சனி, டிசம்பர் 09, 2017

குறள் எண்: 0860 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0860}

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: பிரிவினை என்னும் தீயெண்ணம், துன்பங்கள் அனைத்தையும் அளிக்கும்! நல்லிணக்கம் என்னும் நல்லெண்ணம், நல்லறம் என்னும் பெருமிதத்தை அளிக்கும்! 
(அது போல்...)
ஊழல் என்னும் தீயொழுக்கம், குற்றங்கள் அனைத்தையும் நிலைநாட்டும்! சேவை என்னும் நல்லொழுக்கம், மக்களாட்சி என்னும் மகேசன்-தீர்ப்பை நிலைநாட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக