞ்சம் கூட நம்பாம கேக்கறான்! இல்லடா... ஒனக்கு தான் தெரியுமே! நான் எப்படா, குடிச்சிருக்கேன்?!-ன்னு கேட்டேன்! அவனுக்கு, இன்னும் ஒரு-அரை பியராவது கிடைக்கும்னு நெனைச்சு ஏமாந்த காண்டு வேற! இல்லடா, நான் தான் காலைல எழுந்ததும் தண்ணி குடிப்பன் இல்ல?! அதனால தான் குடிச்சுட்டன் போல?!ன்னேன்! அவனுக்கு அது "பிரஸ்டிஜ்"இஷ்ஷுவா வேற போயிடுச்சு! அவனைவிட சீக்கிரமா வேற குடிச்சுட்டன் இல்ல?! அப்பறம், ஒரு வழியா ஹாஸ்டலுக்கு போயி சேர்ந்துட்டோம். ஆனாலும், அவனால, தாங்க முடியல; எல்லார்க்கிட்டயும் மீண்டும் அந்த மெட்ராஸ்-ஸ்பெஷல் வார்த்தைய சொல்லி நடந்ததை சொல்லி அவன் மனச தேத்திக்கிட்டான்!
நான் மொதல்ல அடிச்ச அந்த பியர் "ப்ளாக் & நைட்" வேற! அது, ஸ்ட்ராங்கான பியர் வேறயாம்! அவனுக்கு அந்த காண்டு வேற! ஆனா, அதுக்கப்பறம் நம்ம ஃபேவரைட் "கோல்டன் ஈகிள்"ங்கறது வேற விசயம்!
அப்படி ஆரம்பிச்ச அந்த "கருமம் பிடிச்ச!!??" பழக்கத்தை இன்னைக்கு வரைக்கும் சுத்தமா-நிறுத்த முடியல! எவ்வளவோ கொறைஞ்சுடுச்சுன்னாலும், இன்னமும் சுத்தமா நிறுத்த முடியல!! கூடிய சீக்கிரம் நிறுத்திடுவேன்; நிறுத்திடனும்! "தம்மடிக்கற" பழக்கத்த நிறுத்தறது தான் ரொம்ப கஷ்ட்டம்னு எல்லாருக்கும் தெரியும்! அதையே, சுத்தமா நிறுத்தி 3.5 வருஷம் ஆவுது! இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை. என்னதான் 3 மாதம், 4 மாதம்-னு அடிக்காம இருந்தாலும், என்னைக்காவது ஒரு-நாளு திரும்ப ஏதாவது பார்ட்டி, அது-இதுன்னு ஏதாவது வந்துடுது! ஏம்-பொண்ணு கூட இல்லைங்கறது கூட காரணமா இருக்கலாம்! தம்மையே-அவளால நிறுத்தியாச்சு!! ஆனா, இத அவ இல்லாதப்பவே சுத்தமா நிறுத்திடம்னு "ட்ரை" பண்ணிக்கிட்டு இருக்கேன்; பார்ப்போம்...
என்ன இருந்தாலும்; அந்த ஃபர்ஸ்ட் பியர் மறக்கமுடியாத அனுபவம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக