சனி, செப்டம்பர் 02, 2017

குறள் எண்: 0762 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0762}

உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது

விழியப்பன் விளக்கம்: போரில் அழிவு நேரும்போது, அச்சமின்றி போரிடும் திண்ணமான வலிமை; பல போர்களை வென்ற அனுபவமானப் படையைத் தவிர்த்து, பிறர்க்கு இருப்பது அரிது.
(அது போல்...)
குடும்பத்தில் குழப்பம் விளையும்போது, சோர்வின்றி உறவாடும் உறுதியான அன்பு; பல சூழல்களைக் கையாண்ட அனுபவமான அங்கத்தினரைத் தவிர்த்து, பிறர்க்கு இருப்பது அரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக