வியாழன், டிசம்பர் 14, 2017

குறள் எண்: 0865 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0865}

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

விழியப்பன் விளக்கம்: "அறவழியை ஆராயாத/வாய்ப்புகளைப் பயன்படுத்தாத/படுபழியை ஆராயாத/பண்பும் இல்லாத" ஒருவன்; பகைவர்களுக்கு இனிமையான எதிரியாய் இருப்பான்!
(அது போல்...)
"நற்கூட்டணியை நாடாத/மக்களைப் பேணாத/ஊழல்பழியை அழிக்காத/அரசியல் அறமில்லாத" கட்சி; மக்களுக்குக் கொடியத் தண்டனையாய் இருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக