வெள்ளி, டிசம்பர் 08, 2017

குறள் எண்: 0859 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0859}

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு

விழியப்பன் விளக்கம்: செல்வத்தைச் சேர்க்கும் விடயங்களில், பிரிவினையை ஆராயதோர்; கேடு விளைவிக்கும் விடயங்களில் மட்டும், பிரிவினையை மிகைப்படுத்தி ஆராய்வர்!
(அது போல்...)
ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில், மக்களுடன் இணையாதோர்; ஊழல் தண்டனை அடைந்தால் மட்டும், மக்களைத் தஞ்சமடைந்து முறையிடுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக