சமீபத்தில் முக-நூலில் ஒரு பதிவைக் கண்டேன்; அதைப்பார்த்த மாத்திரத்தில் கடுஞ்சினம் எழுந்தது! உடனே, அது எத்தனை தவறான தகவல் என்பதை "மிகவும் நாசூக்காய்" சொல்லி; அவ்வாறு பதிவதை தவிருங்கள் என்று கேட்டிருந்தேன். அடுத்த சில நாட்களில், என் நட்பு ஒருவர் அதை "லைக்கியதாய்" என் முக-நூல் முகப்பில் மீண்டும் அந்த பதிவை பார்க்க நேர்ந்தது. உடனே, இமாதிரி பதிவுகளை ஆதரிக்கவேண்டாம் என்று சொல்ல எத்தனித்து பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஆனால், அதே நட்பு மீண்டும் அதே-அடிப்படையில் வேறொரு புகைப்படத்தையும் கருத்தையும் பகிர்ந்திருந்தபோது நேரடியாய் சொல்லிவிட்டேன். மேலும், அதை இம்மாதிரி ஓர்-மனதங்கமாய் எழுதுவதுதான் சரி என்று தோன்றியது. பதிவு(கள்) இதுதான்: மேலுள்ள புகைப்படத்தை வெளியிட்டு செய்தி கொடுக்கப்பட்டு இருந்தது! இது என்னவிதமான மனநிலை என்றே தெரியவில்லை. அன்னையரை புகழ எத்தனையோ "உண்மையான/நிதர்சனமான" காரணங்கள் உள்ளன.
அதை விடுத்து, ஏன் இப்படி ஒரு "பொய்யான/அநியாயமான" காரணத்தை கூறி "தந்தையரை" இழிவுபடுத்தி "அன்னையரை" உயர்த்த முயலவேண்டும்?! இதை "லைக்கும்/ஆமோதித்து கமெண்ட்டும்" இடும் எவரிடமாவது சென்று "உங்கள் அப்பா" இப்படி செயதாரா?! என்று கேளுங்கள்! அவர்களுக்கு மகா-கோபம் வரும்; அதிலும் பெண்கள் என்றார் "கேட்டவர்; அடி-கூட வாங்க" நேரிடலாம். அப்போது, எவரின் அப்பா?! இப்படி செய்திருப்பார் என்று இவர்கள் "லைக்கும்/கமெண்ட்டும்" போடுகிறார்கள்! கேட்டால், விளையாட்டு என்பார்கள்; எது விளையாட்டு?! அப்போது, உங்கள் அப்பா என்று வரும்போது மட்டும் ஏன் கோபம் வருகிறது?! உங்கள் கோபம் நியாயமானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உங்கள் அப்பா இதைப் பார்க்க நேர்ந்தால் - வருத்தப்படுவார் என்று ஏன் தோன்றுவதில்லை. அதே, தார்மீக வருத்தம் தான் "என்னை; ஓர் அப்பனாய்" இந்த தலையங்கத்தை எழுத வைத்துள்ளது. போலித்தனமான புகைப்படத்தையும், செய்திகளையும்...

வெளியிடும்; இம்மாதிரியானவர்களை என்ன செய்வது???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக